Home            Periyar, DK, Self Respect? part -3        Meaning of Viboothi or Thiruneeru


 

On Atheism, Dravidar Kazagam, Periyar
Suyamariyathai Iyakkam [Self Respect movement]
SuyamariyaathaiyeekaSuravaleeஉ
திருச்சிற்றம்பலம்
ஸ்ரீ மெய்கண்ட தேசிகன் திருவடி வாழ்க
சுயமரியாதையியக்கச் சூறாவளி
-ஒரு சிவசேவகன்
சித்தாந்த பண்டித பூஷணம் ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை
திருநெல்வேலி பேட்டை
 
--------------------------------------------------------------------------------
5. சகோதர பாவம்

--------------------------------------------------------------------------------
அநுவாதம்.
    எல்லா மக்களுந் தம்முட் சகோதரபாவங்கோடல் வேண்டும்.
ஆசங்கை.
I.   
     1. எல்லா மக்களாலும் அப்பனென்றும் அம்மையென்றும் பாவிக்கப்பட வேண்டுவோர் யார்?
     2. அவரையே விலங்கு முதலியனவும் அங்ஙனம் பாவிக்கலாமா? ஆகாதா?
A..
     3. ஆமெனின் அவையும் மக்கட்குச் சகோதர ரல்லவா?
B.
       4. ஆகாதெனின் அவற்றிற்கு அங்ஙனம் பாவிக்கப்பட வேண்டுவோர் யார்?
      5. மக்களாவார் விலங்காதியவற்றை எங்ஙனம் பாவித்தல் வேண்டும்?
II. 
    6. மக்கள் சகோதர பாவத்தைக் கோடல் உலக வளத்தைப் பங்கிட்டு கொள்வதன் பொருட்டா? அன்பைப் பெருக்கிக் கொள்வதன் பொருட்டா?
A..
    7. முன்னையதன் பொருட்டெனின் ஒருவன் வயிற்றிற் பிறந்தவர்களில் அங்கப்பழுதுள்ளவர்.  புதல்வியர், வைப்பாட்டி மக்கள் முதலியோரும் இருத்தல் கூடுமன்றா?
    8. அவரும் அவ்வப்பன் சொத்திற் பங்கு பெறுவாரா?
    9. அரசர் புதல்வர்களில் மூத்த்வனுக்கே யன்றி மற்றவருக்கு அரசு கிடைத்தல் உண்டா?
    10. ஆகலின் சகோதரத்துவமே மக்களைச் சமபாகத்துக்கு உரியராக்கு மென்னும் உமது கோள் தவறவில்லையா?
    11.  தனக்குரியவற்றை யெல்லாம் தன் புதல்வரின் நலத்துக்கெனத் தியாகஞ் செய்யும் பித்ருவென நீர் உம்மைப் பாவித்துக் கொண்டு உம் செல்வத்தை யெல்லாந் துறந்து நிற்பதின் மற்றவரைச் சகோதரரெனப் பாவித்துக் கொண்டு அவர் செல்வத்திற் பங்குபோடப் பார்ப்பது இழிவாகாதா?
B..
    12. பின்னையதன் பொருட்டெனின் பித்ருபாவம், மாத்ருபாவம், புத்ரபாவம், நாயகநாயகீ பாவம், சிநேகபாவம் முதலியவற்றினும் அந்த பாவம் செய்யும் விசேட சாதகம் யாது?
III.   
    13. சமூகம் சாதி சமயம் மொழி நாடு முதலியபற்றித் தனித்தனி யுண்டாகுஞ் சகோதர பாவத்தை மக்களின் பிறப்பொப்புப் பற்றி யுண்டாகவேண்டு மென்னுஞ் சகோதர பாவ சித்தியின் பொருட்டுத் தியாகம் பண்ணிவிட முடியுமா?
