Home            Periyar, DK, Self Respect? part -6        Meaning of Viboothi or Thiruneeru


 

On Communism &
Suyamariyathai Iyakkam [Self Respect movement]
SuyamariyaathaiyeekaSuravaleeஉ
திருச்சிற்றம்பலம்
ஸ்ரீ மெய்கண்ட தேசிகன் திருவடி வாழ்க
சுயமரியாதையியக்கச் சூறாவளி
-ஒரு சிவசேவகன்
சித்தாந்த பண்டித பூஷணம் ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை
திருநெல்வேலி பேட்டை
 
--------------------------------------------------------------------------------
3. பொது வுடைமை

--------------------------------------------------------------------------------
அநுவாதம்.
    உலகிலுள்ள எல்லா மக்களும் உழைக்க வேண்டுவது அவசியம் ஒரு சாரா ருழைப்பில் இன்னொரு சாரார் வாழ்வதென்பது எப்போதும் ஆகாது.  முதலாளி உழைப்பாளி யென்கிற வேறுபாடு அறக்கொடிது.  மக்களெல்லருஞ் சமமாக வுழைத்து உலகவள மனைத்தியுஞ் சமமாகப் பங்கிட்டுக் கொள்வதே நெறி.  அதற்குத் துணைபுரியும் பொதுவுடைமை யரசுதான் நல்லரசு.
ஆசங்கை.
I.   
     1. செல்வம் மக்களை நல்லவ ராக்குமா? ஆக்காதா?
A..
     2. ஆக்குமெனின் செல்வரைப் பழிப்பானேன்?
B.
     3. ஆக்காதெனின் பொதுவுடைமை யரசால் எல்லாமக்களுஞ் செல்வராவதிற் பயனென்?
II.   
     4. உலகம் மக்களுக்கு உரியதாதல் பிறப்புப் பற்றியதா? தகுதி பற்றியதா?
A..
    5. பிறப்புப் பற்றியதெனின் எல்லார்க்கு மென்பதில் விலங்கு முதலியனவும் அடங்குமா?அடங்காவா?
a..
    6. அடங்குமெனின் அவற்றின் நலத்துக்கென அவ்வரசில் வகுக்கப்பட்டுள்ள திட்டங்களெவை?
b.
    7. அடங்காவெனின் அவையும் உலகிற் பிறக்கவில்லையா?
    8. மக்களுள் விலங்கினுங் க்டையர் மலிந்து கிடப்பதை யறிவீரா?
    9. அவர் என்றாயினும் இலராகவாவது சிறு பாலராகவாவது ஆவரா?
    10. அவருக்கிருக்கும் உரிமை அவற்றிற்கு ஏனில்லை?
B..
    11.  தகுதி பற்றியதெனின் அதில் ஏற்றத் தாழ்வுகள் இலவா?
    12. அவை மக்களின் சமத்துவத்தைக் கெடாவா?
    13. அத்தகுதியையும் நீர் ஒழிக்க முற்படாத தென்னை?
    14.  தகுதியில்லாதாரும் உலகிற் பிறந்தவரலரா?
III.   
    15. உழைப்பவருக்கே உலகவளம் உரிந்தெனின் அவருக்கு அது கூலியாகாதா?
    16. அவ்வரசில் ஒருவன் தான் பெறுங் கூவியளவுக் கன்றி அதிகம் உழைக்கிறாவென்பது உண்மையா?
    17. அவ்வதிக வுழைப்பின் கூலி அவ்வரசையே யடைவதில்லையா?
    18.  அங்ஙனஞ் சேர்ந்த பொருளை நாட்டின் நன்மைப் பொருட்டேயாயினும் அவ்வரசே செலவு செய்யும் அதிகாரமுடைய தன்றா?
    19. அந்நலமாவது உழைப்பவன் மேலு மேலும் உழைத்தற்கென அவனுக்கு அளிக்கப்படும் வசதியா? அதனின் வேறாயதோர் இன்பமா?
A..
    20. வசதியெனின் உழைப்பவன் உழைத்துக் கொண்டேயிருக்க வேண்டுமென்பது தவிர அவனுக்குச் சுகமென வொன்றில்லை யென்பது சித்தியாதா?
    21. உழைப்பே சுகமாகுமா?
B..
    22. இன்பமெனின் அது யாது?
    23. உண்ணல் உடுத்தல் உறங்கல் ஊர்தல் ஏவல் களித்தல் முதலியனவா? வேறா?
a..
