Home         Hindu Temple Kodi Maram Song       Ultimate and Only God Shiva

Meaning of Viboothi, Thiruneeru by Various Authors
 
விபூதி
-தொகுப்பு பேராசிரியர் கா.திருஞான சம்பந்தன் M.Sc., M.C.A.
 
    சைவர்களால் ஆவசியமாகச் சரீரத்திலே தரிக்கற் பாலனவாகிய சிவசின்னங்கள் விபூதி, உருத்திராக்ஷம் என்னும் இரண்டும்.
    விபூதி என்ற பெயரிலேயே அதனுடைய மகிமை விளங்கும். "வி" என்றால் மேலானது. "பூதி" என்றால் ஐஸ்வரியம்(செல்வம்).  திருநீறு என்று மற்றொரு பெயரும் இதற்கு உண்டு.  திரு என்றால் தெய்வத்தன்மை. நீறு என்றால் வினைகளை நீறாக்குவது என்று பொருள்.  நம் வினைகளை வேரறுத்து நம்மை தெய்வ நலத்தில் இணைக்கும் சாதனமே திருநீறு ஆகும்.  அதனை மகிழ்ச்சியுடன் பூசி மகிழ்பவர்கள் அடையும் பேற்றினைக் கூறவந்த திருமூலதேவநாயனார்
    "கங்காளன் பூசுங்கவசத் திருநீற்றை
     மங்காமல் பூசி மகிழ்வரே யாமாகில்
     தங்கா வினைகளும் சாருங் சிவகதி
     சிங்காரமான திருவடி சேர்வரே"
    திருநீற்றின் பெருமையை நாம் அனைவரும் உணர்ந்து உய்வு பெறும் பொருட்டு திருஞானசம்பந்த மூர்த்தி சுவாமிகள் "திருஆலவாய் திருநீற்றுப்பதிகம்" என்னும் அற்புதப் பாசுரத்தைத் திருவாய் மலர்ந்து அருளியுள்ளார்கள்.
    "மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
     சுந்தரமாவது நீறு துதிக்கப் படுவது நீறு
    தந்திரமாவது நீறு சமயத்திலுள்ளது நீறு
    செந்துவர் வாயுமை பங்கள் திருஆலவாயான் திருநீறே"
    "நீறு இல்லா நெற்றி பாழ்" என்பது ஒளவை வாக்கு.
    பசுவின் சாணத்தை அக்கினியினாலே தகித்தலால் உண்டாக்கியது வெண்மையான் திருநீறு. இதனை அணிபவர்கள் தங்களுடைய மும்மலங்கள் [ஆணவம், கன்மம், மாயை] ஆகியவைகளை சிவாக்கினியில் தகித்து வெண்மையான ஆன்மா ஆகும், முக்தி பேற்றைப் பெறுவார்கள்.
    ஞான் அக்கினியால் தகிக்கப்பட்ட பசுமல நீக்கத்தில் விளங்கும் சிவத்துவப் பேற்றிற்கு அறிகுறி விபூதி
    திருநீற்றை முக்குறியாக அணிகிறோம். ஏனென்றால் ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்று மலங்களை வேரோடு நீக்கினால் தான் நாம் முக்திக்கு தகுதி உடையவர் ஆகிறோம் என்பதை அக்குறி உணர்த்துகிறது.
    விபூதியை பட்டுப் பையிலேனும், சம்புடத்திலேனும், வில்வக் குடுக்கையிலேனும், சுரைக்குடுக்கையிலேனும் எடுத்து வைத்துக் கொண்டு தரித்தல் வேண்டும்.
    விபூதியை வடக்கு முகமாகவேனும், கிழக்கு முகமாகவேனும் இருந்து கொண்டு தரித்தல் வேண்டும்.
    விபூதியை நிலத்திலே சிந்தா வண்ணம் அண்ணாந்து "சிவ சிவ" என்று சொல்லி, வலக்கையின் நடுவிரல் மூன்றினாலும் தரித்தல் வேண்டும்.
    வாய்ங்காந்து கொண்டும், தலை நடுங்கிக் கொண்டும், கவிழ்ந்து கொண்டுந் தரிக்கலாகாது.  ஒரு விரலாலேனும் ஒரு கையாலேனுந் தரிக்கலாகாது.
    சந்தியாகால மூன்றினும், சூரியோதயத்தினும், சூரியாஸ்தமயத்தினும், ஸ்நானஞ் செய்தவுடனும், பூசைக்கு முன்னும் பின்னும், மல சல மோசனஞ் செய்து செளசம் பண்ணி ஆசமித்த பின்னும், தீ¨க்ஷ இல்லாதவர் தீண்டிய போதும், விபூதி ஆவசியமாகத் தரித்தல் வேண்டும்.
    கருநிற விபூதியும், செந்நிற விபூதியும், புகைநிற விபூதியும், பொன்னிற விபூதியுந் தரிக்கலாகாது.
    விபூதி தரியாதவருடைய முகம் சுடுகாட்டுக்குச் சமமாகும்.
    திருநீற்றின் பெருமையும் அதனை அணிவதால் வரும் நன்மைகளும்
      1. உடல் நாற்றத்தைப் போக்கும்.
     2. தொத்து நோய்க் கிருமிகளைக் கொல்லும்.
      3. தீட்டுக் கழிக்கும்.
      4. உடலைச் சுத்தம் செய்யும்.
     5. வியாதிகளைப் போக்கும்.
      6. பில்லிசூனியம், கண்ணேறு பாதிக்காது காக்கும்.
     7. முகத்திற்கு அழகைத் தரும்.
     8. ஞாபக் சக்தியை உண்டாக்கும்.
     9. புத்திக் கூர்மையைத் தரும்.
    10. ஞானத்தை உண்டாக்கும்.
     11. பாவத்தைப் போக்கும்.
     12. பரக்தியைத் தரும்.
   
