Home
Periyar, DK, Self Respect? part -5
Tirukkural-pothu-noola?
| Sankara Nayinar Kovil - A Treatise |
|
உ
திருச்சிற்றம்பலம் ஸ்ரீ மெய்கண்ட தேசிகன் திருவடி வாழ்க
சங்கரநயினார் கோவில்
சித்தாந்த பண்டித பூஷணம் ஆ.ஈசுரமூர்த்திப்
பிள்ளை
திருநெல்வேலி பேட்டை --------------------------------------------------------------------------------
தோற்றுவாய்
சங்கரநயினார்கோவில் என்பது திருநெல்வேலி
ஜில்லாவிலுள்ள ஒரு நகரம். அதற்கு அப்பெயர்
பழம்பெயரா யிருந்துவருகிறது. அவ்வூர்ப்
புகைவண்டி, தபால் முதலிய எல்லாச் சர்க்கார்
நிலயங்களிலும், கூட்டாவுச் சங்கங்கள்,
பாங்குகள், பாடசாலைகள் முதலிய எல்லாப் பிற
நிலயங்களிலும் அவை தோன்றிய காலமுதல் நாளிதுவரை
அவற்றின் பெயர்ப் பலகைகளில் அப்பெயரே ஊர்ப்
பெயராகக் குறிக்கப்பட்டுள்ளது. அதுவே
சிற்சிலவற்றில் சங்கரன்கோவில் எனச்
சுருக்கியும் எழுதப்பட்டிருக்கும்.
சங்கரநயினார்கோவில் அவ்வூரிலுள்ளதொரு
பெரிய சிவாலயம். அப்பெயரே அவ்வூருக்குமாயிற்று.
அக்கோவில் வெளியீடாகிய 'நாட் குறிப்பு
1963-1964' என்றதில்
'இத்தலம் கோயிலின் பெயரையே கொண்டு அமைந்த
சங்கரநயினார் கோயில் என்ற நகரின்....'
என வந்துள்ளது காண்க.
பசுபதிகோவில், வைத்தீசுரன் கோவில்
காளையார்கோவில் என்ற ஊர்ப் பெயர்கள் போலும்
அது.
சங்கரன் என்ற பெயர் சிவனுக்குரியது.
நாயனார் என்ற சொல் கடவுள் என்ற பொருளுடையது.
இராமன்
'நாயனார் தமைப்பூ சித்தான் கொலைப் பாவ
நணுகிடாமே'
என்ற சித்தியாரில் அச்சொல் அப் பொருளி
லிருப்பதறிக. அந்நாயனார் நயினாரெனத்
திர்ந்தது. ஆகலின் சங்கரநயினார் என்றது
சங்கரக் கடவுள் என்ற பொருளுடையதாயிற்று.
அக் கோவிலில் மூலவர் பெயர் சங்கரலிங்கம்.
தேவியார் பெயர் கோமதி.
அவ்வூருக்கு வடமொழியிலுந் தமிழிலும் புராண
முண்டு. அக் கடவுளையுந் தேவியையும் புலவர்
பலர் பாடித் துதித்த நூல்களு முள.
நெல்லைச் சிவன் கோவிலுக்குக்
காந்திமதியம்பா சுவாமி நெல்லையப்பர்
தேவஸ்தானம் என்பது பெயர். இப்படி மூலவர்
பெயரும் தேவியார் பெயருஞ் சேர்ந்து தேவஸ்தானப்
பெயராயிருக்கிற கோவில்கள் பல. மூலவர் பெயர்
மாத்திரம் தேவஸ்தானப் பெயராயிருக்கிற
கோவில்கள் பல.
திருக் குற்றாலநாத சுவாமி தேவஸ்தானம் என்ற
பெயர் காண்க.
அம்பிகை பெயரால் மாத்திரம் சிவன்
கோவில்களுக்குப் பெயரிருப்பதாகத்
தெரியவில்லை. அம்முறையில் சங்கரநயினார்
கோவிலுக்கும் சங்கரநயினார் தேவஸ்தானம்
என்றாவது, சங்கரலிங்க சுவாமி தேவஸ்தானம்
என்றாவது, சங்கரன் தேவஸ்தானம் என்றாவது,
கோமதியம்பா சங்கரலிங்க சுவாமி தேவஸ்தானம்
என்றாவது பெயரிருக்க வேண்டும். அதுதான்
முற்றிலும் நியாயம். ஆனால் அச் சிவன்
கோவிலுக்கு இப்பொழுது சங்கரநாராயண சுவாமி
தேவஸ்தானம் எனப்பெய ரிருந்து வருகிறது. அது
சரியா? அன்றாயின் சைவப்பெருமக்கள் என்ன செய்ய
வேண்டும்? அதனைக் காட்ட எழுந்ததே இந் நூல்.
சங்கரநாராயணர்
சங்கரன் என்றது ஒரு தெய்வத்தின் பெயர்.
நாராயணன் என்றது இன்னொரு தெய்வத்தின் பெயர்.
அவ்விரண்டுஞ் சேர்ந்து சங்கரநாராயணன்
எனப்படுகிறது. ஆகலின் அ·தொரு கூட்டுப்
பெயர். அது சங்கரநாராயணர் எனவும் படும்.
சங்கரநாராயணர் என்றது மரியாதை விகுதி பெற்ற
ஒருமைச் சொல்லா? அல்லது பன்மைச் சொல்லேயா?
ஒருமைச் சொல் லெனின் ஒருமைப் பொருளில் வருகிற
வேறு சில கூட்டுப் பெயர்களும் உள. அவற்றின்
பொருளைக் காணலாம்.
சிவசங்கரன் - சிவனெனவுஞ் சொல்லப்படுகிற
சங்கரன்.
ஹரிநாராயணன் - ஹரியெனவுஞ் சொல்லப்படுகிற
நாராயணன்.
சங்கரசுப்பிரமணியன் - சங்கரனுக்கு மகனாகிய
சுப்பிரமணியன்.
சிவசுப்பிரமணியன் - சிவனுக்கு மகனாகிய
சுப்பிரமணியன்.
ராமலிங்கம் - ராமனாற் பூசிக்கப்பட்ட
சிவலிங்கம்.
சங்கரலக்ஷ்மி - சங்கரனுக்குச் சகோதரியாகிய
லக்ஷ்மி
சுப்புலக்ஷ்மி - சுப்பிரமணியனுக்கு
மாமியாகிய லக்ஷ்மி
ராமலக்ஷ்மி - ராமன் வடிவில் வந்த
நாராயணனுக்கு மனைவியாகிய லக்ஷ்மி.
சீதாராமன் - சீதைக்கு கணவனாகிய ராமன்.
ராமகிருஷ்ணன் - ராமனாகவும் கிருஷ்ணனாகவும்
வந்த நாராயணன்.
லக்ஷ்மி நாராயணன் - லக்ஷ்மிக்குக்
கணவனாகிய நாராயணன்.
சீதாலக்ஷ்மி - சீதையின் உருக் கொண்ட
லக்ஷ்மி.
ரவிசங்கரன் - சூரியனுக்கு அந்தரியாமியாகிய
சங்கரன்.
சிவசூரியன் - சிவனை அந்தரியாமியாகவுடைய
சூரியன்.
சூரியநாராயணன் - சூரியனுக்கு
அந்தரியாமியாகிய நாராயணன். பன்னிரு சூரியருள்
நாராயணன் என்னும் பெயருடைய ஒரு சூரியன்.
சிவராமன் - சிவனை வணங்கிய ராமன்.
தாணுமாலயன் - உருத்திரனும் நாராயணனும்
பிரமனும் ஆகிய சங்கரன்.
சங்கரநாராயணன் - சங்கரனுக்கு அடியானாகிய
நாராயணன். சங்கரனை அடியானாகக் கொண்ட
நாராயணன்.. சங்கரனுக்கு மனைவியாகிய நாராயணன்.
ஹரிஹரன் - ஹரியைத் தலைவனாகக் கொண்ட ஹரன்.
ஹரிக்குத் தலைவனாகிய ஹரன். ஹரியாகிய ஹரன்.
இப்படியே பிறவற்றையும் யோசித்துக்கொள்க.
அச்சொற்களுக்கு வேறு பொருள் கூறுவாருங்
கூறலாம். எப்படியும் சங்கரநாராயணர் என்பது
ஒருமைச் சொல்லாகி ஒருமைப் பொருள் தரும் என்பது
தான் முக்கியம்.
அச்சொல் பன்மையாயின் அது சேர சோழ
பாண்டியர், இராமகிருட்டினர், சங்க பத்மர்
முதலியன போல் சங்கரநாராயணர் என்று
தானிருக்கும்; சங்கரநாராயணன் என்றிருக்க
இலக்கணத்தில் இடங் கிடையாது. சங்கரநாராயணன்
என்றிருக்க இலக்கணத்தில் இடங் கிடையாது.
சங்கரநாராயணன் என்பது ஒருமையே.
சேர சோழ பாண்டியர் - சேரனும் சோழனும்
பாண்டியனும்
இராமகிருட்டினர் - இராமனும் கிருட்டினனும்
சங்க பத்மர் - சங்கனும் பத்மனும்.
சங்கரநாராயணர் - சங்கரனும் நாராயணனும்.
ஆகலின் சங்கரநாராயணரென்பது பன்மையாய்ச்
சங்கரனும் நாராயணனுமாகிய இரு வேறு கடவுளரெனின்
அவ் விருவருக்கும் அக்கோவிலில் சமமான
முதன்மையுண்டு என்பது சித்திக்கிறது. ஆனால்
அங்குப் பிரதான மூர்த்தியாகிய மூலவர்
சங்கரலிங்கம். ஆகலின் அது சங்கரன்கோவிலே
யாகும். நாராயணன் அங்குப் பிரதான
மூர்த்தியாதல் சிறிது மில்லை. நரசிம்மன்,
துர்க்கை, சனி, சூரியன் முதலிய தெய்வங்கள்
போன்று சங்கரநாராயணனும் நாராயணனும் பரிவார
தேவதைகளாயிருப்பதில் ஆ§க்ஷப மில்லை. ஆகலின்
சங்கரநாராயணர் கோவில் என்றதிலுள்ள
சங்கரநாராயணர் என்றது கூட்டுப் பெயராகிப்
பன்மைப் பொருளில் இருக்கமுடியா தென்க.
தல புராணம்
அத் தலத்து வடமொழிப் புராணத்துக்குப் 'பூ
கைலாஸ §க்ஷத்ர மாஹாத்மியம்' என்றது பெயர்.
அப்புராண முடிவில் 'சங்கரநயினார் கோவில் ஸ்தல
புராணம் முற்றுப் பெற்றது' என
அச்சிடப்பட்டுள்ளது. அத்தலத்துத் தமிழ்ப்
புராண 4-ஆம் பதிப்பில் உபக்கிரமமாக 12 துதிப்
பாடல்க ளுள. அவற்றுள் ஒன்றாவது
சங்கரநாராயணனுக் கில்லை. இறுதி வாழ்த்திலும்
அவனுக்கு 'வாழி' கிடையாது. 129. 43-ஆம்
பாடல் காண்க. மேலும்.
'சங்கரேசுரர் வாழ்தலம்' (50 . 4),
'சைவநற் றலமாஞ் சீரா சைப்பதி' (51 . 10),
'திங்களணி வேணியர் நகர்' (59 . 11)
என்றதால் அத்தலம் சங்கர தலமே யாகும்.
'கடகரி யுரித்த கடவுள் மான்மியம்' (5 .
13),
'காதைகள் தனிற்சி ரேட்டங் கடவுள் தன் காதை
யாகும்' (52 . 20),
'சங்கர மூர்த்தியின் பெருமை சொல்வீர்' (61
. 27),
'.........தையலா வுடையாள் பங்கின்
மேவிய இறைவன் காதை விருப்புடன் படிப்போர் கேட்போர் - ஓவறு நிதிபெற் றோங்கி வுவப்பொடும் வாழி' (129 . 43)
என்றதால் அப்புராணம் சங்கர சரிதமே யாகிச்
சங்கரநயினார் கோவில் தல புராணம் என்பதே
முற்றிலும் பொருத்தமான பெயராகும். அப் புராண
சருக்கங்களுள் ஒன்று 'சங்கரநாராயணரான
சருக்கம்' என்பது. பின்னுள்ள சருக்கங்களில்
யார்க்கும் சங்கரநாராயண வுருவக் காட்சி
யளிக்கப்பட்டதாகக் கதையில்லை. அங்ஙனமாக அத்
தமிழ்ப் புராணத்துக்கு அதன் பழம் பெயரை மாற்றி
அவ வடமொழிப் புராணப் பெயருக்கும் விருத்தமாகச்
'சங்கரநாராயண சுவாமி கோயிற் புராணம்' எனப்
பெயர் கொடுக்கப்பட்டிருக்கிறது. அது தகுமா?
