Home
Periyar, DK, Self Respect? part -5
Meaning of Viboothi or Thiruneeru
|
On Caste & Suyamariyathai Iyakkam [Self Respect movement] |
|
SuyamariyaathaiyeekaSuravaleeஉ
திருச்சிற்றம்பலம் ஸ்ரீ மெய்கண்ட தேசிகன் திருவடி வாழ்க
சுயமரியாதையியக்கச் சூறாவளி
-ஒரு சிவசேவகன்
சித்தாந்த பண்டித பூஷணம் ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை
திருநெல்வேலி பேட்டை
--------------------------------------------------------------------------------
6. சாதி
--------------------------------------------------------------------------------
அநுவாதம்.
உயர்ந்த சாதியிற் பிறந்தவரும் தாழ்ந்த சாதியிற்
பிறந்தவரும் மக்களே. சாதிப்பிரிவுகளை ஆக்கினவரும்
அவர்தான். அவருள்ளும் பார்ப்பனரே அப்பிரிவுகளுக்குப்
பெரும்பான்மைக் காரணர். அப்பிரிவுகள் மக்களின்
நல்வாழ்வைக் கெடுக்கின்றன. அவை அறியாமையின் விளைவே.
பிறப்புப்பற்றிச் சாதிகளை வகுத்து ஒரு சாதியினரை
உயர்ந்தோரென்றும் மற்றொரு சாதியினரைத் தாழ்ந்தோரென்றுங்
கூறுவது கொடுமை. அப்பிரிவுகள் மக்களுக்குட் சம
சந்தர்ப்பம் அளிக்கமாட்டா; ஒற்றுமையைக் குலைக்கும்:
ஆகலின் ஒழியவேண்டும்.
ஆசங்கை.
I.
1. மக்களென்று அவருடலைச் சொல்கிறீரா? அறிவைச்
சொல்கிறீரா?
A..
2. உடலையெனின் விலங்கின் உடலைப் பகுத்திடுங்காற
காணப்படுங் குருதி எலும்பு முதலிய மூலப்பொருள்களே
மக்களின் உடலைப் பகுத்திடுங்கால் அதனிடையுங் காணப்படாவா?
3. அதனோடு இதனிடைவேற்றுமை யென்னை?
4. அறிவு விளங்குவதற்கு ஏற்ற முறையில் மக்களுடல்
அமைந்திருப்பது அதற்கொரு சிறப்பெனில் விளங்கிய அறிவு
பெறாத மக்கள் என்றுமே பலரா யிருப்பதற்குக் காரணமென்னை?
5. அவ்வெல்லாரும் மக்கள் வடிவுகொண்ட விலங்குகளாகாரா?
B.
6. அறிவையெனின் அவ்விலங்குகளின் அறிவுக்கும் பிறவி
விலங்குகளின் அறிவுக்கும் வேற்றுமை யென்னை?
7. விளங்கிய அறிவுடையாரெனப்படும் இரண்டொருவரைத்
தவிர்த்துப் பிறரனைவரையும் மக்களென நீர் சிறப்பித்து
ஓதுவதேன்?
II.
8. சாதி முந்தியதா? சாதியினர் முந்தியவரா?
இரண்டும் முற்பிற்பா டில்லாதனவேயா?
A..
9. சாதி முந்தியதெனின் பார்ப்பனச் சாதியும்
அச்சாதியினர்க்கு முந்தியதாகாதா?
10. ஆயின் பார்ப்பனருக்கு முந்திய பார்ப்பனச்
சாதியைப் பார்ப்பனரே ஆக்கிக்கோடல் எப்படிக்கூடும்?
11. மற்றைச் சாதிகளைத்தான் பார்ப்பனர்
வகுத்தனரெனின் பார்ப்பனச் சாதியை வகுத்தவர் யார்?
B.
12. சாதியினரே முந்தியவரெனின் சாதிக்கு முன்னர்ச்
சாதியினர் எப்படி உளராயினர்?
C.
13. இரண்டும் முற்பிற்பா டில்லாதனவேயெனின் ஒரு
சாதியிலும் அகப்படாதவர் தான் பார்ப்பனசாதி முதல்
எல்லாச் சாதிகளையும் ஆக்கியிருத்தல் வேண்டுமென்பது
புலப்படவில்லையா?
III.
14. பார்ப்பனருள்ளும் பல பிரிவுகள் உளவாகி அவை
தம்முள் உடனுண்ணல் கொண்டுகொடுத்தல் தீண்டுதல் முதலியன
செய்யாமையை யறிவீரா?
15. அப்பிரிவுகளுக்குக் காரணம் யார்?
IV.
