Home            On DK Movement, Atheism        Meaning of Viboothi or Thiruneeru


The Certainness of the Only God Shiva

திருச்சிற்றம்பலம்
ஸ்ரீ மெய்கண்ட தேசிகன் திருவடி வாழ்க
சிவபரத்துவ நிச்சயம்
சித்தாந்த பண்டித பூஷணம் ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை
திருநெல்வேலி பேட்டை
 
ESWARAMOORTHY PILLAI
Quick Navigation to more Saivism Links :
--------------------------------------------------------------------------------
முன்னுரை
 

    சகல சமயாதீத சைவ சமயத் தெய்வமாகிய சிவபிரானே சகல தேவாதி தேவனென்று நிர்ணயிக்கும் நூல்கள் தமிழிலும் வடமொழியிலும் பலவுள.  அவற்றுட் 'சுலோக பஞ்சகம்' என்பது ஒன்று.  நான் அதற்கு வியாக்கியான மொன்றியற்றி அதனைச் 'சுலோகபஞ்சகவிஷயம்' எனப் பெயரிட்டுச் 'சிவநேசன்' அதிபரவர்கள் சகாயத்தாற் புத்தக ரூபமாக அச்சிட்டு வெளிப்படுத்தினேன்.  சிவபரத்துவ சம்பந்தமாக அந்நூலில் வெளியாயின போக இன்னுஞ் சில வுண்மைகள் என்னுள்ளத்தி லிருந்தன.  அவற்றையும் ஒரு நூலியற்றி வெளியிட வேண்டுமென்ற ஆசை எனக்குண்டாயிற்று.  அவ்வாசையாற் றோன்றியதே 'சிவபரத்துவ நிச்சயம்' என்னும் இந்நூல்.  கூடியவரை இதொரு முழுநூலாயிருக்க வேண்டுமென்று நான் எண்ணியதால் என் 'விஷயம்' முதலியவற்றில் வெளியான கருத்துக்களும் இதில் வந்திருக்கும்.
    முதன் முதலில் நானியற்றிய செய்யுள்நூல் இதுவே.  சிவபரத்துவ வுண்மைகள் சைவமக்கட்கு மனப்பாடமாக வேண்டுமென்ற எண்ணமே நான் இச் 'நிச்சய'த்தைச் செய்யுள்நூலாக இயற்றக் காரணமாயிற்று.  வைதிக சைவோத்தமர்கள் இந்நூலிற் காணப்படுஞ்சொற்குற்றம் பொருட்குற்றங்களை க்ஷமித்து என்னை ஆதரிக்கும்படி நான் அவர்களைப் பிரார்த்திக்கிறேன்.  விநாயக வணக்கம் ஆசிரிய வணக்கம் உள்பட இந்நூற் செய்யுட்கள் இருநூற்றுப் பதினைந்து.
    நான் ஒரு தடவை மதுரைக்குப் போயிருந்த காலத்தில் எனக்குப் பாட்டனார் முறையிலுள்ள ஸ்ரீ மாந் மு.ரா. அருணாசலக் கவிராயரவர்களிடம் இந்நூலைச் சுமார் ஒருமாதகாலம் வாசித்துக்காட்டினேன்.  அப்போது அவர்கள் மிக விருத்தாப்பியரா யிருந்தார்கள்.  ஆயினும் அவர்கள் இதனைப் பொறுமையோடும் ஆசையோடும் செவிமடுத்துப் பரம சந்தோஷமடைந்து என்னைப் பார்த்துப், 'பேரப் பிள்ளை! உம்முடைய இந்நூலிலுள்ள செய்யுட்கள் மிகவும் நயமுடையனவா யிருக்கின்றன.  கருத்துக்களும் உயரியனவே.  ஆனால் இந்நூல் தழுவிச்செல்லும் பிரமாணங்களிற் பல வடமொழி வேதாதிகளிலுள்ளன வாகலின் அவை சம்பந்தமாக இதனை நான் மாத்திரம் ஆராய்ந்து அபிப்பிராயஞ் சொல்லுதல் போதாது.  இவ்வூரிலுள்ள சிவஸ்ரீ கலியாண சுந்தர பட்டரவர்களை நான் உமக்கு அறிமுகப்படுத்திவைப்பேன்.  அவர்களிடமும் நீர் இந்நூலை வாசித்துக்காட்டி அபிப்பிராயங்கேளும்' என்று கூறி எனக்கு அப்பட்டரவர்களை அறிமுகப்படுத்தி வைத்தார்கள்.  சுமார் பதினைந்து நாட்கள் நான் அவர்கள் வீட்டுக்குப்போய் இந்நூல் முழுவதையும் ஒவ்வொரு நாளும் பிற்பகலில் சுமார் இரண்டுமணி நேரம்வரை சிலசில செய்யுட்கள் வீதம் வாசித்துக்காட்டி முடித்தேன்.  இந்த நூலில் அந்தப்பிரமாண வாக்கியங்களுக்கெல்லாம் செவ்வையாகப் பொருள் கொள்ளப்பட்டிருக்கிறதென்று அவர்களுஞ் சம்மதித்தார்கள்.  அப்பால் அவ்விரு பெரியார்களிடத்திலும் அபிப்பிராயங்களை எழுத்துமூலம் தரும்படி நான் வேண்டினேன், அவர்களுந் தந்தார்கள்.  அவை இதிற் சேர்க்கப்பட்டுள்ளன.
    அப்பால் என் வீட்டிற்கு அவ்வப்போது வந்த சைவ சித்தாந்த அறிஞர் சிலரிடம் பொழுது போக்காக நான் இந்நூலைக் காட்டினேன்.  அவர்கள் நூல் முழுவதையும் படித்துப் பார்க்க அவகாசமில்லாதவராய்ப் பார்த்தவரையும் மெச்சி இதனைச் சீக்கிரம் அச்சிடும்படி என்னைத் தூண்டிச் சென்றார்கள்.  அப்பெரியார்களுள் ஒருவரும் சைவசமயத்தில் ஆர்வமிக்கவரும் காழிக்கல்விக் கழகத்து உறுப்பினரும், காழி வித்வான் சைவத்திருவாளர் ப.அ.முத்துத்தாண்டவராய பிள்ளை அவர்களின் மாணவரும், எனக்கு வெகுபிரியரும் ஆகிய ஸ்ரீமாந்-காழி.பி.அகோரம் பிள்ளையவர்கள் இந்நூலை முழுவதும் படித்து உத்ஸாக மேலிட்டவராய்த் தாமே அரும்பதவுரை யெழுதிப் பிரமாணங்களையுஞ் சேர்த்துச் சிவகிருபையால் அச்சிட்டுப் பூர்த்தி செய்தார்கள்.  இப்பெரிய சிவபணியைச் செய்த அவர்களுக்கு என் வந்தனம் உரியதாவதுடன், அவர்களுக்குச் சகலவித நன்மைகளையுந் தந்து இத்தகைய சிவபணிகளில் அவர்களுடைய மனம் இடையீடின்றிச் செல்லத் திருவருள் சுரக்குமாறு ஸ்ரீ பார்வதி பதியாகிய ஸ்ரீ பரமசிவனாரின் உபய சரணாரவிந்தங்களையும் நான் பணிகிறேன்.
    செங்கற்பட்டு ஸெயிண்ட் கொலம்பா உயர்தர பாடசாலைத் தமிழாசிரியர் வித்வான் பிரம்மஸ்ரீ K.M.வேங்கடராமையா அவர்கள் B.A.,B.O.L., இந்நூலை வெளியிடுதற்கண் பெருமுயற்சி யெடுத்துக் கொண்டார்கள்.  இவ்வேலையைத் தம் சொந்த வேலைகளில் ஒன்றாகக்கொண்டு அச்சுப்பிழை சரிபார்த்தல் முதலியவற்றையெல்லாம் அவர்களே செய்து உபகரித்தார்கள்.  அவர்களுக்கு என் வந்தனம் உரியது.
1-12-1939                     ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை
                                நூலாசிரியன்

--------------------------------------------------------------------------------
பதிப்புரை
    சைவ சமயத்தில் முழுமுதற் கடவுளுக்குச் சிவன் சங்கரன் சம்பு ஈசுரன் உருத்திரன் ஈசன் அரன் முதலியனவே சிறந்த பெயர்கள்; உமாசகாயம் நீலகண்டம் சந்திரசேகரம் முதலியனவே சிறந்த அடையாளங்கள்; சர்வஞ்ஞ்தை திருப்தி அநாதிபோதம் முதலியனவே சிறந்த குணங்கள்.  அந்நாமங்களிலும் அவ்வடையாளங்களிலும் அக்குணங்களிலும் அசூயை கொள்பவன் வைதிக சைவ சமயத்தவனாக மாட்டான்.  ஒருசைவனும் வைஷ்ணவ கிறிஸ்தவ இசுலாமிய மாதியவற்றுள் ஏதாவதொரு சமயத்தைச் சேர்ந்தவனும் கலந்து சம்பாஷிக்கத் தொடங்குங்கால் கடவுளைப்பற்றிய பிரஸ்தாபங்கள் வருமேல் அவ்விருவரும் தத்தம் மதங்களிற் கடவுளுக்கு வழங்கப்படுஞ் சிறப்புப் பெயரை வழங்காமல் கடவுள் ஆண்டவன் கருத்தன் முதலிய பொதுப்பெயர்களை வழங்கலாம்.  ஆனால் இரண்டு சைவர் தம்முட் கலந்து பேசுங்கால் தெய்வப் பிரஸ்தாபம் வருமிடங்களிலெல்லாம் தம் சமயத்திற் கடவுளுக்குச் சிறப்பாக வழங்கப்படுஞ் சிவாதி நாமங்களையே வழங்கவேண்டும்.  ஈசுர நாமங் கொண்டே முன்னுள்ள நாத்திகரும் இந்நாட்டில் விவகரித்து வந்துளார்.  இப்போதும் அந்நாமப் பிரஸ்தாபம் எங்குமுண்டு.  சைவம் அப்போது எவ்வளவு வியாபகமுடையதாயிருந்தது, இப்போதும் எவ்வளவு வியாபகமுடையதாயிருக்கிறது என்பதை அவ்வீசுரநாம வியாபகமொன்றாலேயே யறியலாம்.
    'சிவபரத்துவ நிச்சயம்' என்னும் இந்நூல் அத்தகைய சிவபரம்பொருளின் பிரபாவங்களைச் சவிஸ்தாரமாய் எடுத்துவிளக்குவது.  எனக்குச் சிறந்த நேசராகிய திருநெல்வேலிப்பேட்டை ஸ்ரீமாந். ஆ.ஈசுரமூர்த்திப்பிள்ளையவர்கள் இந்நூலையாக்கிப் பலரிடமுங்காட்டியது போல் என்னிடமுங் காட்டினார்கள்.  நான் இதனைப் படித்தறிந்ததும் அவர்களுக்குள்ள சைவசாத்திர ஆராய்ச்சியையும் சைவசமயப்பற்றையும் என்னால் அளவிட முடியவில்லை.  இதையச்சிட்டுக் கொடுக்க யாரையாவது தேடியதுண்டாவென்று நான் அவர்களைக் கேட்டேன்.  சைவாபிமானமுள்ள தனவந்தர் யாரையுந் தமக்குத் தெரியாதென்று அவர்கள் சொன்னார்கள்.  நானே உரையெழுதிப் பிரமாணங்களையுந் திரட்டிச் சேர்த்து இதனை அச்சிடுகிறேன்.  என்னிடங் கொடுங்கள் என்றேன் நான்.  அவர்களும் கொடுத்து விட்டார்கள்.  நான் அரும்பதவுரை யியற்றிப் பிரமாணங்களையுந் திரட்டிச் சேர்த்து இதனை அச்சிட்டுப் பூர்த்தி செய்தேன்.  இவ்வுரை முதலியவற்றுட் பிழைகளுளவேல் இந்நூலாசிரியரவர்களும் மற்றை அறிஞர்களும் பொறுத்தருள்க.
    ஒவ்வொரு செய்யுட்குங் கிடைத்த பிரமாணங்கள் அச்செய்யுளடியில் வருகின்றன.  அவை அச்செய்யுளிலுள்ள பல பகுதிகளுக்கும் பிரமாணங்களாக விருக்கும்.  ஒவ்வொரு பகுதிக்குமுரிய பிரமாணங்களை அவற்றிலிருந்து பிரித்தெடுத்துக்கொள்ளும்படி வாசகர்களை நான் வேண்டுகிறேன்.  பூர்வபட்சத்துக்குரிய பிரமாணங்களும் அங்குண்டு.  வேண்டாதனபோலிருக்கும் பிரமாணங்களை ஒதுக்கிவிடலாம்.
    இந்நூல் இவ்வழகான புத்தகவடிவில் மிகச்சுருங்கிய காலத்தில் அச்சாகிவருதற்குத் துணை புரிந்தவர்கள் என்னுடைய மாணாக்கரும் முன்னுரையிற் கண்டவருமாகிய பிரம்மஸ்ரீ K.M.வேங்கடராமய்யா அவர்கள் B.A.,B.O.L., ஆவார்கள்.  அவர்கள் செய்த அந்நன்றி மறக்கற்பாலதன்று.
6-1-1940                                        காழி.P.அகோரம் பிள்ளை
                                                பதிப்பாசிரியன்.

--------------------------------------------------------------------------------
அபிபிராயங்கள்
வேத சிவாகமாதி சகல சாஸ்திர பண்டிதோத்தமராகிய
மதுரை
சிவஸ்ரீ.ம.கல்யாணசுந்தர பட்டரவர்கள்
தந்தது
ஆசிரியப்பா
தென்றமிழ் நாடு செய்தவப் பயனென
வந்திடு நெல்லை வளம்பதிக் கணித்தாம்
பேட்டை யென்னும் பெருநக ரதனுள்
தாவில் பரம்பரைச் சைவ வேளாண்
மரபில் வந்தோன் மதிநலம் வாய்ந்தோன்
ஈசுர மூர்த்தி யெனும்பெய ருடையோன்
செய்சிவ பரத்துவ நிச்சயச் செழுநூல்
எவரும் பொருளை யெளிதிற் கண்டு
மகிழத் தக்க வகையில் விளங்கி
யருமறை யாகம புராண மாதி
சாத்திர மனைத்தொடுஞ் சமஞ்சஸ மாகி
வியனறி வுடையோர் வியக்க வுளதே.
13-6-1937

--------------------------------------------------------------------------------
திருக்குறள் தெளிபொருள் வசனம், பரங்கிரிப் பிரபந்தத்திரட்டு முதலிய பலநூல்களுகாசிரியரும் மதுரைத் தமிழ்ச் சங்க வித்துவானும்
ஆகிய
சைவத்திருவாளர்
மு.ரா.அருணாசலக் கவிராயரவர்கள்
தந்தது
    இந்நூலாசிரியர் தமிழ் வித்துவான் ஸ்ரீ த.ஆறுமுக நயினார் பிள்ளையவர்களுக்குச் சீமந்த புத்திரராய்ப் பிறந்து சிறுவயதிலே ஆங்கிலமுந் தமிழுங் கற்று......... உபாத்தியாயரா யிருக்கின்றனர்.   அப்படியிருக்கும்போது தமிழ்க் கல்வியை.........நிரம்பக் கற்கவேண்டுமென்று நினைத்துக் கலியுக வரதராகிய முருகக்கடவுள் திருவருளால் நூலாராய்ச்சி செய்தனர்.  (அதனால்) பரத்துவ நிச்சயம் பிறப்பிறப்பில்லாத பரம்பொருளாகிய சிவனொருவர்க்கே கூறவேண்டு மென்று தெரிந்தனர்........மேற்கூறிய உண்மையைத் தெளிந்து 'தாமின்புறுவ துலகின் புறக்கண்டு' என்னுஞ் சுருதிக் கிணங்க இலை மறை காய் போற் கிடந்த விஷயங்களை யெல்லாம் வெள்ளிடை மலைபோல் விளங்குமாறு தர்க்க சுத்தியாகச் 'சுருங்கச் சொல்லல் விளங்க வைத்தல்' என்ற அழகுடனே இருநூற்றுப்பதினைந்து செய்யுளால் ஒரு சிறு நூல் செய்து.....மதுரைக்கு வந்து என்னிடம் ஒவ்வொரு பாடலையும் நேரிலே வாசித்துக் காட்டினர்.  பாடல்களைக் கேட்குந்தோறும்.......அதி மாதுரியமாக இருந்ததைக் கண்டு மிகுதியுஞ் சந்தோஷமுற்றேன்.  பற்பல சமயத்தாரும் இதற்கொரு மறுப்பெழுத வேண்டுமென்று துணிந்தால் அவருக்கு வேதாகமங்களிற் பிரமாணங் கிடைக்கமாட்டாது.............ஆதலால் அவர் கருத்து நிரம்பாததாய் முடியும்.  தமிழ்ச் செய்யுளில் பரத்துவ நிச்சயங் கூறும் இந்த நூல் போல ஒரு நூல் இருக்கிறதாக நான் கேட்டதுமில்லை, கண்டதுமில்லை.  பரத்துவ நிச்சயந் தெரியப்புகுவார் அரிய பெரிய நூல்களைப் படித்துப் பெருங்காலம் போக்காமல் இந்த சிறு நூலை ஒரு முறை படித்தாலே ஐயமறத் தெளிவாய் விளங்கும்.  தமிழுலகத்திற்கு இவ்வுதவி புரிந்த நூலாசிரியருக்கு நாமெல்லாம் என்றும் நன்றியறிதல் பாராட்டுங் கடப்பாடுடையோம்.
16-6-1937

--------------------------------------------------------------------------------
செங்கற்பட்டு ஸெயிண்ட் கொலம்பா
உயர்தர பாடசாலைத் தமிழாசிரியர்
வித்வான்
பிரம்மஸ்ரீ. K.M.வேங்கட ராமையா, B.A.,B.O.L. அவர்கள்
தந்தது
'நெக்கு நெக்கு நினைபவர் நெஞ்சளே
புக்கு நிற்கும்பொன் னார்சடைப் புண்ணியன்' தான் தொழு மன்பர் கட் கெல்லாம் பெருவிருந்தளிக்கும் 'சிவபரத்துவ நிச்சயம்' என்னும் இந்நூல்.
    'வாழ்த்த வாயும்நினைக்கம டநெஞ்சுந்
    தாழ்த்தச் சென்னியும் தந்தத லைவனைச்
    சூழ்த்த மாமலர் தூவித்து தியாதே' யிருக்கும் நம்மவர்களுக்கு இத்தகைய நூலொன்று இன்றியமையாததே யன்றோ?