    24. உண்ணல் முதலியனதானெனின் அவற்றை அறவே வெறுக்கும் அறிஞரை அவற்றின் பொருட்டு உழைக்குமாறும் அவ்வின்பத்தில் தோயுமாறும் வற்புறுத்தல் நீதியா?
b.
    25. வேறெனின் அது யாது?
IV.
    26. மனிதன் தனியே பிறந்து தனியே சாகிறானென்பது உண்மையன்றா?
    27. அப்பிறப் பிறப்புக் கிடைப்பட்ட அவன் வாழ்க்கையை அவ்வப்போதுள்ள சமூகமோ அரசோ எப்படி முழுவதுங் கட்டுப்படுத்தலாம்?
    28. ஒரு நாட்டு மக்களை முழுமையாகவும், ஒவ்வொருவனையும் அதன் உறுப்பாகவும் அந்நாட்டுப் பொதுவுடைமை யரசு வைத்து நடத்துமாயின் அங்குத் தனி மகனுக்குச் சுதந்திரம் இருக்க முடியுமா?
    29. உம் ஈ.வே.ரா. சமூகத்துக்கோ அரசுக்கோ கட்டுப்படுகிறாரா? அல்லது அவற்றைத் தமக்குக் கட்டுப்படுத்த முயல்கிறாரா?
    30. சமூகத்துக்கோ அரசுக்கோ கட்டுப்படுபவன் அதனை எப்படித் திருத்தமுடியும்?
    31. அதனைத் திருத்தத் துணிப்வன் அதற்கெப்படிக் கட்டுப்பட முடியும்?
    32. சமூகமோ அரசோ செய்யுஞ் சகாயத்தாலுந் தீராத துன்பங்கள் தனி மனிதனுக்கிலவா?
    33. அவ்விரண்டாலன்றி வேறு வழிகளால் வரக்கூடிய இன்பங்களும் அவனுக்கிலவா?
    34. அத்துன்பங்களிலிருந்து விடுபடவும், அவ்வின்பங்களை யெய்தவும் அவன் முயன்றால் அவனைத் தடுக்க எந்த அரசுக்கேனும் அதிகார மிருக்கலாமா?
V.
    35. பொதுவுடைமை யரசில் சிறை வைத்தல் தூக்கிலிடல் முதலிய தண்டனைகளுக் கிடமுண்டாகுமா?
VI.
    36. நாடுதோறும் பொதுவுடைமை யரசு தனித்தனி வேண்டுமா? உலக முழுவதற்கும் ஒரே பொதுவுடைமை யரசு தான் வேண்டுமா?
A..
    37. முன்னையதே வேண்டுமெனின் மக்கள் நாடுபற்றிப் பிரிந்தவ ராவா ரல்லரா?
    38. இயற்கை வளம் சிறிது மில்லாத நாட்டிற் பிறந்த மக்கள் அது நிறைந்துள்ள நாட்டின் நலத்தைத் துய்ப்ப தெப்படி?
B..
    39. பின்னையதுதான் வேண்டுமெனின் அவ்வளமுள்ள நாட்டிற் பிறந்த மக்களை அதில்லாத நாட்டிலும், அதில்லாத நாட்டிற் பிறந்த மக்களை அதுள்ள நாட்டிலும் நூறாண்டுகளுக்கொரு முறையாவது மாறிச்சென்று குடியேறி வாழ அவ்வரசு வசதிசெய்து கொடுக்குமா?
    40. தனியுடைமை சிறிதுமில்லாமை, பிரயாண வசதி அதிக முண்மையாதியன அக்குடியேற்றங்களைச் சுலபமாக்காவா?
    41. அக்குடியேற்றங் கூடாதெனின் மக்களுக்குட் பொறாமையும் பகைமையுங் வளராவா?
    42. வளமில்லா நாட்டிற் பிறந்த மக்களை அப்பிறப்புப்பற்றி அங்கேயே வாழவைப்பது அவர்களைக் கொடுமைப் படுத்திய தாகாதா?
VII.
    43. அவ்வரசிற் பிரதிநிதிகளாய் வருவார் நாடுபற்றியா? இனம் பற்றியா? கட்சி பற்றியா? மொழி பற்றியா? பிற பற்றியா?
A..
    44. இந்தியா சீனா முதலிய நாடுகளோ, திராவிடர் ஆரியர் நிகிரோவர் யூதர் முதலிய இனங்களோ, காங்கிரஸ் ஹிந்து மகாசபை முசிலீம் லீக் முதலிய கட்சிகளோ, பிறவோ பற்றியெனின் அவையெல்லாம் நாடு இனம் கட்சி பிற ஆகியவற்றின் பற்றை நிலைக்கச்செய்து மக்களுக்குள் வேற்றுமையையும் பகைமையையும் விளைவிப்பனவாகலின் ஒழிய வேண்டாமா?