16. சாதிகளெல்லாம் ஒரே காலத்தில் உளவாயினவா?
முன்பின்னாக உளவாயினவா?
A..
17. ஒரே காலத்திலெனின் அக்காலத்துக்கு முன்
ஒன்றுபட்டிருந்த மக்களெல்லாருமே சாதிகளை உளவாக்கி
ஒவ்வொரு சாதியிலும் பலர் பலராய் நுழைந்துகொண்டவரென்பதே
சித்தமன்றா?
18. ஆயின் அவ்வொன்றுபட்ட காலத்தில் முறையே
சிரைப்பு, வெளுப்பு, மேய்ப்பு, கொல், உழவு முதலிய
வுத்தியோகங்களை வகித்துவந்த அப்பன், மகன், ஐயன்,
தம்பி, மாமன் முதலியோர் சாதிப்பிரிவுகள் உளவானதும்
எதிர்காலத்தில் தமக்குள் உறவு முறிந்தேவிடுமாறு
பிரிந்து விடுதல் சாத்தியந்தானா?
B.
19. முன்பின்னாகவெனின் அவற்றிற்குக் காலவரிசை
காட்டுவீரா?
20. ஒரு காலத்தில் ஒரு சாதி யுண்டாயின்
அச்சாதியினரோடு பிறமக்களும் அக்காலத்திலேயே உளரென்பது
பெறப்படாதா?
21. ஆயின் அவர்களுக்கு வேறு சாதிமக்களாயினதிற்
சந்தேகமென்னை?
V.
22. சாதிப்பன்மை விளைந்தது அறிவிலா?
அறிவுப்போலியிலா? அறியாமையிலா?
A..
23. அறிவிலெனின் அதனைப் போற்றவேண்டுவது உம்
கடனாகாதா?
B.
24. அறிவுப் போலியிலெனின் அறிவின் விளைவு யாதாகற்
பாலது?
25. அப்பன்மையின் ஒழிவே யாகற்பாலதெனின் அவ்வொழிந்த
நிலை விலங்கு முதலியவற்றினிடமே உள்ளதன்றா?
26. மக்களையும் மாக்களாக்குவது அறிவாமா?
C.
27. அறியாமையிலெனின் விலங்கு முதலியவற்றினிடம்
அ·து ஏன் விளையவில்லை?
VI.
28. விலங்குயிர் மனிதவுயிர் என உயிர்களில்
வேறுபாடுளதா?
29. இல்லையாகலின் மக்களினப்பற்று (Love of
Humanity) என்பது பிறப்பொப்புப்பற்றிய செருக்காகாதா?
30. மக்கட் பிறப்பே உயர்ந்தது, விலங்குப்
பிறப்புத் தாழ்ந்தது என்று பிறப்புப்பற்றிய வுயர்வு
தாழ்வைக்கொண்டு உலகமனைத்தையும் ஏனையவுயிர்களுக்கு
இலதாக்கி மக்களுக்கே தம் வடிவ விலங்குகளுக்கும்
விலக்கின்றி உரித்தாமாறு வளைந்து கொள்ள நீர்
எத்தனீப்பது அச்செருக்கின் வழித்தாய வன்கண்மையாகாதா?
31. அவ்விலங்காதியவற்றையும் உமக்கு உடைமையாக்கிக்
கொள்ள நீர் யார்?
32. மாக்களை மக்கள் கொன்றுதின்பது அதிகமா? மக்களை
மாக்கள் கொன்றுதின்பது அதிகமா?
33. மக்கள் மாக்களுக்கும், மாக்கள் மக்களுக்கும்
செய்கிற பொல்லாங்குகளை இவ்வளவெனக் கணக்கெடுத்து
அவற்றின் ஒரு நாட் சராசரி விழுக்காடு
இத்துணையெனக்கண்டு அதைக் கொண்டு மக்கள் பொல்லாதவரா
அல்லது மாக்கள் பொல்லாதனவா என்ற வினாக்களுக்குச்
சரியான விடை கூறுவீரா?
VII.
34. தொழில்களெல்லாம் உலகவாழ்வை யொட்டியனவே யல்லவா?
35. அவை தம்மளவிற் சாதிப்பிரிவையாக்க வல்லனவா?
36. கவர்னர்கள் மருத்துவர்களை மடைத்தொழிலாளர்களை
அவரவரின் உத்தியோகங்கள் தனித்தனிச் சாதியினராகப்
பிரித்து விடுமா?
37. குடித்தனம், மணமாகாதவளை மணத்தல், சைவவுணவு
முதலியன சதாசாரங்களெனச் சிலராலோ பலராலோ கொள்ளப்படுவன
அல்லவா?