    'விச்சை யாவதும் வேட்கைமை யாவதும்
    நிச்சல் நீறணி வாரைநி னைப்பதே' யென்ற தேவாரத்தைக் கடைபிடித்தொழுகும் சைவ வள்ளலராகிய திருநெல்வேலிப்பேட்டை திருவாளர் ஆ.ஈசுரமூர்த்திப்பிள்ளையவர்கள் இந்நூலை யாத்து உலகுக்கு உதவியுள்ளார்கள்.  இந்நூலுக்கு அரும்பதவுரையும், பிரமாண முதலியனவும் எனது ஆசிரியர் சிவஸ்ரீ காழி பி.அகோரம்பிள்ளையவர்கள் எழுதிக் கோத்து உதவிய செயல் சாலச் சிறந்த தொன்று.  - - - இந்நூற் பாடல்கள் செவிக்கின்பந் தருமாறும், கற்றோரும் மற்றோரும் அறியுமாறும், எளிய நடையில் இருந்தபோதிலும், விஷயப் பெருமைக்கு ஏற்றவாறு ஆங்காங்குக் கடினமாக விருக்கும் சொற் றொடர்களுக்குத் தெளிபொருளெழுதி யுபகரித்தல் கற்றறிந்தோர்தம் கடனே.  அன்றியும், இந்நூற் பொருட்குக் கொடுத்துள்ள பிரமாணங்கள் கற்றறிந்தோர்க்கும் ஓர் விருந்தாகும்.
    இந்நூலாச்சுவாகன மேறுங்கால் எழுத்தெழுத்தாக இந்நூலை வாசிக்கும் பேற்றை நான் பெறலானேன்.  அப்பொழுது யான் படித்தவற்றுள் என்னைக் கவர்ந்த - - - விஷயங்களுட் சில ஈண்டுக் குறிப்பிடத்தக்கன.  அவை 25, 59, 60, 63, 92, 98, 108, 124, 151, 169,170 ஆஞ் செய்யுள் முதலியவற்றின் கருத்துக்களென்க.
இவை நிற்க,
    'நெஞ்சம் உமக்கே யிட மாகவைத்தேன்
        நினையா தொரு போதும் இருந்தறியேன்'
    'சலம்பூ வொடு தூபம் மறந்தறியேன்
        தமிழோ டிசை பாடல் மறந்தறியேன்
    நலந் தீங் கிலும்உன்னை மறந்தறியேன்
        உன்னாமம் என்னாவில் மறந்தறியேன்'  ஆகிய இவை சூலை நோய் தீரப்பாடிய திருநாவுக் கரையாது திருப்பதிகத்திற் காணப்படுகின்றன.  இவற்றின் பொருள் தெளிவாக விளங்குகின்றிலது.  அதற்குக் காரணம் இப்பதிகம் சமண் சமயத்தினின்று சைவசமயம் புகுவதற்குக் காரணமாய சூலை வேதனையைத் தீர்க்க வேண்டுமென்று பாடிய திருப்பதிகத்தில் அமைந்திருத்தலே யாகும்.  சமண் சமயத்திருந்தபொழுது அப்பமூர்த்திகள் சிவ பரம்பொருளை நினைக்கவே யில்லையென்பது.  'அறந்தெரியா ஊத்தைவாய் அறிவில் சிந்தை யாரம்பக் குண்டரோ டயர்ந்து நாளும், மறந்து மான் திருவடிகள் நினையமாட்டா மதியிலியேன்' என்ற வடிகளால் தெள்ளிதின் விளங்கும்.  அவ்வாறாயின், வாகீசப் பெருமான் மேற்கூறிய வாக்கியங்களில் குறித்த வழிபாடு எப்பொழுது செய்யப்பட்ட தெனின், பலர் பலவாறு கூறுப.  ஒரு சாரார் முன் ஜன்மத்துள் என்ப.  மற்றொரு சாரார் அச் சமண் சமயத்திருந்த பொழுது செய்த வழிபாட்டைக் குறிக்கும் என்றும், 'விரிவிலா அறிவினார்கள் வேறொரு சமயஞ் செய்தே, எரிவினாற் சொன்னா ரேனும் எம்பிராற் கேற்றதாகும்' 'யாதொரு தெய்வங் கொண்டீர் அத்தெய்வமாகி யாங்கே, மாதொரு பாக னார்தாம் வருவர்' என்ற இன்னோரன்ன பிரமாணங்களைக் காட்டி அவ்வழிபாடு முழுமுதல் தலைமையுடைய இறைவனையே சாருமென்றுங் கூறுவர்.  இதுவே எமக்கும் உடன்பாடு.  இந்நூல் 84 ஆவது செய்யுளைக் கண்டதும் யான் கொண்ட மகிழ்ச்சிக்கு அளவில்லை; அணுவளவிருந்த சந்தேகமும் நீங்கிற்று.  ஆனால் இச் செய்யுட் பிரமாணத்தில் கண்ட ஸ்மிருதிவாக்கிய பாடம் யான் உபதேசிக்கப்பட்ட வாக்கியத்தினும் சிறிது வேறாகும்.  'சங்கரம் ப்ரதிகச்சதி' என்பது இந்நூலிற் கண்டது; 'கேசவம் ப்ரதிகச்சதி' என்பது எனக்கு உபதேசம்.  ஆயினும், மற்றைய ஆதாரங்களை நோக்குழி 'ஈச்வரம் ப்ரதிகச்சதி' என்பதே பொருத்தமான பாடமாகும் என்று கொள்ளற் பாற்று. இது நிற்க.
    ஞானிக்கு எம்மதமும் சம்மதமென்றல் சைவசமயக் கொள்கை யாகாது என்பது இந்நூல் 179 ஆவது செய்யுட் கருத்தாயினும், எம்மதமும் சம்மதமெனும் இக்காலத்து 168ஆவது செய்யுட் கருத்துச் சிறிது பொருத்தம் இன்றாகும்.  உபநிடதகாலம் வேறு; இக்காலம் அத்தகையதொரு அபிப்பிராயத்துக்கு இடந் தராதன்றோ?............
    இக்காலத்தில் நந்தம் செந்தமிழ் நாட்டினருட் சிலர் வடமொழிப் பயிற்சியை முற்றும் வெறுக்கின்றார்கள்.----- இந்நூல் 201 முதல் 206 ஆவது செய்யுள்வரை 'சைவனாவான் வடமொழியும் கற்றலவசியம்' என்ற விஷயத்தைப்பற்றி விரிவுற எழுதியுள்ளமையையும், வாழ்த்துச் செய்யுளையும் கண்டதும் என்மனம் வரம்பிகந்த மகிழ்வெய்திற்று.  'வாழ்த்துவார் வாயினுள்ளா'ரும், 'சிந்திப்பார் சிந்தையுள்ளாரு' மாகிய 'நீதியாற் றொழுவார்கள் தலைவனாம்', 'தாயினும் நல்ல சங்கரன்', 'ஆரியமும் தமிழும் ஆவர்' என்பது தேவராதிகளைப் படித்தவர் நன்கறிகுவர்.  'ஆரியன் கண்டாய், தமிழன் கண்டாய், அண்ணாமலையுறை யெம் அண்ணல் கண்டாய்' என்றது காண்க.  'வடமொழியும் தென்றமிழும் மறைகள் நான்கும் ஆனவன்' பெருமை யறிய இருமொழியும் அறிவது இன்றியமையாததென்று குறித்தமை இந்நூலாசிரியருடைய மனவிரிலின் தன்மையைத் தெற்றென விளக்குகின்றது.
    நாத்திகர்தாம் மிகுந்திடுமிக் கலிகாலத்தில், பணமே பத்துஞ் செய்யும் என்னும் இப்பாழ்காலத்தில், நாட்டை யாமே ஆளல் வேண்டும், யாமே ஆளல் வேண்டும், நாடுகள் யாவும் கொள்ளல் வேண்டும் என்ற அவாமிக்கு இரத்தம் சிந்தும் இக்காலத்தில் இத்தகைய நூலுக்கும் இடன் உண்டுகொல்?
ஆயினும், இந்நூல்
    'செத்துச் செத்துப் பிறப்பதே தேவென்று
    பத்திசெய் மனப் பாறைகட் கேறுமோ?'
    எனில் ஏறாது தான்.  ஆயினும் புறச்சமய நெறிநின்று அகச்சமயம் புக்கும் அம்முறையே மேற் சென்று சென்று சைவத் திறத்தடைந்து சிவனடிசோவல்ல நற்றவமுடையார் இதனைப் பெரிதும் போற்றவே செய்வரென்க.
1-1-1940

--------------------------------------------------------------------------------
 
 
--------------------------------------------------------------------------------

திருச்சிற்றம்பலம்
ஸ்ரீ மெய்கண்ட தேசிகன் திருவடி வாழ்க
சிவபரத்துவ நிச்சயம்
நூல்
    இந்நூல் இனிது முடிதற் பொருட்டுச் செய்யப்படும் விநாயக வணக்கம்.
    மன்னுசிவன் மெய்ப்புகழை வந்தமட்டில் யான்பாடற்
    கென்னுடைய பேராசை யீர்த்ததெனை - யன்னதனா
    லத்திமுக வுன்பதநா னஞ்சலித்துச் சில்பாடற்
    கொத்துதுரைப்பே னெற்கருணீ கூட்டு.
    (அரும் பதவுரை) மன்னு - நிலைபெற்ற; மெய்ப்புகழை - பொருள் நிறைந்த கீர்த்தியை; வந்தமட்டில் - பாடத்தெரிந்த வரையில்; ஈர்த்தது - இழுத்தது; அன்னதானால் - அதனால்; அத்திமுக - விநாயகரே! பதம் - திருவடிகளை; அஞ்சலித்து - வணங்கி; சில - சில; கொத்து - திரட்டு; உரைப்பேன்ன் - இயற்றுவேன்; எற்கு - எனக்கு; நீ எற்கு அருள் கூட்டு என்க.
******
    இந்நூலை யாக்கியோர் தமக்குச் சைவசித்தாந்தங் கற்பித்த ஆசிரியரை வணங்குதல்.
 விளங்கொளி வெள்ளி மலைமிசை யுமைதன்
        னிடமுற வீற்றிருந் துயிர்க்குக்
   களங்கம தொழித்துப் பரகதி யருளுங்
        கண்ணுதற் பரமனே பரமென்
   றுளங்கொள நாயேற் கொளிருநான் மறையி
        னுறுதியை யுணர்த்தி வாழ்வளித்த
   வளங்கொழு நெல்லைச் சிதம்பர ராம
        லிங்கரின் மலரடி சரணே.
    (அ-ரை) வெள்ளி மலைமிசை - கயிலையில்; இடம் உற - இடப்பாகத்திற் பொருந்தும்படி; வீற்றிருந்து - மகிழ்ந்திருந்து; களங்கமது - பாசக்குற்றங்களை; பரகதி - மேலான முத்தியை; கண்ணுதற் பரமனே - சிவபிரானே; பரம் - முழு முதற் கடவுள்; உளம் கொள - மனதிற் பதியும்படி; ஒளிரும் - பிரகாசிக்கிற; நால் மறை - இருக்கு ஈசுர் சாமம் அதர்வணம்; உறுதியை - சத்தியார்த்தத்தை; கெழு - நிறைந்த; நெல்லை - திருநெல்வேலி; சிதம்பரராமலிங்கர் - அவ்வாசிரியரின் திருநாமம்; அச் சிதம்பர ராமலிங்க பிள்ளையவர்கள் திருநெல்வேலி ம-தி-தா-ஹிந்து கலாசாலையில் தமிழாசிரியராயிருந்து வருகிறார்கள்.
******
நூல்
   வியட்டியாகிய அகர உகர மகரம் முறையே பிரம விஷ்ணு ருத்திரர்க்கு இருப்பிடம்.  அம்மூன்றின் சமட்டியாகிய பிரணவம் சிவபிரானுக்கு இருப்பிடம்.
    இரணிய கருப்ப னவ்வி விலக்குமி கணவ னுவ்வி
    லுரமிகு சூல மேந்து முருத்திரன் மவ்வி லாவர்
    பரசிவ பிரான்சம் வர்த்த காக்கினி பயில்பே ராகப்
    பிரணவ சமட்டி யென்னும் பீடமீ திருப்ப னன்றே.
    (அ-ரை) இரணிய கருப்பன் - பிரமன்; இரணிய கருப்பனும் இலக்குமி கணவனும் உருத்திரனும் என உம்மை விரித்து ஆவரென்பதற்குப் பன்மை வினைமுதல் காண்க.  ஆவர் - இருப்பர்; தோன்றுவரெனினுமாம்.  பயில் பேர் ஆக - தனக்கு வழங்கப்படும் பெயராகக் கொண்டு; பிரணவ சமட்டி - சமஷ்டிப் பிரணவம்; பீடமீது - ஆசனத்தில்.
    'அகார: -- ப்ரஹ்மா --உகார: -- விஷ்ணு -- மகார: -- ருத்ரா -- ஓங்கார: -- ஸம்வர்தகோக்நி - -' என்ற அதர்வசிகோபநிஷத்தும், 'பூர்வா மாத்ரா - - ப்ரஹ்மா - - த்விதீயா - - விஷ்ணு: - - த்ருதீயா - - ருத்ரா - - சதுர்த்யா - -  ஸம்வர்தகோக்கி - -' என்ற நரஸிம்ஹ பூர்வதாபிநியுபநிஷத்தும், 'அகாரே ஸம்ஸ்திதோ ப்ரஹ்மா உகாரே விஷ்ணுராஸ்தித: மகாரே ஸம்ஸ்திதோ ருத்ராஸ் ததோஸ்யாந்த: பராத்பர:' என்ற பிரஹ்மவித்யோபநிஷத்தும், 'அகாரம் ப்ரஹ்மாணம் - - உகாரம் விஷ்ணும் - - மகாரம் ருத்ரம் - - ஓங்காரம் ஸர்வேச்வரம்' என்ற நாஸிம்ஹோத்தரதாபிநியுபநிஷத்தும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள்.  ஸம்வர்த்தகாக்கினி பதமும் ஸர்வேசுர பதமும் பரியாயங்களாய் வந்திருத்தல்காண்க.  அவ் வீசுரபதம் சிவபிரானுக்கே யுரியது.    (க)
******
    பிரணவத்தின் அர்த்த மாத்திரையிற் சிவலோக மிருக்குமென்பதால் அவ்வர்த்த மாத்ரா தெய்வம் சிவ பிரானே யென்பது.
    அவ்வதி லிருக்கும் பூமி யந்தர மிருக்கு முவ்வில்
    மவ்வதி லிருக்குஞ் சொர்க்கம் வாக்கொடு மனமுஞ் செல்லாத
    திவ்விய வுமைவாழ் பாகச் சிவபிரான் சோம லோக
    மெவ்வமி லருத்தந் தன்னி லிருக்குமென் றுரைக்கும் வேதம்.
    (அ-ரை) அந்தரம் - அந்தரிக்ஷம்; உமைவாழ்பா கச்சிவபிரான் என்றது சோமன் என்றதை விளக்கியபடி; சோமலோகம் - சிவலோகம்; எவ்வம் - கேடு; அருந்தந் தன்னில் - அருத்த மாத்திரையில்.
    'கேவலமகாரோகார மகாரார்த மாத்ரா ஸஹிதம் ப்ரணவமூஹ்ய' என்ற ராம ரஹஸ்யோபநிஷத்தும், 'அகாரோகார மகாரார்த மாத்ராத்மிகா' என்ற வராகோபநிஷத்தும், 'அர்த்தமாத்ரா ஸமாயுக்த: ப்ரணவோ மோக்ஷதாயக:', "ப்ருதிவி - - அகாரே - - அந்தரிக்ஷம் - - உகாரே - - த்யெள: - - மகாரே - - பஞ்ச தைவதம் ஓங்காரம் ' என்ற தியாநபிந்தூப நிஷத்தும், 'ப்ருதிவ்யகார: - - அந்த ரிக்ஷம் ஸ உகார: - - த்யெள: ஸ மகார: - - ஸோமலோக ஒங்கார:' என்ற நரஸிம்ஹ பூர்வ உத்தாதாபிநியுபநிஷத்துக்களும் அதர்வ சிகோபநிஷத்தும், 'அரைமாத்திரையி லடங்கும்மடி' என்ற தேவாரமும், 'மஹோசாநமவாங்மநஸகோசரம்' என்ற சரபோநிஷத்தும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள். (உ)
******
    மற்றத் தேவர்கள் வைத்துத் தியானிக்குந் தானங்களுக் கெல்லாம் உயர்ந்தது துவாதசாந்த ஸ்தானம்.  அங்குவைத்துத் தியானிக்கப் படுபவர் சிவபிரானென்பது.
    ஈரிரு முகவ னாபி யிடத்தரி யிதயந் தன்னி
    லோரிரு புருவ மையத் துருத்திரன் றுவாத சாந்தச்
    சீரிய தான மீது சிவபிரா னிவர்க டம்மை
    நேரிய யோகி யென்று நிறுத்துவன் றியானத் தாலே.
    (அ-ரை) ஈர் - இரு முகவன் - பிரமன்; நாபி - கொப்பூழ்; ஓர் - சிறந்த; மையத்து - நடுவில்; என்றும் - எப்போதும்; நிறுத்துவன் - வைத்து ஏத்துவான்.
    'த்வாத சாந்தபதம் ஸ்தாநமிதி' என்ற தக்ஷணாமூர்த்தி யுபநிஷத்தும், 'சீர்ஷோபரி த்வாதசாங்குல ஸ மீ க்ஷதுரம்ருதத்வம் பவதி' என்ற அத்வய தாரகோபநிஷத்தும், ' ப்ரஹ்மரந்த்ரே மஹாஸ்தாநே வர்ததே ஸததம் சிவா| சித்சக்தி:' என்ற யோகசிகோபநிஷத்தும், 'ப்ரஹ்மாணம் நாபெள - - விஷ்ணும் ஹ்ருதயே - - ருத்ரம் ப்ரூமத்யே - - சர்வேச்வரம் த்வாத சாந்தே' என்ற நரஸிம்ஹோத்தரதாபிநியுபநிஷத்தும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள்.
******
    இன்னொரு வகைத் தியான முறையில் உச்சஸ்தானமா யிருப்பது நெற்றி.  அதில் வைத்துத் தியானிக்கப் படுவருஞ் சிவபிரானென்பது.
    அயனெனு மவனை நெஞ்சி லரிதனைக் கண்டந் தன்னி
    லுயவினை யுயிர்கட் கோட்டு முருத்திர தேவை நாவிற்
    செயமெலா மன்பர்க் காக்குஞ் சிவபிரான் றன்னை நெற்றி
    நயமிகு மிடத்தி னாட்டி நாளுநற் றியானஞ் செய்யே.
    (அ-ரை) உயவினை - துன்பத்தை; நயம் - நன்மை; நாளும் - தினந்தோறும்.
    'ப்ரஹ்மணோ ஹ்ருதய ஸ்தாநம் கண்டே விஷ்ணு: ஸ மாச்ரித: தாலு மத்யே ஸ்திதோ ருத்ரோ லலாடஸ்தோ மஹேச்வர:' என்ற பிரமவித்யோப நிஷத்து இச்செய்யுட்குப் பிரமாணம்.    (ச)
******
    ஒவ்வொரு தேவரும் ஒவ்வொரு வண்ணராயிருக்கச் சிவபிரான் மாத்திரம் சர்வ வர்ணங்களையுந் தம்பாற் கொண்டவரென்பது.