    "மால் அயன் இந்திரன் மற்றைய அமரர் மலர் மகளிர் சசி மற்றை வானக்
    கோல மடவார் இயக்கர் கந்தருவர் இராக்கர் குல அரசர் வேதச்
    சீல் முனிவரர் மற்றோர் இவருளரும் தவமுடையீர் திருவெண்ணீறு
    சாலவும் உத்தூளனம் முப்புண்டாம் நாள்தோறும் போற்றித் தரியார் யாரே"
    "பத்தியொடு சிவ சிவ என்று திருநீற்றைப் பரிந்து கையால் எடுத்து
     பாரினில் விழாதபடி அண்ணாந்து செவியொடு பருத்தபுயமீது விழ
    நித்தமும் விரல்களால் நெற்றியில் அழுந்தலுற நினைவாய்த் தரிப்பவர்க்கு
    நடுவினை அணுகாது, தேகம் பரிசுத்தமாம், நீங்காமல் நிமலன் அங்கே
    அத்தியோடு நித்தம் விளையாடுவான், முகத்திலே தாண்டவக் செய்யும் திரு
    சஞ்சலம் வராது, பரகதி உதவும், இவனையே சக்தியும் சிவனும் எனலாம்
    மத்தினிய மேரு என வைத்து அழுதினைக்கடையும் மால்மருகனான முருகா
    மயிலேறி விளையாடும் குகனே பொன்வயல் நீடு மலைமேவு குமரேசனே" 
    அணைத்து லோகத்திலும் அங்குள்ள தெய்வங்களும், தேவர்களும், அடியார்களும் திருநீறு அணிகிறார்கள்.
    "கண்ணன் வெண்பூதி பூசிக் கண்டிகை மாலை சாத்திப் புண்ணியத்
    திங்கள் வேணி யானிருபாதம் போற்றி"
    எனக் கண்ண அவதாரத்திலும் கண்டிகையும் நீறும் அணிந்தனர் - என்று கூறியிருப்பதையும் வாயு சங்கிதையில் உத்திர காண்டத்திலும், மகாபாரதத்தில் அநுசாசன் பர்வத்தில் 14-ஆம் அத்தியாயத்திலும் கூர்ம புராணத்திலும், ஸ்ரீ கிருஷ்ணர் உபமன்யு மகாமுனிவரிடம் சிவதீட்சை பெற்று சிவபூஜை செய்து, தான் விரும்பிய பலனைப் பெற்றார் என்று கூறியிருப்பதை நாம் உற்று நோக்க வேண்டும்.  எனவே ஸ்ரீ மன் நாராயணன் சிவஸ்துதி செய்பவனாகவும், சிவ சின்னமான விபூதியை மூன்று பட்டைக் கோடுகளாக நெற்றியில் தரித்தவராகவும், ருத்திரனுடைய கண்ணிற்குச் சமமானதாகவுள்ள ருத்திராக்ஷ மணிமாலையை அணிந்தவராகவும் இருக்கிறார் என்பது தெளிவாகிறது.
    விபூதிக்கு பஸிதம், பஸ்மம், க்ஷ¡ரம், இர¨க்ஷ என்ற பெயர்களும் உண்டு. எல்லாப் பாவங்களையும் போக்குதலால் பஸ்மம் எனவும், பிரகாசித்தலால் பசிதம் எனவும். ஆபத்தைப் போக்கலால் க்ஷ¡ரம் எனவும், பூதப்பிரேத பிசாச பிரம ராக்ஷஸ அபஸ்மார பவ பீதிகளின்றும் காத்தலால் இர¨க்ஷ எனவும் திருநாமங்கள் வந்தன.
    இவ்வளவு மேன்மை பொருந்திய விபூதி யணிவதிலும் மேலான சிவபுண்ணியம் யாதுளது?
 