38. அவற்றை அவர் தத்தமுள் ஒன்றுபட்டுப்
பரம்பரையாகப் பரிபாலித்து வரவில்லையா?
39. அவற்றுக்கு மாறான விபசாரம், விபசாரிகளை
மணத்தல், மணந்தவளை மணத்தல், புலாலுணவு முதலியவற்றைத்
துராசாரங்களென அவர் ஒதுக்குவதில்லையா?
40. அவற்றை வேறு சிலரோ பலரோ தம்முட்கூடிப்
பரம்பரையாகப் போற்றிவர வில்லையா?
41. சதாசாரமுடையார் துராசார முடையாரோடு கலந்து
கொண்டு தம் அசாரங்களைக் காத்துவர முடியுமா?
42. 'நிலத்தியல்பால்...' என்ற குறளை யறிவீரா?
43. எளிதிற் படிவன துராசாரங்களா? சதாசாரங்களா?
44. ஆகவே துராசாரமுடையாரினின்றும் சதாசார முடையார்
தம்மாசார பரிபாலனத்தின் பொருட்டே விலகி
வாழ்கின்றரென்பதும், துராசார முடையாரும்
அச்சதாசாரங்களின் மேல் வைத்த கெளரவ புத்தியாலேயே
அவ்வாழ்க்கைக்கு இடங் கொடுத்துளா ரென்பதும்
புலப்படவில்லையா?
45. உலகிற்கு அவ்வுண்மையை மறைத்துத் துராசார
கூட்டத்தினரை விலங்கினுங் கடையரென அவர் அவமதித்தே
விலகி வாழலாயினரென்று தூர்த்தப் பிரசாரஞ் செய்வது
யோக்கியமா?
46. அங்ஙனம் அவமதித்தொழுகும் புத்தி அவருக்
கிருந்திருக்குமாயின் அவர் அன்றே துராசாரமுடைய
கூட்டத்தினரால் நாசமாக்கப் பட்டிராரா?
47. சதாசார கூட்டத்தினர் தம்முட் கூடிவாழ்ந்து
பரஸ்பரம் உதவிசெய்துகொள்வதாற்றான் அவ்வாசரங்கள்
நிலையுதல் கூடுமென்பது உமக்கு விளங்கிலதா?
48. அவர் தம் ஆசாரங்களுக்கியைந்த தொழில்களையே
உலகவாழ்வின் பொருட்டுச் செய்துவர விரும்புவரென்பது
தெரிகிறதா
49. அவ்வாசாரம் தொழில் என்னும் இரண்டையும் ஒரு
சமூகம் பரம்பரையாகக் கையாண்டு வருமாயின் அது தனிக்
கூட்டமாவதில் தடையென்ன?
50. ஆகவே ஆசாரம். அதற்கேற்புடைய தொழில்.
அவ்விரண்டற்குந் துணைபோய பரம்பரையென்னும் பிறப்பு
என்னும் மூன்றுஞ் சேர்ந்துள்ள கூட்டமே
சாதியெனப்படுமென்பதைக் காண முடியவில்லையா?
51. துராசாரம், அதற்கியைந்த தொழில்,
அவ்விரண்டற்குந் துணைபோய பரம்பரையென்னும் பிறப்பு
என்பன சேர்ந்துள்ள கூட்டம் ஏன் வேறு சாதியாதல் கூடாது?
VIII.
52. உலகில் துராசார கூட்டத்தினர் மிகப்
பெரும்பாலாரல்லரா?
53. சதாசார கூட்டத்தினர் மிகச்சிறுபாலா ரல்லரா?
54. அப்பெரும்பாலார் பகையாத காலத்திற்றானும்
அவரின் நெருக்கத்தி லிருந்துகொண்டு அச்சிறுபாலார் தம்
ஆசாரத்தை அரும்பாடுபட்டுப் போற்றி வந்திருபாரென்பதை
யுணர உம் உள்ளத்தில் ஆற்ற லில்லையா?
55. பகைமையை வளர்த்துக்கொண்டு சாதி வேற்றுமையை
யொழிக்க வேண்டுமென்ற வியாஜத்தால் அப்பெரும்பாலாரை
அச்சிறுபாலார்மேற் பாயவிட்டு அவருடைய சதாசார
வாழ்வுக்கு ஹானி சூழ்வதுதான் மக்களியல்பா?
56. சாதியை யொழிக்கவேண்டுமென்கிற நீர் முதலில்
துராசாரங்களை அப்பெரும்பாலாரிட மிருந்து களையவேண்டாமா?
57. துராசாரங்களை யொழித்த பிறகாவது சாதிகளை
யொழிக்க முயலலாகாதா?