    மஞ்சளி னிறவ னாகி மாமறைக் கிழவன்  வாழ்வா
    னஞ்சன வண்ண னாவா னரவமீ துறங்குந் தேவன்
    விஞ்சிய வெள்ளைத் தேவாய் விளங்குவ னரனால் வேதச்
    செஞ்சொலு முரையு மான சிவபிரான் சருவ மன்னன்.
    (அ-ரை) நிறவன் - நிறத்தையுடையவன்; மாமறைக்கிழவன் - பிரமன் அஞ்சனம் - மை; அரவமீது உறங்கும் தேவன் - விஷ்ணு; விஞ்சிய - மிகுந்த; அரன் - உருத்திரன்; உரை - பொருள்.
    'பீதா - - ப்ரஹ்மதைத்யா - - க்ருஷணா விஷ்ணு தைவத்யா - - சுக்க்லா ருத்ரா தைவத்யா - - ஸர்வ வர்ணா புருஷ தைவத்யா' என்ற அதர்வசிகோப நிஷத்தும், 'மற்றுமற்றும் பல்பல வண்ணத்தராய் ' என்ற தேவாரமும், 'ருத்ரோர்த்த அக்ஷர: ஸ உமா' என்ற ருத்ரஹ்ருதயோபநிஷத்தும், 'ஸர்வ நாதமய: சிவ: ' என்ற தோஜோ பிந்தூப நிஷத்தும், 'ஸர்வாக்ஷமய:' என்ற நாரதபரிவ் ராஜகோபநிஷத்தும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள். புருஷ பதம் சிவபிரானுக்கே யுரிய பெயர்.                    (ரு)
******
    தம்பாற் சர்வ வர்ணங்களையுங் கொண்டதுபோல் ஒருவர்ணத்தையுங் கொள்ளாமல் ஸபடிகம்போல விளங்குபவரும் சிவபிரானே யென்பது.
    மருமலி மலரோன் செய்யன் மங்குலி னிறவன் மாலோ
    னுருமலி கபில வண்ண முருத்திர மூர்த்திக் குண்டால்
    கருமலி யுயிர்கட் கெல்லாங் களைகணாய்த் தானோர் போதுஞ்
    செருமல முறாத செல்வச் சிவபிரான் படிக வண்ணன்.
    (அ-ரை) மருமலி மலரோன் - பிரமன்; மங்குல் - இருள்; உருமலி - அழகு நிறைந்த; கருமலி - கருப்பவாசங்களை அளவு கடந்து அடைகிற; களைகண் - ஆதரவு; செருமலம் - போர் செய்கிற மும்மலம்; படிகம் - பளிங்கு, இச் செய்யுளில் மற்றொரு வகை வர்ண வரிசை யுண்மை காண்க.
    'ப்ரஹ்ம தேவத்யா ரக்தா வர்ணோ - - விஷ்ணு தேவத்யா கிருஷ்ணா வர்ணோந - - ஈசாந தேவத்யா கபிலா வர்ணேந - - ஸர்வ தேவத்யாவ்யக்தி பூதா ஸ்வம்விசரதி சுத்தாஸ்படிக ஸந்நிபாவர்ணோந' என்ற அதர்வ சிரோபநிஷத்து இச்செய்யுட்குப் பிரமாணம்.    (சா)
******
    ஸர்வ லோகாதீதமாய்ப் பாழத்திஸ்தானமாய் விளங்குவது சிவலோக மென்பது.
    இந்திர னுலகின் மேலே யிருந்திடும் பிரம லோகஞ்
    செந்திரு கணவ னாடத் திசைமுக னுலகின் மேலா
    முந்தொளி யுலகஞ் சேரு முருத்திரற் கதன்மே லந்நாட்
    டந்தம தாகு முத்தி யருள்சிவ பிராற்கு நாடே.
    (அ-ரை) செந்திரு கணவன் - விஷ்ணு; உந்து ஒளி - வீசுகின்ற ஒளியையுடைய; அந்தமது - முடிவில்; ஆகும் - இருக்கும்; சிவபிராற்கு நாடு - சிவலோகம். முத்தி அருள் என்பது சிவபிரானுக்கு அடை.  முத்தியருள் சிவபிராற்கு நாடு அந்நாட் டந்தமது ஆகும் என்க.
    'ஷஷ்ட்யா மிந்த்ரஸ்ய ஸாயுஜ்யம் ஸப்தம் யாம் வைஷ்ணவம் பதம் அஷ்டம் யாம் வ்ரஜதே ருத்ரம் - - த்வாதச்யாம் ப்ரஹ்ம சாச்வதம் - - சிவம் - - ' என்ற நாதபிந்தூப நிஷத்து இச்செய்யுட்குகுப் பிரமாணம்.  பிரமனுலகம் ஏழி லடங்குவதையும் விஷ்ணு பதத்தின் கீழிருப்பதையும் யூகித்தறிக.  ஏனை யுலகங்களின் வரிசையையும் அவ் வுபநிஷத்திற் காணலாம்.                                    (எ)
******
    மற்ற மூன்றவத்தைகளுக்கு அதீதமாய துரியத்துக்குத் தெய்வம் சிவபிரானென்பது.
    மலரவ னனவில் வாழ்வன் மாலவன் கனவி லேய்வ
    னுலவறு சுழுத்தி சேர்வ னுருத்திர னெங்கு மென்றுந்
    திலமுறு நெய்போ னிற்குஞ் சிவபிரான் றுரியந் தன்னி
    னிலவுவ னிதனை வேத நெறியின ரறிவ ரன்றே.
    (அ-ரை) ஏய்வன் - பொருந்துவான்; உலவு அறு - கெடுத லற்ற; எங்கும் - சித்தசித்துப் பிரபஞ்ச முழுவதிலும்; என்றும் - எக்காலத்திலும்; திலம் -எள்; நிலவுவன் - விளங்குவான்.
    'ஜாகரிதே ப்ரஹ்மா ஸ்வப்ரே விஷ்ணு: ஸஷப்தெள ருத்ரஸ் துரீய மக்ஷரம்' என்ற பிரமோபநிஷத்தும் பரப்பிரமோபநிஷத்தும், அவஸ்தாத்ரிய தயாதீதம் துரீயம்--ஈசாநம்--' என்ற பஞ்சப்பிரமோபநிஷத்தும், 'திலேஷ தைலம்' என்ற சுவேதாசுவதரோபநிஷத்தும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள். அக்ஷர பதமும் ஈசாந பதமும் பரியாயங்கள்.        (அ)
******
    வேதம் நாலாவது வஸ்துவைச் சிவநாமத்தாலேயே பிரஸ்தாபிக்குமென்பது.
    நான்மறை சதுர்த்தந் தன்னை நலம்பெற வுரைக்கும் போது
    மான்மல ருறைவோ னாதி வானவர் பெயர்க ளன்றிப்
    பான்மதி மிலைச்சுஞ் சென்னிப் பரமனுக் குரிய நாமந்
    தான்மிக வழங்க லாலே தற்பர னவனே யன்றோ.
    (அ-ரை) சதுர்த்தந்தன்னை - திரி மூர்த்திகளுக்கும் மேலாகிய நாலாவது பொருளை; நலம் பெற - தெளிவு உண்டாகும்படி; மால் - விஷ்ணு; மலர் உறைவோன் - பிரமன்; பெயர்களன்றி - பெயர்களைப் பிரஸ்தாபியாமல்; பால்மதி மிலைச்சுஞ் சென்னிப் பரமனுக்கு உரிய - சிவபிரானுக்குச் சொந்தமான; நாமம் தான் ஏ - பெயர்களையே; வழங்கலால் - பிரஸ்தாபித்தலால்; தற்பான் - முழு முதற் கடவுள்.
    'சிவம்--சதுர்த்தம்' என்ற மாண்டூக்கியோப நிஷத்தும், நரஸிம்ஹ பூர்வ உத்தரதாபிநியுபநிஷத்துக்களும், நாரதபரிவ்ராஜகோபநிஷத்தும், ராமோத் தாதாபிநியுபநிஷத்தும், 'சதுர்த்தம் - - சிவம்' என்ற பஸ்மஜாபாலோப நிஷத்தும், 'சதுர்த்த - - சிவ' என்ற மாண்டூக்கியோபநிஷத்தும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள்.            (கூ)
******
    வணங்குகிறவர் திரிமூர்த்திகளும் வணங்கப் படுகிறவர் சிவபிரானுமாவாரென்பது.
    சேவிய னாவ னென்று முபாசியன் றியேய னென்றுந்
    தேவிக மறைக ளெல்லாஞ் சிவபிரான் றன்னைப் போற்றிச்
    சேவக ராவ ரென்று முபாசகர் தியாதா மாரிங்
    காவரே யென்றுங் கூறி யகற்றிடு மூவர் தம்மை.
    (அ-ரை) சேவியன் - சேவிக்கப்படுகிறவன்; உபாசியன் - உபாசிக்கப்படுகிறவன்; தியேயன் - தியானிக்கப்படுகிறவன்; தேவிக - தெய்வீக; சேவகர் - சேவிக்கிறவர்; உபாசகர் - உபாசிக்கிறவர்; தியாதாமார் - தியானிக்கிறவர்; அகற்றிடும் - ஒதுக்கும்; மூவர் தம்மை - பிரம விஷ்ணு ருத்ரரை.
    'ப்ரஹ்ம விஷ்ணவாதிபி: ஸேவ்யம் - - ஈசாநம்' என்ற பஞ்சப்ரஹ்மோப நிஷத்தும், 'சிவம் - ஸர்வேச்வரம் ஸர்வ தேவை ருபாஸ்யம்' என்ற மஹோபநிஷத்தும், 'ஸதாசிவம் ப்ரஹ்மாதி வந்திதம்' என்ற நரஸிம்ஹ பூர்வதாபி நியுபநிஷத்தும், 'ஸர்வ தேவைருபாஸ்யம்', 'ஸர்வஸ்ய சரணம்' என்ற சவேதா சுவதரோபநிஷத்தும், 'ப்ரஹ்ம விஷ்ணு புரந்தராத் யமாவா ஸேவிதம்', 'மாமே லோபா ஸிதவ்யம்', 'ஏகாமா சாஸ்யம் - - சிவம்' என்ற பஸ்ம ஜாபா லோபநிஷத்தும், 'சிவ ஏகோத்யேய:', 'த்யாயீதே சாநம்' என்ற அதர்வ சிகோப நிஷத்தும், 'ஏகோ ருத்ரோ த்யேய:', ' சிவ ஏவ ஸ்தாத்யேய:' என்ற சரபோபநிஷத்தும், 'நாராயண பரோத்யாதா' என்ற நாராயணோப நிஷத்தும், 'த்யாதா ருத்ர:' என்ற அதர்வ சிகோபநிஷத்தும், 'ராம ஏவ பரம் தப:' என்ற ராம ரஹஸ்யோபநிஷத்தும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள்.                    (க0)
******
    சைவசமயத்து முழுமுதற் கடவுள் நாலாவது வஸ்துவாகிய சிவபிரானே யென்பது.
    சுந்தர சதுர்த்த னென்றுந் துகளறு துரிய னென்றுஞ்
    சிந்தனை மறைக ணான்குஞ் செய்சிவ பிரானே மாயா
    மந்திர மாமிப் பாரில் வழங்கிடு மதங்கட் கெல்லா
    முந்திய சைவ மார்க்க முழுமுதற் கடவுள் தாணே.
    (அ-ரை) துகள்  அது - குற்றமற்ற; மறைகள் நான்குஞ் சிந்தனை செய் சிவபிரானே என்க.  செய் என்பதன் வினைமுதல் மறைகள் நான்கும் என்பது.  சிந்தனை செய் - சிந்திக்கிற; மாயா மந்திரம் ஆம் - மாயா காரிய வீடாகிய; இப்பாரில் - இவ்வுலகில்; வழங்கிடு - காணப்படுகிற.
    'மூவரு முப்பத்து மூவரு மற்றொழிந்த தேவருங் காணாச் சிவபெருமான்' என்ற திருவாசகம் இச்செய்யுட்குப் பிரமாணம்.
    இதுவரை வந்தது நாலு தெய்வப் பிரஸ்தாபம்.  இனி வருவது ஐந்து தெய்வப் பிரஸ்தாபம்.  சதுர்த்த தெய்வம் இவ்வரிசையிற் சேராது.                (கக)
******
    பிரமனாதி ஐந்து மூர்த்திகளுட் சதாசிவனே பஞ்சகிருத்தியங்களையுஞ் செய்வரென்பது.
    ஆக்குவ னயன்மா லாக்கி யளிப்பனா லாக்கிக் காத்துப்
    போக்குவ னரன்மா கேசப் புங்கவ னாக்கிக் காத்துப்
    போக்கியே மறைப்ப னெண்ணில் புகழ்ச்சதா சிவன்றான் செய்வ
    னாக்குத லளித்தல் போக்கல் மறைத்தனல் லருள்க ளம்மா.
    (அ-ரை) மாகேசப் புங்கவன் - மகேச்சுரன்; எண் இல் - அளவில்லாத.
    'பஞ்சக்ருத்ய நியந்தாரம்' என்ற பஞ்சப்ரஹ்மோபநிஷத்தும், 'ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹார திரோதா நுக்ரஹாதி ஸர்வசக்தி--' என்ற ஸதோப நிஷத்தும், 'பஞ்சக்ருத்ய ஸம்பந்ந: - - பசுபதி' என்ற ஜாபால்யுப நிஷத்தும், 'அயன் முதலிய மூவர்க்கும் முறையே படைப்பு முதலிய மூன்றனுள் ஒரோவொன்று சிறப்புத்தொழிலும், ஏனைய பொதுத்தொழிலுமா மெனவும்; மகேசன் சதாசிவன் இருவர்க்கும் முறையே மறைப்பும் அருளுஞ் சிறப்புத் தொழிலும் ஏனைய பொதுத்தொழிலுமாம்' என்ற சிவஞானமகாபாஷ்யமும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள்.    (கஉ)
******
    உடம்பிற் பிரதான உறுப்பாகிய சிரசிற்குரிய தெய்வம் சதாசிவனே யென்பது.
    அடிமுதல் முழங்கால் காறு மயனுள னதன்மேன் மாய
    னிடைவரை யுள்ளான் றானு விருதயம் வரையி லாவன்
    வடுவறு புருவத் தெல்லை மகேச்சுரன் வதிவான் மேலாந்
    தடமுடி தனினன் குற்றான் சதாசிவ பரமன் றானே.
    (அ-ரை) இடை- இடுப்பு; தாணு - உருத்திரன்; வடு அறு - குற்றமற்ற; வதிவான் - இருப்பான்; தடமுடிதனில் - விசாலமான சிரசில்.
    'பாதாதி ஜாநுர் பர்யந்தம் - - சதுர்புஜாகாரம் சதுர்வக்த்ரம் ஹிரண்மயம் - - ஆஜாநோ: பாயுபர்யந்தம் - - காராயணம் தேவம் - - ஆபாயோர் ஹ்ருதயாந்தம் - - ருத்ரம் - - ஆஹ்ருதயாத் ப்ருவோர் மத்யம் - - ஈச்வரம் - - ஆப்ரூமத்யாத்து மூர்த்தாந்தம் - - ஸதாசிவம்' என்ற யோகதத்வோபநிஷத்து இச்செய்யுட்குப் பிரமாணம்.                            (கங)
******
    மற்றப் பூதங்களை யெல்லாம் வியாபித்துள்ள ஆகாச தெய்வம் சதாசிவனே யென்பது.
    மண்ணதி லயன்மா னீரில் வன்னியி லரன்கா லீசன்
    றண்ணளி வடிவ மான சதாசிவன் விண்ணி லுள்ளா
    ரெண்ணிடு பூத மைந்து மேறலான் முறையா யாங்கே
    நண்ணிடு மதிபர் தாமு நாசமி லதிக ரங்ஙன்.
    (அ-ரை) வன்னியில் - தீயில்; அரன் - உருத்திரன்; கால் - காற்றில்; அயனும் மாலும் அரனும் ஈசனும் சதாசிவனும் என உம்மை விரித்து உள்ளார் என்பதற்குப் பன்மை வினைமுதல் காண்க; ஏறலான் - வியாபித்தலான்; ஆங்கே - அப்பூதங்களில்; நண்ணிடும் - இருக்கிற; அதிபர் - கடவுளர்; அதிகர் - வியாபகர்; அங்ஙன் - அப்பூதங்களின் வியாபக முறையில்.
    'ஆகாசாத் வாயு; வாயோ ரக்கி:| அக்நேராப:| அத்ப்ய: ப்ருதிலீ|| என்ற தைத்திரீயோபநிஷத்தும், பைங்களோபநிஷத்தும், 'ஆகாசாத் வாயுர் வாயோரக்கி ரக்நே ராபோத்ப்ய: ப்ருதிவீ ' என்ற ஸபாலோபநிஷத்தும், 'ஆகாசாத் வாயு: | வாயோ ரக்நி: அக்நேராப: அத்ப்ய: ப்ருதிலீ| எதேஷாம் பஞ்சபூதாநாம் பதய: பஞ்ச ஸதாசிவேச் வர ருத்ர விஷ்ணு ப்ரஹ்மாணச்சேதி' என்ற யோகசூடாமணியுநிஷத்தும், 'ப்ருதிலீ - - சதுர்புஜாகாரம் சதுர் வக்த்ரம் ஹிரண்மயம் - - ஆப: - - நாராயணம் தேவம் - - வஹ்நி - - ருத்ரம் - - வாயு: - - ஈச்வரம் - - வ்யோம - - ஸதாசிவம்' என்ற யோகதத்வோபநிஷத்தும், 'ப்ரஹ்மாணம் ப்ருதிவீ பாகே விஷ்ணும் தோயாம்சகே ததா| அக்ந்யம் சேச மஹேசாந மீச்வரம் சாநிலாம் சகே| ஆகாசாம்சே மஹா ப்ராஜ்ஞ தாரயேத்து ஸதாசிவம்' என்ற ஸ்ரீ ஜாபாலதர்சனோபநிஷத்தும், 'தரண்யெள ப்ரஹ்மா தத்ராதி தேவதா - - ஜலம் விஷ்ணு ஸ்தஸ்யாதி தேவதா - - வஹ்நிருத்ரஸ்தஸ்யாதி தேவதா வாயோர் பிம்பம்து - - ஈச்வரோஸ்யாதி தேவதா ஆகாசமண்டலம் - - தேவதாஸ்ய ஸதாசிவ:' என்ற யோகசிகோபநிஷத்தும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள்.            (கச)
******
    பஞ்ச பூதங்களையும் ஒருசேரச் சதாசிவோபாசனை யாற்றான் சயிக்க முடியுமென்பது.