 
for more details
visit
 

horizontal rule

சைவபூஷண சந்திரிகை
--------------
யாழ்ப்பாணத்து மேலைப்புலோலி
சைவசித்தாந்த மகாசரபம்
நா.கதிரைவேற் பிள்ளை
இயற்றியது

--------------
    இந்த நூலிலே மேற்கோளாகக் காட்டப்பட்ட
நூல்கள்
1. தேவாரம் 18. அத்தியாத்ம இராமாயணம்
2. திருவாசகம் 19. மகாபாரதம்
3. திருப்பல்லாண்டு 20. சூரசங்கிதை
4. பஸ்மசாபாலவுபநிடதம் 21. மானவசங்கிதை
5. பராசரஸ்மிருதி 22. உபதேசகாண்டம்
6. சைவபுராணம் 23. பிரமோத்தரகாண்டம்
7. இலிங்கபுராணம் 24. சிவதருமோத்தரம்
8. கூர்மபுராணம் 25. வாயுசங்கிதை
9. கந்தபுராணம் 26. அகத்திய பக்தவிலாசம்
10. பெரிய புராணம் 27. சைவசமயநெறி
11. தணிகைப்புராணம் 28. பட்டினத்துப்பிள்ளையார் திருப்பாடல்
12. பேரூர்ப்புராணம் 29. திருப்போரூர்ச் சந்நிதி முறை
13. திருவிரிஞ்சைப்புராணம் 30. உருத்திராக்க விசிட்டம்
14. சிவஞானபோதம் 31. சடகோபர் திருவாய்மொழி
15. சிந்தாந்தசிகாமணி 32. பேயாழ்வார் மூன்றாந் திருவந்தாதி
16. சூதசங்கிதை 33. திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
17. அத்தியாத்ம இராமாயணம்  
--------------------------------------------------------------------------------
பதிப்புரை
    சைவபூஷண சந்திரிகை என்னும் இச்சீரியநூல் 57 ஆண்டுகளுக்கு முன் அக்காலத்தில் நீதிபதியாக நிலவிய வே. மாசிலாமணிப்பிள்ளை அவர்களின் வேண்டுகோளின்படி மாயாவாததும்ச கோளரி சதாவதானம் நா.கதிரைவேற்பிள்ளை அவர்களால் எழுதி 1900-ம் ஆண்டில் அச்சிடப்பட்டது.  இதன்கண் சைவத்தின் மேன்மையும் அதன் சாதனங்களாகிய விபூதி, உருத்திராக்கம், பஞ்சாக்ஷரம் தின அநுஷ்டானம் முதலியவற்றின் சிறப்புகளையும் விளங்கும்படி எழுதியிருப்பது மிகவும் போற்றத்தக்கது.  இந்நூல் தோன்றியபோது அக்காலத்துப் பெரியோர்கள் இதனைப்போற்றிச் சிறப்பித்தனர்.  இத்தகைய அருமையான நூல் இப்போது மறைந்து விடாதபடி அச்சிட நேர்ந்தது.  ஆசிரியர் நாவலரின் மாணவர் வழிவந்தவராகையால் அவர்களுடைய அச்சுக்கூடப் பிரசுரமாக வரலாயிற்று.  இதனைச் சிவநேயர்கள் ஆதரிப்பாராக.
 ச. பொன்னுஸ்வாமி,
தருமபரிபாலகர்.

--------------------------------------------------------------------------------
சிறப்புக் கவி
ஸ்ரீலஸ்ரீ. ஆறுமுகநாவலர் அவர்களின் மாணாக்கரும்
இந்நூலாசிரியரின்
ஆசிரியர்களுள் ஒருவருமாகிய
யாழ்ப்பாணத்து நல்லூர்
வித்துவசிரோமணி
க.தியாகராசபிள்ளை அவர்கள்
இயற்றியன.
பொன்பணியும் பொறிப்பணியு மணிப்பணியு
    மிரும்பணியிற் பொறுத்த மாயன்
வன்பணியு மறைப்பணியு மறைபணியு
    முணராத மதியத் தேவ
னென்பணியு மிரும்பணியும் பெரும்பணியிற்
    கொளுமுதல்வ னெந்தை யேழை
யென்பணியு மிடத்தணியுங் கரும்பணியின்
    மொழிபணியு மேன்ற நாதன்.                    (1)
வருமீற்றி னொருநுதலி னெரிநீற்றி
    னுளதாகி வைப்பார் வைகுங்
கருநீற்றவ் வருளூற்றவ் விழிபூற்றின்
    வயிற்றோன்றிக் கருணை மேனி
யுருவேற்று வினைநீற்றுந் திருநீற்றின்
    விழிமணியி னுண்மை யோர்ந்து
வுருவேற்றி மலம்பாற்றித் திருவேற்கும்
    பெருங்கருணை யுலகத் தாக.                  (2)
விண்மணியிற் புகழணிமன் னரசணியிற்
    சிறக்குமணி மெய்மை சான்ற
கண்மணியிற் றிருநீற்றிற் களிக்குமணி
    குவளையணி களமராமெங்
கண்மனிவேற் பிள்ளைதவத் தணுமாசி
    லாமணியுங் கருதிக் கேட்ப
வண்மணிசை வப்பெரியோ ரணியுமணி
    நிலவவுஞற் றிட்டான் மாதோ.
அன்னவன்யா ரெனினம்மாட் டடைந்துபெருங்
    க்லைபலவு மறிந்தோன் மெய்கண்
டன்னவனெம் மவர்க்கருளுஞ் சிவஞான
    போதமுத லறிவு நூல்கண்
முன்னவன்பிற் றெரிந்துபோ திப்பவனஞ்
    சிவகுகனை முன்னுந் தாசன்
நன்னமா யாவாத கோளரிநங்
    கதிரைவே னாவல் லோனே.