சங்கரநாராயணரான கதை
கயிலை உமை சிவனை வணங்கி
'மாலுடன்நீ - தண்ணும் அவ்வுருக் காண
வேட்டனன்' (75 . 27)
எனக் கேட்டாள். சிவனும் அவளுக்குப்
புன்னைவனத்தில்
'தானும் மாலும்ஒன் றாகிய வடிவினைத் தயங்க
- மான்
உலாங்கரத் திறையவன் காட்டினன் வணங்கிக் - கான் உலாங்குழல் உமையவள் கண்டுகண் களித்தாள்' (78 . 47)
இது பூர்வ கதை. பின்னர் இக்கோலத்தைச் சங்கன்,
பத்மன் என்ற பாம்பரசர் கண்டனர். இது பின்
நிகழ்ச்சி. பத்மன்.
'பசுந்துளவோன் பாதந் தேர்ந்து' (79 . 54)
அதாவது விஷ்ணுவே பரம் பொருள் எனக் கொண்டு தவம்
புரிந்தான். ஆனால் அந்நாராயணன் சங்கரனோ
டொன்றாகி வந்திலன். அவன் அந்த
'அரா வரசின்முகம் விரும்பி நோக்கிப் -
படைப்பாலும்
அளிப்பானும் வேறுளரோ அமரரெனப் படுவோ ரெல்லாஞ் - சுடர்ப்பால்வெண் மதிக்கொழுந்து சூடினோன் கூறாவார் சொல்லுங் கால்தன் - இடப்பாலா நம்முருவும் ஆங்கவனே காட்டும்என இசைத்தா னன்றே' (80 . 56)
எனச் சொல்லித் தன்னிடத்திலேயே
யிருந்துவிட்டான்.
'....மாணிக்கக் குன்று சேர்ந்த - முழு
நீலப் பொருப் பென்னத்-
தன்னொருபால்......அரவணையா னுருத்திகழ அந்திவண்ணன் .....வெவ்வரா வரசர்முனம் வெளிப்பட்டான்' (90.59).
அச்சங்கரநாராயண வுருவை அப்பாம்பரசர்
துதித்தனர். அதில் சங்கன் துதித்ததாகத்
தனித்துதி யொன்றுமில்லை.
'நாறிதழ்க் கமலச் செங்கண் நளிமலர்த்
துளபமால் உன் -
கூறென வுணர்கி லாது கூரறி வின்மையாலே - வேறென வுணர்ந்து ளேற்கு விழியருள் சுரந்த தென்னை - ஆறணி கடவு ளென்றாங் கடிதொழு துரைத்தான் பத்மன்' (81 . 16)
எனப் பதமன் செய்த தனித்துதி வருகிறது.
அவன்றான் நாரணனே பரம்பொருள் என்ற மயக்க
முள்ளவனாக இருந்தான். 'சங்கரனே! நீ தான் அமிசி
(பூரணப் பொருள்), நாராயணன் உன் அமிழமே ( ஒரு
கூறே), இது வரை நான் அதனை யறிந்திலேன்' என அம்
மயக்கத்திலிருந்து விடுபட்டுக் கூறினான்
அவன். அது முதல் சங்கரணே பரமாத்மா என்ற
வுண்மை அவனுள்ளத்தைக் கவர்வதாயிற்று. அவனுடைய
தவத்துக்கு இலக்காயிருந்த நாராயணனும், மற்றைப்
பிரமன் முதலிய தேவருமாகிய எல்லாரும் சங்கரனின்
அமிசங்களென்பதை அந்த (80 . 56) ஆம் பாடலிற்
காண்க. நாராயணன் அமிசம், சங்கரன் அமிசி.
அகலின் நாராயண சங்கரன் என்பது தான் ஹரிஹரன்
என்பது போலும் சரியான தொடர். அது
சங்கரநாராயணன் என மாறிக் கிடந்தது. இல்முன்
என்றது முன்றில் என்பது போலும் அது.
அமிசியாகிய சங்கரனே பரமாத்மா. நாரணன் முதலிய
அனைத்துப் பிற தெய்வங்கலும் அமிசங்களே.
ஆகலின் அவை தம்மளவில் பரமாத்மா வாகமாட்டா.
'உரையது கேட்ட லோடும் உரகர்தம் வதன நோக்கி
- முருகவி
ழிதழி வேய்ந்த முதல்வனே பெரியோன் அன்னோற் - கர விடைத் துயிலுமாலும் - அயிக்கமாம் பொருளா மென்றே - மருளி லத் திரிதொன் னூலான் மலைவறக் கூறி னானே' (74 .16)
என்றது காண்க. அமிசியில் அமிசம் அயிக்கிய
மாவது போல் சங்கரனில் நாராயணன் அயிக்கியமே
யாவான் என்றார் அத்திரி முனிவர்.
உமை கோமதியாகிச் சங்கரநாராயண வடிவைக்
கண்டான். அவ்வடிவில் வந்த சங்கரன் அக்கோமதியை
நோக்கி,
'அளிப்பன் வேண்டிய தியம்பென அருளின
னருளால்' (78 . 48)
என்றான். அவளும் 'சுவாமி! நீர் இவ்வடிவோடு
இத்தலத்தில் என்றும் வீற்றிருந்து
பக்தர்களுக்குச் சர்வாநுக்கிரகமுஞ்
செய்தருளுவீராக' என வரம் வேண்டியிருக்கலாம்.
தபோதனரெல்லம் தமக்குக் காட்சி தந்த கடவுளிடம்
அப்படியே கேட்டிருக்கின்றனர். பல
புராணங்களில் அன்ன வேண்டுகோள் உண்டு. ஆனால்
அவள் அப்படிக் கேட்கவில்லை. அவள் அவ்விரட்டை
யுருவில் வந்த சங்கரனை நோக்கித்,
'தழைத்த காதலான் மலைமகள் தாங்குமிவ்
வுருவம் ---
ஒழித்து நின்னுருத் தாங்குவா யெனவுரைத் திடலுங் --- குழைத்த பைந்தளிர்க் கொன்றையான் றன்னுருக் கொண்டு - மழைக்கண் மாதொடு புன்னையங் காவினில் வதித்தான்' (79 . 49)
என்றபடி அவ்விரட்டையுருவை ஒழித்துவிட்டு
அவனுக்கே யுரிய உருவைக் கொள்ளச் சொல்லிப்
பிறகு அவனோடு தானும் புன்னைவனத்தில்
எழுந்தருளி யிருந்தாள். நின்னுரு --
அவ்விரட்டையுரு வல்லாத சங்கரன் சொந்த வுரு.
'.....சங்கர : அவோசதித்தம் தேவீத்வம் வரம்
வரய ஸ¤வ்ருதே || தேவ்யுவாச || பவசர்வயதா
பூர்வம் பவமத் ப்ராண வல்லப : || அத்ரைவ ருத்ர
ஸாந்நித்யம் சங்கரஸ் ஸர்வ தேஹி நாம் || இதி
கெளரீ வசச் சுருத்வா மூர்த்திம் தத்ரைவதாம்
சிவ: || ஸங்கோப்ய லிங்கரூபேண தயாஸஹஸ மோததே ||'
என்ற வடமொழிப் புராண வாக்கியத்தையும்,
'சங்கரரானவர் மிகுந்த சந்தோஷத்துடன்
கூடியவராய் தேவியைப் பார்த்து ஹே தேவி
உன்னுடைய தபசானது ரொம்ப நன்றாச்சுது உனக்கு
வேண்டிய வரத்தைக் கேட்டுக்கொள்ளென்று
சொன்னார். தேவி சொல்லுகிறாள், ஓய் பிராண
நாதரே முன்போல உம்முடைய சுவய ரூபத்தை அடையும்
இந்த ஸ்தலத்தில் தானே ஒரு இடத்தில் சகலப்
பிராணிகளுக்கும் §க்ஷமத்தைச் செய்கிறவராய்
சான்னித்தியஞ் செய்து கொண்டிருக்கவேணு மென்று
பிரார்த்தித்தாள். இந்தப் பிரகாரஞ் சொன்ன
வசனத்தை பரமசிவன் கேட்டு அந்த சங்கரநாராயண
ரூபத்தை மறைத்து அந்த உமாதேவியுடன் லிங்க
ரூபத்தோடு அந்த ஸ்தலத்தில் தானே சந்தோஷத்துடன்
வசிக்கிறார்'
என்ற அதன் தமிழையுங் காண்க. சங்கரனும்
கோமதியும் வீற்றிருந்து ஆன்மாக்களுக்கு
அநுக்கிரகித்து வரும் புன்னைவன §க்ஷத்திரக்
கோவிலில் சங்கரநாராயண கோலமாகிய இரட்டை யுரு
இருப்பதைக் கோமதியே விரும்பவில்லை.
அவ்விரும்பாமையைச் சங்கரனும் சம்மதித்தான்
என்ற வுண்மையை மேற் காட்டிய தமிழ்ப்புராண
பாடலையும், வடமொழிப்புராண வாக்கியத்தையும்
படித்தவர் நன்கு அறிவர். ஆடித் தவசிலும்
பிற்பகலில் சங்கரநாராயணன் இடப வாகனரூடனாய்க்
காட்சியளிப்பான். அப்படியிருந்தும் அவனைக்
கண்ட கோமதி அவனுடன் செல்லாமல் மீண்டும் தவசு
மண்டபத்துக்கே போய்விடுவாள். நள்ளிரவில்
இரண்டாங் காட்சி நடக்கும். அப்போது சங்கரன்
அவ்விரட்டை யுருவை யொழித்துத் தன்னுருவில்
யானை வாகனத்தின்மேல் வருவான்.
அப்படியிருந்தும் அவனை அவள் தொடர்ந்து பின்
சென்று அவனுடன் கோவிலை யடைவாள். அதனால்
இரண்டாம் காட்சியே அவளுக்கு உகந்ததென அதன்
முக்கியத்துவம் உணரப்படும்.
பின் வந்த சங்க பத்மர் சங்கரனை நோக்கி
ஐயநின் கூறே மாலும் அயன்முதல் தேவும் என்னும்-- மெய்யுணர் வேயெஞ் ஞான்றும் விளைவுற வேண்டும்' (82 .68)
என வரம் வேண்டிப் பெற்றனர். அக் கடவுளும்,
'சூட்டரா வரசர்க் கல்லால் தோன்றலன்
உறைந்தா னன்றே' (82 . 70)
என்றபடி அவ்விருவருக்குப் பின்
வேறொருவருக்குங் காட்சிப்படாத விதத்தில் அவ்
விரட்டைய்ருவை மறைத்துத் தன்னுருவேகொண்டு
அப்புன்னை வனத்தில் விளங்கினான்.
அவ் விரட்டையுருவைக் காட்டுக என உமை
சிவனைக் கயிலையில் வேண்டினான். அதனை ஒழித்து
விடுக எனக் கோமதி அவனைப் புன்னைவனத்தில்
வேண்டினான். இரண்டும் நிகழ்ந்தன. அவ்வுருவை
அவனே சங்கற்பித்துக் காட்டினான், சங்கற்பித்து
ஒழித்தான். அச் செயல் அவனது முதன்மைக்கு
அடையாளம். உருத்திரன், மால், அயன் என்ற
மூவரையும் தன்பாற் காட்டி அவன் தாணுமாலயன்
எனப் பெயர் பெறவில்லையா, அதுபோல மென்க.
அம்முதன்மை அவ்வம்மையால் உலகிற்குப்
புலப்படுத்தப் பட்டது. அவ்வுருவை
ஒழித்துவிடுக என அவள் கேட்டதற்கு முக்கிய
காரணம் இன்னொன்றுமுண்டு சங்கரனது இடப்பாகம்
சக்திக்கே யுரியது. கோமதியே அச் சக்தி. அவன்
அப்பாகத்திற்றான் நாராயணனை அவளுக்குக்
காட்டினான்.