58. துராசாரங்களைச் சதாசாரங்களேயெனப் பிரசங்கி
யாமலாவ திருக்கின்றீரா?
59. 'டாக்டர் வரதராஜலுவும் யானும் குறிப்பிட்ட
வேறு சிலரும் ஆர்.கே.சண்முகஞ் செட்டியார் விருந்தினரா
யிருந்தோம்......டாக்டர் வரதராஜலு நாயுடு பந்தியிலே
தமக்கென்று புலாலுணவை வரவழைத்தார். தண்டபாணி அதைத்
தடுக்க முயன்றார். பந்தியில் எல்லோருஞ் சைவ வுணவு
கொள்ளும் வேளையில் ஒருவர்மட்டும் புலால் வரவழைப்பது
நாகரிகமாகுமா என்பதைப்பற்றிப் பெரிய விவாதம் மூண்டது,'
'புலாலுண்ணதாருடன் சாப்பிடும்போதும் நாயுடு
புலாலுணவைக் கொணாவித்து உண்பவரென்று கேள்வியுற்ற
துண்டு. அக்கேள்வி கோவையிலும், ஆர்க்காட்டிலும்
காட்சியாயிற்று. ஆர்க்காட்டில் அதுபற்றிப் பெருத்த
விவாதம் எங்களுக்குள் நடந்தது,' "யான் 'விருந்தில் சைவ
மணங்கமழ்தல் வேண்டும்....சாதியைப்பற்றிய கவலை எனக்குக்
கிடையாது. யான் சாதி கடந்தவன்' என்றேன். தோழர்
வாடியா சைவப்பகுதியில் என்னுடன் உணவருந்தினர். அவர்
இலையில் கோழிமுட்டை காணப்பட்டது. அதைப்பற்றி அவரும்
யானும் உரையாடினோம்" என்று திரு.வி.க.தம் 'வாழ்க்கைக்
குறிப்புக்க'ளிற் சொல்லி யுள்ளதை யறிவீரா?
60. அவரே, அவர்போன்றாரே நாள் ஏற ஏற உள்ளத்தில்
உரங்கெட்டு அப்பெரும்பாலாரின் துராசாரங்களையே தமக்கும்
ஆசாரங்களாமெனக் கொண்டு ஏன் தம் வாழ்வை யிழக்க
மாட்டார்?
61. இதுவரை அவர் அங்ஙனம் ஆகவிலையென்றுதான்
எப்படிச் சொல்லமுடியும்?
62. இவ்வுலகில் ஆசாரவாழ்க்கைக்கு இடமே யில்லையா?
IX.
63. தாழ்ந்த சாதியினருள் இரண்டொருவர்
சதாசாரமுடையரா யிருந்தால் அவரை உயர்ந்த சாதியனரோடு
சேர்த்து விடலாமே யென்பீராயின் தாழ்ந்த சாதியினரை நீரே
யவமதிக்கின்றீரென்பது விளங்கவில்லையா?
64. அம்மனவலியுடையர் தம்
சாதியினரோடிருந்துகொண்டு அவரையுந் திருத்துவதே
முறையாகாதா?
65. அம்முறையில் உயர்ந்த சாதியினருள்ளும் சிற்சில
துராசாரமுடையார் காணப்படலாமாகலின் அம்மனவலி குன்றியார்
விரைவில் திருத்தம் பெறாவிடில் அவரை அச்சாதியிலிருந்து
ஒதுக்கிவிடலா மன்றா?
66. மக்களின் நலத்தின்பொருட்டே சதாசாரங்கள்
உளவாயின வல்லவா?
67. அவற்றை அவர் குலைக்கலாமா?
68. கால தேச வர்த்தமானங்கட் கேற்ப அவை மாற்றிக்
கொள்ளப்படும் அத்துணையேயெனின் குலைத்த வென்பதற்கும்
அதற்கும் வேற்றுமை யென்னை?
69. முக்காலத்துக்கும் வேண்டப்படும்
அவ்வாசாரங்களை அவ்வக்காலத்துத் தோன்றியொழியும் மக்கள்
தாமுள்ளளவும் ஓம்பித் தம் சந்ததிகளுக்கு
வழங்கிப்போவதன்மேல் அவர் ஏதேனுஞ் செய்தற்கு எங்ஙனம்
அதிகார முடையார்?
70. சாதிப் பிரிவில்லாத நாடுகளில் சதாசாரங்களுக்கு
உரிய மதிப்புக் கொடுக்கப்படுகிறதா?
71. எல்லாரும் மக்கள்தானே யென்னும் பொதுமையைக்
காட்டிச் சதாசாரமுடையாரின் வாழ்க்கையில் மண்போடத்
துணிவது துராசாரமுடையாரின் அழுக்காற்றுள்ளத்தைக்
காட்டாதா?