    மண்டனை யயனால் வெல்க மாலினால் வெல்க மண்ணீர்
    மண்புன லனலை வெல்க வயங்கர முதலோன் றன்னால்
    மண்புன லனல்கா றன்னை மகேசனால் வெல்க வெல்க
    மண்புன லனல்கால் வானை வண்சதா சிவனால் மாதோ.
    (அ-ரை) மண்நீர் - பிருதிவியையும் அப்புவையும்; வயங்கு - பிரகாசிக்கிற; அரமுதலோன்றன்னல் - உருத்திரனால்.
    'த்யாயம்ச சதுர் புஜாகாரம் சதுர் வக்த்ரம் ஹிரண்மயம் தாரயேத் பஞ்சகடிகா: ப்ருதிவீ ஜயமாப்நுயாத் - - ஸ்மரந் நாராயணம் தேவம் - - தாரயேத் பஞ்சகடிகா - ததோ ஜலாத்பயம் நாஸ்திஜலே ம்ருத்யுர் நவித்யதே | ருத்ரம் தருணா மித்ய ஸந்நிபம் - - தாரயேத் பஞ்சகடிகா லஹ்நி நாஸெளந தாஹ்யதே - - தாரயேத் தத்ர ஸர்வஜ்ஞ மீச்வரம் விச்வதோமுகம் தாரயேத பஞ்சகடிகா வாயுவத்வ்யோம பவேத் - - ஆகாசே வாயு மாரோப்ய ஹகாரோபரி சங்கரம் - - ஸதாசிவம் - - யத்ரகுத்ரஸ்திதோவாபிஸக மத்யந்த மச்நுதே' என்ற யோக தத்வோபநிஷத்து இச்செய்யுட்குப் பிரமாணம்.            (கரு)
******
ஆறாதாரங்களுள் உச்சமான ஆஞ்ஞைத் தெய்வம் சதாசிவனென்பது.
விதிபதி சுவாதிட் டானம் விட்டுணு மணிபூ ரத்த
னுதிகதி ரொளியாஞ் சீவர்க் குருத்திர னனாக தத்தன்
வதிபதி விசுத்தி தன்னின் மகேச்சுர னாஞ்ஞை யென்னும்
பதியதி லுறைவோ னன்னோர் பணிசதா சிவனே யாவன்.
    (அ-ரை) விதி - பிரமனுக்கு; பதி - இடம்; சீவர்க்கு உதி கதிர் ஒளி ஆம் - உயிர்களுக்கு அந்தகாரத்தை நீக்குவதிற் காலைக் கதிரவன் போலுள்ள; விசுத்திதன்னில் வதிபதி என்க; வதிபதி - இருக்கிற தலைவன்; அன்னோர் - முன் நால்வரும்; எனவே மகேச்சுரனை முன்மூவரும், உருத்திரனை முன் இருவரும், விஷ்ணுவைப் பிரமனொருவனும் பணிவரென்பது சூசனை, ஆறாதாரங்களை யோககுண்டலியுபநிஷத்து 'மூலாதாரம் ஸ்வாதிஷ்டாநம் - - மணிபூரம் - - அநாஹதம் விசுத்தம் ச ஆஜ்ஞா சக்ரம்' என்றும், ஹம்ஸோபநிஷத்து 'ஸ்வாதிஷ்டாநம் - - மணிபூரகம் - - அநாஹதம் விசுத்தெள - - ஆஞ்ஞாம் -- ப்ரஹ்மாந்த்ரம் - - ' என்றும் கணக்கிடும்.  இங்குகு மூலாதாரமும் பிரமாந்திரமுந்தள்ளி அம்மூர்த்திகளின் தாரதம்மியங்காட்ட மற்றவைமட்டில் எடுத்துக்கொள்ளப்பட்டன.                        (கசா)
******
    மூன்று மூர்த்திக் கணக்கு வரும்போது அவர்களுக்கதீதனாகிய நாலாவது மூர்த்தியாஞ் சிவபிரானே ஐந்து மூர்த்திக் கணக்கு வரும்போது அவர்களுக்கதீதனாகிய ஆறாவது மூர்த்தியாயும் விளங்குவனென்பது.
    அயனென வரியே யென்ன வானென மகேச னென்னச்
    சயசதா சிவனே யென்னச் சாற்றுமவ் வைவர் மேலாய்
    மயலறு போதா நந்த மயசிவ னென்னு மாறாஞ்
    சுயவொளி யிறைவ னாகித் துலங்கலுந் துரியற் குண்டால்.
    (அ-ரை) துலங்கல் - விளங்குதல்.
    'ப்ரஹ்மாணம் - - விஷ்ணும் - - மஹேசாந மீச்வரம் - - ஸதாசிவம் | அதவாதவ வக்ஷ்யாமி தாரணாம் முநிபுங்கவ | புருஷே ஸர்வ சாஸ்தாரம் போதா நந்தமயம் சிவம்' என்ற ஸ்ரீ ஜாபாலதர்சநோபநிஷத்து இச்செய்யுட்குப் பிரமாணம்.            (கஎ)
******
    திரிமூர்த்திகளுட் சேர்ந்த உருத்திரன் சைவசமயக் கடவுளல்ல ரென்பது.
    முத்தொழி லியற்றுந் தேவர் மூவருண் மூன்றாந் தேவே
    சத்திய சைவ மார்க்கத் தனிமுத லென்பர் தேரா
    ரத்தொழி லிறைவ ரெல்லா மஞ்சலி சிரமேற் கொண்டு
    வித்தக சதுர்த்த னாறே வினைகளை யென்றுஞ் செய்வார்.
    (அ-ரை) முத்தொழில் இயற்றுந்தேவர் - பிரமவிஷ்ணுருத்ரர்; மூன்றாந் தேவு - உருத்திரன்; சைவமார்க்கத்தனிமுதல் - சைவசமயக்கடவுள்; தேரார் - அறியாதவர்; அத்தொழிலிறைவரெல்லாம் - அம்மூவரும்; அஞ்சலிசிரமேற் கொண்டு - வணங்கி; வித்தக - ஞானமய; ஆறே - திருவுள்ளப்படி; வினைகளை - முத்தொழில்களையும்.
    'நம்மவ ரவரே, மூவரென்றே யெம்பிரானொடும் எண்ணி விண்ணாண்டு மண்மேல், தேவரென்றே யிறுமாந்தென்ன பாவந்திரிதவரே' என்ற திருவாசகம் இச்செய்யுட்குப் பிரமாணம்.        (கஅ)
******
    திரிமூர்த்திகளுஞ் சிவபிரானிடமே ஒடுங்கித் தோன்றுவரென்பது.
    அயனரி தன்னி லாவ னயன்றனி லரிதா னாவ
    னயனரி யரனி லாவ ரரனரி யயரி லாவ
    னியலிவை கற்ப பேத மீசுர மூர்த்தி தானே
    யயனரி யரரைத் தன்பா லாக்கிமுன் னழிப்பான் பின்னர்.
    (அ-ரை) ஆவன் - வெளிப்படுவான், ஒடுங்குவான்; இயல் இவை - இப்படி நிகழுகிற இவ்விரண்டும்; கற்பபேதம் - அவாந்தர கற்பங்களி லுண்டாகும் மாறுபாடுகள்; தன்பால் - தன்னிடத்திலிருந்து, தன்னிடத்தில்; ஆக்கி - வெளிப்படுத்தி; முன் - பிரதம சிருட்டியில்; அழிப்பான் - ஒடுக்குவான்; பின்னர் - சர்வ சங்காரத்தில்.
    'ஏகோஹவை நாராயண ஆஸீந் நப்ரஹ்மா நேசாந:' என்ற மஹோப நிஷத்தும், 'நாராயணாத் ப்ரஹ்மா ஜாயதே நாராயணாத் ருத்ரோ ஜாயதே', 'ருத்ரோ மஹர்ஷி:| ஹிரண்ய கர்பம் பச்யதி ஜாயமாநம்' என்ற நாராயணோப நிஷத்தும், 'லலாடாத் கரோதஜோ ருத்ரோஜாயதே' என்ற ஸபாலோப நிஷத்தும், மமாபிவிஷ்ணோர் ஜநகம்' என்ற சரபோநிஷத்தும், நாராயணாத்திரண கர்போஜாயதே' என்ற திரிபத்விபூதிமஹநாராயணோப நிஷத்தும், 'ப்ரஹ்மயோநிம்' என்ற கைவல்யோப நிஷத்தும், 'ஈசம் புருஷம் ப்ரஹ்மயோநிம்: என்ற முண்டகோப நிஷத்தும், 'ருத்ரோ மஹர்ஷி:| ஹிரண்யகர்பம் ஜநயாம ஸபூர்வம்', ' ருத்ரோ மஹர்ஷி:| ஹிரண்யகர்பம் பச்யதி ஜாயமாநம்', ப்ரஹ்மயோநிம் யோப்ரஹ்மாணம் விததாதிபூர்வம்' என்ற சுவேதாசுவத் ரோப நிஷத்தும், ஸர்வேச்வரம் - - சிவாச்யுதாம் போருஹ கர்ப பூருஹம்' என்ற நாரதபரிவ்ராஜகோபநிஷத்தும், 'சிவம் - - ஹரி ஹர ஹிரண்ய கர்ப ஸ்ருஷ்டாரம்' என்ற பஸ்மஜாபாஸோபநிஷத்தும். 'த்ரயஸ்தை காரணாத்மநோ| ஜாதாஸ் ஸாக்ஷந் மஹேச்வராதித்யுபக்ரம் யஸ் பஷ்ட முக்தம் தபஸாதோஷ யித்வாது பிதாம் பரமேச்வரம்| ப்ரஹ்ம நாராயணெள பூர்வம் ருத்ரம் கல்பாந்தரே ஸ்ருஜத்| கல்பாந்தரே புநர்ப்ரஹ்மா ருத்ர விஷ்ணு ஜக்நமய: விஷ்ணுச்சபகவாந் தத்வத் ப்ரஹ்மாணமஸ்ருஜத் ப்ரபு: | நாராயணம் புநர் ப்ரஹ்மா ப்ரஹ்மாணம் ச புநர்வ: | ஏவம் கல்பேஷ கல்பேஷ ப்ரஹ்ம விஷ்ணு மஹேச்வரா:| பரஸ் பரஸ் மாஜ்ஜாயந்தே பரஸ்பரஜயைஷிண:| தத்தத் கல்பாந்த மதிக்ருத்ய மஹர்ஷிபி: | ப்ரபவ: கத்த்யதே தேஷாம் பரஸ்பர ஸமுத்பவா இதி' என்ற வாயு ஸம்ஹிதையும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள்.                            (ககூ)
******
திரிமூர்த்திகளையும் சிவபிரான் எளிதிற் சங்கரிப்பவ ரென்பது.
    பார்தனை யாக்குந் தேவைப் பாற்கட லிறையைச் சூலஞ்
    சேர்கர முதலை யீற்றிற் சிவபிரான் சங்க ரித்த
    லார்கலி நீரை முற்று மாங்குறு வடவை யங்கி
    யோர்கண மதனிற் சீறி யுண்பதற் கொப்பா மன்றே.
    (அ-ரை) ஆர்கலி - கடல்; வடவை அங்கி - வடவாமுகாக்கினி.
    'ப்ரஹ்மா விஷ்ணுச்ச ருத்ரச்ச ஸர்வேவாபூத ஜாதய:| நாசமேவாநுதா வந்திஸலிலா நீவபாடபம்' என்ற மஹோபநிஷத்து இச்செய்யுட்குப் பிரமாணம்.        (உ0)
மூன்று மூர்த்தியாகிய உருத்திரர் சிவபிரானை நோக்கித் தவஞ்செய்து அவரிடமிருந்து சிவநாம ரூபாதிகளைப் பெற்றாரென்பது.
    மேதகு மூன்றா மூர்த்தி விருப்புடன் சதுர்த்தன் றன்னைப்
    பாதம திறைஞ்சி நோற்றுப் பரித்திடப் பெற்றா னன்னா
    னோதரு முருவும் பேரு முயர்மறை யதனா லந்தப்
    பேதரை யபேத மாக்கிப் பேசலு மாங்காங் குண்டால்.
    (அ-ரை) மேதகு - மேன்மையான; பரித்திட - தாங்க; பேதரை - மூன்றாமூர்த்தியையுஞ் சதுர்த்த மூர்த்தியையும்; அபேதம் ஆக்கி - ஒருவராக்கி மூன்றா மூர்த்தியே பரமென்று; ஆங்காங்கு - ஒஒவ்வோரிடத்தில்; பின் சில செய்யுட்களில் மும்மூர்த்திப் பிரஸ்தாபமே வருகிறது; ஆங்கும் உருத்திரனுக்கே பரத்துவம் உளதாதல் காண்க.
    'தச் சக்த்யாதிஷ்டிதச்சச்வத்தச்சிஹ்நை ரபி சிஹ் நித:| தந்நாம நாமாதத்ரூபஸ் தத்கார்ய கரணக்ஷம:| தத்துல்ய வ்யவஹாரச்சததாஜ்ஞா பரிபாலக:' என்ற வாயு ஸம்ஹிதை இச்செய்யுட்குப் பிரமாணம்.    (உக)
******
    உருத்திரரே சர்வத்துக்குங் காரண சொரூபரென்பது.
    கண்ணுத லுருவ மாகிக் காரண மனைத்து மோங்குங்
    கண்ணர விந்த மாவோன் காரிய மனைத்து மாவான்
    மண்ணுறு கிரியை யெல்லா மலரவ னுருவா மென்னி
    னெண்ணுவ ரானைச் சர்வ காரண னென்று மேலோர்.
 (அ-ரை) கண் அரவிந்தமாவோன் - விஷ்ணு; மண் - உலகத்தில்.
    'கார்யம் விஷ்ணு: க்ரியா ப்ரஹ்மா காரணம்து மகேச்வர:' என்ற ருத்ரஹ்ருதயோபநிஷத்தும், 'ஸர்வேசம் - - சிவம் - - ஸர்வகாரணம்' என்ற மண்டலப்ராஹ்மணோபநிஷத்தும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள்.                        (உ உ)
******
மோக்ஷ நாடிக்குத் தெய்வம் உருத்திரனே யென்பது.
    நாடரு நாடி மூன்று ணாரண னிடையின் றெய்வம்
    பீடுறு கமல வாசன் பிங்கலைத் தெய்வ மாவன்
    வீடெனு மின்பைச் சீவர் மேவிட முதுகென் பூடே
    யோடிடு சுழுனைத் தேவா யுறைபவன் சிவனே யாவான்.
    (அ-ரை) நாடு அரு - ஆராய்தற்கரிய; பீடு - பெருமை; கமலவாசன் - பிரமன்; வீடெனும் இன்பை - முத்தியை; மேலிட - அடைய; என்பூடே - எலும்புக்கு நடுவில்.
    'இடாவாமே ஸ்திதா பாகே தக்ஷணே பிங்களா ஸ்திதா|| ஸஷம்நா மத்ய தேசே' என்ற யோகசூடாமணியுபநிஷத்தும், 'ஸஷம்நாது பரே லீநா விரஜா ப்ரஹ்ம ரூபிணி| இடாதிஷ்டதி வாமேந பிங்களா தக்ஷணே நச' என்ற க்ஷரிகோபநிஷத்தும், 'ஸஷம்நாயா: சிவோ தேவ இடாயா தேவதா ஹரி: பிங்களா விரஞ்சி:' என்ற ஸ்ரீ ஜாபாலதர்சனோபநிஷத்தும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள்.                        (உங)
******
யோகிகளுக்குச் சரீரத்தைத் தளர்த்த உதவும் ரேசக வாயுவின் தெய்வம் உருத்திரனே யென்பது.
    காலொரு மூன்றி னுள்ளே கண்ணுத விரேசி யாவான்
    மாலவ னாவன் கும்பி மலரவன் பூரத் தாவான்
    சாலவி ரேச மொன்றே தளர்த்திடு முடலை யென்னி
    னாலம துண்டோ னன்றி யருந்துணை யோகர்க் குண்டோ.
    (அ-ரை) கால் - காற்று; இரேசி - இரேசகத் தெய்வம்; கும்பி - கும்ப்கத்தெய்வம்; பூரத்து ஆவான் - பூரகத்தின் தெய்வமாயிருப்பான்; சால - மிகவும்; ஆலமது உண்டோன் - சிவபிரான்.
    'ப்ரஹ்மா பூரக இத்யுக்தோ விஷ்ணு: கும்பக உச்யதே | ரேசோ ருத்ர இதிப் ரோக்த: ப்ராணாயாமஸ்ய தேவதா' என்ற தியாநபிந்தூபநிஷத்தும், 'தவமிக முயலும் போது தன்னுயிர்ப் புமிழ்வ தன்றிப் பவனெனு முணவுங் கொள்ளான், என்ற கோயிற் புராணமும், 'உணவு உடம்பை வாட்டுந் தவத்திற்கு விலக்கு' என்ற அதனுரைக் குறிப்பும், 'ஸதாசிவம் - - யோகித்யேயம் என்ற நாரதபரிவ்ராஜகோபநிஷத்தும், 'விரூபாக்ஷம் - - த்யாயேத் யோகீச் வரேச்வரம்' என்ற ஸ்ரீ ஜாபாலதர்சனோபநிஷத்தும், 'ஜுவந்முக்த: சிவயோக நித்ராச' என்ற நிர்வாணோபநிஷத்தும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள்.        (உச)
******
உருத்திரனே பிராமண தெய்வமென்பது.
    பிறையணி பரமன் றானே பிராமண தெய்வ மாவா
    னிறைதிரு வுடைய வேந்தாய் நிலவுவன் சங்க மேந்தி
    துறைவல வணிகன் வேதன் சூத்திரன் மகவா னென்னிற்
    பிறையணி பரனை யன்றிப் பிராமணர் வணங்க லாமோ.
    (அ-ரை) பிறையணி பரமன் - சிவபிரான்; திரு - செல்வம்; வேந்து க்ஷத்திரியன்; சங்கம் ஏந்தி - விஷ்ணு; துறை - வியாபார வித்தை; வணிகன் - வைசியன்; வேதன் - பிரமன்; மகவான் - இந்திரன்.
    'த்வம் தேவேஷ ப்ராஹ்மணோ அஸி அஹம் மநுஷ்யேஷ ப்ராஹ்ம ணோவை ப்ராஹ்மணமுபதாவத் யுபத்வா தாவாமி' என்ற ஸாமவேத சதபத ப்ராஹ்மணமும், 'விப்ரா விப்ரஸ்ய' என்ற சுவேதாசுவதரோபநிஷத்தும், 'ப்ரஹ்மணோதிபதி: - - சிவோம்' என்ற நாராயணோபநிஷத்தும், விப்ராணாம் தைவதம் சம்பு; க்ஷத்ரியாணாம்து மாதவ:| வைச்யா நாந்து பவேத் ப்ரஹ்மா சூத்ராணாம் தேவேந்த்ர:' என்ற மனுஸ்மிருதியும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள்.  (உரு)
******
உருத்திரனே சர்வலோக பிதாவென்பது.