'தன் - னிடப்பாலா நம்முருவும்......அவனே
காட்டும்' (80 .56)
என நாராயணன் சொன்னது காண்க. சங்கர னிடப்
பாகத்தில் கோமதி யிருப்பது காண்க. சங்கர
னிடப் பாகத்தில் கோமதி யிருப்பது அவனது
அநாதியான அர்த்தநாரீசுர கோலம். அந்த
இடப்பாகத்திற் காட்டப்பட்ட நாராயண கோலம்
இடைப்பட்டது. அச் சங்கரநாராயண கோலமே அநாதியா
யுள்ளது போலுமெனச் சாமானிய வுலகம் மயங்கக்
கூடும். அது கருதி அவள் அஞ்சியிருக்கலாம்,
அ·தொன்று. சங்கரனும் நாராயணனும் புருஷ
கோலங்கள். அந்நாராயணனை வைணவ சமய தெய்வமெனக்
கொண்டு அவனையும் சங்கரனையும் சமமென எண்ண இடஞ்
செய்யும். அது சங்கர பரத்துவத்துக்குப்
பாதகம். சங்கரனுக்குச் சமமாகவோ, மேலாகவோ பிற
தெய்வத்தைக் கொள்வதே சங்கரநிந்தை. அதற்குப்
பிராயச்சித்தம் கிடையாது. பாம்பரசருள்
சங்கன் எப்போதுமே பக்குவிதான். பத்மன்
பின்னர்ப் பக்குவியானான். அவனுக்காகவே
அவ்விரட்டையுருக் காட்டப்பட்டது என்பது அதிகம்
பொருந்தும். அதில் அவன் சங்கரனையும்
அவனிடத்தில் நாராயணன் அடங்கி நிற்பதையுமே
கண்டான். அப்படி அவ்வுருவைச் சாமானியர்
காண்பரா? அவர் அந் நாராயணனைச் சங்கரனுக்குச்
சமமெனக்கொண்டு சங்கரநிந்தைக் குற்றத்துக்கு
ஆளாய்விடக் கூடும். அது கருதியும் அவள் அஞ்சி
யிருக்கலாம். அ·தின்னொன்று. அவ்விரட்டையுரு
வொழிய வேண்டுமென அவள் விரும்பியதற்கு
அவ்வச்சங்க ளன்றி வேறுங் காரணங்கள் உளவாகி
நூலோடு இயையுமாயின் அவற்றையுங் கொள்க.
நாராயண வகை
வடமொழியிலுள்ள இருக்கு முதலிய வேதம் 4
உம், காமிகம் முதலிய சிவாகமம் 28-உம்,
மெய்கண்ட நூல் 14உம், சிவஞானபோத திராவிட
மஹாபாஷ்யமும் சைவ சமயத்துக்குப் பிரமாண
சாத்திர வரம்பு. அவற்றோ டியைபுடைய
நூலுரைகளும் பல. அவ்வியைந்த அளவில் அவையும்
பிரமாணமாம். சாத்திர வரம்பில்லாத சமயம் சமயமே
யாகாது. அரங்கின்றி வட்டாடுவதும்
அவ்வரம்பின்றிச் சைவம் பேசுவதும் ஒன்று,
அவ்வரம்புள் நின்று நாராயண வகைகளை இங்குச்
சிறிதே காணலாம்-
'நூறு கோடி பிரமர்கள் நொந்தினார்
ஆறு கோடி நாராயண ரங்ஙனே ஏறு கங்கை மணலெண்ணி லிந்திரர் ஈறி லாதவன் ஈச னொருவனே'
என்றார் அப்பர். கோடிக்கணக்கான நாராயணர்
இறந்தொழிந்தனர், ஆகலின் நாராயணன் உயிரே,
சங்கரனொருவனே பிறப்பு இறப்பு முதலிய
உயிர்க்குணமில்லாதவன், அவனே பரப்பிரமம் என்பது
அப்பாடலின் பொருள். அந்நாராயணனுக்கு
இருப்பிடம் பிரகிருதிதத்துவம்.
'முக்திபெற்று மலவாசனைமாத்திர
முடையவராய்க் கீழுள்ள உருத்திரன் மால் அயன்
இந்திரன் முதலியோரைத் தொழிற் படுத்துவோராகிய
உருத்திரன் மால் அயன் இந்திரன்
முதலியோர்க்கும், அவர் தனுகரணாதிகட்கும்
இடமாம் என்றுணர்க'
என்றது சிவஞான பாஷ்யம்.
இதில தொழிற்படுத்தும் நாராயணன்,
தொழிற்படும் நாராயணன் என இருவகை நாராயணர்
கேட்கப்படுகின்றனர். தொழில்படுத்துகிற
நாராயணனும் உயிர்தான். ஆனால் அவன் முத்தி
பெற்றவன், மல வாசனை மாத்திரம் உடையவன், ஆகலான்
பிறப்பு இறப்பு இல்லாதவன். அவனுக்கு
இருப்பிடம் மேலுள்ள சுத்தவித்தியா தத்துவம்.
அவனால் தொழிற் படுத்தப்படுபவன் அதன்
கீழ்ப்பட்ட பிரகிருதி தத்துவ நாராயணன்.
'இறுதிசெய் திடலே சீற்றம் இன்பமே யாண்மை
யென்னா
அறைதரு சத்தி நான்காம் அரன்றனக் கையை காளி முறைதரு கவுரி யின்னோர் மும்மையும் பெற்றோர் ஏனைப் பெறலருஞ் சத்தி யான்இப் பெற்றியு மறைகள் பேசும்'
என்றது கந்த புரணம். அந்நால்வகைச் சக்திகளுள்
ஒன்று ஆண்மை யென்பது. அதுவே புருஷ சக்தி.
அதற்கு நாராயணன் எனப் பெயருண்டு. அது
சிவசக்தியின் ஒரு கூறு. அந் நாராயணன்றான்
சங்கரனுக்குத் தேவி. அவளே சுத்தவித்தையி
லுள்ள நாராயணனை யதிட்டித்து அவன் மூலம்
அப்பிரகிருதி தத்துவ நாராயணனை யியக்குவாள்.
அத்தேவி நாராயணனுக்கு இருப்பிடம் நாதாதீதம்.
இப்படி மூன்று வகை நாராயணர் உளராதல் அறிக.
வைணவ சமயக் கடவுள்
வைணவத்தில் பிரகிருதி முடிவாக 25
தத்துவங்களே சொல்லப்பட்டன. அந்தப்
பிரகிருதியிலுள்ள நாராயணனையே பத்மன்
தவங்கிடந்து பூசித்தான்.
'ஏனமாய் மாயொன் வேலை யிருநிலங் கீண்டுங்
காணா' (4 . 10)
'அன்னவா கனனுங் கருடவா கனனு மணிமுடி
யடியறியாத' (26 .2)
'பிரமனு நாரணனு நாடரிய.....சங்கரேசுரர்'
(28 . 9)
என்பன போன்ற அடிகளும் வருகின்றன. அம்மாயோன்,
கருடவாகனன், நாரணன் என்பனவும் அந்தப்
பிரகிருதிதத்துவ நாராயணனையே சுட்டும்.
'கடகரியும் பரிமாவுந் தேருமுகத் தேறாதே
யிடபமுகந் தேறியவா றெனக்கறிய வியம்பேடி -- தடமதில்க ளவைமூன்றுந் தழலெரித்த வ்ந்நாளில் இடபமதாய்த் தாங்கினான் திருமால்காண் சாழலோ'
என்றதிலுள்ள திருமாலும் அவனே. ஐயிரு
பிறப்பெடுத்தவனும் அவன்.
'பிரமா விட்டுணு சரீரம் பிராகிருத
மாகலானும் முன் பரமசிவன் அனுக்கிரகம்
இல்லாமையானும் பிரம விட்டுணுக்கள் சரீரம்போலப்
பரமசிவனைத் தியானிக்கலாகாது. பிரம
விட்டுணுக்கள் பதம் பசுத்தானம்.
உருத்திரர்பதம் ஈசுரர்பதம் இரண்டும்
பதித்தானம்'
என்றது சித்தாந்த பிரகாசிகை. பிராகிருத
சரீரமுடையவனாய்ப் பசுத்தானத் திருப்பவ
னெனப்பட்ட விட்டுணுவும் அவன்.
அந்நாராயணனைத்தான் வைணவ சமயம் கடவுளெனக்
கொண்டு வணங்கிவரும். அவன் அந்த 25
தத்துவங்களளவே வியாபித்திருப்பான். ஆனால்
அவற்றின் மேலுந் தத்துவங்களுள. அவற்றை
அச்சமயம் அங்கீகரியாது. ஆகலின் அவற்றில்
அவனுக்கு வியாபகமில்லை. சைவசமயம் அவற்றையுஞ்
சேர்த்துத் தத்துவங்கள் 36 கொள்ளும்.
அவற்றின் மேல் தத்துவமில்லை. 36-ஆம் தத்துவம்
நாதம் என்பது. அதன் முடிவிலுள்ளவன் சங்கரன்.
அவனே சைவ சமயக் கடவுள், அவ்வெல்லாத்
தத்துவங்களிலும் அந்தர்யாமி யாகி
மேலிருப்பவன், சர்வவியாபி. அவனையும்
அந்தப்பிரகிருதி தத்துவ நாராயணனையும் சமமென
இயைத்துச் சங்கரநாராயணனெனப் பேசுவது சைவ
நூற்களைப் பயிலாத தோஷமே யாம்.
80 - 56 ஆம் பாடல் சங்கரன் சக்தன்,
மூன்றாவதாகச் சொல்லப்பட்ட நாராயணன் சக்தி
என்றது. சக்தன் கர்த்தா. சக்தி அவனுடைமை.
உடைமை உடையவனின் வழிப்பட்டதே.
அத்தேவிநாராயணன்றான் நாதாதீதமாயுள்ள
சிவசக்தியின் அமிசம்.
'அரியலால் தேவியில்லை ஐயன்ஐ யாற னார்க்கே'
என்ற அப்பர் வாக்கிலுள்ள அரி
அத்தேவிநாராயணன். அவன் சுத்தவித்தை நாராயணன்
மூலம் பிரகிருதி நாராயணனைத் தொழிற்படுத்தி
வருகிறான். அச் சம்பந்தம் பற்றி அந்தப்
பிரகிருதி நாராயணனையும் சங்கரனுக்குத்
தேவியெனச் சில நூற்கள் கூறும். அவ்வளவே.
பிரமன் முதலிய மற்றைத் தேவர்களை அமிசமென்பதும்
அச் சம்பந்தம்பற்றித்தான். அவர்களெல்லாம்
உயிர்களென்பதே உண்மை.
சங்கரனே சங்கரநாராயணன்
'மாநிலத்தோர் சிவன் வேறு, விஷ்ணு வேறு
என்று பிளவு படுத்துவது தவறு என்பதை
உணர்த்தும் பொருட்டு' ஆனது ஆடித் தவசுக்
காட்டியென அக்கோவில் தவசு விளம்பரப்
பத்திரிக்கை கூறிவருகிறது, நரசிங்கவுருப்
போன்றது சங்கரநாராயணன வுரு. முன்னையதில்
நரனும் சிங்கமும் அல்லாத நாராயணன் மறைந்து
நின்றான்.. பின்னையதில் அப்படிச் சங்கரனும்
நாராயணனும் அல்லாத எவன் மறைந்து நின்றான்?
எவனுமிலன். நரசிங்கவுரு நரன் வேறு, சிங்கம்
வேறு எனப் பிளவு படுத்தவது தவறு என்பதை
உணர்த்தவா வந்தது? இல்லை. அதுபோல்
சங்கரநாராயண வுரு சங்கரன் வேறு. நாராயணன்
வேறு எனப் பிளவுபடுத்துவது தவறு என்பதை
உணர்த்தவா வந்தது? இல்லை. அதுபோல்
சங்கரநாராயண வுரு சங்கரன் வேறு. நாராயணன் வேறு
எனப் பிளவுபடுத்துவது தவறு என்பதை உணர்த்த
வரவில்லை. மேலும் சிவன் வேறு, விஷ்ணு வேறு
எனப்பிளவு படுத்துவோர் எதனை அப்படிப் பிளவு
படுத்துகிறார் என்பதற்கும் அப்பத்திரிக்கையால்
விடை காண முடியாது. நரசிங்க வுருவில்
நாராயணன் மறைந்து நின்றது போல் அல்லாமல்
சங்கரன் தன் உருவிலேயே தன்னை ஒரு பாதியிலும்,
நாராயண வுருவை இன்னொரு பாதியிலுமாகக் காட்டி
நின்றான். அந்நாராயண வுரு வைணவக் கடவுளானால்
நரசிங்க வுருவிலுள்ள நரன் வேறு, சிங்கம் வேறு
பிராணிகள் ஆதலும் வேண்டும். அப்படியில்லை.
நரசிங்க வுருவிலுள்ள நரவுருவும் சிங்கவுருவும்
நாராயணனுடையனவேயாதல் போல் சங்கரநாராயண
வுருவிலுள்ள நாராயண வுருவும் சங்கரனுடையதே
யாகும். கோவில் சங்கரநாராயண சந்நிதியில்
இடபவுருவமே யிருப்பதை இன்றுங் காணலாம்.
தவசுப் பிற்பகற் காட்சியில் சங்கரநாராயணன்
காட்சி கொடுக்க எழுந்தருளுவதும் இடப
வாகனத்திலேயா மென்பதும் முன் சொல்லப்பட்டது.
ஆகவே சைவசமய வுண்மையைக் கண்டு அவ்விளம்பரப்
பத்திரிகை வெளிவருவதாகச் சொல்ல முடியாது.