72. தன் தாய்க்கும் மனைவிக்கும் பெண்மையென்னும்
பொதுமை யிருப்பதை ஒருவன் தன் தாய்க்கு எடுத்துக்காட்டி
அவளைப் பெண்டாளுவதும், தன் மனைவிக்கு எடுத்துக்காட்டி
அவள் காலில் வீழ்ந்து வணங்குவதும் செய்யலாமா?
X.
73. ஒருவன் பிறந்தது முதற் சாகும்வரையே அவனுயிர்
உள்ளதா? அவன் பிறக்குமுன்னும் செத்தபின்னருங்கூட
அ·துள்ளதா?
74. அவ்வாராய்ச்சியை யடியாகக்கொண்டே சம
சந்தர்ப்பமென்னுந் தொடர் பொருளுடையதாகற் பால தென்பதை
யறிவீரா?
75. 'Birth is not just an accident. Every
man has to reap the fruits of his 'karma'. Life and
death are in God's hands' என்று 31-5-1945 'இந்தியன்
எக்ஸ்பிர'ஸில் காந்தி சொன்னது அவ்வுண்மையை வற்புறுத்த
வில்லையா?
76. அவ்வச்சாதியினரின் ஆசார வாழ்க்கைக்கு இடையூறு
நேராதவாறு எல்லாச்சாதியினர்க்கும் அவரபிவிருத்திப்
பொருட்டுச் சமசந்தர்ப்பங் கொடுப்பதைத் தடுப்பவரார்?
XI.
77. சாதிகள் தோன்றிய நாள்தொட்டு இந்நாள்வரை
சாதிபற்றிய போர் நிகழ்ந்த காலம் மிகுதியா? நிகழாத
காலம் மிகுதியா?
XII.
78. இந்நாட்டில் உயர்ந்த சாதியான் தன்
மகளைக்கொடுக்கத் துணிந்தாலும் தாழ்ந்த சாதியான் அவளை
மணக்கும் வழக்கம் உண்டா?
79. உயர்ந்த சாதியான் மணந்துகொள்ளத் துணிந்தாலும்
தாழ்ந்த சாதியான் தன் மகளை அவனுக்குக் கொடுக்கும்
வழக்கம் உண்டா?
80. அதனால் ஒவ்வொரு சாதியும் தன்னாசாரத்தையே
குறிக்கோளாகக்கொண்டு வாழ்ந்துவருகிறதென்பது
விளங்கவில்லையா?
XIII.
81. உட்பேதங்களை இலவாக்கினாற்றான் பொதுப்பகையை
வெல்லவும், பொது நலத்தைப்பெறவும் முடியுமா?
82. பொதுப்பகையென்ற பிரஞ்ஞையும், பொது நலமென்ற
ஆசையும் இருப்பது போதாதா?
83. தாழ்ந்த சாதியாரின் உள்ளத்திலுள்ள
அழுக்காறும். உயர்ந்த சாதியாரின் உள்ளத்திலுள்ள
செருக்கும் நேரிய முறையிற் களையப்பட்டால் சாதிபேதங்கள்
அந்தப் பிரஞ்னஞக்கும் ஆசைக்கும் இடையூறு
செய்யக்கூடுமா?
XIV.
84. எல்லாச் சாதியினரும் மக்களாவதில் வேறு
படாதது போல எல்லா ஆடவரும் பெண்டிரும் முறையே ஆடவராதற்
றன்மையிலும் பெண்டிராதற் றன்மையிலும் வேறு
படாதவரல்லரா?
85. சாதிப்பிரிவை வேண்டாத வுமக்கு அப்பன் ஐயன்
கணவன் தாய் தங்கை மனைவிமுதலிய முறைப்பிரிவு மட்டில்
ஏன்?
86. சாதிப்பிரிவாற் பயனொன்று மில்லையென்பீராயின்
முறைப்பிரிவாலாவது பயனுண்டா?
87. 'அதுவும் பயனற்றதுதானென்றதே உம் கொள்கை
யென்பதற்கு உம் ஈ.வே.ரா 2-6-1945 'குடியர'சில் எழுதிய
'உறவுமுறை' என்ற கட்டுரையே சான்றாகாதா?
88. காதல் மணம் வாழ்வின் உயிர் நிலையென்பது
உமக்குக் கொள்கை யன்றா?
89. அம்மணத்துக்குச் சாதிப்பிரிவு செய்யுங்
கேட்டினும் முறைப்பிரிவு செய்யுங் கேடு சிறிதோ?