    14.  பண்ணிவிடத்தான் வேண்டுமெனின் மக்களின் உடலொப்புப் (மக்களெல்லாரும் ஓரினம் என்பது) பற்றி யுண்டாகவேண்டுமென்னும் சகோதர பாவத்தைப் 'பிறப்பொக்கு மெல்லா வுயிர்க்கும்' என்றபடி நாய் பன்றி கழுதை முதலியனவும் மக்கள் போல் உயிர்களே யாகலின் உயிர்ப்பொதுமை பற்றி யுண்டாக வேண்டுமென்னும் சகோதர பாவத்தின் பொருட்டுத் தியாகம் பண்ண வேண்டாமா?
    15. சமூகம் சாதி சமயம் மொழி நாடு உயிர் முதலியவற்றுள் ஒவ்வொன்றுபற்றி உளவாம் சகோதர பாவங்களுள் இறுதியதாகிய உயிர்ப்பொதுமைபற்றி எல்லா ராசிகளுக்குள்ளும் உளதாம் சகோதரபாவத்தை நோக்க ஏனைய சகோதர பாவங்களெல்லாங் குறுகிய மனப்பான்மையின் விளைவுகளாகாவா?
IV.
    16. மக்கள் பிறர்க்கென வாழவேண்டுமா? தமக்கென வாழவேண்டுமா?
A..
    17. பிறர்க்கென வாழவேண்டுமெனின் பிறர்க்குச் சுமையாகாதவர்தான் அங்ஙனம் வாழக்கூடியவ ரல்லரா?
    18.  மேலும் ஒருவருழைப்பில் இன்னொருவரை வாழவிடுவது பொருந்துமா?
    19. அவருழைப்பில் இவரும் இவருழைப்பில் அவருமாகத் தானே வாழ்கின்றனரென்பீராயின் அவருக்கு வேண்டுவனவற்றை இவரும், இவருக்கு வேண்டுவனவற்றை அவரும் உழைத்துழைத்துக் கொடுத்துக் கொள்கின்றாரென்பதே கருத்தாகாதா?
    20. அங்ஙனமாயின் பிறர்க்கென வாழ்பவரென்று அவரையெப்படிச் சொல்லலாம்?
    21. பிறருழைப்பின் பலனைத் தாம் நுகராமல் தம் முழைப்பின் பலனையே பிறர் நுகருமாறு விடுபவர்தான் பரோபகாரிகளாவா ரென்பது பொய்யா?
    22. அவரல்லாதாரின் வாழ்வும் ஒரு வாழ்வாமா?
    23. பரோபகாரிகளாவார் தம் உழைப்பின் பயனை வடிவொப்புப்பற்றி மக்களுக்கே வழங்கவேண்டுமென்னும் வரையறையுண்டா?
    24. இல்லையாகலின் அவருடைய அன்புள்ளம் மக்களினத் தளவில் அடங்காமல் ஈ மூடு கொதுகு முதலிய பிறவினங்களின்பாலும் நீண்டு செல்லுதல் கூடாதா?
B..
    25. தமக்கென வாழவேண்டுமெனின் அவர் பிற மக்களைத் தானும் நேசிப்பாரா?
    26. ஆகவே வடிவொப்புப்பற்றி மக்கட் பரப்பினளவுக்கு இவருள்ளத்தைக் கனிவிக்கவும், அவருள்ளத்தை அடக்கிக் கட்டவும் முடியாதென்பதை யறிவீரா?
V.
    27. பிறப்பொப்புப்பற்றி மக்களை நேசிக்கவேண்டுமெனின் கார்ல் மார்க்ஸ், லெனின் முதலியோரின் சாவுக்குப்போல ஒரு காட்டான் சாவுக்கும் சமமாகத் துக்கிப்பீரா?
    28. ஈ.வே.ரா.வுக்குப்போல் காந்திக்கும் சமமான மதிப்பை நீர் ஏன் வைப்பதில்லை?
    29. அன்னவற்றிற்குக் காரணமான உயர்வு தாழ்வு சகோதர பாவத்தால் ஒழியுமா?
VI.
    30. விலங்காதியன தம்முட் சகோதர பாவங்கொண்டா வாழ்கின்றன?
 
ஆக அநுவாதம் 5 க்கு ஆசங்கை 297  

--------------------------------------------------------------------------------