--------------------------------------------------------------------------------
    உ
சிவமயம்
சைவபூஷண சந்திரிகை
காப்பு
வேத சிவாகமத்தான் மெய்ச்சமய மென்றுதெளி
போதசிவ சித்தாந்த பூடணவொண் மைக்கருளு
மீரா யிரமருப்பி யேறிவிளை யாட்டருளு
மோரா யிரமருப்பி யோர்.
கடவுள் வணக்கம்
பரமசிவன்
சிவஞானத் தவர்க்கருளும் பதியாவ னாகமத்துச் செல்வன் யாவன்
தவஞால முதலுலகை மூவினையிற் கொண்டவன்யார் தாணு வாகி
அவஞானத் தவர்க்கறியா வண்ணலெவன் றிருநீறு மக்கந் தானுந்
தவஞானக் கொருகுறியாத் தந்தவன்யா ரவன்சரணந் தலைமேற் கொள்வாம்.
வழிபடு கடவுள்
ஒருமானை வலத்தானை யொருவானை யிடத்தானை யுலகம் போற்ற
வருமானை முகத்தானைத் துணையானை யயில்பிடித்த வலத்தான் றன்னைப்
பெருமானை யெனதுளக்காட்டமர்வானை யெமக்கருளைப் பெருக்கு வானைத்
தருவானைப் பெரும்புதுச்சந் நிதியானைச் சாவணனைச் சார்ந்து வாழ்வாம்.
விபூதி
சித்தாந்த மெய்ச்சமயச் சிவநெறிக்கு வித்தாகித் திருமாலாதி
பெத்தாந்தக் கணத்தவர்க்கு மெவ்வெவர்க்கும் பெருவாழ்வு பெருக்கி மும்மைக்
கொத்தாந்த மலமுருக்குங் குறிகாட்டி நித்தியமாய்க் கொண்டார்க் குற்ற
பித்தாந்த மதப்பிணியைத் தபுமருந்தாந் திருநீற்றைப் பேணியுய்வாம்
உருத்திராக்கம்
நிலைகலங்கா தெங்குநிறை யருட்கடலின் வயிற்றோன்றி நிகரின் ஞானத்
தலையொளிகான் றியாம்பிரம மெனத்தடுமா றும்மிருள்கடங்கா தோட்டி
விலைமதித்தற் கரியதுவாய் வேண்டுவார் வேண்டியன விழைவி னீந்து
மலைமகணா யகன்றிருக்க ணருட்பேற்றைக் குறிக்கவரு மணியைத் தாழ்வாம்.