90. கணவன் மனைவியாவோர் தம்முட் காதல்கொள்வதற்கு
முன் நன்கு பழகி ஒருவரியல்பை யொருவர் அறிந்தவரா
யிருத்தல் வேண்டுமென்று நீர் சொல்வதில்லையா?
91. தமையன் தங்கைமாரிடம் அதற்குரிய அவகாசம்
மிகுதியன்றா?
92. தமையன் தங்கையை மணந்தால் 'கண்டுகேட்
டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும்' அவனுக்கு
அவள்மாட் டில்லாமற் போகுமா?
93. சற்புத்திரர் தான் பிறவாமற் போவாரா?
94. பின்னை ஏன் உம்மவருள் தமையன் தங்கையைக்
காதலித்து மணப்பதில்லை?
95. முறைப்பிரிவை யொழிப்பதற்கும் நீர்
பிரசாரஞ்செய்ய வேண்டாமா?
XIV.
96. அப்பன் சொத்துக்கு மகன் உரியனாதல் பிறப்புப்
பற்றியதா? பிறிது பற்றியதா?
XV.
97. பெற்றோர்பாலுள்ள அறிவு அழகு ஆண்மை நோயின்மை
பெருந்தகைமை முதலிய நலன்கள் பிள்ளைகள்பாலும் இறங்குதல்
உண்டா? அன்றா?
A..
98. உண்டெனின் பிறப்பால் தாரதம்மியங்கோடல்
அவசியமாகாதா?
B.
99. அன்றெனின் குழந்தைகளின் உடல்நல
முதலிய்வற்றைக் கெடுத்துவிடுமெனக் கூறி இளமணத்தைக்
கண்டித்தல், கர்ப்பத்தடையை யாதரித்தல் முதலியவற்றை ஏன்
செய்கிறீர்?
XVI.
100. கற்பு வாழ்க்கை கடினமென்பதையும், விபசார
வாழ்க்கை சுலபமென்பதையும் அறியமுடிகிறதா?
101. கற்பரசிகளும் விபசாரிகளும் பிறப்பொப்பாற்
பெண்டிர்தானே யெனப்பேசிக் கற்பரசிகளின் சமூகத்தில்
விபசாரிகளையும் சேரவைத்து மதிக்கலாமா? ஆகாதா?
A..
102. ஆமெனின் கற்பரசிகள் தமக்கும் வேசிகளுக்கும்
சமூகத்திற் சமமதிப்புத்தானே யிருக்கிறதெனக் கண்டால்
தம் கற்பைக் கஷ்டப்பட்டுக் காத்துந் தமக்குரிய மரியாதை
யங்கீகரீக்கப்படவில்லையே யெனக்கருதிச் சோர்வடைதல்
கூடுமன்றா?
103. அங்ஙனமாயின் அவர்களும் விபசாரத்தொழிலை
மேற்கொள்ள ஏன் துணியார்?
104. துணியட்டுமேயெனின் அங்ஙனங் கூறுவார் தம்
தாய் மனைவி மகள் உள்பட உலகத்துப்பெண்டிரனைவருமே
வேசிகளாக வேண்டுமென்று விரும்பினவராக மாட்டாரா?
105. அங்ஙனம் விரும்பினாலுங் குற்றமில்லையெனின்
'அப்பன் வருவா னதன்பின் மகன் வருவான் - தப்பு
முறையென்று தள்ளாதே' என்றபடி விபசாரிகளான தம் தாய்
முதலியவரைத் தாமும் புணர்ந்து மகிழலாமென்ற
கொள்கையையுடைய தூர்த்தரல்லரா அவர்?
B.
106. ஆகாதெனின் பிறப்பொப்பென்னும் பொதுமையை நீர்
விடுவதுதான் உமக்கு மானம் என்பது ஏன் தெரியவில்லை?
XVIII.
107. உத்தமிமகனுக்கும் வேசிமகனுக்கும் பிறப்புப்
பற்றிய உயர்வு தாழ்வில்லையா?
108. 'அயோக்கியத்தனமாய் தன்னைப்பெற்ற தாயாருக்கு
பண வரும்படிக்கு மாப்பிள்ளை தேட முச்சந்தியில்
நிற்கும் மாஜி குச்சிக்காரிகள் பிள்ளைகள் போல்...'
என்று உம் ஈ.வே.ரா சொன்னதைப் 'பகுத்தறிவு' III,8,9,
இல் படித்திருக்கிறீரா?
109. அவ்விருவர்க்கும் பிறப்புப்பற்றிய உயர்வு
தாழ்வில்லையாயின் 'குச்சிக்காரிகள் பிள்ளைகள்' என்பது
அவர் வாயில் ஏன் ஏசற் பிரயோகமாய் வந்தது?