சங்கரனே சங்கரநாராயணனாக உருக்காட்டினான்
என்பது,
'சங்க பத்மர்செய் தவத்தினுக் கரனரி தானு -
மெங்கு
மொன்றெனத் திருவுருக் கொண்டரு ளிமைய - மங்கையாவுடை மணாளர்' (6 . 1)
'அரியர வடிவா மரனுரு' (43 . 66)
'பனிவரு சடையான் மாலும்ஈ சனுமாய்ப்
பகருருத்
தாங்கிய பண்பும்' (48 . 5)
என்றதால் விளங்கும். ஒருவனே தன்னை யிருவராக்
காட்டினான். ஒருவன் சங்கரன். இருவர் அவனும்
அவனது புருஷசக்தி யெனப்பட்ட தேவி நாராயணனும்.
ஆகலின்,
'சங்கரநா ராயணரே யநாதி மூர்த்தி' (47 .
81)
என்றதால் அவ்வுரு சங்கரனுடையதே என்பதாயிற்று.
'புன்னைமா வனத்தின் நீழற் புவியினில்
அநாதி யாகி
அன்னைகோ மதியி னோடும் அமர்ந்தருள் அமல வித்தாய் மன்னிய தொண்டர்க் கெல்லா மங்கல நல்க லாலே தன்னைநே ரிவ்வி லிங்கஞ் சங்கர லிங்க மாகும்' (64 . 1),
'சீர்த்திகொள் தேவ மூர்த்தி யசுரராற்
செய்யு மூர்த்தி
யேர்த்திகழ் நாக மூர்த்தி யிவ்வுல கத்தி லுள்ள பார்த்திப ரியற்று மூர்த்தி யாதிய படிவங் கொண்ட மூர்த்திகட் கெல்லாம் அந்தச் சங்கர மூர்த்தி முன்னாம்' (64 . 4)
என்றதால் அக்கோவிலிற் சங்கரலிங்கமே அதாவது
சங்கரமூர்த்தியே மூலவராகிய அநாதிமூர்த்தி.
அவனுக்கு 8 நாமங்கள் உள. (68 . 30)ஆம் பாடல்
காண்க. அவற்றுள் வரராசைநாதன், சீராசைநாதன்,
புன்னைவனநாதன், கூழையாண்டி என்பன இடம்பற்றி
வந்தன. சங்கரநாராயணன் என்பது கொண்ட கோலம்
பற்றி வந்தது. வைத்தியநாதன் என்பது புற்று
மண் மருந்துபற்றி வந்தது. சங்கரமூர்த்தி,
சங்கரலிங்கம் என்பன பெயராகவே யுள்ளன. இன்றும்
அக்கோவில் மூலவர் பெயர் சங்கரலிங்கமே. அதனைச்
சங்கரநாராயணரென யாருஞ் சொல்லார்.
மஹாலக்ஷ்மி நாராயணனை நோக்கிச் "சுவாமி!
உமது ஒரு பாதியில் உம்மையும், இன்னொரு
பாதியில் சங்கர னுருவையும் எனக்குக் காட்டுக"
எனப் பிராத்தித்தாள்; நாராயணனும் அவளுக்கு
அவ்வாறே காட்டினான் என்ற கதை வைணவ
சமயத்திலுண்டா? அவ்விரட்டையுரு எந்த வைணவக்
கோவிலிலாவ துண்டா? அவ்வுருவைக் காட்டும் சக்தி
அவனுக்கில்லை. அவ்விரட்டை யுருவிற்குப்
பிராணனாவான் சங்கரனொருவனே, நாராயணனல்லன்.
ஆனால் 'தாழ்சடையும்' எனத் தொடங்குமொரு பாடலை
ஆழ்வார் பாடியிருக்கின்றனரே யென்னலாம்.
அதற்கொரு சரித்தரமுங் கோயிலும்
அம்மதத்தினருக்கில்லையாகலின் அப்பாடலும் அது
போன்ற வைணவப் பிற பாடல்களும் 'இடமால்
வலந்தான்' எனத தொடங்கும் பாடல் போன்ற
திருமுறைப் பாடல்களிலுள்ள சங்கரனுக்குரிய
பொருள்சேர் புகழை நாராயணனுக்கேற்றிக் கூறிய
பொருள் சேராப் புகழேயாகும்.
அக்கோவிலிலிருந்து 1372 ஆம் பசலிச் (1963)
சித்திரைப் பெருந் திருவிழா விளம்பரப்
பத்திரிகை வெளியானது. அதனில்
'ஸ்ரீகோமதியம்பாள் சமேத ஸ்ரீசங்கரலிங்கப்
பெருமான்' என்றுள்ளது ஒரு வரி. அதன்படி
சங்கரலிங்கம் கணவனும், கோமதி மனைவியும் ஆவர்.
அப்பத்திரிகையில் அவ்விருவர் படங்களையும்
போடுவதே முறை. லக்ஷ்மி படத்தையும் நாராயணன்
படத்தையும் வைணவப் பத்திரிகையிற் போடுவது
போலும் அது. சங்கரலிங்கத்துக்குத் தலை,
உடம்பு, கை, கால் முதலிய உறுப்புக்க
ளில்லையேயெனக் கவலை வேண்டாம்.
சங்கரலிங்கத்தின் உற்சவமூர்த்தித் திருவுரு
விருக்கிறது. அதன் படத்தையும் கோமதியின்
படத்தையும் போட்டால் என்ன? அவ்விழாப்
பத்திரிகையில் 'சங்கரநாராயணன் படமும் கோமதி
படமும் போடப்பட்டிருக்கின்றன. சங்கரநாராயணன்
கணவனும், கோமதி மனைவியும் ஆவர் என்பது அதனால்
தெரிகிறது. சங்கரநாராயணமூர்த்திக் காட்சி
வைணவப் பெருமக்களுக்கு மாமென்பது
நாட்குறிப்பிலுள்ளது. அங்ஙனமாயின்
அம்மூர்த்தியிலுள்ள நாராயணன் வைணவக் கடவுள்
என்றாகிறது. அக்கடவுளுமா கோமதிக்குக் கணவன்?
அவன் அவளுக்குச் சகோதரனே. 'மாயோன் மருகனே'
என்ற முருகன் துதி நூலால் அதனை யறிக.
அச்சகோதரனையும் தனக்கு அகமுடையானென அவள்
கொண்டனளா? அவளது பதீவிரதா தருமத்துக்கு
அதுதான் இலக்கணமா? கோமதி சங்கரரை வழிபடுமுறை
இதுதானா? அந்நிய சமயத்தாரைத் திருப்தி
செய்யும் பொருட்டுத் தன்சமய தெய்வத்தைத்
தரங்கெடப் பேசுவதும் எழுதுவதும்
படம்போட்டுக்காட்டுவதும் சைவ சமய
சமூகத்துக்குத் தன்மான மாகுமா? நாராயணன் தன்
தங்கையை மனைவியாக் கொண்டானென அவனையும் அது
நிந்தித்த தாகும். ஆகலின்,
'கொவ்வையா யிமையச் செல்வி கோமதி வலப்பா
கத்தில் - திவ்விய சொரூப மாகத் திருவருள் புரிந்தி ருக்கும் இவ்விலிங் கத்தைப் போற்று மியல்புளோர் பிறப்பென் றேதும் - பெளவமேழ் கடந்து நித்த பரிசுத்த ராகுவாரே' (66 . 18)
என்றபடி சிவலிங்கமுங் கோமதியுமாகப் படம்
போட்டுவதே ஒழுங்காகு மென்க.
விழா
உக்கிரபாண்டியன் என்றோ ரரசன் இருந்தான்.
அவன் அப்புன்னை வனத்தை ஊராக்கிச் சங்கரலிங்கப்
பெருமானுக்கும் கோமதித் தாய்க்கும் கற்கோவில்
எழுப்பிச் சிவாகம வழிப் பூசையாதிய நடைபெறச்
செய்தான். அவனால் தொடங்கி நடத்தப்பட்ட விழாச்
சித்திரைத் திருவிழா வாகும். அதுவே
அக்கோவிலின் பிரமோத்ஸவம். வேறு
அத்தலத்திற்குரிய விழா எதுவும் புராணத்தி
லில்லை.
சங்கரன் அவ்விரட்டையுருக் காட்டிய நாள்
அடிமாதப் பெளர்ணமி. அந்நாளில் சங்கரனை
வணங்குவோர் பெரும் பேறடைவர். (65 . 13)ஆம்
பாடல் காண்க. அதற்கு முந்தின பிந்தின
பாடல்களில் சோமவாரம், சுக்கிரவாரம், சித்திரா
பெளர்ணமி, மஹாசிவராத்திரி, பிரதோஷம், அட்டமி
என்பனவும் அவனை வணங்குதற்குரிய நன்னாட்களெனச்
சொல்லப்பட்டன. அவ்வளவே.
'சங்கபத்மருக்கன்றி மற்றொருவருக்குத்
தெரியாமல் மறைந்து புன்னைமர நீழலில்
சங்கரநாராயணராகிய பெருமான்
எழுந்தருளியிருந்தனர்' (88 இறுதி வசனம்)
என்றதால் அங்ஙனம் மறைந்துபோன சங்கரநாராயண
மூர்த்திக்கு உக்கிரபாண்டியனும் விழா
நடத்தினதில்லை. அப்படியிருந்தும் அவ்விழாக்
கோவிலில் சிறந்த இடம் பெற்றது. அவ்வளவுதானா?
அக்கோவில் மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி
விழாவிற்கும் இடனாயிற்று. எந்த வைணவக்
கோவிலிலாவது மார்கழித் திருவாதிரை விழா
நடக்கிறதா? சைவசமயிக ளெல்லாம் அடியோடு
அத்தமித்துப்போன காலத்திற்போலச் சைவாலயங்களில்
பூஜை, உத்ஸவம் முதலியன நடக்க லாயின.
பெயர் மாற்றம்
அக்கோவில் சம்பந்தமான பழைய அச்சுப்பாரம்
ஒன்றில் 'சங்கரநயினார்கோவில் தேவஸ்தானம்
ஆபிஸ், 190 ம்வருஸத்து நிர், பேப்பர்
சுருக்கம் அடக்கம் விபரம் பேப்பர்தெய்தி,
வரவுதெய்தி, ஆர்டர்தெய்தி, ரவணாதெய்தி,
முடிவுதெய்தி' என்பன அதற்கதற்குரிய இடத்தில்
அச்சிடப் பட்டுள்ளன். 190 என்றதன் பக்கத்தில்
8 என்ற கையெழுத்திருக்கிறது. பேப்பர் தெய்தி
8-1-08 ஆகும். அக்கோவிலுக்கு 1908இல்
சங்கரநயினார் கோவில் தேவஸ்தானம் என்ற பெயர்
இருந்திருக்கிறதென அதனால் தெரியலாம்.
பின்னர் அக்கோவிலிலிருந்து 51 பக்கங்கள்
கொண்ட கோஷ்பாராப் புத்தகமொன்று அச்சாகி
வெளிவந்தது. 'உ ஸ்ரீ கோமதி ஸஹாயம்,
சங்கரநயினார் கோவில் கஸ்பா, ஸ்ரீ சங்கரலிங்க
சுவாமி கோவில் தேவஸ்தானம், 1325-ம் பசலி வரவு
செலவு கோஷ்பாரா, திருநெல்வேலி நூருல் இஸ்லாம்
பிரஸில், பதிப்பிக்கப்பட்டது, 1917' என்பது
அதனட்டையிற் கண்ட முகப்பு. 1917இல் அக்கோவில்
ஸ்ரீசங்கரலிங்கசுவாமி கோவில் தேவஸ்தானம் என்ற
பெயருடையதா யிருந்திருக்கிறதெனத் தெரியலாம்.
அக்கோவிலின் மற்றோ ரச்சுப்பாரத்தில்
'டூப்பிளிக்கேட், சங்கரநயினார் கோவிலித்
தாலூகா, சங்கரநயினார் கோவில்க் கிராமம்,
ஸ்ரீசங்கரலிங்கசுவாமி கோவில்.....வரவு
செலவுகளுக்குரிய வவுச்சர். வரவு
ரூ.சிலவு.ரூ.பாபு பசலி ரூ.அ.பை செலுத்துகிற
அல்லது பெற்றுக் கொள்பவர் கையொப்பம்.....19
ஷராப். பேஷ்கார். தர்மகர்த்தர்கள்' என
வுள்ளது. அதனில் ஸ்ரீ சங்கரலிங்கசுவாமி
கோவில் என்ற அச்செழுத்துக்குப் பக்கத்தில்
தேவஸ்தானம் எனவும், தர்மகர்த்தர்கள் என்றதன்
கீழ் 21-3-1921 எனவும் கையால்
எழுதப்பட்டுள்ளன. 1921 இலும் அக்கோவிலின்
பெயர் ஸ்ரீ சங்கரலிங்கசுவாமி கோவில்
தேவஸ்தானம் எனத் தெரியலாம்.