--------------------------------------------------------------------------------
நூல்
சைவபூஷணம் விபூதி ருத்திராக்கங்களே
பரமசிவ னமலன் பத்தர்க்குச் சின்ன
முருவுடலிற் கண்டியு நீறும்.
    சிவபெருமான் பிறப்பு இறப்பு இன்றி என்றும் உள்ளவர்.  எங்கும் நிறைந்தவர்; எல்லாம் செய்யவல்லவர்; இயல்பாகவே யெல்லாம் அறிபவர்.  தமது அநுபவத்தின் பொருட்டுப் பிறிதொன்றையும் வேண்டாதவர்; தம்வயமுடையவர்; ஆன்மாக்களிடத்துள்ள இரக்கமே திருமேனியாக வுடையவர்; இவ்விலக்கணங்களை யுடையவர் அவர் ஒருவரே யன்றி வேறில்லை.  ஆதலால் அவரே பசுபதி என்று மெய்யன்புடன் வழிபடுகின்றனர் சைவர் அல்லது சிவனடியார் என்று கூறப்படுபவர்.  ஒருவனையே தனக்கு நாயகனாகக் கொண்ட பதிவிரதையானவள் தன்னாபகனாற் கொடுக்கப்பட்ட திருமங்கிலியம் மோதிரம் முதலியவற்றைத் தன் கற்புநிலைக்குச் சாதனமாகத் தரிந்தொழுகுவள்.  அதுபோலச் சிவபெருமானையே பரமபதி யெனக்கொண்டு வழிபடும் ஒவ்வொருவருக்குந் தத்தம் அன்பினிலைக்கு அடையாளமாகத் தரிக்கத் தக்கன சிவசின்னங்களாகிய விபூதி உருத்திராக்ஷம் என்னும் இரண்டுமேயாம்.  எவள் திருமங்கிலிய முதலிய அடையாளங்களைத் தரித்தற்குக் கூசுகின்றனளோ அவள் குலமகளெனப்படான்.  மற்றைய ஆபரணங்க ளெல்லாவற்றைபுந் துறந்திருந்தாலுந் திருமங்கிலியத்தைக் குலமகளிர் துறந்திருக்கார்.  அதுபோல எவ்வணிகளையுந் தரியாமலிருந்தாலுஞ் சிவசின்னங்களைச் சிவனடியவர் (சைவசமயிகள்) என்றுள்ளார் தரியாதிருத்தலாகாவாம்.  ஆதலால் சைவசமயிகட்கு விபூதி உருத்திராக்க தாரணம் இன்றியமையாததேயாம்.
விபூதிருத்திராக்கஞ் சிவவடிவமே
விபூதி உருத்திராக்கங்கள் சிவசின்ன மெனவும், திருவேடம் எனவும்படும்.
    "செம்மலர் நோன்றாள் சேர லொட்டா
        வம்மலங் கழீஇ யன்பரொடு மரீஇ
    மாலற நேய மலிந்தவர் வேடமு
        மாலயனுந் தானு மரனனெத் தொழுமே."
எனஞ் சிவஞானபோதஞ் செப்புதலால், அவை யிரண்டுஞ் சிவபெருமானென்றே கொள்ளற்குரியனவாம்.  காமக் கிழத்தியரது வடிவிலே காணப்படும் ஆடை, சாந்து, அணிகலன் முதலாயின காமுகரை வசீகரித்து இன்பஞ் செய்யுமாறு போல மெய்யுணர் வுறுவாரைக் காட்சிமாத்திரையானே வசீகரித்து இன்பஞ் செய்தல்பற்றிச் சிவபத்தி யுடையார்க்கு இவை திருவேடமாகக் கொள்ளப்பட்டனவாம்.
சேலுங்கயலுந்திளைக்குங் கண்ணாரிளங்கொங்கையிற் செங்குங்குமம்
போலும்பொடியணிமார்பிலங்குமென்றுபுண்ணியர்போற்றிசைப்ப.
                                           - திருப்பல்லாண்டு.
    அக்கினி சிவபெருமானது வடிவமாகும்.  சந்திரன் யாகவடிவாய் விளங்குவன்.  ஆதலால் அதனை அமிர்தமென்று கூறுவர் பெரியர்.  இவ்வுலகங்கள் யாவும் அக்கினியாற் சுடப்பாடு வெந்து சாம்பரானமையாற்றான் பரிசுத்தமடைந்தது.  அக்கினியினிடத்து அவிபெய்து உயர்வை யடைந்தவர்கள் விபூதி தரித்தலாகிய பாசுபத விரதத்தை யநுட்டித்தனர்.  இது பற்றியன்றோ தென்புலத்தாரும் அக்கினியை யுண்பார்கள்.  தேவர்கள் சந்திரகலையை அமிர்தமாகப் பானம்பண்ணி வருகின்றனர்.  ஆதலால் உலகம் அக்கினி சொரூபமே.  அவ்வக்கினி சிவபெருமானது திவ்வியவடிவேயாம்.  சந்திரன் சிவசத்தி வடிவாகும்.  இதனாற்றான் பரிசுத்தம் வாய்ந்த சிவாக்கினியினிடத்தினின்றுந் தோன்றிய விபூதியைச் சிவபெருமான் தமது திருமேனிக்கண் தரித்தனர்.  ஆதலின் அது பரிசுத்தமுள்ளதும், அதனைச் செய்வதும், அமிர்தம்போ லெவரானுங் கைக்கொள்ளப்படுவதும், புத்தி முத்திகளைக் கொடுப்பதுமாகும்.
ஆதலாலுலகமழலினல்வடிவேயவ்வழலெமதுருவாமாற்
நோதறுசேர்மன்றேவிநல்வடிவாங்கொழுஞ்சுடரழலிடைப்பட்ட
வேதமினீற்றையெமதுமெய்யணிவோ மெறிதிரைக்கருங்கடலுடுத்த
தீதிலாவுலகநீற்றினையணிந்தேதீர்த்திடுந்தீவினைச்சிமிழ்ப்பே.
                                            -இலிங்கப்புராணம்.
தேவாதியருஞ் சிவசின்ன தாரணர்