110. வேசிமகன் மானமுள்ளவனாயின் தன் பிறப்பின் இழி
தகைமைக்கு நாண மாட்டானா?
111. 'யான் இதனைச் செய்யாதொழிவனேல் என்
அப்பனாகிய் இவனுக்குப் பிறக்கவில்லையென உலகம் என்னைப்
பழித்திடுக' என்னுஞ் சபதம் பிறப்புப்பற்றிய
உயர்வில்லதவனுக்கு ஏது?
112. '----தமிழ் மக்கள்----பல ஜாதியார்க்குப்
பிறந்த கூட்டத்தோடு செல்வாரைப் போல ----செந்தமிழின்
சிறப்புக்குக் கேடு செய்கின்றனர்' என்று S.S.பாரதியார்
M.A.B.L. 'பகுத்தறிவு'III, 11-இல் கூறிச்
சாதிக்கலப்பாற் பிறந்த மக்களை அப்பிறப்புப் பற்றிப்
பரிகசிப்பானேன்?
113. 'நாம் ஒரு இனம் என்பதில் ஆட்சேபனை இல்லை.
ஆனால் நாம் ஒருவகுப்பு மக்கள் என்று ஆகாமல் ஒரு
இனமக்கள் என்று சொல்லிக்கொள்வதால் ஒற்றுமை
ஏற்பட்டுவிடாது. ஆதலால் ஒவ்வொருவரும் இம்மாதிரி
ஒருவகுப்பாக ஆக முயல வேண்டும். பிரியவேண்டிய
அளவுக்குமேல் பிரிந்து விட்டோம்' என்று உம் ஈ.வே.ரா.
9-6-1945 'குடியர' சிற் கூறியது மக்களுக்குள்
வகுப்புப்பேதம் வேண்டுமென்பதை ஆதரிக்கவில்லையா?
XIX.
114. திராவிடர் ஆரியர் என்ற வகுப்புப் பேதத்தை
நீர் கொண்டது அதன்படிதானா?
115. ஆயின் அப்பேதம் பிறப்புப் பற்றியதா? பிறிது
பற்றியதா?
A..
116. பிறப்புப் பற்றியதெனின் உம் கொள்கைக்கு அ·து
ஏற்புடைத்தாமா?
117. திராவிடப் பெண்டிருள் வேசிக்கூட்டத்தினர்
இலரா?
118. அவருட் சிலர் ஆங்கிலேயரைக் கூடிப்பெற்ற
சந்ததிகள் ஆங்கிலோ திராவிடரும், மற்றுஞ் சிலர்
ஆரியரைக் கூடிப் பெற்ற சந்ததிகள் பார்ப்பனரும்
ஆவாரென்று உம் ஈ.வே.ரா 25-2-1945 'திராவிட நாடு' விற்
கண்டீரா?
119. தமிழ்நாட்டிற் பின்னருள்ள திராவிட வேசியர்
அவ்வாங்கிலோ திராவிடரையோ, பார்ப்பனரையோ மற்றுள்ள
வேற்றினத்தாரையோ கூடிச் சந்ததிகளைப் பெறுகின்றாரல்லரா?
120. திராவிடரல்லாத பிறவினத்துப் பெண்டிராகிய
பார்ப்பனிகள் முதலியோருள்ளும் விபசாரிகளாய்ப் போனவர்
திராவிடராதி பல இனத்தவரைக் கூடிச் சந்ததிகளைப்
பெறுவதின்றா?
121. அவ்விருவகைச் சந்ததியினரையும் திராவிடரேயெனக்
கருதி நீர் உம் கூட்டத்திற் சேர்த்துக் கொள்ளவில்லையா?
122. அவரெல்லாந் தூய திராவிடர் தானா?
123. தூயகுலத் திராவிடர் உம் கூட்டத்திற்
சேர்ந்தால் அவருக்கு மானந் தங்குமா?
124. நீர் ஒருவகுப்பாரை ஆதித்திராவிடரெனக்
கூறுவதேன்?
125. மீதித்திராவிட ரெல்லாரும் மத்தியத்
திராவிடரா?
126. அவர் கலப்புப் பிறப்பினரென்பதை நீர்
அங்கீகரித்தீராக மாட்டீரா?
127. எந்த எந்த வகுப்பார் கலப்பு மணத்தையாவது
செய்து கொண்டு அவரைப் பெற்றனர்?
128. அந்த மனம் நடந்தமைக்கு ஆதாரமென்ன?
129. மணத்தின் வழியன்றிப் பிறந்த கலவைப்
பிறப்பினரெல்லாம் விபசாரி மக்களல்லரா?