    ஒருதிரு மருவு மார்பற் குறுகுறி யோனி யாகு
    முருமிகு பீசந் தானே யுருத்திரன் குறியா மன்னோ
    ரிருவரு மருவிப் பாரை யீனுவ ரென்னி னந்தப்
    பெருவிடை யுயர்ப்போ னன்றிப் பிதாவெவ னுலகுக் கெல்லாம்.
    (அ-ரை) ஒரு திரு மருவு மார்பற்கு - விஷ்ணுவுக்கு; உறு - பொருந்திய; யோனி - பகம்; உரு - அழகு; பீசம் - லிங்கம்; மருவி - புணர்ந்து; ஈனுவர் - பெறுவர்; பெருவிடையுயர்ப்போன் - சிவபிரான்.
    'ருத்ராத் ப்ரவர்ததே பீஜம் பிஜயோ நிர் ஜநார்தந:' என்ற ருத்ர ஹ்ருதயோபநிஷத்தும், 'பிதரம் மஹேரம்' என்ற சரபோப நிஷத்தும், 'இதம் பித்ரே - - ருத்ரஸ்ய வர்தநம்' என்ற ருக் மந்திரமும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள்.                (உசா)
 
******
உருத்திரனே எல்லா வுலகிற்கும் ஆதிழல மென்பது.
உலகெனு மரத்தி னுச்சி யுலகினை யளந்தோ னாவ
னுலமெனு மரத்தின் மைய முந்தியிற் பிறந்தோ னாவ
னுலகெனு மரத்தின் வேர்க ளுருத்திர னாவ னென்னி
னுலகினை வாழ வைப்போ னுருத்திர னன்றி வேறார்.
(அ-ரை) உலகினை அளந்தோன் - விஷ்ணு; மையம் - அடிமரம்; உந்தியிற் பிறந்தோன் - பிரமன்.
    'அஸ்ய த்ரைலோக்ய வ்ருக்ஷஸ்ய பூமெளவிடபசாகிந:| அக்ரம் மத்யம் ததா மூலம் விஷ்ணு ப்ரஹ்ம மஹேச்வரா:' என்ற ருத்ரஹ்ருதயோப நிஷத்து இச்செய்யுட்குப் பிரமாணம்.    (உஎ)
******
உருத்திரனே தர்ம சொருபி யென்பது
    போதின னுருவ மாகிப் பொருந்துநான் மறையின் ஞானஞ்
    சீதர னுருவ மாகித் திரிவித வுலகந் தங்குந்
    தீதக றரும மீசன் றிவ்விய வுருவா மந்தப்
    போதமு முலகுங் கொண்டு புரிவதத் தருமங் கண்டாய்.
    (அ-ரை) போதினன் - பிரமன்; சீதரன் - விஷ்ணு; திரிவித - மூன்றுவகை; போதம் - ஞானம்; கொண்டு - சாதனமாகக்கொண்டு; புரிவது - செய்யத் தக்கது; அத்தருமம் - அச் சிவசொரூப தருமம்.
    'தர்மோ ருத்ரோ ஜகத் விஷ்ணு: ஸர்வஜ்ஞாநம் பிதாமஹ:' என்ற ருத்ர ஹ்ருதயோபநிஷத்து இச் செய்யுட்குப் பிரமாணம்.                (உஅ)
******
உருத்திரனே பரமாத்மா வென்பது.
    சங்கரன் பரம வான்மாச் சார்ங்கம தேந்தி யான்மாப்
    பங்கய னந்த ரான்மா வெனமறை பகர்வ தோரா
    ரிங்கொரு பரமான் மாவா யின்னொரு தேவை யேத்திச்
    சங்கரன் றனக்குத் தோடஞ் சாற்றிலெந் நரகி வாழ்வார்.
    (அ-ரை) சார்ங்கம தேந்தி - விஷ்ணு; பங்கயன் - பிரமன்; பகர்வது - சொல்வதை; ஓரார் - உணராதவர்; இன்னொரு தேவை - வேறெதேனும் ஒரு தெய்வத்தை; தோடம் - நிந்தை; சாற்றறி - கூறி; வெம் - கொடிய; ஆழ்வார் - அழுந்துவார்.
    'ஆத்மாநம் பரமாத்மாந மந்தராத்மாந மேவச| ஜ்ஞாத்வாத்ரிவித மாத்மா நம் பரமாத்மாந மாச்ரயேத் | அந்தராத்மா பவேத் ப்ரஹ்மா பரமாத்மா மஹேச்வர:| ஸர்வேஷா மேவ பூதாநாம் விஷ்ணு ராத்மா ஸநாதந:' - - என்ற ருத்ரஹ்ருதயோப நிஷத்தும், 'யாஸ்ய ப்ரதமாரேகா - - ஸ்வாத்மா - - ப்ரஜாபதிர் தேவோ தேவதேதி | யாஸ் யாத்விதீயாரேகா - - அந்தராத்மா - - விஷ்ணுர் தேவோ தேவதேதி | யாஸ்ஸ்ய த்ரிதீயா ரேகா - - பரமாத்மா மஹா தேவோ தேவதேதி - -' என்ற ஜாபால்யுபநிஷத்தும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள்.  ஆத்ம நிலையும் அந்தராத்ம நிலையும் பிரம விஷ்ணுக்களுக்கிடையில் மாறிக் கொள்வதையும் பரமாத்ம நிலைமாத்திரம் சிவபிரானை விட்டு விலகாமையையும் அவ்வுப நிஷத்துக்களிற் காண்க.            (உகூ)
******
உருத்திரனே ஒப்புயர்வந்த பரம்பொருளென்பது
    அப்பணி வேணித் தேவுக் கரியினைப் பிரமன் றன்னை
    யொப்புட னுயர்ச்சி சொல்லே லும்பரிற் பிரமன் மேலோன்
    திப்பிய விதியின் மேலோன் றிருமகள் கணவ னம்மாற்
    கொப்புட னுயர்ச்சி யில்லா வுருத்திரன் மேலோன் றானே.
    (அ-ரை) அப்பணி வேணித் தேவுக்கு - சிவபிரானுக்கு; உம்பரின் - தேவர்களைவிட; திப்பிய - திவ்விய; விதியின் - பிரமனைவிட.
    'பராத் பரதரம் ப்ரஹ்மா தத்பராத் பரதோ ஹரி:| தத்பராத் பரதோ ஹீச: தஸ்மாத் துல்யோதிகோ நஹி' என்ற சரபோநிஷத்தும், 'தமீச் வராணாம் பரமம் மஹேச்வரம் - - நதத் ஸமச் சாப்யதிகச்ச த்ருச்யதே' என்ற சுவேதாசுவதரோபநிஷத்தும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள். (ங0)
******
உருத்திரனே மற்றிருவரையுஞ் சங்கரிப்பா னென்பது.
    மருத்திக ழலரோன் றன்னை வாலிய சோற தாக்கித்
    திருத்திக ழுரவோன் றன்னைத் திப்பிய ரசமே யாக்கி
    மிருந்துவை யூற வைத்த மெல்லிய காய்தா னாக்கி
    யுருத்திர னுண்பா னெல்லா வுலகையு மொடுக்கு ஞான்றே.
    (அ-ரை) மருத்திகழலரோன்றன்னை - பிரமனை; வாலிய - வெண்மையான; திருத்திகழுரவோன்றன்னை - விஷ்ணுவை; மிருத்துவை - எமனை; ஊறவைத்த மெல்லியகாய் - ஊறுகாய்; ஒடுக்கு ஞான்ன்று - சங்கரிக்குங் காலத்தில்.
    'யஸ்ய ப்ரஹ்ம ச க்ஷத்ரஞ் சோபேபவத வோதந: ம்ருத்யுர் யஸ்யோப ஸேசநம்' என்ற கடோப நிஷத்தும், 'த்ரயம்பகே நாநுஷ்டுபேந| ம்ருத்யுஞ்ஜயும் தர்சயதி' என்ற திரிபுராதாபிநியுடநிஷத்தும், 'ப்ரஹ்மாந் நந்து ரஸோ ஹரிஸ்து பசவாந் போக்தா மஹேச:' என்ற ஸித்தாந்த ஸாராவளியும். 'அந்நம் ப்ரஹ்மாரஸோ விஷ்ணுர் போக்தாச் சைவ மஹேச்வா:' என்ற மந்திரமும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள்.  ரசங் கலந்த சோற்றுக்கு ஊறுகாய் தொட்டுக்கொள்ளும் வழக்கம் செங்கற்பட்டு ஜில்லாவில் இப்போதும் உண்டு.        (நக)
******
உருத்திரனே பரதசாத்திரத்தாலும் பரமென வந்திக்கப்பட்டானென்பது.
    தாமரைத் தவிசற் காகுந் தாமரை மலரின் சின்னந்
    தாமரைக் கண்ணற் காகுஞ் சங்கெனுங் கருவிச் சின்னந்
    தாமரைக் கையன் சின்னந் தலைமிசைக் கரங்கள் கூப்ப
    லாமெனிற் பரத நூலு மரன்பரத் தைய முண்டோ.
    (அ-ரை) தாமரைத் தவிசன் - பிரமன்; தாமரைக் கண்ணன் - விஷ்ணு; தாம் மரைக் கையன் - உருத்திரன்; பரத நூலும் ஆகும் ஆகும் ஆ(கு)ம் எனில் என்க.
    'வஜ்ரண்யா முத்ரயா சக்ரம் பத்மிந்யாதர் சயேத்விதம் சங்கிந்யா கேசவம் ருத்ரம் சிரஸ்யஞ்ஜலிமுத்ரயா' என்ற பரத சாஸ்திரம் இச்செய்யுட்குப் பிரமாணம்.            (ஙஉ)
******
உருத்திரனை நாராயணன் மீறமாட்டா னென்பது
    அக்கினி தன்னைக் கண்டா லப்புருக் குலைந்து போகு
    முக்கிர நெருப்பைத் தன்னு ளுருத்திர னடக்கி நிற்பான்
    சக்கர பாணி நொய்ய சலந்தனில் மிதப்ப னென்னி
    னக்கன தாணை மீற நாரணன் வல்லான் கொல்லோ.
    (அ-ரை) அப்பு - ஜலம்; உருக்குலைந்து போகும் - சுவறும்; நக்கனது - சிவபிரானுடைய.
    'ஆபஸ் தேஜஹி ப்ரலீயந்தே' என்ற சுபாலோப நிஷத்து இச்செய்யுட்குப் பிரமாணம்.   (ஙங)
    தியானம் தியாதா தியேயர் இவரென்பது
    சீதரன் றியான மாவன் சிவபிரான் றியேய னாவ
    னோதவிர் தியாதா வாவ னுருத்திர னென்று சீவர்
    தீதகன் றுய்யு மாறு சிவபிரான் மலர்மென் றானை
    யாதரம் பெருக வேத்தி யதருவ சிகையோய்ந் தன்றே.
    (அ-ரை) ஓது சொல்லப்பட்ட; அவிர் - சிறப்புடைய; அகன்று - நீக்கி; ஆதரம் - அன்பு; ஓய்ந்தன்று - 'ஸமாப்தாதர்வசிகா' வென்று தன்னைத் தானே முடித்துக் கொண்டு முடிந்தது.
    'த்யாநம் விஷ்ணு: - - த்யாதா ருத்ர: - - த்யாயீ தேசாநம்' என்ற அதர்வசிகோபநிஷத்து இச்செய்யுட்குப் பிரமாணம். (ஙச)
******
இருதய குகையில் வசிப்பவர் சிவபிரானே யென்பது.
    தகைபெறு பரம வான்மாச் சந்தத முயிர்க ளுள்ளக்
    குகைதொறு மிருப்பன் கெளரி கொழுநனே யன்னோ னாவ
    னகைமல ருறைவோன் மூன்றா நாதன்மா லாதி மற்றை
    வகைபடு தேவரெல்லா மற்றவன் விபூதி யாவர்.
    (அ-ரை) சாந்தம் - எப்போதும்; விபூதி - அதிஷ்டானங்கள்.
    'மத்ய ஆத்ம நிதிஷ்டதி | ஈசாந:' என்ற கடோபநிஷத்தும், 'ப்ராணேஷ ஹ்ருத் யந்தர் ஜ்யோதி: புருஷ:' என்ற ப்ருஹதாரண்யகோபநிஷத்தும், 'ப்ரமாத்மாவயவஸ் தித: | ஸ ப்ரஹ்மா ஸசிவ: ஸேந்த்ர:' என்ற நாராயணோபநிஷத்தும், 'உமாஸஹாயம் - - ஸப்ரஹ்ம ஸசிவ: -ஸ- விஷ்ணு:' என்ற கைவல்யோபநிஷத்தும், 'பரமாத்மாவ்யவஸ் தித: ஸ ப்ரஹ்மா ஸ ஈசாந: ஸேநத்ர:' என்ற மஹோபநிஷத்தும், 'த்வம் ப்ரஹ்மா த்வம் விஷ்ணு: த்வம் ருத்ர:' என்ற கணபதியுபநிஷத்தும், 'யோஸெள தேவோ பகவாந் ஸர்வைச்வர்ய ஸம்பந்ந: ஸர்வவ்யாபீ ஸர்வ பூதாநாம் ஹ்ருதயே ஸாந்நி விஷ்டோ மாயாவி மாயயா க்ரீடதி ஸ ப்ரஹ்மா ஸ விஷ்ணு: ஸ ருத்ர: ஸ இந்த்ர: ஸ ஸர்வே தேவா:' என்ற சாண்டில்யோப நிஷத்தும், 'த்ருதீயம் பாபாதம் ஜாநீயாத் ஸ ப்ரஹ்மா ஸ சிவ: ஸ ஹரி:' என்ற நரஸிம்ஹ பூர்வ தாபிநியுபநிஷத்தும், அவிசேஷேண ஸர்வம் துய: பச்யதி சிதந்வயாத்| ஸ ஏவ ஸாக்ஷத் விஜ்ஞாநீ ஸ சிவ: ஸ ஹரிரர் விதி : என்ற வராஹோப நிஷத்தும், 'த்வம் ப்ரஹ்மா த்வம் ச வை விஷ்ணு: த்வம் ருத்ரஸ் த்வம் ருத்ரஸ் த்வம் விஷ்ணு:' என்ற பிராணக்கினிஹோத்ரோபநிஷத்தும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள்.    (ஙரு)
******
சிவபிரானே சர்வகாரண காரணனென்பது.
காரணந் தனக்கொன் றில்லாக் காரண முலகுக் காரென்
றாரணம் வினவிச் சத்தே யாத்துமா பிரம மென்றக்
காரணந் தனையுங் கூறுங் கபாலியே யதுவா மென்ற
வாரண விசேடத் தச்சா மானிய மமையு மன்றே.
    (அ-ரை) ஆரணம் - வேதம்; சத்து ஆத்துமா பிரமம் என்று அக்காரணந்தனையும் என்றதை சத்தென்றும் ஆத்துமாவென்றும் பிரமமென்றும் எனத் தனித்தனி கூட்டி அக்காரணந்தனை என நிறுத்துக.  அது ஆம் - அக்காரணம் ஆகும்; விசேடத்து - விசேஷவாக்கியங்களுக் கேற்பவே; அச்சாமானியம் - அந்தச் சாமானிய வாக்கியங்கள்; அவை சத்து காரண மென்றலும் ஆத்துமா காரணமென்றலும் பிரமம் காரணமென்றலும் ஆக்.  அமையும் - பொருள் கொள்ளப்பட்டு அடங்கும்.
    'ப்ரஹ்ம விஷ்ணு ருத்ரேந்த்ர:-- நகாரணம்', 'காரணம் - - சம்பு:' என்ற அதர்வசிகோபநிஷத்தும், 'விஷ்ணுச் சதுர்வக்த்ர: சம்புச்ச காரணா திபா:' என்ற பைங்களோபநிஷத்தை வியாபித்த 'ஸசாரணம் காரணா திபாதிப என்ற சுவேதாசுவதரோபநிஷத்தும், 'உமார்த தேகம் வாதம் ஸர்வகாரண காரணம்' என்ற யோகதத்வோபநிஷத்தும், 'சம்போர் மஹா தேவம் - - ஸர்வகாரணகாரணம்' என்ற பஞ்சப்ரஹ்மோபநிஷத்தும், 'ய: காரணாநி நிகிலாநி' ,'கிம் காரணம் ப்ரஹ்ம' என்ற சுவேதா சுவதரோப நிஷத்தும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள். ஜாபால்யுநிஷத் முதலியவற்றிலும் அத்தகைய வினாப்பார்க்கலாம்.            (ஙசா)
******
    பாஞ்சராத்திரத் திரிமூர்த்திகள் வேறு வேதத்திரிமூர்த்திகள் வேறு என்பதும் சிவபிரான் வேதத்திரிமூர்த்திகளுக்கு மேற்பட்டவர் என்பதும்.
    சங்கரு டணபி ரத்தி யுமவனி ருத்தர் தாமே
    யிங்கொரு மூவர் மாலோ னிவர்க்கிறை யென்னு மானூல்
    பங்கய னரன்மா லென்னும் பரர்களுக் கதீதன் கெளரி
    பங்கின னெனுநால் வேத பாகிய மாமந் நூலே.
    (அ-ரை) இவர்க்கு - இம்மூவருக்கும்; இறை - அதீதன்; மால்நூல் - பாஞ்சராத்தி  புகமம்; பரர் - தேவர்; அதீதன் - கடந்தவன்; எனும் - என்கிற; வேத பாகியம் - வேதத்துக்குப்புறம்; அந்நூல் - அப்பாஞ்சராத்திராகமம்; பிரம ருத்ர இந்திர ரென்பவர் நாலாயிரப்பிரபந்தமூவர்.
    'ரோஹிணீ தநயோ விச்வ அகாராக்ஷர ஸம்பவ: - - ப்ரத்யும்ந உகாராக்ஷர ஸம்பவ: - - அநிருத்தோஸெள மகாராக்ஷ ஸம்பவ:| அர்த்த மாத்ராத்மக: க்ருஷ்ணோ யஸ்மிந் விச்வம் ப்ரதிஷ்டிதம்' என்ற கோபாலோத் தாதாபிநியுநிஷத்தும், 'ப்ரஹ்ம விஷ்ணு ருத்ராதீதம் - - சிவம்' என்ற பஸ்மஜாபாலோபநிஷத்தும், 'சிவம் - - ப்ரஹ்ம விஷ்ணு ருத்ராதீ நாமேக: என்ற மண்டலப்ரம்மணோபநிஷத்தும், 'நமே ப்ரஹ்ம நமே விஷ்ணுர் நமே ருத்ரோ--','ப்ரஹ்ம விஷ்ண் வீச', ' ந ப்ரஹ்மா ந ஹரி: சிவ:' என்ற தேஜோ பிந்தூப நிஷத்தும், 'ப்ரஹ்மா நாராயண: | சிவச்ச நாராயண: சக்ரச்ச நாராயண:' , 'த்வமேவ ப்ரஹ்மேசாந புரந்தர -- ' என்ற த்ரிபாத் விபூதி மஹாநாராயணோபநிஷத்தும், 'ப்ரஹ்மேந்த்ர ருத்ராதி' , என்ற தேஜோ பிந்துபநிஷத்தும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள்.                 (ஙஎ)
******
சங்காரக் கடவுளே சிருட்டி திதிகளுக்குங் கர்த்தாவென்பது.