    விட்டுணு, பிரமன், இந்திரன், தேவர், முனிவர், கின்னரர், கிம்புருடர், கந்தருவர், வித்தியாதரர், நாகர், கருடர் முதலிய கணத்தவர்களும், மனிதருள் அநேகருமாகிய சிவனடியவர் யாவருஞ் சிவசின்னங்களைத் தரித்திருக்கின்றனர் என்பது வேதாகம உபநிடத மிருதிபுராண இதிகாசாதி சாத்திரங்களால் அறியக் கிடக்கின்றது.
மாலயனிந் திரன்மற்றை யமரர்மலர் மகளிர்சசி மற்றை வானக்
கோலமட வாரியக்கர் கந்தருவ ரரக்கர்குல வசுரர் வேதச்
சீலமுனி வரர்மற்றோ ரிவருளருந் தவமுடையீர் திருவெண்ணீறு
சாலவுமுத்தூளனமுப்புண்டரநாடொரும்போற்றித்தரியார்யாரே.
                                            -சூதசங்கிதை.
விஷ்ணுவும் விபூதிருத்திராக்க தாரணரே
    சிலர், ஆசாரியருட் சிறந்தவராய், சிவசத்திகளுளொருவராய், சிவபத்தருட் சிறந்தவராய், கர்த்தற் கடவுளராய் விளங்கும் எம்பெருமாளுக்கும் அவனை வழிபடுவார்க்கும் விபூதி ருத்திராக்கதாரணம் தக்கதன்று என்கின்றனர்.  "பஸ்மதிக் தாங்கா ருத்திராக்ஷ¡ பரணா: - தக்ஷ¢ணாயாந் திகி விஷ்ணு" எனவரும் (அதர்வணவேதம்) பஸ்மஜாபால உபநிடத சுலோகத்தானே திருமால் ஸ்ரீகாசி §க்ஷத்திரத்திலே தென்றிசைக்கணிருந்து விபூதிருத்திராக்க தாரணமுடையராய் உபாசிக்கின்றனர் என்பது பெறப்படலானும், "சிவேநவிஷ்ணு நாசைவ" எனவரும் சூதசங்கிதைச் சுலோகத்தானே திருமாலுக்கும் அவரது தேவியார்க்குஞ் சைவ தருமமும், விபூதி தாரணமுங் கூறப்பட்டமையானும், இன்னும் இராமாவாதார மெடுத்த காலத்து "த்யாத்வா ரகுபதிம் க்ருத்தம் காலாநல மிவாபரம் - பீத க்ருஷ்ணாஜிநதரம் பஸ்மோத்துளன விக்ரஹம்" என்னும் இராமாயண சுலோகத்தானும், "ஸ்வர்ண வர்ண ஜடாபாரம் ஸாக்ஷ¡த் ருத்ர மிவாபரணம் - பஸ்மோத் தூளித ஸர்வாங்கம் த்ருஷ்டுவா காம வசங்கதா" என்னும் அத்தியாத்மராமாயண சுலோகத்தானும், விபூதி தரித்திருந்தனரென்பது வெளியாகலானும், "கண்ணன்வென்பூதி பூசிக் கண்டிகை மாலை சாத்திப் - புண்ணியத் திங்கள்வேணி யானிரு பாதம் போற்றி" எனக் கண்ண அவதாரத்திலுங் கண்டிகையு நீறுமணிந்தனர் என்று கூர்மபுராணங் கூறுவதனானும், "சிவஸ்ய விஷ்ணோர் தேவாநாம்" எனவரும் பராசரஸ்மிருதி சுலோகத்தானே விபூதியைத் திரிபுண்டாமாகத் தரிப்பின்கேசவமூர்த்திக்கும் இலக்குமிதேவியார்க்குந் திருப்தியுண்டாகிறது எனத் தெரிதலானும், ஏனைய பிரமாண நியாயங்களானும் விஷ்ணுவுஞ் சிவசின்ன தாரணரும், சிவசின்ன தாரணப் பிரியருமாகலின், அவற்கும் அவனை வழிபடுமடியார்க்குஞ் சிவசின்னங்கள் உரியனவாமென்று தெளியப்பட்டது.
விபூதி வரலாறு
    திருவருளுருவாகிய உமாதேவியார் தமக்குப் பத்தினியாகத் தோன்ற, ஆணவமலத்தை நீக்கியருளும் வேதியராகிய சிவபெருமான் பிரளய வெள்ளமே நீராகவும், அளவில்லாத அண்டங்களே மண்டபங்களாகவும், சமுத்திரத்தாற் சூழப்பட்ட பூவுலகமே வேதிகையாகவும், விஷ்ணு, பிரமன், அரி முதலிய தேவர்கள் யாவரும் அவிப்பாகமாகவும், உயிர்களே பசுக்களாகவுங் கொண்டருளித் தமது நெற்றியாகிய குண்டக்கணுள்ள அக்கினிக் கண்ணினின்றும் அக்கினியை மூட்டி யாகஞ் செய்தனர். அந்த யாகத்தினின்றுந் தோன்றிய வெண்திருநீற்றை அகங்கார மமகாரமாகிய அகப்புறப் பற்றுக்களழியுமாறு விஞ்ஞானகலர், பிரளயாகலர், சகலர் என்னும் மூவகை ஆன்மாக்களுஞ் சரீரத்தில் தரிக்குமாறு அமைத்தனர் என நூல்கள் கூறாநிற்கும்.
    பூதியா முறைமையும் புகலக் கேட்டியாற்
    கோதிலா மனுமுறைக் கொற்ற வேந்தனே
    பாதியாள் சத்திபத் தினியின் வைகுற
    வேதிலா ணவந்தபு மிணையில் வேதியன்.
    ஊழியே பாணிக ளுலப்பி லண்டமே
    கேழிலா மண்டபங் கேழ்த்த வேதிகை
    யாழிசூழ் புலியலி யரிமெய் யாதியா
    வாழிமா மெய்மைவண் பசுக்க ளாலியா.
    நெற்றியங் குண்டத்து நெடித டங்கிய
    பொற்றநீள் விழியெரி புணர்த்து வேள்விசெய்
    தற்றமில் வேள்வியி லவிர்வெண் பூதியைப்
    பற்றற வுயிர்க்கெலாம் படிவத் தாக்கினான்.
                                -தணிகைப் புராணம்
விபூதி தாரண பலம்