அக்கோவில் நூல் நிலயத்திலுள்ள
புத்தகங்களின் அட்டையில் ஒட்டப்பட்டுள்ள
துண்டு விளம்பரத்தில் 'ஸ்ரீ சங்கரலிங்கசுவாமி
கோவில் தேவஸ்தானம் புஸ்தகசாலை, புஸ்தகம்
லக்கம் N.A.V. Somasundaram Pillai &
V.Thiruvengadam Pillai, Trustees' என
அச்சிடப்பட்டிருப்பதை இன்றுங் காணலாம்.
N.A.V. சோமசுந்தரம் பிள்ளை, V.திருவேங்கடம்
பிள்ளை என்பார் அக்கோவிலில் தருமகர்த்தர்களா
யிருந்தபோதும் அதற்கு ஸ்ரீசங்கரலிங்கசுவாமி
கோவில் தேவஸ்தானம் என்பதே பெயர் எனத்
தெரிகிறது.
ஆனால் இப்போது அக்கோவில்
ஸ்ரீசங்கரநாராயணசுவாமி தேவஸ்தானம் எனப்
பெயர்மாற்றி வழங்கப்பட்டு வருகிறது.
அம்மாற்றம் என்றிலிருந்து ஆரம்பம்? அதனைக்
காணும் பொறுப்பு சைவசமயத்தாருக்கன்றி
யாருக்குண்டு? சங்கரன்கோவில் சைவசமயப்
பெருமக்களே அதனை விசேடமாகக் காண்டற் குரியார்.
1917இல் சென்னை, கவர்ண்மெண்டு பிரஸில்
அச்சான Madras District Gazetteers -
Tinnevelly by H.R.Pate, I.C.S. Volume
I.413,414 ஆம் பக்கங்களில் அக்காலை நெல்லை
ஜில்லாக் கலெக்டராயிருந்த அந்தப் 'பேட்'
என்பவர் 'The temple, conspicuous by its
gopuram for many miles around, boasts of
great antiquity. According to the
stalapurana in the possession of the
trustees, King Ugra Pandia "Lord of Korkai,
the vanquisher of the tiger-flag of the
Cholas and bow-flag of the Cheras," used to
go daily to Madura to worship. One day, on
reaching the village of Perungottur (two
miles from Sankaranainarkoil) the elephant
on which the king was riding plunged into a
pit and refused to move. Whilst the king
was marvelling at the portent, the god
Ayyanar appeared and told him he need not go
every day to Madura. At that moment a
Paraiyan came and told the king he had found
a cobra beside an ant-hill and on the king's
request took him to the spot. There a
lingam was found and a shrine was built.
There a lingam was found and a shrine was
built. Such was the origin of the
Sankaranainarkoil temple. Here it was, the
story goes on to say, that God Siva showed
to his consort, Gomathi Amman, and to the
two serpents, Sanka and Padman, who were
quarrellling as to the relative importance
of Siva and Vishnu, the unity of the two
gods.' The story, which up to this point
had referred only to Siva, thus suddenly
introduces in allegorical form a theological
discussion of the type which originated with
the great Ramanujachariyar in the twelfth
century. It is scarcely possible to doubt
that this element of the story is a later
interpolation, designed to associate the god
Vishnu with the foundation of the temple and
to lend support to the subsequent innovation
by which the diety of the temple came to be
called "SankaraNarayana" (i.e. Siva and
Vishnu) instead of Sanakaranainar, "The Lord
Shiva". The plan of the building makes it
evident that orginally Vishnu had not a
shrine in it. The temple consists of two
main parts, the larger occupied by the
lingam, the emblem of siva, and the smaller
by the goddess Gomathi Amman. Between the
two a third small shrine has been inserted
for Narayana. but the building did not lend
itself to this addition; for , while the
lingam and the amman may, as it usual, be
viewed from the main entrance through a
continuous vista of doorways, so that the
humblest worshipper may do homage from the
street, it was found impossible to give the
god Narayana similar accomodation. He has
therefor been walled in and has no gateway.
Instances of temples which, according to
tradition at least, have been converted from
the worship of Siva to that of Vishnu are
not uncommon; the great temple of Tirupati
(North Arcot) and the Perumal temple of
Srivilliputtur (Ramnad) may be quoted. In
Sankaranainarkoil the attempt which we may
perhaps ascribe to the era of those aredent
Vaishnavites, the kings of Vijayanagar, was
met, it would appear, by the ingenious
answer that already the temple contained
both gods. Though the trustees of the
present day make much of the co-existance in
their temple of the two gods and are
particular in having the pattas for the
temple lands made out distinctly in the name
of Sankaranarayana, the newer god who plays
quite a minor role in the important rituals
of the temple'
என அச் சங்கரநயினார் கோவிலைப் பற்றிய
வரலாரொன்று தீட்டியிருக்கிறார். அக்கோவிலின்
வெளியீடாக 1957-இல் 'சங்கரன்கோவில் வரலாறு'
என்றொரு புத்தகம் வந்திருக்கிறது. அதில்
அவ்வாங்க்கிலத்தின் தமிழ்ப்பெயர்ப்புச்
சுருக்கத்தைக் காணலாம். 'இக்காலத்திய
தருமகருத்தர்கள் இந்தக் கோவிலில் இரண்டு
தெய்வங்களும் இருப்பதைப்பற்றிப்
பிரமாதப்படுத்தி வருவதோடு, நிலங்களுக்குப்
பட்டாவைச் சங்கரநாராயணர் என்ற பெயருக்கே ஆக்கி
வருகிறார்கள்' என அதிலிருக்கிறது. அதனால் அக்
கோவிற் பட்டாவை மூலவராகிய சங்கரலிங்கப்
பெருமான் பேரால்லாமல் 'புதுத் தெய்வம்' ஆகிய
சங்கரநாராயணர் பேரால் தருமகர்த்தர்களே ஆக்கி
வருகிறார்களெனத் தெரிகிறது. உரிமைப்பட்ட
ஒருவர் பேருக்கு ஆக்கவேண்டிய பட்டாவை
உரிமையில்லாத வேறொருவர் பேருக்கு ஆக்கி
வைப்பது நியாயமா? முன் வந்து போன
தருமகருத்தர்கள் போல் தாமும் செய்து வருவதாகப்
புகல் சொல்லிப் பின் வந்துள்ள தருமகருத்தர்கல்
தப்பப்பார்ப்பதும் நியாய மன்று.
தருமகருத்தர்ப் பதவியை ஏற்றுக்கொண்ட ஒருவர்
தம் கோவிலில் முந்திய தருமகர்த்தர் காலத்தில்
தவறு ஏதேனும் நடந்துள்ளதா என முதலில் ஆராய
வேண்டும். அது காணப்படின் அதனைக் களைதல்
அவசியம். அப்போதுதான் தருமத்தைக் காத்து
வளர்க்க முடியும். ஆகவே உரிமையற்ற
சங்கரநாராயணர் பேருக்குள்ள எல்லாப்
பட்டாக்களையும் உரிமையுள்ள சங்கரலிங்கப்
பெருமான் பேருக்கு மாற்றி வைக்க இப்போதுள்ள
கோவிலதிகாரிகள் முற்படுவார்களாக. பரிவார
தெய்வங்கள் எந்தத் தெய்வத்தின்
கைங்கரியத்துக்கென விடப்பட்ட சொத்தானாலும்
அதன் பட்டா மூலவர் பெயருக்குத்தானே எழுதி
வாங்கப்பட வேண்டும்?
கலவடப் பிரசங்கம்
கலவடம் என்பது கலப்படம் என
வழங்கப்படுகிறது. 'அரனின் கூறுதான் அரி' எனத்
'தான்' சேர்த்துச் சொன்னது அக் கோவிலின்
1963-64 நாட்குறிப்பு. அரன் அமிசி, அவனது
அமிசமே அரி என்ற கொள்கை வைணவ சாத்திர
வல்லுநருக்குச் சிறிதும் அங்கீகாரமன்று.
அதனால் சங்கரநாராயண மூர்த்தியை அவர்
கண்ணெடுத்தும் பாரார். ஆகலின் ' வைணவப்
பெருமக்களுக்கு ஆடித் தவசு உற்சவத்தில் ஸ்ரீ
சங்கரநாராயண மூர்த்தியாகக் காட்சி
தந்தருளுகிறார்' என அந்நாட்குறிப்புச்
சொன்னதில் அர்த்தமில்லை.
சிவன் வேறு. விஷ்ணு வேறு என்று பிரிவு
படுத்துவது தவறு எனச் சைவசமயமுஞ் சொல்லாது,
வைணவ சமயமும் சொல்லாது. அவ்விரு
சமயங்களுக்கும் வேறான மாயாவாத சமயமே
சொல்லும். சிவாகமங்களுக்கும், சைவாலயங்களும்
உள்ளதொன்றுதொட்ட தொடர்பை அறுத்தெரிந்து
சைவாலயங்களை அம்மாயாவாத சமய வாழ்வுக்கே
இடமாக்கிக் கொண்டு சிவாகமங்காத் தடந்
தெரியாமல் செய்துவிடுவதே அச் சொல்லால்
விளையக்கூடிய பயன். சைவ சமூகத்துக்கே அது
பிராணஹானி யென்பது அச்சமூகத்தின் உள்ளத்தை
உறுத்தவில்லை. சிவவிஷ்ணுக்கள் அபேத மென்பதை
ஆதரித்து விளம்பரஞ் செய்துவரும் பிரசாரகருள்
முதலிடம் சிருங்கேரிமடத்து அதிபராகிய சங்கர
முனிவரும், காஞ்சிகாமகோடி பீடத்து அதிபராகிய
சங்கரமுனிவருமாவர். அதைக் காண வேண்டும்.
முதலில் சிருங்கேரி முனிவர் பேச்சை
எடுத்துக்கொள்ளலாம்.
அவர் பிரசங்கமொன்று 29-7-1960 தினமணியில்
வந்திருக்கிறது`:-
"சிவபுராணத்தில் பத்மாசூரன் கதை
குறிப்பிடப்பட்டிருக்கிறது......பத்மாசூரன்...சிவனைக்
குறித்து கடும் தபசு செய்தான்.
ஈஸ்வரனும்......'யாது வரம் வேண்டு' மென்று
கேட்டான். 'நான் யார் தலைமேல் கை வைக்கிறேனோ
அவன் பஸ்மமாய் போய்விட வேண்டும்' என்று
வேண்டினான். 'கொடுத்தேன்' என்றான் ஈஸ்வரன்,
பத்மாசூரன் உடனே இதை 'டெஸ்ட்' பண்ண வேண்டுமே
என்றார் 'யார் தலைமேல்' என்று கேட்டதுமே
'உங்கள் தலைமேல்' தான் என்று சொல்லி
சிவபெருமானை அணுகிறான். ஈஸ்வரனும்
அங்கிருந்து ஓட ஆரம்பித்தார்.....பகவான் உடனே
மோஹினி ரூபமெடுத்து பத்மாசூரன் முன்.....ஆட
ஆரம்பித்து விட்டார். (அவ்வசுரனும்)
மோஹினியைப் போலவே அபிநயங்கள் செய்யலானான்.
பகவான் (மோஹினி) தன் தலையில் கையை வைத்ததும்,
பத்மாசூரன் அதேபோல் தன் தலைமேல் தன் கையை
வைத்தான். உடன் தானே பஸ்பமாய் விட்டான்.
விஷ்ணு இவ்வாறாக சிவனே இக்கட்டான
நிலைமையிலிருந்து விடுவித்து 'இனிமேல் வரம்
கொடுப்பதில் ஜாக்கிரதையா யிரு' என்று கூறிச்
சென்றாராம்"
என்றது அம் முனிவர் பிரசங்கம். இக்கதை
இப்படி யிருக்குமானால் இது சிவனது பெருமை கூற
வந்த சிவபுராணத்தில் இடம் பெற்றிருக்குமா?
அறிஞர் சிந்திக்க. விநாயக புராணம் உடுண்டி
விநாயகர் திருவவதாரப் படலத்திலும் இக்கதை
உண்டு. 1 முதல் 13 முடியவுள்ள பாடல்கள்
காண்க:-
'அப்பொழுதே சோதிப்ப வமலர்திரு முடிமீதே
துப்புடைய பிரமசுரன் தொடிக்கரம்வைப் பானடுத்தா னொப்பரிய வரங்கொடுத்த வொருதாமே யழித்துவிடல் செப்பமல வெனவிறைவர் செறிந்தவியா பகரானார்'
என்றது 4 ஆம் பாடல். வரங்கொடுத்த பிறகு தன்
ஸ்வரூபமாகிய வியாபக நிலையைச் சிவன்
எய்தினான். அதனை 'அங்கிருந்து ஓட
ஆரம்பித்தார்' என்றார் அம்முனிவர். அவ்வசுரன்
பெற்ற வரம் விஷ்ணுவால் திதித்தொழிலுக்கே
ஆபத்தாயிற்று. அவன் உயிருடன் இருந்தால்
முச்சகமும் சாம்பலாக்குவன். அவன் இறந்தாலன்றி
அவ்விஷ்ணுவுக்குத் தன் காத்தற்றொழில்
நடைபெறாது. அதற்கஞ்சினான் அக்கடவுள்.