130. ஆதித்திராவிடரென ஒரு சாரார்
பிரிக்கப்பட்டதைச் சரியென நீர் உடன்பட்டீராயின் மீதித்
திராவிடரனைவரும் அன்னர்தா வென்பதையும் உடன் பட்டீராக
மாட்டீரா?
131. அங்ஙனமாயின அத்திராவிடர் சூத்திரர்தானென்று
சூத்திரரென்னும் பதத்திற்கு நீர் கற்பிக்கும் பொருளையே
வைத்துப் பார்ப்பனர் கூறினாற் குற்ற மென்னை?
132. ஒருக்கால் அம்மீதித்திராவிடர்
வெளிநாட்டிலிருந்து இத்தமிழ்நாட்டில் வந்து
குடியேறியவரென்பீராயின் இக்காலை அரசியல் உலகில்
ஏற்கப்பட்டிருக்கும் Quit India Policy, Quit Asia
Policy என்பவற்றின்படி அவரும் இத்தமிழ்நாட்டை
அவ்வாதித்திராவிடரிடங் கொடுத்துவிட்டு வெளியில்
ஓடவேண்டுபவரே யல்லரா?
B..
133. பிறிது பற்றியதெனின் அ·தெது?
134. 'நான்....திராவிடர் ஆரியர் என்று உடல்கூறு
சாஸ்திரப்படி பரீட்சித்து அறிந்து பிரித்துப்பேசுவதாகக்
கருதாதீர்கள். அல்லது திராவிடருக்கு என்று ஏதோ சில
தன்மைகளை எடுத்துச்சொல்லி அதைச் சரித்திர ஆதாரப்படி
மெய்ப்பித்துச் சொல்லுவதாகக் கருதாதீர்கள். இவைகள்
எப்படி இருந்தாலும்---சரி நம்மை இன்றைய இழிவிலிருந்து----தாண்டிச்
செல்ல நமக்கு ஒரு குறிச்சொல்வேண்டும். சுயராஜ்யம்
என்றால் எதைக் குறிக்கிறது? பாகிஸ்தான் என்றால்
எதைக்குறிக்கிறது? மோக்ஷம் என்றால் எதைக்குறிக்கிறது?
என்று பார்த்தால் அவை ஒருகருத்தை, ஒரு விடுதலைத்
தன்மையை, ஒரு பயனை அனுபவிப்பதை எப்படிக்
குறிப்பிடுகின்றனவோ அப்படிப்போல் நம்மை இழிவிலிருந்து
விடுதலைசெய்து ஒரு முற்போக்கை---குறிப்பிட
ஏற்படுத்தியிருக்கும் சொல்லாகும். ஆதலால் வார்த்தையின்
பேரில் வழக்காட வேண்டியதில்லை-----ஆகவே திராவிடர்
என்பது நமக்கு ஒரு குறிச்சொல், லட்சியச்சொல் ஆகும்----ஆரியம்
என்றால் மாற்றத்திற்கு இடமில்லாதது திராவிடம் என்றால்
மாற்றிக்கொள்ள இடமளிப்பது என்பதுதான் உண்மை
தத்துவமாகும்' என்று உம் ஈ.வே.ரா. 14-7-1945 'குடியர'சில்
திராவிடம் என்பதற்கு ஒரு புதுப்பொருள் கற்பித்துக்
கூறினாரே; அதுவா?
135. மாற்றிக்கோடல் என்பது புரட்சி அல்லது புரட்டு
என்பதாகாதா?
136. இங்கிலாந்து பிரான்சு ரஷியா முதலிய
தேசங்களில் அப் புரட்டர்கள் இலரா?
137. அவ்வத் தேசத்துப் புரட்டர் தத்தம் தேசத்தையே
தமக்குச் சொந்தமாகக் கொண்டிலரா?
138. அங்வெல்லாத் தேசங்களீலுமுள்ள புரட்டரனைவருங்
கூடித் தமக்கென ஏதேனுமொரு பொதுஸ்தானத்தை
விரும்புகின்றனரா?
139. அவ்வத்தேசத்துப் புரட்டர் தம் தம்
தேசப்பெயர்க்குப் புரட்டு எனப்பொருள்
கூறித்திரிகின்றனரா?
140. திராவிடர்மட்டில் திராவிடம் என்பதற்குப்
புரட்டெனப் பொருள் கற்பித்துக்கொண்டு தமக்கொரு
திராவிடஸ்தானை ஏன் விரும்பவேண்டும்?
ஆக அநுவாதம் 6 க்கு ஆசங்கை 437
--------------------------------------------------------------------------------
|