    விபூதியை யணிந்தவர் எவ்விடத்திற் போசனஞ் செய்கின்றாரோ அவ்விடத்திற் பார்வதி சமேதராகிய பரமசிவனும் உண்கின்றனர்.  உடம்பு முழுதுந் திருநீற்றை யணிந்தவரை எவர் பின்செல்கின்றனரோ அவர்கள் மகாபாதகராயினும் பரிசுத்தராகின்றனர் எனச் சூரசங்கிதை கூறுகின்றது.  காலை, உச்சி, மாலையென்னு முக்காலங்களினுந் தரிக்கின்ற மெய்யன்பர் எக்குலத்தவராயினும் அவரைச் சிவபெருமான் என்றே பாவிக்கக்கடவர் என மானவ சங்கிதையிற் சொல்லப்பட்டிருக்கின்றது. மெய்யன்புடன் விபூதிதரிப்பவரைச் சிவபெருமான் நீங்காது நிற்பர்.  அதனால் சர்ப்பம், சூரியன் முதலிய கிரகங்கள், நட்சத்திரங்கள், திசைத் தெய்வம், யமன், காலன், யமதூதர், அக்கினி, கொடுநோய்கள், அவுணர், இடி, பூதங்கள், சிங்கம், புலி, கரடி முதலிய கொடியனவற்றால் வருந் துன்பங்கள் அவரை யணுக மாட்டா வாம்.  அவர் இருவினைகளையும் வென்று சிவஞானம் பெற்று முத்தியடைவார் என்பது சத்தியம், முக்காலுஞ் சத்தியமே யாம்.
    பகைபிணி மண்ணைபன் மந்தி ரத்தினா
    மிகையறன் கடையுள வெருட்சி பித்திடர்
    வகையெனைத் தையுமற மாற்றி யாவர்க்குந்
    தகைநல மளிப்பது தவள நீறரோ.
                           - தணிகைப் புராணம்
    விபூதி தரிக்குங் காலங்களில் ஓதவேண்டிய திருநீற்றுப் பதிகத்தைக் காட்டுவாம்.  அ·து திருவருண்ஞானச் செல்வராய திருஞான சம்பந்தமூர்த்தி நாயனாராற் கூன்பாண்டியனுடைய வெப்புநோயைத் தீர்த்தற்காகவும், எம்மனோரது பிறவித் துன்பங்களை வேரறக் களைதற்காகவும் ஓதியருளப்பட்டது.  ஆதலால் தரிக்குங் காலத்து ஒவ்வொருவரும் அதனை மெய்யன்புடன் ஓதக்கடவர்.
திருநீற்றுப் பதிகம்
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்.
மந்திரமாவதுநீறு வான்வர்மேலதுநீறு
சுந்தரமாவதுநீறு துதிக்கப்படுவதுநீறு
தந்திரமாவதுநீறு சமயத்திலுள்ளதுநீறு
செந்துவர்வாயுமைபங்கன் றிருவாலவாயான்றிருநீறே.        (1)
வேதத்திலுள்ளதுநீறு வெந்துயர்தீர்ப்பதுநீறு
போதந்தருவதுநீறு புன்மைதவிர்ப்பதுநீறு
வோதத்தகுவதுநீறு வுண்மையிலுள்ளதுநீறு
சீதப்புனல்வயல்சூழ்ந்த திருவாலவாயான்றிருநீறே           (2)
முத்திதருவதுநீறு முனிவரணிவதுநீறு
சத்தியமாவதுநீறு தக்கோர்புகழ்வதுநீறு
பத்திதருவதுநீறு பாவலினியதுநீறு
சித்திதருவதுநீறு திருவாலவாயான்றிருநீறே`               (3)
காணவினியதுநீறு கவினைத்தருவதுநீறு
பேணியணிபவர்க்கெல்லாம் பெருமைகொடுப்பதுநீறு
மாணந்தகைவதுநீறு மதியைத்தருவதுநீறு
சேணந்தருவதுநீறுதிரு வாலவாயான்றிருநீறே              (4)
பூசவினியதுநீறு புண்ணியமாவதுநீறு
பேசவினியதுநீறு பெருந்தவத்தோர்களுக்கெல்லா
மாசைகொடுப்பதுநீறு வந்தமதாவதுநீறு
தேசம்புகழ்வதுநீறு திருவாலவாயான்றிருநீறே.             (5)
அருத்தமதாவதுநீறு வவலமறுப்பதுநீறு
வருத்தந்தணிப்பதுநீறு வானமளிப்பதுநீறு
பொருத்தமாவதுநீறு புண்ணியர்பூசும்வெண்ணீறு
திருத்தகுமாளிகைசூழ்ந்த திருவாலவாயான்றிருநீறே        (6)
எயிலதுவட்டதுநீறு லிருமைக்குமுள்ளதுநீறு
பயிலப்படுவதுநீறு பாக்கியமாவதுநீறு
துயிலைத்தடுப்பதுநீறு சுத்தமதாவதுநீறு
வயிலைப்பொலிதருசூலத் தாலவாயான்றிருநீறே.           (7)
இராவணன்மேலதுநீறு வெண்ணத்தகுவதுநீறு
பராவணமாவதுநீறு பாவமறுப்பதுநீறு
தராவணமாவதுநீறு தத்துவமாவதுநீறு
வராவணங்குந்திருமேனி யாலவாயான்றிருநீறே             (8)
மாலொடயனறியாத வண்ணமுமுள்ளதுநீறு
மேலுறைதேவர்கடங்கண் மெய்யதுவெண்பொடிநீறு
வேலவுடம்பிடர்தீர்க்கு மின்பந்தருவதுநீறு
வாலமதுண்டமிடற்றெம் மாலவாயான்றிருநீறே              (9)
குண்டிகைக்கையர்களோடு சாக்கியர்கூட்டமுங்கூடக்
கண்டிகைப்பிப்பதுநீறு கருதவினியதுநீறு
வெண்டிசைப்பட்டபொருளா ரேத்துந்தகையதுநீறு
வண்டத்தவர்பணிந்தேத்து மாலவாயான்றிருநீறே.            (10)
ஆற்றலடல்விடையேறு மாலவாயான்றிருநீற்றைப்
போற்றிப்புகலிநிலாவும் பூசுரன்ஞானசம்பந்தன்
தேற்றித்தென்னனுடலுற்ற தீப்பிணியாயினதீரச்
சாற்றியபாடல்கள்பத்தும் வல்லவர்நல்லவர்தாமே.            (11)
திருச்சிற்றம்பலம்