B..
    45. மொழிபற்றியெனின் அதனாலுண்டாகிய வேறுபாடு தொலைக்க முடியாததொன்றென்பது தெரிகிறதா?
    46. மொழிபற்றிப் பிரிந்துள்ள மக்கட் கூட்டத்தினர் தம்முன் தொகையில் ஏறியுங் குறைத்தும் இருப்பாரல்லரா?
    47. அந்த அளவிற்றானே பிரதிநிதிகளும் அமைவர்?
    48. அப்போது அவர்க்குட் பெரும்பான்மைச் சிறுபான்மைச் சண்டை நேராதா?
    49. உலகப் பொதுவுடைமை யரசுக்கு உலகப் பொதுமொழி அல்லது அரசமொழியென வொன்று வேண்டாமா?
    50. அவ்வகையிலும் மொழிப்போர் நிகழாதா?
    51. உம் ஈ.வே.ரா உலகப்பொதுவுடைமை யரசு விருப்பரல்லவரா?
    52. அவர் தமிழரா? வேற்று மொழியினரா?
    53.  இன்று உலகப் பொதுவுடைமையரசு தொடங்கி விட்டால் தமிழரின் பிரதிநிதியாக அவரையே அனுப்ப முனையீரா?  
    54. 'இந்தியா சுதந்திரம் பெற்றுவிட்டாலும் உலக சம்பந்தம் இல்லாமல் இந்தியா வாழ்ந்துவிட முடியாது.  வருங்காலவுலகம் தேசத்துக்கு தேசம் நாட்டுக்கு நாடு இப்போது உள்ள தூரத்தில் இருக்காது, கூப்பிடு தூரத்தில் இருக்கப்போகிறது.  ஹிந்திக்கு ஆகட்டும், வேறு இந்திய பாஷைக்கு ஆகட்டும் இனி அடுப்பங்கரையிலும் தொழில் கருவியும் யந்திரமும் இங்கிலீஷ் பாஷையில் தான் இருக்கப்போகிறது.  விவசாயிக்கும் --- வியாபாரிகளுக்கும் ---- அரசியல்காரனுக்கும் அதுபோலவே தான் என்று 'பகுகுத்தறிவு' III, 6 இல் அவர் கூறியிருப்பதை யறிவீரா?
   55. எதிர் காலத்தில் தமிழ் சாவது திண்ணம் என்று அவர் இப்போதே குறிகண்டு உமக்குஞ் சொல்லி மகிழ்வது அவ்வரிகளால் விளங்க வில்லையா?
    56. அவர் விரும்பும் அத்தமிழ்க்கொலையரசு தமிழருக்கு வேண்டுமா?
VIII.
    57.  'Danger of Communism to Islam' என்ற தலைப்பின் கீழ் 'Nawabzada Liaqat Ali Khan sounded a note of warning against the great danger of Communism to Islam. He said that those who believed that through Communism they could secure Pakistan, were greatly mistaken.  They might secure Pakistan of the conception of Communism, but they would not secure Pakistan of Islamic Conception' என்றுள்ள வரிகளை 13-5-1945 'இந்தியன் எக்ஸ்பிர' ஸில் படித்தீரா?
    58.  நீர் விரும்புவது கம்யூனிஸ (பொதுவுடைமை)த் திராவிட ஸ்தானா? இசுலாமியத் திராவிட ஸ்தானா?
A..
    59. முதலதெனின் இங்குள்ள இசுலாமியத் திராவிட ரனைவரும் உமக்குப் பரம சத்துருக்களாவா ரென்பதை யறிகிறீரா?
B..
     60. அடுத்ததெனின் நீர் இசுலாமியராவதோடு எல்லாத் திராவிடரையுமே இசுலாமியராக்க  வேண்டாமா?
IX.
      61. உலகமுழுவதும் எனக்கே யிருக்கட்டுமென்றல், உலகத்தை எல்லார்க்குஞ் சமமாகப் பண்ட்கிட்டு எனக்குக் கிடைக்கும் பாகம் போதுமென்றல், உலகம் எனக்குவேண்டவே வேண்டாமென்று அறத்துறத்தல் என்னும் இம்மூன்றில் எதைக் கொண்டால் மனிதன் உயர்ந்தவ னாவான்?
X.
      62. பொதுவுடைமையரசில் மக்கள் ஈசுர விசுவாசத்தைக் கொள்ளலாமா? ஆகாதா?
A..