    அழிதொழி லுஞற்றுந் தேவ னலதெவ னாதி தேவன்
    பழிதவி ரவனே மாலைப் பதுமனை மீளத் தந்து
    பொழிலினை யாள வல்ல புருடனா மாத லாலே
    தொழிலவை மூன்று மந்தச் சுதந்தரன் றானே செய்வான்.
    (அ-ரை) அழிதொழில் உஞற்றுந்தேவன் - சங்காரக்கடவுள்; ஆதி தேவன் - முதற்கடவுள்; பழிதவிர் - பொல்லாங்கு தவிர்ந்த; அவனே -அச்சங்காரக்கடவுளே; பதுமனை - பிரமனை; தந்து -சிருட்டித்து; பொழிலினை - உலகத்தை; தொழிலவை மூன்றும் - ஸ்ருஷ்டிஸ்திதி சங்காரங்களாகிய அம்முத்தொழில்களையுமே; அந்தச் சுதந்தரன்றானே - அந்தச் சங்காரக்கடவுளாகிய சிவபிரானே.
    'யோவிஸ் புலிங்கேந லலாடஜேந ஸர்வம் ஜகத் பஸ்மஸாத்ஸம் கரோதி புநச்ச ஸ்ருஷ்ட்வா புநரப்ய ரக்ஷதேவம் ஸ்வதந்த்ரம் ப்ரகடீகரோதி', 'மஹேசோ பகவா நாதி தேவ:' ,' சங்கரோ பகவா நாத்யோ ராக்ஷ ஸகலா: ப்ரஜா:, 'பரமேச்வரோ ஸெள யஸ்யாங்கஜோ ஹம் ஹரிரிந்த்ர முக்யா', 'ஹரிம் ஹரந்தம் பாதாப்யாம்' என்ற சரபோப நிஷத்தும்,' 'ஹரிம் ஹரந்த மநுயந்தி தேவா விச்வஸ்யேசாநம் வ்ருஷபம் மதீநாம்' என்ற நாராயனோப நிஷத்தும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள்.                                (ஙஅ)
******
திரிமூர்த்திகளும் உயிர்களே யென்பது
    மூவரு முயிர்க ளென்று முதல்வனுக் குடல்க ளென்றும்
    யாவரு மறியச் சொல்லு மெழின்மறை சிலவ ரந்த
    மூவரு மபேத மென்று மூன்றதி கார மென்று
    மூவமி சங்க ளென்று முரணுரைத் தழிவ ரந்தோ.
    (அ-ரை) சிலவர் - சிலமனிதர்; முரண் - விபரீதம்.
    'ஜீவ இதி ப்ரஹ்ம விஷ்ண் வீசா நேந்த்ராதீநாம் நாமரூபத்வாராஸ் தூலோஹ மிதி மித்யாஸ வஸாஜ்ஜீவ:' என்ற நிராலம்போபநிஷத்தும் 'தஸ்யப்ரோக்தா அக்ரயாஸ் தநவோ ப்ரஹ்மா ருத்ரோ விஷ்ணுரிதி' 'ப்ரஹ்மா ருத்ரோ விஷ்ணு - - ப்ரஸ்யாம்ருதஸ்ய சரீரஸ்ய' என்ற மைத்ராயண்யுபநிஷத்தும், 'அரியுரு வியல்பான்' என்ற தேவாரமும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள்.            (ஙகூ)
******
சிவபிரானே பிரம மென்பது
பிரமவு பநிட மெல்லாம் பிரமனை யரியை நீக்கிப்
பிரமமென் றரனைப் போற்றும் பேரருட் குமர வேள்சுப்
பிரமணி யப்பேர் கொண்டான் பிராமிநல் லுமைக்குப் பேராம்
பிரமமென் றரனை யன்றிப் பேசிடே லாத லாலே.
(அ-ரை) பேசிடேல் - பிறதெய்வங்களைச் சொல்லாதே.
    'நிர்விகல்பமநந்தம் - பரமம்சிவம்' என்ற பிரமபிந்தூபநிஷத்தும்' 'துரீய மக்ஷரரம் - - ஈச்வாச்ச' என்ற பிரமோபநிஷத்தும், 'தீபாகாரம் மஹாதேவம் - - ஜபேத்' என்ற பிரமவித்யோப நிஷத்தும், 'சிவ: பசு பதி: ஸாக்ஷ ஸர்வஸ்ய ஸர்வதா' என்ற பாசுபதப்ரஹ்மோபநிஷத்தும், 'துரீய மக்ஷரம் சிந்மயம்' என்ற பரப்ரஹ்மோப நிஷத்தும், 'தஸ்மை நமோ மஹா தேவாய மஹா ருத்ராய ப்ரோவாச தஸ்மை பகவாந்மகேச:' ,'துரீயம் ப்ரஹ்ம ஸம்ஜிதம்' என்ற பஞ்சப்ரஹ்மோபநிஷத்தும், 'ப்ராஹ்மீ மாஹேச்வரீச் சைவ' என்ற நிகண்டும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள்.   (ச0)
******
இதுவுமது.
உட்டெளி வுடையோ னொப்பி லுருத்திரா ராத னைக்கு
விட்டுணு பாகா யோட்ட விரையுமோங் காரத் தேரில்
மட்டறு மன்பா லூர்ந்து மக்கலப் பிரம லோகங்
கிட்டுக வெனலின் வேதங் கிளரதிற் பிரமம் யாரே.
(அ-ரை) உள் தெளிவு - உள்ளத்தில் அறிவு விளக்கம்; பாகு - சாரதி; விரையும் - வேகமாய்ச் செல்லுகிற; மட்டு அறும் - அளவு கடந்த ; ஊர்ந்து - ஏறிச்சென்று; கிட்டுக - அடைவாயாக; கிளர் அதில் - ஒளியுள்ள அந்தச் சுருதியிற் சொல்லப்பட்ட.
    'ஓங்கார ரதமாருஹ்ப விஷ்ணும் க்ருத்வாத ஸாரதிம்| ப்ரஹ்ம லோக பதாந் வேஷீ ருத்ராராதந தத்பர:' என்ற அம்ருதநாதோபநிஷத்து இச்செய்யுட்குப் பிரமாணம்.            (சக)
******
இதுவுமது
பொங்கா வணிந்த பெம்மான் புண்ணிய முகங்க ளைந்தி
னிங்கித மனுக்க டம்மை யேவருஞ் செபித்து வாழ
மங்கல பிரம மென்று மறையெடுத் துரைக்கு மென்னிற்
பங்குமை யம்மைக் கீந்த பரமனிற் பிரம முண்டோ.
    (அ-ரை) பொங்கு அரவு அணிந்த பெம்மான் - சிவபிரான்; இங்கித மனுக்கள் தம்மை - இனிய மந்திரங்களை; எடுத்து - விவரித்து.
    'ஸத்யோ ஜாதாதி பஞ்ச ப்ரஹ்ம மந்த்ரை:' என்ற காலாக் நிருத்ரோப நிஷத்தும் ஜாபால்யுபநிஷத்தும், 'ஸத்யோ ஜாதம் ப்ரபத்யாமி ஸத்யோ ஜாதாயவை நமோ நம: - - வாமதேவாய நமோ ஜ்யேஷ்டாய நம: - - அகோரேப்யோத நமஸ்தே - - தத்புருஷாய - - ப்ரசோதயாத் || ஈசாந - - ஸதாசிவோம்' என்ற நாராயணோபநிஷத்தும், 'பஞ்சப்ரஹ்ம மந்த்ரை:' என்ற பஸ்மஜாபாலோபநிஷத்தும், 'தத்புருஷேசாநாகோரஸத்யோ ஜாதவாம தேவேப்யோ நம:' என்ற சுகரஹஸ்யோபநிஷத்தும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள்.        (சஉ) 
******
    மோக்ஷயாத்திரை செய்யுஞ் சர்வான்மாக்களுக்கும் லக்ஷ்யம் சிவபிரானே யென்பது.
    பிரணவ மென்னும் வில்லைப் பிடித்துய ரான்மாத் தன்னைச்
    சரமென வைத்து வாங்கிச் சங்கர னடிக ளான
    வரமுறு மிலக்கிற் பாய்ச்ச வல்லவன் றானே முத்தி
    புரமதை யடைவா னென்று பொதுமறை சொல்லு மன்றே.
    (அ-ரை) சரம் - அம்பு; வாங்கி - வளைத்து; வரம் - மேன்மை; இலக்கில் - லக்ஷபத்தில்; பாய்ச்ச - போய்த் தங்கும்படி செலுத்த; முத்தி புரமதை - மோக்ஷ லோகத்தை.
    'ப்ரணவோ தநுச் சரோஹ் யாத்மா ப்ரஹ்மதல் லக்ஷ்ய முச்யதே' என்ற முண்டகோபநிஷத்தும்.  தியாநபிந்தூநிஷத்தும், 'தநுஸ்தாரம் சரோஹ்யாத்மா ப்ரஹ்மதல் லக்ஷ்ய முச்யதே', 'சிவ லக்ஷ்யம் ந ஸம்சய:' என்ற ருத்ரஹ்ருதயோபநிஷத்தும், 'அந்தர் லக்ஷ்யம் - - உமாஸஹாயம் நீலகண்டம் ப்ரசாந்த மந்தர் லக்ஷ்யம்' , 'ஸர்வேசம் - - சிவம் - - ஏகலக்ஷ்யம்' என்ற மண்டலப்ராஹ்மணோபநிஷத்தும், 'பஹநி புண்யாநி க்ருதாநியேந தேநைவ லக்ஷ்ய: பரமேச்வர:' என்ற சரபோபநிஷத்தும், 'துரீயாதீதம் பரம் ப்ரஹ்ம ப்ரஹ்ம ரந்த்ரேது லக்ஷ்யேத்' என்ற திரிசிசிப்ராஹ்மணோபநிஷத்தும், 'எத்தவத்தோர்க்கு மிலக்காய் நின்ற எம்பெருமான்' , 'மல்லை ஞாலத்து வாழுமுயர்க்கெலா - மெல்லையான பிரானார்' என்ற தேவாரமும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள்.            (சங)
******
சிவபிரானே ஏகழம் அத்விதீயழமானவரென்பது.
    உயர்வுட னொப்ப தின்றி யுள்ளதே யேக மாகு
    முயிரினொ டுடன்வே றொன்றா யுறுவதத் துவித மாகு
    முயரிய பிரமப் பேர்க்கு முருத்திரப் பெயர்க்குந் தானே
    நயமுற வவற்றைக் கூட்டு நான்மறை யடைக ளாக்கி.
    (அ-ரை) நயம் உற - ஏவகாரம் பொருந்த.
    'போகுமாமழை' என்ற சிந்தாமணிச் செய்யுளில் வரும் 'ஏகம்' என்ற பதத்திற்குத் 'தனக்கு நிகரில்லாத' என்ற நச்சினார்க்கினியருரையும், 'இவ்வத்துவிதம் - - கலப்பும் உடனாதலும் வேறாதலுமாகிய மூன்றுந் தன் கட்டோன்ற நிற்றல்பற்றி அம்மூன்றற்கும் பொதுவாகக் கூறப்படும்' என்ற சிவஞான மஹாபாஷ்யமும், 'ஏகமேவாத்விதீயம் ப்ரஹ்ம' என்ற பைங்க ளோபநிஷத்தும், சகாஹஸ்யோபநிஷத்தும், திரிபாத்விபூதிமஹாநாராயணோப நிஷத்தும், 'ஏக ஏவ ருத்ரோ நத்விதீயாயதஸ்து' என்ற சுவேதா சுவத்ரோபநிஷத்தும், 'ஏகோ நாராயணோ நத்விதீயோஸ்தி' என்ற திரிபாத் விபூதி மஹா நாராயணோப நிஷத்தும், 'ஏகமத்வைதம்' என்ற பஸ்ம ஜாபாலோப நிஷத்தும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள்.        (சச)
******
நாராயணனைப் பிரமமென்பதற்குக் காரண மீதுவென்பது.
    செருவல மாலோன் றன்னுட் சிவனைவைத் தேத்த லானும்
    பொருவறு மனைவி யாயப் பூரணற் குறுத லானும்
    பெருகிடு பகுதி உண்டம் பிரானென நடரத்த லானுந்
    திருமறை பிரம மென்று சிலவிடத் துபச ரிக்கும்.
    (அ-ரை) தன்னுள் - தன் இருதயத்தில்; பகுதியண்டம் - பிரகிருதி புவனம் வரை; பிரானென - தலைவனாயிருந்து; நடாத்தலானும் - ஆளுதலானும்.
    'நாராயண: ஸ்தித: - - பத்மகோசப்ரதீகாசம் ஹ்ருதயம் சாப்யதோ முகம் - தஸ்ய மத்யே மஹா நக்கிர் விச்வார்ச்சிர் விச்வதோமுக: - - தஸ்ய: சிகாயாமத்யே பரமாத்மா வ்யவஸ்தித:' என்ற நாராயணோபநிஷத்தும், 'நாராயணப்பிரகரணத்திற் கூறப்பட்ட விருதயம் பிறரைச் சார்தற்கியை பின்மையின் அது அவனுடையதென்றல் பொருந்துமென்க' என்ற சதுர்வேத தாற்பரிய சங்கிரமும், 'அரியலாற் றேவி யில்லை யையனை யாறனார்க்கே' என்ற தேவாரமும், 'பிரகிருதிமாயைகாறும் வியாபித்து நிற்கும் பிரதிட்டாகலைக்கு மாயோன் அதிதெய்வம்' என்ற சிவஞான மஹாபாஷ்யமும், 'நாராயண பரம் ப்ரஹ்ம' என்ற நாராயணோப நிஷத்தும், 'நாராயணம் பரம் ப்ரஹ்ம' என்ற திரிபாத்விபூதிமஹாநாராயணோபநிஷத்தும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள்.    (சரு)
******
பல பொருள்களைப் பிரமமென்பதற்குக் காரணமிதுவென்பது.
    நாரண னளின னாத ஞாயிறு கரணம் பூத
    மாருயி ருடல்காலன்ன மறிவிவை பிரம மென்றே
    யாரண முரைக்கும் வெவ்வே றவையெலாஞ் சோபா னங்க
    டாரணி சைவஞ் சார்ந்து சங்கர னருளிற் கூட.
    (அ-ரை) நளினன் - பிரமன்; நாதம் - சப்தம்; ஞாயிறு - ஆதித்தன்; கால் - பிராணன்; அறிவு - ஞானம்; ஆரணம் - வேதம்; சோபானங்கள் - படிக் கிரமங்கள்; தாரணி - உலகத்தோர்; அருளிற் கூட  - அருளுக்குப் பாத்திரமாகும்படி.
    'நாராயணம் பரம் ப்ரஹ்ம' என்ற நாராயணோபநிஷத்தும், 'பசுவாந் ப்ரஹ்மா ஸர்வலோக பிதாமஹ:' என்ற மஹோபநிஷத்தும், 'அக்ஷம் பரமோ நாத: சப்தப்ரஹ்மேதி கத்யதே' என்ற யோகசிகோபநிஷத்தும், 'ஆதித்ய - - த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்ரஹ்மாஸி' என்ற ஸர்யோப நிஷத்தும், 'அயமாத்மா ப்ரஹ்ம', 'அந்நம் ப்ரஹ்ம' என்ற பிருஹதாரண்யகோபநிஷத்தும், 'நமஸ்தே வாயோ த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்ரஹ்மாஸி' , 'அந்நம் ப்ரஹ்ம' 'ப்ராணோ ப்ரஹ்ம' , ' விஜ்ஞாநம் ப்ரஹ்ம' என்ற தைத்திரீயோப நிஷத்தும், 'ஓம் ப்ரஜ்ஞாநம் ப்ரஹ்ம' என்ற சுகரஹஸ்யோபநிஷத்தும், 'ஓமித்யேகாக்ஷரம் ப்ரஹ்ம' என்ற அம்ருதநாதோபநிஷத்தும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள்.                (சசா)
******
    பிரமமுதலிய பெயர்கள் சிவபிரானுக்கே உண்மை வாசகமாமென்பது.
    போற்றுரை மிகுதி யானும் பொருளதி னிறைத லானுந்
    தூற்றுரை யிலாமை யானுந் துகளிலொப் புரைக ளெல்லாந்
    தேற்றம துரைத்த லானுஞ் சிவபிராற் களவில் வேதஞ்
    சாற்றிய பிரம மாதி தனிப்பெய ரனைத்து மெய்யே.
    (அ-ரை) போற்றுரை - புகழ்மொழி; பொருள் - உண்மை; தூற்றுரை - நிந்தை; துகள் இல் - குற்றமில்லாத; ஒப்புரைகள் - தெய்வங்களை வரிசைப்படுத்தி ஒத்திட்டுப் புகழும் வாக்கியங்கள்; 'பராத் பரதரோ ப்ரஹ்மா--' என்பது போலும்.  தேற்றம் - உயர்வு; நிச்சயம்.
    'காரெழில் புரையுமேனிக் கண்ணனை யென்னைப் பின்னை - யாரையும் புகழும் வேத மான்றனைத் துதித்ததேபோ - லோருரை விளம்பிற்றுண்டோ வுரைத்தது முகமனென்றே - பேருலகறிய முன்னும் பின்னரும் விலக்கிற் றன்றே, என்ற கந்தபுராணம் இச்செய்யுட்குப் பிரமாணம்.        (சஎ)
******
    பிரணவ மந்திரம் சிவசம்பந்தமுடையதென்பது
    பிரணவ முமையாந் தாய்க்குப் பெரும்பெய ராகிச் சாரு
    மரவணி யமல னீன்ற வைங்கர னவன்பின் வந்த
    சரவண னிவர்க்குச் சாருந் தண்ணருண் முகங்க ளாகிச்
    சிரவண மறையு மதைச் செப்பிடுஞ் சைவ மென்றே.
    (அ-ரை) பெரும்பெயர் - உயர்ந்த பெயர்; சாரும் - பொருந்தும்; ஐங்கரன் - விநாயகர்; சரவணன் - சுப்பிரமணியர்; தண் - குளிர்ந்த; சிரவண மறை - கேட்கத்தகுந்த வேதம்; அதை - அப்பிரணவத்தை.