--------------------------------------------------------------------------------
(1) மந்திரம் - மந் - நினைப்பவனை, திர - காப்பது, நீறு - பாவங்களையெல்லாம் நீறாக்குவது.  தந்திரம் - சிவாகமம். செந்துவர் - செந்நிறமுடைய பலளம்.
(2) போதம் - ஞானத்தெளிவு
(3) சித்தி - அணிமா முதலிய அட்டமாசித்திகள்.
(6) அருத்தம் - மெய்ப்பொருள்.
(7) எயிலது - எயில் - மும்மதில். அது - பகுதிப்பொருள் விகுதி. அட்டது - அழித்தது. அயில் - கூர்மை
(8) இராவணன் - அழுதலைச் செய்தவன், இலங்கையரசன்.  பரா - பரையின், வணம் - வடிவம்.
(10) குண்டிகைக்கையர் - சமணர், சாக்கியர் - புத்தர், கண்திகைப்பிப்பது என்க.
(11) அடல் - வெற்றி. புகலி - சீகாழி. தென்னன் - கூன்பாண்டியன்.

--------------------------------------------------------------------------------
to be continued
for more details
www.geocities.com/kathirvelpillai

<pasupathi.k.pillai...com> wrote:
 
----- Original Message -----
From: sivakalainataraja
To: saivaneri.yahoogroups.com
Sent: Tuesday, February 14, 2006 1:21 PM
Subject: [saivaneri] any separate rules for women applaying viputhi(thirunir)

 
namashivaya.iam  saivite, i like to know any special or individual
method of apply viputhi for  women? now iam  applaying viputhi(mixed
with some water) on my fore head , neck, and three parts of my
hands.. some of them says women can't wear viputhi mixed with water??
is it correct?  if any body knows the rules of applay viputhi please
reply to me. i am  also want to know how many places(on body) can
women took viputhi. if there was any book recarding this, please sent
the name and publisher. sivakalai

 

horizontal rule