Home
Sankara Nayinar Kovil
Meaning of Viboothi or Thiruneeru
|
On Freedom & Suyamariyathai Iyakkam [Self Respect movement] |
|
SuyamariyaathaiyeekaSuravaleeஉ
திருச்சிற்றம்பலம் ஸ்ரீ மெய்கண்ட தேசிகன் திருவடி வாழ்க
சுயமரியாதையியக்கச் சூறாவளி
-ஒரு சிவசேவகன்
சித்தாந்த பண்டித பூஷணம் ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை
திருநெல்வேலி பேட்டை
--------------------------------------------------------------------------------
4. சுதந்திரம்
--------------------------------------------------------------------------------
அநுவாதம்.
மக்களுக்குச் சுதந்திர வாழ்வே சுகவாழ்வாகும்.
துயரந்தரும் பரதந்திர வாழ்வு ஒழியவே வேண்டும்.
ஆசங்கை.
I.
1. சுதந்திர பரதந்திரங்களில் மக்களுக்கு
இயல்பாயுள்ளது எது?
A..
2. சுதந்திரமெனின் அவர் கண்ணின்றிக்
காண்பாரா?
3. கையின்றிச் செய்வாரா?
4. மூர்ச்சை கட்குடி முதலிய நேரங்களிலும்
அறிவாற்றலோ டிருப்பாரா?
5. அறிவு கெடாமல் உறங்குவாரா?
6. அறிந்தவற்றை அயராமலிருப்பாரா?
7. மரணம் வரையுள்ள எதிர்கால நிகழ்ச்சிகளை
அவ்வக் காலத்தோடு பொருந்த முன்னரே அறிவாரா?
8. இடி புயல் முதலிய அமாநுஷ்ய சம்பவங்களுக்கு
இரையாகா திருப்பாரா?
9. ஒன்றை நினைக்கின் அது வொழிந்திட்
டொன்றாவானேன்?
10. ஒன்றை நினையாத முன்வந்து நிற்பினும்
நிற்பானேன்?
11. நனவிற் கண்டவற்றை அப்படியே கனவிலுங் காண
மாட்டாமை ஏன்?
B.
12. பரதந்திரமெனின் இயல்பாயுள்ள அது
என்றாயினுந் தொலையுமா?
13. ஒருவன் மற்றவனுக்கும் ஒரு சமூகம் மற்றைச்
சமூகத்துக்கும் ஒரு நாடு மற்றை நாட்டுக்கும்
அடங்கிக் கிடத்தலாகிய பரதந்திரமே ஈண்டு மறுப்பதற்கு
எடுத்துக்கொள்ளப்பட்டதெனின் மேற்கூறப்பட்ட
பரதந்திரங்களால் மட்டில் மானங் கெடாதா?
14. சரித்திரம் சுழன்றுகொண்டிருக்கு மியல்பின்
தென்பதை யறியீரா?
15. அடக்கிய நாடு அடக்கப்படுவதும், அடங்கிய
சமூகம் அடக்கப்படுவதும், அவை மாறி மாறி நிகழ்வதும்
சரித்திரப் பிரசித்த மல்லவா?
ஆக அநுவாதம் 4 க்கு ஆசங்கை 267
--------------------------------------------------------------------------------
|