    'உமாம் ஹைமவதீம்' என்ற கேநோபநிஷத்தும், 'ஓமெனப்படுங் குடிலையே யொப்பிலா முருகன் மாமுகத்துளொன்றாம் ' என்ற கந்தபுராணமும், 'ஓங்கார ஸ்வரூபிணம் மஹாதேவம்' என்ற பஸ்மஜாபாலோப நிஷத்தும், 'சிவோமே அஸ்து ஸதாசிவோம் என்ற நாராயணோப நிஷத்தும், 'ஸப்ரஹ்மண்யோம் ஸப்ரஹ்மண்யோம் ஸப்ரஹ்மண்யோம்' என்ற தைத்திரீய ஆரண்யகமும், 'ஓம் ப்ரணவா நந தேவாய நம:' என்ற விநாயக மந்திரமும், 'த்யாயே தோங்கார மீச்வரம்' , 'ஓமித்யேகாக்ஷரம் ப்ரஹமத்யேயம் ஸர்வமுமுக்ஷபி' என்ற தியாகபிந்தூபநிஷத்தும், 'உமாக்யா ப்ரணவாத்மிகா' என்ற சம்பவ காண்டமும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள்.    (சஅ)
******
    ஹரி: ஓம் என்பது உமையொரு பாகனைச் சுட்டுமென்பது.
    தூயவ ரரியோ மென்று தொடங்குவர் வேதந் தன்னை
    யேயிதை யறியாய் கொல்லோ வென்றிடி னியம்பக் கேணீ
    தாயரி பதத்துக் கர்த்தந் தந்தையா மோமுக் கர்த்தம்
    வேயுறு தோளி பங்கன் மேலதா மாத லாலே.
    (அ-ரை) ஏ- நகையாடும் இடைச்சொல்; வேயுறுதோளிபங்கன் - அம்மையப்பன்; அது வேயுறுதோளிபங்கன் மேல் ஆம் என்க; அது - அந்த ஹரி; ஓம் என்பது.
    'அவரரியோமென்றாதி யறைகுவ துணர்வீரென்றா - ரிவரதம்மையப்ப ரியற்றிரு நாமமென்றார்' என்ற குமரகுருபர சுவாமிகள் சரிதம் இச்செய்யுட்குப் பிரமாணம்.       (சகூ)
******
    காயத்திரி மந்திரத்தால் வந்திக்கப்படுந் தெய்வம் சிவபிரானே யென்பது.
    உவமனில் பருக்கச் சொல்லை யுரூடியாய் வைத்து வேதஞ்
    சிவபிரான் றானே காயத் திரிப்பொரு ளென்று செப்புங்
    குவலய்ந் தன்னில் வேதக் கொலை ஞரவ் வுரூடிப் பேரை
    யவமுறும் யோக மாக்கி யரிமுதற் பிறர்மேல் வைப்பார்.
    (அ-ரை) பருக்கச் சொல்லை - 'பர்க:' என்ற பதத்தை; உரூடி - இடுகுறி, காரண இடுகுறியுமாம்; குவலயந்தன்னில் - உலகில்; வேதக்கொலைஞர் - வேதத்துக்கு விபரீதார்த்தஞ் செய்து வேதபுருஷனை மனம் நோவச் செய்பவர்; அவம் உறும் - பலவற்றினும்  போய்ப்பற்றி விபசரிக்கிற; யோகம் - காரணப்பெயர்.
    'தத்ஸவிதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி| தியோயோந: ப்ரசோதயாத்' என்ற நாராயணோபநிஷத்தும், 'பர்கோக்யோ - - பர்ந இதி ருத்ரோ ப்ரஹ்ம வாதிநோத' என்று மைத்ராயண்யுபநிஷத்தும், 'பர: சிவ: - - பர்க உச்யதே' என்று திரிபுராதாபிநியுபநிஷத்தும் அம்மந்திரத்துக்கு உரை கூறியதும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள். (ரு0)
******
    ஆதித்ய ஹ்ருதயத்திலிருப்பவர் சிவபிரானே என்பது.
    பொன்னிற வுருவத் தெய்வம் பொருந்தின தெல்லி லென்று
    மன்னதொ ருருவத் தெய்வ மற்புதச் சிவனே யென்றுஞ்
    சொன்னது வேத மென்னிற் சூரிய வுலகந் தன்னுண்
    மன்னிய வாதித் தன்பால் வதிபவன் சிவனே யன்றோ.
    (அ-ரை) எல்லில் - சூரியனிடத்தில்; அன்ன - அப்படிப்பட்ட; அற்புதம் - அதிசயகுணங்கள்; மன்னிய - பொருந்திய; ஆதித்தன் என்பது சூரிய மண்டலத்தின் அதிதேவதைக்குப் பெயர்; வதிபவன் - இருப்பவன்.
    'யஏஷோந்தராதித்யே ஹிரண்மய: புருஷ:' என்ற சாந்தோக்யோப நிஷத்தும் நாராயணோப நிஷத்தும் மைத்ராயண்யுபநிஷத்தும், 'ஸர்யோந்தராதித்யே ஹிரண்மய: புருஷ:' என்ற நரஸிம்ஹ பூர்வதாபிநியுபநிஷத்தும், 'ஹிரண்யவர்ணாய ஹிரண்யரூபாய - - அம்பிகாபதய - - பசுபதயே நமோ நம:' என்ற நாரராயணோபநிஷத்தும், ' ஹிரண்யவர்ணம் ஹிரண்யரூபம் - - விரூபாக்ஷம்' என்ற ப்ருஹதாரண்யகோபநிஷத்தும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள்.            (ருக)
******
    சிவபிரானே பசுவானென்பது
    ஈசுரன் சிவன்சர் வஞ்ஞ னுக்கிர னிகல்செய் காம
    நாசனென் பெயர்க டாமு நல்லிருக் குரையுங் காண்போர்
    தேசமர் பகவ நாமஞ் சிவபிரான் றனக்கே யுண்மை
    வாசகம் வேறு தேவர்க் குபசார வசன மென்பர்.
    (அ-ரை) இருக்குரை - ருக்வேத வாக்கியம்; தேசுஅமர் - ஒளி பொருந்திய.
    'ஐச்வர்யஸ்ய ஸம்கரஸ்ய வீர்யஸ்ய யசஸ்சிய:| ஜ்ஞாந வைராக்ய யோச் சேவ ஷண்ணாம் பக இதீரணா' என்ற விஷ்ணுபுராணமும், 'ஐசுவரியம் வீரியம் புகழ் திருஞானம் வைராக்கியம் என்னு மாறும் பகமெனப்படுதலின், இவை சிவபிரானுக்கே யுண்மையின் அவரே பசுனெனப்படுவர்.  அற்றேல், இவை யாறுஞ் சிவபிரானுக்கு உள்ளனவென்பதற்குப் பிரமாணமென்னையெனின்; - அவருக்கு ஐசுவரிய முண்மைக்கு ஈசுரபதச் சுருதியும், வீரியய முண்மைக்கு உக்கிரபதச் சுருதியும், புகழுண்மைக்குச் சிவபதச் சுருதியும், திருவுண்மைக்கு இருக்குவேதமும், ஞானமுண்மைக்குச் சர்வஞ்ஞ சுருதியும், வைராக்கிய முண்மைக்குக் காமரிபுபதச் சுருதியும் பிரமாணமாமென்க' என்ற சதுர்வேத தாற்பரிய சங்கிரகமும், 'தவச்ரியே மருதோ மர்ஜயந்த ருத்ரயத்தே ஜநிமசாருசித்ரம்', 'ச்ரேஷ்டோ ஜாதஸ்ய ருத்ர ச்ரியா சிதவஸ்த மஸ்தவஸாம் வஜ்ர பாஹோ' என்ற ருக் வேதமும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள்.      (ருஉ)
******
    இதுவுமது.
    பதவுரை தொடங்க லுண்டாற் பகவனே யீச னென்று
    விதமுறு வேதந் தன்னில் விளங்கிடும் பகேச நாமம்
    பதமய வுமைக்குப் பேராம் பகவதி யாத லாலே
    நிதநித மினிக்கு முக்க ணிமலனே பகவன் காணே.
    (அ-ரை) பதவுரை - நிகண்டு; விதம் உறு - நான்கு வசைகளையுடைய; நிதநிதம் - எப்போதும்.
    'பகவனே யீசன் மாயோன் - -' என்ற நிகண்டும், 'பகேசம்' என்ற சுவேதாசுவதரோபநிஷத்தும், 'பக: சக்திர் பகவாந் காம ஈச உமாதா தாராவிஹ ஸெளபகாநாம்' என்ற திரிபுரோப நிஷத்தும், ' அக்ஷர: ஸோமா' என்ற ருத்ரஹ்ருதயோபநிஷத்தும், ' எப்போது மினியபிரான்' என்ற பெரிய புராணமும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள்.        (ருங)
******
    சிவபிரான் சந்நிதானத்தில் யாருஞ் சாமியாதலில்லை யென்பது.
    அம்புலி தேச னாவ னாதவ னொளியைப் பெற்றுச்
    சம்புவி னருளைப் பெற்றுச் சாமிமா லாவ னந்த
    வம்புலி தேச னாத லாதவன் முன்ன மில்லை
    சம்புமு னந்த மாலோன் சாமிதா னாத லின்றே.
    (அ-ரை) தேசன் - ஒளியுடையவன்; ஆதவன் - சூரியன்; சம்புவின் - சிவபிரானுடைய; மால் - விஷ்ணு; நாராயணனைச் சொன்னது இங்கு உபலக்கணம்.    (ருச)
******
    ஜகத் விஷ்ணுமய மென்பதும் சிவபிரான் ஜகத்கர்த்தா வென்பதும்.
    மாலொரு விசுவ மாவன் மற்றதைத் தாண்டு சீரான்
    மேல்பிற ரில்லா வீசன் விச்சுவ வதிக னாவன்
    மாலொரு பகுதி மாயை மகத்தென விருப்பன் பொல்லா
    மால்செயு மதையாள் சீரான் மகேச்சுர னாவன் சம்பு.
    (அ-ரை) மால்-விஷ்ணு; சீரால் - தன்மையால்; பகுதி, மாயை, மகத் - பிருகிருதி; பொல்லாமால் - பொல்லாத மயக்கத்தை; அதை - அந்தப் பிரகிருதியை.
    'விச்வம் நாராயணம்--', 'விச்வாதிகோ ருத்ரோ மஹர்ஷி:', 'விச்வம் நாராயணம் ஹரிம்', 'தஸ்யப்ரகிருதி லீநஸ்ய ய: பர மஹேச்வர:' என்ற நாராயணோப நிஷத்தும், 'விச்வாதிகோருத்ரோ மஹர்ஷி:' 'மாயாந்து ப்ரக்ருதிம் வித்யாந் மாயிநந்து மஹேச்வரம்', 'புருஷம் மஹாந்தம்' என்ற சுவேதாசுவதரோபநிஷத்தும், 'மஹாந்தம் - - சிவம்', 'புருஷம் மஹாந்தம்' என்ற நாரதபரிவ்ராஜகோபநிஷத்தும், 'விச்வம் நாராயணம் ஹரிம்,' 'மஹாந்தம் - - சிவம்' என்ற மஹோபநிஷத்தும், 'விச்வாதிகோருத்ரோ மஹர்ஷி:' என்ற பஸ்ம ஜாபாலோபநிஷத்தும், 'விச்வாதிகோருத்ரோ மஹர்ஷி:' என்ற பஸ்ம ஜாபாலோபநிஷத்தும், 'மஹேச்வர இதி| யஸ்மாந் மஹத ஈச:' 'மஹத ஈசதே தஸ்மாதுச்யதே மஹேச்வர இதி' , என்ற சாண்டில்யோபநிஷத்தும் 'ஸ்வ மாயாவைபவாந்ஸர்வாந்' என்ற பஞ்சப்ரஹ்மோபநிஷத்தும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள்.    (ருரு)
******
    சிவபிரானே அமிர்தவாசகத்துக்குரிய தெய்வமென்பது.
    அமிருத நாமன் பொன்னி னழகிய வண்ண னாவ
    னிமிருத மடியார் வாழ வாளுவ னீசா னன்றா
    னமிருத னாமச் செப்பா மருஞ்சத ருத்தி ரீய
    மமிருத னரனே யென்ப தம்மறை மொழியாற் றேற்றம்.
    (அ-ரை) நாமன் - பெயரையுடையவன்; அமிருதன் நாமச் செப்பு - அமிருதனுடைய பெயர்கள் வைக்கப்பட்ட சிமிழ்.
    'அம்ருதோ ஹிரண்மய:' என்ற தைத்திரீயோபநிஷத்தும், 'உதாம் ருதத்வஸ்யேசாந:' என்ற சுவேதசுவதரோபநிஷத்தும், 'தேநாம்ருதத் வஸ்யேசாநம்' என்ற கெளஷீதகிப்ராஹ்மணோபநிஷத்தும், 'சதருத்ரியே ணேத்யேதாநயேவஹவா அம்ருதஸ்ய நாமாநி' என்ற ஜாபாலோபநிஷத்தும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள்.        (ருசா)
******
    சிவபிரானே துன்பத்தை நீக்குபவரும் இன்பத்தை ஆக்குபவருமாவரென்பது.
    துன்பினை நீக்க வல்லா னென்பது தோன்ற நிற்கு
    மொன்பது வடிவன் கொண்ட வுருத்திர நற்பே ரன்னோன்
    றன்பெய ராய சம்பு சங்கா சிவநற் சொற்க
    ளின்பினை யாக்க வல்லா னென்பது தோன்ற நிற்கும்
    (அ-ரை) ஒன்பது வடிவன் - சிவபிரான்; அவ்வடிவங்கள் பிரமன் விட்டுணு உருத்திரன் மகேச்சுரன் சதாசிவன் அபரவிந்து அபரநாதம் பரவிந்து பரநாதம் என்பன.  கடைசி நான்கை விந்து நாதம் சத்தி சிவம் என்றலுமுண்டு.
    'குறைவிலாமங்கல குணத்த னாதலி - னிறைமலமனாதியி னீங்கி நிற்றலி னறைகுவர் சிவனென வறிவின் மேலவர்', 'இன்பஞ் செய்தலிற் சங்கரனெம்பிரா -னின்ப மாக்கலிற் சம்பு விடும்பை -யென்ப தோட்டு மியல்பி னுருத்திரன்' என்ற காஞ்சிப்புராணமும், 'இன்னலங் கடலுட் பட்டோர் யாரையு மெடுக்கு நீரா - லுன்னரும் பரம மூர்த்தி யுருத்திர னெனும்பேர் பெற்றான்' என்ற கந்தபுராணமும்.  'ஸர்வா நந்தமய: சிவ:' என்ற தேஜோபிந்துபநிஷத்தும், 'சிவ ஏகோத்யேய: சிவம்கர:' என்ற அதர்வசிகோபநிஷத்தும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள்.   (ருஎ)
******
    புலையன் சிவநாமத்தைச் சொன்னாலும் அவனை மதிக்கவேண்டுமென்பது.
    பசியற வாவைத் தின்னும் பறையனே யெனினு மோர்காற்
    கசிவொடு சிவனே யென்று கழறிடி னவன்பா லண்மிப்
    புசியுறை பேசு மைந்தா வெனமறை புகற லாலே
    வசிபுரி சிவப்பேர் மாண்பை மதீயுளாய் கண்டு வாழே.
    (அ-ரை) ஆவை - பசுவை; ஓர்கால் - ஒருதரம்; கசிவொடு - அன்புடன்; கழறிடின் - சொன்னால்; அண்மி - சென்று; புசி - உண்; உறை - உடன்வசி; புகறலாலே - சொல்கிறபடியால்; வசிபுரி - எல்லாவற்றையுந் தன் வசப் படுத்துகிற.
    'அபிவாயச் சண்டானைச் சிவ இதிவாசம் வதேத்தேந ஸஹஸம் வதேத் தேந ஸஹஸம் வஸேத்தேந ஸஹபுஞ்ஜீத' என்ற முண்டகோபநிஷத்தும், 'ஸர்வஸ்யவசீ ஸர்வஸ்யேசாந:' என்ற ப்ருஹதாரண்யகோபநிஷத்தும், 'எகோவசீ' என்ற கடோப நிஷத்தும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள். (ருஅ)
******
    சிவபிரானா லன்றி ழத்தி சித்தியா தென்பது
    உருவமில் விசும்பைத் தோல்போ லுரித்துடுத் திடவல் லானே
    சருவசம் பன்ன னான சம்புவின் ஞான மின்றிப்
    பருவரல் சாய்ந்து முத்தி பற்றுவா னென்னும் வேத
    மொருவரும் பவரே கொள்ளா ருமாதவன் றலைமை தன்னை.
    (அ-ரை) உருவம் இல் - அருவமான; விசும்பை - ஆகாயத்தை; சருவ சம்பந்தன் - எல்லாச் செல்வங்களையுமுடையவன்; சம்புவின்ஞானம் - சிவபிரானை அறியும் ஞானம்; பருவரல் - துன்பம்; சாய்ந்ந்து - நீங்கி; பற்றுவான் - அடைவான்; ஒருவரும் பலர் - நீங்கமாட்டாத பாவங்களை யுடையவர்.
    'யதாசர்ம வதாகாசம் வேஷ்ட யிஷ்யந்தி மாநவர்: | ததாசிவ மலிஜ்ஞாய துக்கஸ்யாந்தோ பவிஷ்யதி' என்ற சுவேதாசுவதரோபநிஷத்தும், 'ஸர்வைச் வர்ய ஸம்பந்ந: - - சம்பு' என்ற அதர்வசிகோபநிஷத்தும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள்.    (ருகூ)
******
    சிவபிரானுக்குப் பசுபதி நாமமும் விஷ்ணுவுக்குக் கோபாலநாமமும் வந்தவாறிது வென்பது.
    பசுவென லுற்ற தான்மாப் பாசமுற் றுழன்ற வாற்றாற்
    பசுபதி யெனலை யுற்றான் பரசிவன் பதியா யந்தப்
    பசுவினை யாண்ட சீராற் பாரிடை யிடையிற் றோன்றிப்
    பசுநிரை மேய்த்தே மால்கோ பாலனென் றிடலை யுற்றான்.
    (அ-ரை) உழன்ற ஆற்றால் - வருந்துதலினால்; பாரிடை - உலகில்; இடையில் - இடைக்குலத்தில்; பசுநிரை - பசுமந்தைகளை.
    'பாசம் பரம பந்தநம்' என்ற மஹோபநிஷத்தும், 'பாசபந்தஸ் ததா ஜீவ:' என்ற ஸ்கந்தோபநிஷத்தும், 'ஸம்ஸாரீஜீவ: ஸ ஏவ பசு:- - ஸர்வேச்வர ஈச: பசுபதி:' என்ற ஜாபால்யுபநிஷத்தும், 'ஜீவாத்மரூபம் ஜ்யோதிரூப மணுமாத்ரம் வந்ததே' என்ற த்யாநபிந்தூபநிஷத்தும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள்.            (சா0)
******
    சிவபிரானே உத்தகோத்தம புருஷனென்பது.