அதனாற்றான் அவன் அவ்வசுரனை வஞ்சனையாற்
கொன்றான். அது அவனது காத்தற்றொழிலைக்
காத்துக் கொள்வதற்காகவன்றிச் சிவனைக்
காப்பதற்காக வன்று.
'விச்சுவரு பனையிந்த வெய்யவன்காண் பானல்ல
னச்சிவனா லழியாத வழிதக்க வரம்பெற்றான் முச்சகமு மினிநீறாய் முடிப்பனொரு வஞ்சனையா னச்சியுயிர் குடித்துமென நலத்தருமோ கினியானான்'
என்றது 6-ஆம் பாடல்.
இன்னொன்று. அவ்வசுரன்முன் விஷ்ணு தன்
உண்மை வடிவிற் சென்றிலன். சென்றிருந்தானாயின்
அவன் தலையில் கைவைத்து அவனைச்
சாம்பாலாக்கியிருப்பான் அவ்வசுரன். ஆகலின்
அச்சிவ வரத்துக் கஞ்சியே விஷ்ணு மோஹினி யென்ற
பெண் வடிவந்தாங்கி அவ்வசுரன்முன் வந்து
ஆடினான். ஆக விநாயக புராணஞ் சொன்னதே
இக்கதையின் எதார்த்த வடிவம். சிருங்கேரி
முனிவர் சொன்னது அங்ஙனமன்று.
அப் பத்திரிகையில் விஷ்ணுவைத் தாழ்த்தி
ஒரு கதை பேசியிருக்கிறா ரவர். அக்கதை எப்
புராணத்திலுள்ளது? அதை அவர் தெரிவிக்கவில்லை.
அக்கதையின் தரத்தை விசாரிப்பது வைணவரின்
வேலை. ஆகலின் இங்கு விடப்பட்டது. மேலும்
இப்படி மனம்போனபடி கதைகளையே சொல்லிப்
போவதுதானா சிவவிஷ்ணு அபேதஞ் சாதிப்பதற்கு
மார்க்கம்? முதல் நூலை அடியாகக் கொண்டு
உத்தேசம், லட்சணம், பரீ¨க்ஷ என்ற முறையில்
தெய்வ நிச்சயம் பண்ணுவதே நியாயம். அந்த
நியாயவழிச் செல்வது சிவஞான போதம் என்ற நூல்.
அடுத்து காமகோடி பீட முனிவரின்
பிரசங்கமொன்றைக் கவனிக்கலாம். அது 24-11-1957
தினமணியில் வந்திருக்கிறது. ' '
எனபதற்கிடையிலுள்ள வாக்குகள்
அப்பிரசங்கத்திலுள்ளவை. 'ராமேஸ்வரன்' என்ற
பதத்தின் பொருள் யாது? எனத் தேவர்கள்
விஷ்ணுவிடங் கேட்டார்கள். ராமனுக்கு ஈஸ்வரன்
என அவ் விஷ்ணு பொருள் கூறித் 'தனக்கும் சிவன்
ஈஸ்வரன் தான்' என்று விடை தந்தான். இது
தத்புருஷஸமாஸம் பற்றிக் கொள்ளப்பட்ட
பொருளாம். அடுத்து அத்தேவர்கள் அவ்வினாவைக்
சிவனிடங் கேட்டார்கள். ராமனை ஈசுரனாக உடையவன்
என அச்சிவன் பொருள் கூறித் 'தான் ராமனை
ஈஸ்வரனாக உடையவன்' என்று விடை தந்தான். இது
பஹ¤வ்ரீஹி ஸமாஸம் பற்றிக் கொள்ளப்பட்ட
பொருளாம். இவ்விரண்டு விடைகளிலும் தேவர்கள்
நம்பிக்கை கொள்ளவில்லை. அவர்கள் 'மத்யஸ்தரான
பிரம்மாவைப் போய் கேட்போமென்று அவரிடம்
போனார்கள்'. ராமன் என்கிற ஈசுவன் என
அப்பிரமன் பொருள் கூறி 'ராமன் தான் ஈஸ்வரன்'
என விடை தந்து விட்டான். இது கர்மதாராயஸமாஸம்
பற்றிக் கொள்ளப்பட்ட பொருளாம். இப்படி ஒரு
கதை கண்டார் அம்முனிவர். ராமந்தான் ஈசுரன்
அதாவது ராமனும் ஈசுரனும் ஒன்று என்ற
அம்மத்தியஸ்தனது தீர்ப்பை அவருஞ்
சம்மதித்தாரெனத் தெரிகிறது. இராமேசுர
வரலாற்றைக் கூறுவது சேது புராணம். அத்தலம்
சிவதலம் என்பதை மனிதருட் குழந்தையும்
அறியும். பிரமன் தேவனாயிருந்தும்
அப்புராணத்தையுங் கற்றிலன், அத்தலத்தில்
எழுந்தருளியிருக்கிற சிவலிங்கப்பெருமானையுந்
தரிசித்திலன் போலும். அதனால் அக்குழறுபடைத்
தீர்ப்பை அவன் கூறினான்.
அவன் அப்பரத்துவ நிச்சய விசாரணையில்
மத்தியஸ்தனாயிருந்து தீர்ப்புக் கூறத்
தகுதியுள்ளவன் தானா? அதனை அம்முனிவர் வாய்மொழி
கொண்டுங் காணலாம். சிவன், விஷ்ணும் பிரமன்
என்பார் மும்மூர்த்திகள். அவருள்
ஒவ்வொருவரிடமும் ஸ்வருபம், காரியம் என இரண்டு
விஷயங்களுள. 'ஸ்வரூபங்களைக் கொண்டு
பார்த்தால் பகவான் கருப்பு வர்ணமுடையவர்.
(கருப்பு தமஸ¤க்கு அடையாளம்). தூக்கத்தில்
இருப்பவர். அதுவும் தமஸ¤க்கு அடையாளம்.
ஈச்வரன் வெளுப்பு நிற முடையவர். அவர் அணியும்
திருநீறு முதலிய எல்லாம் வெளுப்பு. அதாவது
ஸத்வம். 'மஞ்சள், சிவப்பு கலந்தது
ரஜோகுணம்'. அக்குணம் பிரமனுக்குரியது. ஆகவே
ஸ்வரூபத்தில் சிவன் சாத்துவிகன், விஷ்ணு
தாமசன், பிரமன் ராஜசன் என்பது தெரிகிறது. இனி
விஷ்ணு ஜகத் ரக்ஷணத்தை செய்கிறார்.....
ஈச்வரன் சம்ஹாரத்தைச் செய்து பிரளயமாகிற
இருட்டை உண்டு பண்ணுகிறார்'. 'பிரம்மா ஜகத்
சிருஷ்டியாதிகளை செய்கிறார்.' ரக்ஷணம் சாத்விக
காரியம். ஸ்வரூபம், காரியம் என்ற இரண்டனுள்
ஸ்வரூபம் இயற்கைத் தருமம், காரியம்.
செயற்கைத் தருமம். ஸ்வரூபத்தால் சாத்துவிகனான
சிவன் காரியத்தால் தாமசமாகிய சம்ஹாரத்தையும்,
ஸ்வரூபத்தால் தாமசனான விஷ்ணு காரியத்தால்
சாத்துவிகமாகிய ரக்ஷணத்தையும், ஸ்வரூபத்தால்
ராஜசனான பிரமன் காரியத்தாலும் ராஜஸமாகிய
சிருஷ்டியையும் செய்கின்றாரென அக்காமகோடி
முனிவர் சொன்னார். ஸ்வரூபம், காரியம்
'இரண்டிலும் ரஜோ குணத்தவரான பிரம்மாவை யாரும்
ஆதரிக்கவில்லை. இதனால் மும்மூர்த்திகளில்
பிரம்மாவுக்கென ஒரு பக்த கோஷ்டியோ கோவிலோ
இல்லை' என்பதும் அவர் சொன்னதெ. அங்ஙனமாக
ஸ்வரூபத்தால் சத்துவகுண மூர்த்தியாகிய சிவனை
விட்டு ஸ்வரூபத்தால் தாமசகுண மூர்த்தியாகிய
விஷ்ணுவைப் பரம்பொருளென்றோ அல்லது ராமனும்
ஈசுரனும் ஒன்றென்றோ ஸ்வரூபத்தால் ராஜஸகுண
மூர்த்தியாகிய பிரமன் தீர்ப்புக் கூறினால் அது
சாத்துவிகர்களுக்கு ஏற்புடையத்தாமா?
ராஜசத்துக்குச் சாத்துவிகத்தை மதிப்பிட
முடியாது. சாத்துவிகம் மேற்பட்டது. அதற்குக்
கீழ்ப்பட்டது ராஜசம். அதனினும் இழிந்தது
தாமசம். அம்முனிவரும் அத் தீர்ப்பை
ஆமோதித்தார். அவரை அங்ஙனம் ஆமோதிக்க வைத்தது
அவரது மாயாவாத மதம்.
தாமச காரியமாகிய சம்ஹாரத்தைப் பிறர்க்கு
உபகாரமாகும்படி அளவறிந்து செய்யவேண்டும்.
ஸ்வரூபத்தால் சாத்விகனாயுள்ளவனாற்றான் அது
முடியும். அதனாற்றான் சிவன் அச்சம்ஹாரத்தைத்
தன்காரியமாக வைத்துக் கொண்டான். ஸ்வரூபத்தால்
தாமசனாயுள்ளவனிடம் சாத்துவிகமாகிய ரக்ஷண
காரியங் கொடுக்கப்பட்டால் அத்தாமசகுணம்
அக்காரியத்தல் அடக்கப்பட்டு விடும்.
அக்காரியத்தை அவன் தன் மேலதிகாரிக்குப் பயந்து
செய்வான். அதனால் ஸ்வரூபத்தால்
கீழ்க்குணமுடைய விஷ்ணுவிடம் காரியத்தால் மேலாய
ரக்ஷணங் கொடுக்கப்பட்டது. பிரமன்
ஸ்வரூபத்தாலும், காரியத்தாலும் ராஜசன். ஆகவே
பரத்துவ நிச்சயத்துக்கு ஸ்வரூபம் போல் காரியம்
ஒரு சிறந்த ஏதுவாக மாட்டா தென்க.
பிரமனுக்கு ஒரு கோவிலுமில்லை யென்றார்
அம்முனிவர். அவரது மாயாவாத மதத்துப்
பரம்பொருள் தான் நிர்விசேஷ சைதன்ய வஸ்து என
அவராற் பாராட்டப்படுகிற பிரமம்.
அப்பிரமத்துக்கு எங்காவது ஒரு கோவிலதானு
மிருக்கிறதா? இல்லை. இது பரப்பிரமக் கோவில்,
இது பரம் பொருட் கோவில், இது பரமாத்மாக்
கோவில் என ஒரு கோவில் எந்த வூரிலுங் கிடையாது.
மும்மூர்த்திகளில் பிரமன் ஒருவனாதல் போல்
உருத்திரன் இன்னொருவன். அவ்வுருத்திரனையே
சிவன் ஈசுரன் முதலிய சொற்களால் வழங்கி
வருகிறார் அம்முனிவர். அவ்வுருத்திரனுக்கு
எங்காவது கோவிலுண்டா? இல்லவே யில்லை.
அம்முனிவரும் அவ்வுண்மையை அறிந்திருக்க
வேண்டும். ஆயினும் அவர் பேச்சு
வேறாயிருக்கிறது. எல்லாச் சிவாலயங்களும்
அவ்வுருத்திரன் கோவில்களேயெனச் சாமானியர்
எண்ணுமாறு அவர் பேசுகிறார். சைவ சமயத்தில்
பரம்பொருளெனக் கொண்டு வழிப்படப்படும்
சிவபெருமான் பிரமவிஷ்ணுருத்திரராகிய
மும்மூர்த்திகளையுங் கடந்தவன். 'மூவரும்
முப்பத்துமூவரும் மற்றொழிந்த தேவருங் காணாச்
சிவபெருமான்' என்றது திருவாசகம். அந்தச்
சிவபெருமானே எல்லாச் சிவாலயங்களிலும்
சிவலிங்கத் திருமேனி தாங்கி மூலவராக
எழுந்தருளியிருக்கிறான். அவன் முக்குண
வசத்தராகிய மும்மூர்த்திகளில் ஒருவனாய
உருத்திரனல்லன், மாயாவாத மதப் பிரமமுல்லன்.