      63.  ஆமெனின் அந்த விசுவாசத்தை இன்ன அளவிற்றான் கொள்ள வேண்டும், அவ்வுபாசனையை இன்னமுறையியற்றான் நிகழ்த்த வேண்டும் என்பனவாதிய கட்டுத் திட்டங்களை அவ்வரசு வகுக்குமா?
      64. அவை அவ்வச்சமய வணக்க முறைகளுக்கு மாறாய் அமையின் நியாயமா?
B..
     65. ஆகாதெனின் மக்களின் அறிவுலக வாழ்வில் அவ்வரசு மண்போடுவதாய் முடியாதா?
XI.
     66. பொதுவுடைமை நாட்டில் ஆடம்பரங்கள் இருக்குமா? இராவா?
A..
       67. இருக்குமெனின் தனிப்பட்ட மனிதருக்கோ, ஏதேனுமொரு கொள்கையைத் தமக்கெனவுடைய ஒரு கூட்டத்து மக்களுக்கோ உவப்புத் தருவதென அவர் விரும்புங் காரியமே ஆடம்பரமெனப்படுவதன்றா?
      68. அவ்வரசு தான் விரும்புவதொன்றைத்தான் அவர் ஆடம்பரமெனக் கொள்ளவேண்டுமென நிர்ப்பந்திக்கலாமா?
     69. அந்நிர்ப்பந்தத்தாற் கிடைப்பது ஆடம்பரமாகுமா?
    70. ஆடம்பரத்துக்கான செலவை அவ்வரசே உதவவேண்டுமன்றா?
       71. அப்போது ஆடம்பரத்துக்கென ஒதுக்கப்பட்டுள்ள பொருளை அவரவர்க்குப் பங்கிட்டுக் கொடுக்குங் கடன் அவ்வரசுக்கில்லையா?
    72. தமக்கென ஒரு கொள்கையையுடைய ஒரு சமூகத்தார் அக்கொள்கைக்கேற்ற முறையில் தம் பகுதிப்பணத்தைக் கொண்டு தமக்கு விருப்பமான ஆடம்பரங்களைச் செய்து மகிழ அவ்வரசில் அநுமதிக்கப்படுவாரா?
B..
      73. இராவெனின் இன்பத்தில் ஒரு பெரும்பகுதி அந்நாட்டு மக்களுக்கு இல்லாதவாறு அவ்வரசு தடுப்பதாய் முடியாதா?
    74. இன்றியமையாக வகையிற் பயன்படுத்தப் பட்டன போக எஞ்சியுள்ள பொன்னும் அபரிகிதமான நவமணிகளும் அவ்வரசில் எப்படிப் பயன்படுத்தப்படும்?
      75.  அங்கு நவமணிகள் மதிப்பிடப்படுவ தெப்படி?
     76. பொதுவுடைமை யரசில் மக்கள் வாழ்க்கையின் குறிக்கோள் என்னை?
XII.
       77. சர்வாதிகாரம், ஜனநாயகம் (குடியரசு) என்னும் இரண்டுவகை யாட்சிகளுள் நீவிர் விரும்புவது எது?
A..
       78. சர்வாதிகாரமெனின் அதில் மக்களுக்குப் பேச்சு எழுத்து முதலியவற்றிற் சுதந்திரம் இருக்க முடியுமா?
    79. இல்லை யென்பதைக் காட்டிச் சர்வாதிகார நாடுகளுக்குள் முதலதும் உம்மால் மதிக்கப்படுவதுமாயுள்ள ரஷியாவைப் பற்றி 'The news-paper (Daily Harold) writes.....'Russia has no parties in the sense in which we the people of Britain and the United States interpret the words parliament and parties.  Russia has no free press or free platforms.  A man cannot stand up in Moscow, as he can at Marble Arch.... and criticise the government and hope to obtain publication of independent political views in 'Pravda' or 'Izvesta'" என்றொரு செய்தி 15-9-1945 'இந்தியன் எக்ஸ்பிர' ஸில் வந்துள்ளதை யறிவீரா?
B..
      80.  ஜனநாயகமெனின் 'ஆதலால் சர்வாதிகாரம் என்பதைக் குறை கூறாதீர்கள்.  ஜனநாயகம் என்பதே பித்தலாட்டமான காரியம். அதிலும் நமக்கு அது பித்தலாட்டமும் முட்டாள்தனமானதுமான காரியம்' என்று 25-8-2945 'குடியர' சில் உம் ஈ.வே.ரா. ஏன் கூறினார்?
 
ஆக அநுவாதம் 3 க்கு ஆசங்கை 252
  
--------------------------------------------------------------------------------