விஷ்ணுவின் கருணையினால் மோக்ஷம்
ஏற்படுகிறது. சிவனுடைய கருணையினால் ஸம்ஹாரம்
ஏற்படுகிறது. இருவரும் ஒரே பரம் பொருளின்
ஸ்வரூபம் தான்' என்றார் அம்முனிவர்.
மோக்ஷத்தை ஸத்வஸ்வரூபனான சிவன்
கொடுக்கமாட்டான், தமஸ¤ ஸ்வரூபமான விஷ்ணுவே
கொடுப்பான் என்பது அமரத்துவத்தை அமிர்தந்
தராது, ஆலாலமே தரும் என்பது போலிருக்கிறது.
'ஒரே பரம்பொருளின் ஸ்வரூபந்தான்' என்றாரே
அம்முனிவர். அப்பரம்பொருளுக்கு ஏகோவா, அல்லா,
விஷ்ணு, சிவன் என அவ்வம்மதச் சார்பான
சிறப்புப் பெயர் ஏதேனுமுண்டா? அல்லது
பரம்பொருள் என்பது தானே அதன் சிறப்புப் பெயரா?
அதனை அவர் தெரிவித்திலர். அப்பெயரையும்,
மாயாவாதம் என்ற தம்மதப்பெயரையும் பகிரங்கமாகத்
தெரிவிக்கக்கூடிய மனோபாவம் தம்மிடம்
இருக்குமானால் அவர் சைவாலயங்களிற் புகுந்து
தமக்குச் சம்பந்தமில்லாத காரியங்களை அங்குச்
செய்ய இடம் பெறுவாரா?
இங்குச் சிருங்கேரி முனிவர் பேச்சொன்றும்,
காமகோடி முனிவர் பேச்சொன்றும் ஆராயப்பட்டன.
ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்பார்த்தல்
என்ற நியாயத்தில் அவ்வாராய்ச்சி நிகழ்ந்தது.
மும்மூர்த்திகளுட்பட்ட உருத்திரனையும்
விஷ்ணுவையும் ஒரே பரம்பொருளின் ஸ்வரூபந்தான்
எனக் கூறி வருகிற மாயா வாதமதக் கொள்கையைச்
சைவருள்ளுஞ் சிலர் பற்றிக் கொண்டு
சங்கரநயினார் கோவிலிலுள்ள
சங்கரநாராயணவுருச்சிவவிஷ்ணுக்களின் அபேதத்தைக்
காட்டுகிறதென மயங்கி வருகின்றனர். இது சமயக்
குழப்பம், குழப்பந் தவிர வேறில்லை.
மாயா வாதத்தில் பிரமந்தவிர நாமம், ரூபம்,
அவற்றின் பொருள் எல்லாம் மித்தையே, வியாவகாரிக
பிராதி பாஸிகங்களே, பொய்யே. தேவதைகளும்
அப்படித்தான். ஆகலின் எந்தத் தெய்வத்தையும்
எந்தத் தெய்வமெனவும் பேசலாம். எந்தத்
தெய்வத்தையும் எந்தத் தெய்வத்தோடும்
இணைக்கலாம். ஏன்? பாரமார்த்திகத்தில்
அவையெல்லாம் மனிதராதியோர் உள்பட இல்லாதன தானே?
அம் மதந்தான் சமய சமரசம் பேசத் தகுதியுடையது.
சமய சமரசம் வேறு, சமய விபசாரம் வேறு என்பது
அதன் கொள்கை போலும். அச் சமரசமாவது சோபானக்
கிரமத்தை விட்ட சமரசம்.
முடிப்புரை
இதுகாறுஞ் சிலவே கூறப்பட்டன.
எடுத்துக்கொண்ட விஷயத்தை இவையே
விளக்கிவிடும். முன் ஆங்கில் ஆட்சியி
லிருந்தது பாரத தேசம். அப்போதும் படித்தவர்
இங்கிருந்தனர். அடிமை வாழ்வின் அவமானம் அப்
படிப்பால் உறுத்தப்படவில்லை. அவரும் சுகமாக
உண்டனர், உடுத்தனர், உறங்கினர், இறுதியில்
பேரும் மறையுமாறு செத்தொழிந்தனர். சமீப
காலத்தில் புறப்பட்டனர் சில பெருமக்கள்.
சுதந்திரத்தின் அவசியத்தால் அவர்
உந்தப்பட்டனர். ரோஷம் தலைக் கொண்டது. அவரின்
இடைவிடா உழைப்பாலுந் தியாகத்தாலும் தேச
சுதந்திரம் கிடைத்தது. தேசத்தவரின் மானம்
மீட்கப்பட்டது.
தேச சுதந்திரத்துக்கு முந்திய காலத்திலும்
மற்றச் சமயத்தவர் தம் சமய சுதந்திரத்தை
யிழந்ததாகத் தெரியவில்லை. சைவ சமயத்தவர்
மாத்திரம் அவர்போலிருந்தனரொனச் சொல்ல
முடியாது. அவர் விபூதி யணிந்தனர்,
உருத்திராக்கந் தரித்தனர், அச்சாகிக்
கையகப்பட்ட மதப் புத்தகங்கள்
எச்சமயத்தனவாயினும் அவற்றைப் படித்தனர்,
கோவிலுக்குப் போயினர், கும்பிட்டனர்,
உண்டியலில் பணம் போட்டனர், விழாவைத்
தரிசித்தனர், விரதோபவாசங்களை யனுட்டித்தனர்,
எல்லாஞ் செய்தனர். ஆனால் தம் சமயத்தின் பெயர்
இது. அச்சமயக் கடவுள் இது. அச் சமயப் பிரமாண
நூல் இது. அச்சமயத்தைப்பிரகாசிப்பித்த
ஆசாரியன்மார் இவர், அச்சமயத்தின் அடிப்படைக்
கொள்கைகள் இவை என்றறியும் வியவஸ்தை மாத்திரம்
அவருட் பெரும்பாலோரைவிட்டு மறைந்தது. அவரைச்
சைவசமயத்தவரென எப்படிச் சொல்வது? தேசம்
சுதந்தர மடையாத போது அன்னவர் மிகுந்துள்ள
பிற்காலத்தில் அவரது பரிபாலனத்தில்
தப்பினதாகத் தெரியவில்லை. தப்பியிருந்தால்
அக்கோவில் சங்கரநாராயண சுவாமி தேவஸ்தானமென்ற
பெயர் மாற்றத்தை நிச்சயமாகப் பெற்றிராது.
ஆங்கிலேயர் விலகினர். இத்தேசம் விடுதி
பெற்றது. அவ்விலக்கந்தானா விடுதி? ஆமெனின்
அ·தாகுக. இப்போது எல்லாருமே இந்நாட்டு
மன்னராய் விட்டனர். சைவ சமயத்தவரும்
இந்நாட்டு மன்னர் தான். அவருக்கு
இச்சுதந்திரம் ஏன்? உண்ணவா? உடுக்கவா?
உறங்கவா? அடிமை வாழ்விலும் அவர் நலக்க
உண்டனர், சிறக்க உடுத்தனர், அழுந்த
உறங்கினர். ஆகலின் சுதந்திரம் அதற்கன்று
என்பதை அவர் அறிய வேண்டும். உடம்பை உறவெனக்
கொண்ட உயிர் வாழ்க்கை, உடம்பை மிகையெனக் கொண்ட
உயிர்வாழ்க்கை என உயிர் வாழ்க்கை இரண்டு
வகைப்படும். அவற்றுள் முதலாமது மனிதவர்க்கம்
மிருகவர்க்கம் முதலிய அனைத்து
வர்க்கங்களுக்கும் பொது. இரண்டாமது மனித
வர்க்கத்துக்குமட்டே யுரியது. அதுவே
மனிதனாவானுக்கு வாழ்க்கை லட்சியமாகும்.
அதற்காக வாழும் மனிதனே தேவனாவான்.
அவ்வாழ்க்கை சைவ சமயமொன்றனே சித்திக்கும்.
'மற்றுந் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்க
லுற்றார்க் குடம்பு மிகை' என்றார் வள்ளுவர்.
அவர் வகுத்த லட்சியத்தை யடையுமாறு வாழவே சைவ
சமயத்தினர் சுதந்திரம் பெற்றனர். அவர் தம்
சைவ சமயத்தில் பிற சமயங்கள் கலக்க இடங்
கொடுக்கலாமா? கலவடமே கேடுகளுக்கெல்லாங்
காரணம். சங்கரநயினார்க்குச் சங்கரநாராயணரெனப்
பெயர் மாற்றம் வந்தது அக்கலவடத்தாலே யாம்.
அவரது சமயக் கோவில்கள் சிலவற்றின் கர்ப்பக்
கிருகத்துள் மாயாவாத சமயகுரு பிரவேசித்து மூல
மூர்த்திகளுக்கு அபிஷேகம், பூஜை முதலியன
செய்துவருவதும் அக்கலவடத்தாலேயாம். பின்வரும்
சைவ சந்நிதிகளுக்குப் பெருந்தொல்லை தருமேயென்ற
முன்யோசனையின்றிச் சைவசமயத்துக்கும் புறம்பான
மாயாவாத மதச் சார்பாய சங்கர மடங்கள் கட்ட
அனுமதிக்கப்பட்டு வருகின்றன.
'Abdullahites Are planning A Mosque On
Shankaracharya Hill' என்ற தலைப்பில் June 14,
1965 Organiser என்ற பத்திரிகையில் ஒரு
செய்தி வந்துள்ளது. 'Abdullahites in Kashmir
are conspiring for communal trouble in the
Valley. For this purpose they are hatching a
clandestine plan to construct a mosque in
front of the famaous thousand-year old
Shankaracharya Temple on top of Gopadari
hill - also known as Sankaracharaya Hill -
in Srinagar, according to strong indications
available from circles close to Sheikh
Mohammed Abdulla...Abdullahites have already
started saying that Shankaracharaya Hill is
a Muslim property as the place of temple was
a Muslim seat....' என்பது அச்செய்தி.
Abdullahites என்ற விடத்தில் சிருங்கேரி,
காமகோடி சங்கராச்சாரியர் வகையறா என்றதையும், a
mosque என்ற விடத்தில் அச் சங்கர மடங்கள்
என்றதையும், in front of the famous
thousand-year old Shankaracharya Temple
என்ற விடத்தில் சிவாகமோக்தமான சைவாலயங்களின்
மலையில் என்றதையும், Sankaracharya Hill is a
Muslim property as the place of temple was a
Muslim seat என்ற விடத்தில் சைவாலயங்களெல்லாம்
மாயாவாத மதக் கோவில்கள் என்றதையும் வைத்து
வாசித்தால் சிவாக மோக்த சைவாலயங்களெல்லாம்
சிவாகம விரோதமான மாயாவாத மதக் கோவில்களாக
எதிர்காலத்தில் விரைந்து மாறிவிடக்கூடும்
என்பது தெரியலாம். அதற்கு அக் கலவடப்பேச்சே
மூலம். சைவ சமயிகள் அச்செய்தி முழுவதையும்
வாசிப்பாராக.
இவற்றை யெல்லாம் பார்த்துக் கொண்டிருக்குங்
கண்வலி சைவசமுதாயத்துக்கு எப்படித்தான்
வந்ததோ?
'ஒரு மொழிக்குள் மற்றொரு மொழி ஊடுருவுவது
அதை
நசுக்குவ தாகும்; மொழி வளர்ச்சியை தடைப்படுத்தும் அபாயம் ஏற்படும்' (21...4...1963 தினமணி) என்றார் பிரதமர் நேரு. மொழிவிஷயத்தில் அவ்வூடுருவல் ஓரளவாவது நலஞ் செய்யலாம். ஆனால் சமய விஷயத்தில் அப்படியன்று. ஒரு சமயம் ஊடுருவ இடங் கொடுத்த் இன்னொரு சமயம் முழுக்க நசுங்கிப் போவது நிச்சயம். அக்கேட்டைச் சைவபரிபாலகர் சிந்திக்க. சிந்திப்பாராயின் சங்கரநாராயணசுவாமி தேவஸ்தானம் மீண்டும் சங்கரலிங்கசுவாமிகோவில் தேவஸ்தான மெனப் பெயர் மாறாமற் போய்விடுமா?
வாய்ப்பாட்டு, கருவியிசை, நாட்டியம்,
விகடம், வில்லடி முதலியன சைவாலய விழாக்களில்
கூட்டந் திரட்டுகின்றன. அவை கண்ணுக்குக்
காதுக்குமே இன்பமாம். மக்கள் அவற்றை
ரஸிக்கின்றனர். அவர்களையும் பக்தகோடிகளென்பது
என்னையோ? அவ்வாய்ப்பாட்டு முதலியவற்றால்
சைவசமய ஞானம் சிறிதளவாவது கிடைக்கிறதா?
இல்லை. அவற்றை அனுமதிப்பதேன்? மக்கள்
உலகவின்பச் சேற்றிற் புரள்வது தான் கண்ட
பலனாயிருந்து வருகிறது. கோவில்கள்
களியாட்டரங்கங்கள் ஆக்கப்படுகின்றன. பணமும்
விரயமாகிறது. மக்கள் விரும்புகின்ற
காரணத்தால் அவையும் விழாக்களின் அங்கமாகக்
கொள்ளப்பட்டன என்னலாம் பரிபாலகர். அது மக்களை
மதியாமை, அவர்நலனைக் கருதாமை யாகும்.
'மக்களைச் சரியான வழியில் அழைத்துச்
செல்வதுதான் தலைவருக்கு அழகேயொழிய மக்கள்
இழுத்தபக்கம் எல்லாம் செல்வது அழகாகாது'
(15..2...1963 தினமணி) என்றார் ஒரு விமர்சகர்.
'மக்களுக்குப் பிடிக்காது. அவர்களுக்குப்
பிடிக்காததைச் செய்தால் செல்வாக்குப்
போய்விடும் என்ற அச்சத்தால். நியாயமான,
அவசியமான பணிகளைச் செய்ய தலைவர்கள் தயங்கக்
கூடாது. ஜனநாயகம் தழைக்க இந்த நெஞ்சுறுதி
அவசியம் என்று மந்திரி ஸ்ரீ தேசாய் சொன்னார்.
நியாயத்தைச் செய்ய தலைவர்களே அஞ்சுவார்களானால்
ஜனநாயகத்துக்கு கேடுகாலம்வந்துவிடும்'(
16...4...1963 தினமணி) என்றார் அம்மந்திரி.
'ஒரு காரியம் சரியா, சரியில்லையா என்று
பார்க்க வேண்டுமே யொழிய சிலர் புகார்
செய்வார்களே என்பதற்காக சரியான பாதையைக்
கைவிடுவது உசிதமல்ல' (22...4...1963 தினமணி)
என்றது ஆசிரியப் பகுதி. ஜனநாயகம் என்ற
விடத்தில் அச்சமய நிலய பரிபாலகர் என்றதையும்
வைத்துப் பார்க்க. அப்படிப் பார்த்தால் சைவ
சமயம் தன் தனித்தன்மையை யிழந்து,
உருக்குலைந்து மக்களுக்கு உதவாமல் இப்போது
உள்ள நிலையில் இருந்து வருவதற்குத் தாம் எந்த
மட்டில் காரணம் என்பதை அப் பரிபாலகர்
உணரக்கூடும். விழாக் காலங்களில் சைவசமயஞானம்
வரண்ட ஆரவாரங்களைப் புகுத்தி மக்களை
அச்சமயத்துக்கு வெளியில் தள்ளி வைத்தால்
அச்சமயத்துக்குக் கேடு காலம் வரத் தடையில்லை.
கேடு காலமாவது அச்சமயத்தின் பயனை மக்கள்
அடையாமற் போகுங் காலம். அவர்களை அங்ஙனம் அப்
பரிபாலகர் புறம் போக்கினால் சங்கரநயினார்
கோவிலுக்குச் சங்கரநாராயணசுவாமி தேவஸ்தானம்
என்ற பெயர் இன்னும்
இருந்துகொண்டுதானிருக்கும். அதற்குக் காரணம்
அப்பரிபாலகரா? மக்களா?
மேடைப் பேச்சுக்கள் மிகுந்துள்ள காலம்
இது. சைவசமயப் பிரசாரகரும்
அதிகரிக்கலாயினர். அதற்கு ஊக்கமளித்து
வருபவர் அப்பரிபாலகர். அது நல்லதே. ஆனால்
அப்பிரசாரங்கள் சைவ சாத்திர வரம்புட்பட்டனவா?
அவற்றால் பொதுமக்களுக்கு அச்சமய நலன் ஏதேனும்
விளைகிறதா? அவற்றை அப்பரிபாலகர் அவ்வப்போது
நாடிசோதனை செய்யும் மருத்துவன் போலிருந்து
கவனித்துவர வேண்டாமா எமது சமயம் இது, எமது
வணக்கத்துக்குரிய தெய்வம் இது, எமது
சமயவரம்பாயுள்ள பிரமாண சாத்திரங்கள் இவை, எம்
சமய சந்தான பாஷ்ய ஆசாரிய மூர்த்திகள் இவர்கள்,
எமக்குரிய ஆசார அனுஷ்டானாதிகள் இவை
என்பனவாதியவற்றை மக்கள் உணர்ந்திருக்கிற
அளவைக் கொண்டுதான் அப்பரிபாலகர்கள்
அப்பிரசாரகர்களை நியமிப்பதன் தரம்
கணிக்கப்படும். மக்களைச் சைவத்துறையில் உண்மை
காணும்படி செய்வதே அதிமுக்கியம். அவர்களிடம்
சைவசமய வுணர்வை ஊட்டுக் நோக்கமின்றிப்
பிரசாரகர்களை நியமிப்பது அவர்களின் உலக
வாழ்க்கைக்கே உதவும். இவர் வறியவர். இவர்
இனத்தவர், இவர் உறவினர், இவர் சிபார்சுக்
கடிதம் வாங்கி வந்தவர் என்பதற்காகச் சைவ சமய
வரம்பழிந்த பிரசாரகர்களையும் அந்நிய சமயப்
பிரசாரகர்களையும் அப்பரிபாலகர்கள் நியமித்தால்
அப்பரிபாலகர்களுக்கே சைவ சமயம் இது. பிற
சமயங்கள் இவை எனக் காண்கிற ஆற்றல் இல்லைப்
போலுமென உலகஞ் சந்தேகிக்க இடமுண்டாகும். சமய
வளர்ச்சியில் அவர் உதாசீன மனமுடையவரென
எண்ணவும் படுவர். அப்பிரசாரகர்கள்பால்
இரக்கங்காட்டுகிற பரிபாலகர்கள் தம் சொந்தப்
பணத்தைக் கொடுத்து அவர்களைப் பராமரிக்கலாம்.
அவ்விரக்கத்துக்குக் கோவிற்பணமா இரை? சைவ
சமயாபிவிருத்திக்கே அது செலவு செய்யற்பாலது.
பரிபாலகர்கள் பாதுகாப்பதற்குமட்டில் கோவிற்
சொத்துக்களைத் தம் சொந்தச் சொத்துப் போற் கருத
வேண்டும். செலவிடும் வகையில் அது
சைவதருமச்சொத்தாகலின் அ·தத் தருமத்திற்கே
செலவாதல் வேண்டும். பயிரையுங் களையையும்
பகுத்தறியக் கூடியவரே களையைப் பறித்தெறிந்து
பயிரைப் போற்றி வளர்த்துப் பயன் காண்பர்.
அவரே உழவரா யிருக்கத் தகுதி பெற்றவர்.
அவர்போல் பரிபாலகரும் பிரசாரகரும் சைவ சமயம்
இது. பிற சமயங்கள் இவையென விவேகித்துணர
வல்லராதல் அவசியம். அங்ஙனமாயின் மக்களுக்குச்
சமயக்கண் விரைவில் திறக்கப்படும். அவர்களும்
அப்பரிபாலகருக்கு உறுதுணை யாவார்கள். அதனால்
சங்கரநாராயண சுவாமி தேவஸ்தானம் என்ற
புதுப்பெயர் போய்ச் சங்கரநயினார் கோவில்
தேவஸ்தானம் என்றப் பழம் பெயர் விரைந்து இடம்
பெறும்.
சில வருடங்களுக்குமுன் னிருந்தோர் அப்
புதுப்பெயரை அக் கோவிலுக் கிட்டனர். அவர்
எவரேனுமாக. அவர் அவ்வூர் மக்களுக்கு
முன்னறிவிப்புக் கொடுத்து அப்பெயர் மாற்றஞ்
செய்தனரா? அ·தன்றி மறைமுகமாகச் செய்தனரா?
அதுவும் எ·தேனுமாக தல புராணத்தையேனும் அவர்
படித்திருந்தாரெனச் சொல்லமுடியவில்லை.
எப்படியோ நடந்தது நடந்து விட்டது. இப்போது
அவர் பின்னுள்ளார் இருந்து வருகின்றனர்.
அவருங் கெதானு கெதிக (ஒருவர் பின் ஒருவர் என்ற
) முறையில் இருந்து போகத்தான்
வந்திருக்கின்றனரா? பாரத தேசம் சுதந்திரம்
பெறப் பாடுபட்ட பெருமக்கள் பல்லாயிரவ ராவர்.
அவருட் சைவ சமயத்தினருஞ் சேர்ந்திலரெனச்
சொல்லமுடியாது. அவரும் சுதந்திர வீரரே,
சமர்த்தரே, தியாக புருடரே. அவர்
சங்கரநாராயணசுவாமி தேவஸ்தானம் என்ற இடைநுழை
பெயரை மாற்றிச் சங்கரநயினார் கோவில் தேவஸ்தானம்
அல்லது சங்கரலிங்கசுவாமி தேவஸ்தானம் என்ற பெயரை
அக்கோவிலுக்கு முன்போல் வழங்குமாறு செய்ய ஏன்
ஒருப்பட் டெழக்கூடாது? இச்சுதந்திர நேசத்தில்
எல்லாச் சமயங்களும் சுதந்திரமாயிருந்து தம்மை
யாசரிக்கு மக்களுக்கு நலஞ் செய்து வருகின்றன.
சைவ சமயமாத்திரம் மாயாவாத முதலிய
புறச்சமயங்களால் உருக்குலைந்து கிடக்கின்றது.
அதைக் காணுங் கண்ணும், கண்டு கலங்கும்
நெஞ்சமும் சைவப் பொது மக்களுக்கு இன்னுமா இல்லை?
உரிமையைப் பறிகொடுப்பதுமா பரந்த நோக்கம்?
சைவசமயாபிவிருத்தியில் அவர் அசிரத்தை
காட்டுவாராயின் தேச சுதந்திரப் போராட்டத்தில்
அவர் கொண்ட பங்கு சம்சயத்திற்கே யிடனாம்.
தேரிழுப்பவர் பலர். சிலர் வடத்தைத் தொட்டுக்
கொண்டே சில தூரம் போய்த் தாமுந் தேரிழுத்ததாகச்
சொல்லிக் கொள்வர். அவர் போலவே
அப்போராட்டத்தில் அச்சைவரும் நடந்து கொண்டனரென
எண்ண வேண்டிவரும்.
சீனர் ஆக்கிரமிப்பு விஷயத்திலும் அவர்
காட்டிவரும் ரோஷம் அவ்வளவுதான்போலும் என அவர்
ஏன் கருதப்பட மாட்டார்? அவர் தரத்துக்கு
அ·தாகுமா? சங்கரநயினார் கோவிலி லுள்ள ஸ்ரீ
சங்கரலிங்கசுவாமி தேவஸ்தானத்திற்குச்
சங்கரநாராயண சுவாமி தேவஸ்தானம் என்பது சிறிதும்
உரிமையற்ற பெயர், ஆதலின் விரைந்து நீக்கப்படவே
தக்கது. சங்கரநயினார்கோவில் தேவஸ்தானம் அல்லது
சங்கரலிங்கசுவாமி தேவஸ்தானம் என்பதே முற்றிலும்
உரிமையான, பழமையான, சாஸ்திரோக்தமான, சர்க்கார்
ஆதாரபூர்வமான, நியாயமான பெயரென்பது அசைக்க
முடியாத உண்மை. சங்கரநயினார்கோவில் நகரப்
பெருமக்கள் இதில் தனிப்பட்ட சிரத்தைகாட்டி ஆவண
உடனே செய்யுங் கடப்பா டுடையவர்கள் என்பதை நான்
அவர்களிடம் பணிவுட தெரியப்படுத்திக் கொள்கிறேன்.
"பெண்டைக் கொடுத்தாலும் பேருலகில்
நிந்தையிலை
தொன்றுதொட்டு வந்தசைவந் தோற்கில்நிந்தை - பெண்டைவிற்றும் பெற்றான் சிவகதியைப் பேரரிச் சந்திரனும் உற்றான் பழியிந் திரன்." (அபியுக்தர்)
சங்கரநயினார்கோவில் என்னும் இந்நூல் முற்றிற்று
ஸ்ரீமத் சிவஞான சுவாமிகள் திருவடி வாழ்க.
JAI BHARATH
--------------------------------------------------------------------------------
|