    ஆரிய மறைசொல் காயத் திரிகளீ ராறு லைந்தாஞ்
    சீரிய சைவ மாங்கே திகழ்ந்திடும் புருட நாம
    மோரி புருடர்க் குள்ளே யுத்தம னென்போர்க் கந்நூல்
    பூரண சிவனை யுத்த மோத்தம புருட னென்னும்
    (அ-ரை) ஈராறுள் - பன்னிரண்டனுள்; ஐந்து சீரிய சைவம் ஆம் என்க.  சைவம் - சிவசம்பந்த முடையவை; ஆங்கே - அவ்வைந்தனுள்ளும், ஏர்- அழகு; பூரண - வியாபக.
    சிவசம்பந்த முடையனவாய்ப் புருஷநாமம் வந்த ஐந்து காயத்திரிகள் 'புருஷஸ்ய வித்மஹே ஸஹஸ்ராக்ஷஸ்ய மஹாதேவாயதீமஹி தந்நோ ருத்ர: ப்ரசோதயாத்', 'தத்புருஷாய வித்மஹே மஹாதேவாய தீமஹி தந்நோ ருத்ர: ப்ரசோதயாத்', 'தத்புருஷாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி தந்நோதந்திப்ரசோதயாத்' , 'தத்புருஷாய வித்மஹே சக்ரதுண்டாய தீமஹி| தந்நோ நந்தி: ப்ரசோதயாத்' ,'தத்புருஷாய வித்மஹே மஹாஸேநாய தீமஹி| தந்ந: ஷண்முக: ப்ரசோதயாத்| என்பன.  இவையும் மற்ற ஏழு காயத்திரிகளும் நாராயணோபநிஷத்தில் உள.  அவ்வுபநிஷத்தும், 'ஊர்த்வபூர்ணமத: பூர்ணம் மத்ய பூர்ணம் சிவாத்மகம்' என்ற முக்திகோபநிஷத்தும், 'ஸர்வவர்ணா புருஷதைவத்யா' என்ற அதர்வசிகோபநிஷத்தும், 'புருஷம் நிர்குணம் ஸாங்க்யம் அதர்வசிரோவிது' என்ற மந்திரிகோபநிஷத்தும், 'ஹிரண்மய: புருஷ ஏக ஹம்ஸ:' என்ற பிருஹதாரண்யகோபநிஷத்தும், 'புருஷோத்தமோத்தமம் - ஸர்வேச்வரம்' என்ற நாரதபரிவ்ராஜகோபநிஷத்தும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள்.        (சாக)
******
    விஷ்ணு பெண்ணும் சிவபிரானுக்கு மனைவியும் ஆவரென்பது.
    சென்னிக ளொருநான் குள்ள தேவனைப் பெறவு மாழி
    யின்னமு தமரர் தங்கட் கீயவுந் தாருக் காட்டின்
    மன்னிய முனிவர் தம்மை மயக்கவு மால்பெண் ணானா
    னன்னளை யான்சூ லேற்ற வையனை யவள்பெற் றாளே.
    (அ-ரை) சென்னிகளொருநான்குள்ள தேவனை - பிரமனை; தாருக் காட்டில் - தாருகாவனத்தில்; மன்னிய - இருந்த; அன்னனை - அவ்விஷ்ணு மங்கையை; சூல் ஏற்ற - கருப்பம் உண்டாக்க; ஐயனை - ஹரிஹரபுத்திரனை.
    'மாயோன் மகடூஉ வாகிய காலைத்தடமுலை திளைத்துச் சாத்தனைத் தருதலின்' என்ற சுலோக பஞ்சகமும், 'பிறைதங்கு சடையானை வலத்தே வைத்துப் பிரமனைத் தன் னுந்தியிலே தோற்று வித்து' என்ற பிரபந்தமும், 'முன்னை வேதன் முடிந்தனன் போதலு - முன்னோடே வந்துவப்பொடு கூடினோம் - பின்ன ரிந்தப் பிரமனை யுந்தியா - லன்னை யாகி யளித்தனை யல்லை யோ' என்ற கந்தபுராணமும் இச் செய்யுட்குப் பிரமாணங்கள்.    (சாஉ)
******
    பஞ்சாக்ஷரமே தாரக மந்திரமென்பது.
    வாரண வாசி தன்னின் மாரண மாவோர் காதிற்
    றாரக முபதே சிக்குஞ் சம்புவே மறையி லதைச்
    சீரண வெழுத்தைந் தென்று செப்பின னறிந்தோர் வேறு
    தாரக மனுக்க டம்மைத் தள்ளுவர் முகம னென்றே.
    (அ-ரை) வாரணவாசிதன்னில் காசியில்; மாரணமாவோர் - சாகிறவர்களுடைய; தாரகம் - தாரகமந்திரம்; சீர் அணவு - சிறப்புப் பொருந்திய எழுத்து ஐந்து - வியஷ்டிப் பிரணவமாகிய பஞ்சாக்ஷரம்; அறிந்தோர் - அவ்வுண்மையைத் தெரிந்தவர்கள்; மனு - மந்திரம்; வேறு தாரகமாவன நாராயணநாமமும் ராமநாமமுமாம்; ஓங்காரதாரகம் பஞ்சாக்ஷரத்தின் சமஷ்டியேயாகலின் வேறெனப்படாது.
    'நமோ நாராயணாயேதி தாரகம்' (இது யாக்ஞவல்கிய வாக்கியம்) என்ற தாரஸாரோபநிஷத்தும், 'யத்ரருத்ராபிவா காச்யாம் மரணேஸ மகேச்வர:| ஐந்தோர் தக்ஷண கர்ணேது மத்தாரம் ஸமுபாதிசேத்'  (இது ராமவாக்கியம்) என்ற முக்திகோபநிஷத்தும், ' தாரகம் சைவம் மநூபதி சாமிதத்ரைவ முக்த்யர்த்தமுபதிச்யதே| சைவோயம் மந்த்ர: பஞ்சாக்ஷர:| பரமோமந்த்ரஸ் தாரகோயம் பஞ்சாக்ஷர:' (இது சிவவாக்கியம்), 'தாரகம் சைவம்' என்ற பஸ்மஜாபாலோபநிஷத்தும், 'ஸ்ரீராமஸ்யமநும் காச்யாம் ஜஜாபவ்ருஷபத்வஜ:', 'யத்தாரகம் ப்ரஹ்ம' என்ற ராமோத்தரதபிநியுபநிஷத்தும், 'ப்ரணவஸ்தாரக' என்ற பாசுபதப்ரஹ்மோபநிஷத்தும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள்.            (சாங)
******
    சிவபிரானைச் சிலவேதவசனங்கள் சொல்லித் துதிக்கு முகத்தால் அவர் பெருமைகள் மேலும் இவையென்பது.
    மறையினை யளிப்பான் றானு மறைநெறி புரப்பான் றானு
    மறையொரு வடிவன் றானு மறைப்பொரு ளாவான் றானு
    மறையள வடங்கான் றானு மாலவன் பிரமன் யார்க்கு
    மறையுப தேசன் றானு மதிமுடிப் பரனே யாவான்.
    (அ-ரை) அளிப்பான் - தருபவன்; புரப்பான் - ரக்ஷப்பவன்; மறையளவு - சுருதிப் பிரமாணம்; மதிமுடிப்பரன் - சிவபிரான்.
    'வேத சாஸ்திர புராணம் சகார்யம் காரணமீச்வர:' என்ற தேஜோ பிந்தூபநிஷத்தும், 'வேதைரநேகை ரஹமேவ வேத்யோ வேதாந்த க்ருத் வேத விதேய சாஹம்' என்ற கைவல்யோபநிஷத்தும் 'யோப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் யோவை வேதாம்ச் ச ப்ரஹிணோதி தஸ்மை', 'தத்வேத குஹ்யோபநிஷத்ஸ கூடம்', 'வேதாந்தே பரமம் குஹ்யம்' என்ற சுவேதா சுவதரோபநிஷத்தும், 'சம்போர் மஹாதேவம் ஜகத்குரும்' என்ற பஞ்சப்ரஹ்மோபநிஷத்தும்.  'ஸர்வவேதாந்த த்ருப்தோஸ்மி' என்ற மைத்ரேயோபநிஷத்தும், 'திவ்யஜ்ஞாநோபதேஷ்டாரம் தேசிகம் பரமேச்வரம்' என்ற யோகசிகோபநிஷத்தும், 'மஹாதேவம் ஜகத்குரும்' என்ற கர்போபநிஷத்தும், 'தக்ஷணாமுகமாச்ரித்ய ஜ்ஞாநமுத்ராம் ப்ரகல்பயேத்' என்ற பிரமவித்யோபநிஷத்தும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள்.    (சாச)
******
    இதுவுமது
    அக்கர மாவோய் நீயே யகரநீ யசர நீயே
    தக்கணா மூர்த்தி நீநாற் பொருள்களுந் தருவாய் நீயே
    பக்குவ ருன்னை யன்றிப் பரமென வொட்டாய் நீயே
    முக்குண ரகித னீயெம் முக்கணா வனைத்து நீயே.
    (அ-ரை) நாற்பொருள்கள் அறம் பொருள் இன்பம் வீடு.  பக்குவர் - ஞானிகள்; அன்றி - அல்லாமல் வேறு தெய்வங்களில் எதையும்; பரம் என - பரதெய்வமென்று சொல்லுதற்கு; ஒட்டாய் - இடங்கொடுக்கமாட்டாய்; அனைத்தும் - எல்லாம்.
    'ஸ்தாசிவோக்ஷரம்' என்ற திரிபுரதாபிநியுபநிஷத்தும், 'சிவமக்ஷரம்', 'அஹமேவ ஸர்வம்| மயிஸர்வம் ப்ரதிஷ்டிதம்' என்ற பஸ்மஜாபாலோபநிஷத்தும், 'அக்ஷரம் ஹர:' , 'ருத்ரயத்தே தக்ஷணமுகம் தேநமாம் பாஹி நித்யம்' என்ற சுவேதாசுவத்ரோபநிஷத்தும், 'அஜரம்சிவம்' என்ற மஹோபநிஷத்தும், 'தக்ஷணாமுகமாச்ரித்ய ஜ்ஞாநமுத்ராம் ப்ரகல்பயேத்' என்ற பிரமவித்யோபநிஷத்தும், 'தர்மார்த்தகாம மோக்ஷம்சவிந்ததி', 'த்வம்குணத்ரயாதீத' என்ற கணபதியுபநிஷத்தும், 'சிவ: ஸர்வம் சிவாதந்யந்நகிம்சந:' என்ற வராகோபநிஷத்தும், 'குணத்ரயமதீதம்' என்ற யோகசிகோபநிஷத்தும், 'குணாதீதம்' என்ற நாதபிந்தூபநிஷத்தும், 'த்ரிகுண ரஹிதம்' என்ற சுகரஹஸ்யோபநிஷத்தும், 'அகரமுதலானை', 'எல்லாமாமெம்பெருமான்' என்ற தேவாரமும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள்.        (சாரு)
******
    இதுவுமது
    அஞ்செனு மறிவுக் கெட்டா னஞ்செனும் பூத மேலா
    னஞ்செனு மவத்தை யில்லா னஞ்செனுங் கோசந் தோயா
    னஞ்செனு மியாகர்க் கின்ப னஞ்செனுந் தேவர் தேவ
    னஞ்செனு மெழுத்தா யுள்ளா னடியருக் கெளிய வீசன்.
    (அ-ரை) அஞ்செனும் அறிவு - சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம்; அஞ்செனும் பூதம் - பிருதிவி அப்பு தேயு வாயு ஆகாசம்; அஞ்செனும் அவத்தை - சாக்கிரம் சொப்பனம் சுழுத்தி துரியம் துரியாதீதம்; அஞ்செனும் கோசம் - அன்னமயம் பிராணமயம் மனோமயம் விஞ்ஞானமயம் ஆநந்தமயம்; தோயான் - அகப்படான்; அஞ்செனும் யாகம் - கருமம் தவம் செபம் தியானம் ஞானம்; யாகர்க்கு - யாகம் செய்பவருக்கு; அஞ்செனும் தேவர் - பிரமன் விஷ்ணு உருத்திரன் மகேசுரன் சதாசிவன்; அஞ்செனும் எழுத்து - ந ம சி வ ய.
    'சப்த ஸ்பர்ச ரூப ரஸ கந்த வர்ஜித' என்ற ஆத்மோபநிஷத்தும், 'ஸர்வேந்த்ரிய விவர்ஜிதம்' , 'ஸர்வபூதகுஹாசய:' என்ற சுவேதாசுவதரோப நிஷத்தும், 'ஸர்வேந்த்ரிய விவர்ஜித:' என்ற பிரமவித்யோபநிஷத்தும், 'அதீந்த்ரியம்' என், நாதபிந்தூபநிஷத்தும், 'ஸர்வபூதாதிவாஸ:' என்ற கோபாலோத்தரதாபிநியுபநிஷத்தும், 'பஞ்சாவஸ்தர: ஜாகரஸ்வப்நஸஷப்தி தூரீய துரீயாதீதா:' என்ற மண்டலப் பிராமணோபநிஷத்தும், 'ஐவேள்வியான அருமறை நான்கும் - - பயின்ற படிறர்' என்ற தேவாரமும், 'பஞ்ச ப்ரஹ்ம புருஷாந்' என்ற சாந்தோக்யோபநிஷத்தும், 'பஞ்சப்ரஹ்மாத்மகம் என்ற பஞ்சப்பிரமோபநிஷத்தும், பஞ்சப்ரஹ்ம மயரூபம்' என்ற யோகசிகோபநிஷத்தும், 'பஞ்சாக்ஷரமயம் சம்பும்' என்ற பஞ்சப்ரஹ்மோபநிஷத்தும், 'ஸர்வதாஸலபோஸ்ம்யஹம்' என்ற மைத்ரேயோபநிஷத்தும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள்.    (சாசா)
******
    இதுவுமது
    எங்கணுஞ் சிரங்க ளுள்ளா னெங்கணும் வதன முள்ளா
    னெங்கணு நயன முள்ளா னெங்கணுங் கிரீவ் முள்ளா
    னெங்கணுங் கரங்க ளுள்ளா னெங்கணும் பதங்க ளுள்ளா
    னெங்கணு நியம மாகி யிலங்கர னெல்லா முள்ளான்.
    (அ-ரை) ஈற்றடி 'எங்கணும்' என்பதை 'எல்லாம்' என்பதன் முன்னுங் கூட்டுக.  எல்லாம் - மற்றையவயங்களெல்லாமும்.
    'ஸர்வாநந சிரோ க்ரீவ: ஸர்வத: பாணிபாதம் தத்ஸர்வதோக்ஷ சிரோ முகம்| ஸர்வத: ச்ருதிமல்லோகே ஸர்வமாவ்ருத்யதிஷ்டதி||' என்ற சுவேதாசுவதரோபநிஷத்தும், 'விச்வதச் சக்ஷருத விச்வதோ முகோ விச்வதோ ஹஸ்த உத விச்வதஸ் பாத்' என்ற நாராயணோபநிஷத்தும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள்.        (சாஎ)
******
    இதுவுமது
    ஆயிரந் தலைக ளுள்ளா னாயிர முகங்க ளுள்ளா
    னாயிரங் கண்க ளுள்ளா னாயிரங் கண்ட முள்ளா
    னாயிரங் கைக ளுள்ளா னாயிர மலர்த்தா ளுள்ளா
    னாயிரம் பெயர்க ளுள்ளா னாருயிர்க் குயிரா மீசன்.
    (அ-ரை) கண்டம் - கழுத்து; தாள் - பாதம்; ஆர் - அருமையாகிய.
    'ஸஹஸ்ராக்ஷம் ஸஹஸ்ர சீர்ஷம் ஸஹஸ்ர சரணம்' என்ற பஸ்மஜாபாலோபநிஷத்தும், 'ஸஹஸ்ர சீர்ஷா புருஷ: ஸஹஸ்ராக்ஷ: ஸஹஸ்ரபாத்' என்ற சுவேதாசுவதரோபநிஷத்தும், 'ஸஹஸ்ர சீர்ஷா புருஷ: ஸஹஸ்ராக்ஷ: ஸஹஸ்ரபாத்| ஸஹஸ்ர பாஹ:' என்ற ஸபாலோபநிஷத்தும், 'ஆத்மாந் தர்யாம் யம்ருத:' என்ற பிருஹதாரண்யகோபநிஷத்தும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள்.    (சாஅ)
******
    இதுவுமது
    ஆதியொ டந்த மாவா னகிலமும் வசியஞ் செய்வா
    னோதரு சித்தி யெட்டு முதவுவன் சருவன் ஞான
    ஞாதுரு ஞேய மாவா னற்பவன் றேவ தேவன்
    சோதனை யெதற்கு மெட்டா னென்பவர் துயரம் போமே.
    (அ-ரை) அகிலமும் - எல்லாவற்றையும்; வசியஞ் செய்வான் - வசப்படுத்துவான்; ஓதரு - சொல்லுதற்கரிய; உதவுவன் - கொடுப்பான்.
    'ஸதாசிவ ஆதிபூத:' என்ற திரிபுராதாபநியுபநிஷத்தும், 'வசீஸர்வஸ்ய லோகஸ்ய ஸ்தாவரஸ்ய சரஸ்யச' என்ற சுவேதாசுவதரோபநிஷத்தும், 'அணிமாதிகமைச்வர்யம சிராத்தஸ்ய ஜாயதே' என்ற யோகசிகோபநிஷத்தும், 'தஸ்மாதணிமாதி ஸித்திர்பவதி' என்ற அத்வயதாரகோபநிஷத்தும், 'அணிமாத்யஷ்டைச்வர்யாசாஸித்தஸங்கல்போ பந்த:' என்ற நிராலம்போநிஷத்தும், 'பவாய நம: பவலிங்காய நம:| சர்வாய நம: சர்வலிங்காய நம:' என்ற நாராயணோபநிஷத்தும், 'ஓமித்யேவ யதுத்பூதம்ஜ்ஞாநம் ஜ்ஞேயாத்மகம் சிவம்' என்ற சாண்டில்யோபநிஷத்தும், 'ஜ்ஞாத்ருஜ்ஞாந ஜ்ஞேபாநா மாவிர் பாவதிரோபாவ - -' என்ற ஸர்வஸாரோபநிஷத்தும், 'ஜ்ஞாத்ரு ஜ்ஞாநஜ்ஞேய' என்ற முத்கலோபநிஷத்தும், 'தேவாதிதேவ - - உமாரமண - - ' என்ற சுகரஹஸ்யோபநிஷத்தும், 'நசோகமாப்நோதி' என்ற பஸ்மஜாபாலோப நிஷத்தும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள்.        (சாகூ)
******
    இதுவுமது
    எதுவே திருட்டாந் தங்க ளெனுமிவை கடந்த தெய்வம்
    பேதியா வுள்ளந் தோறும் பெருவிர லளவாந் தெய்வம்
    நீதியா நிமலத் தெய்வம் நிட்கள சகளத் தெய்வ
    மாதரா ளிடத்துத் தெய்வ மறைநடுத் தீபத் தெய்வம்.
    (அ-ரை) பேதியா - வேறுபடாத; நீதியாந் தெய்வம் நிமலமாந் தெய்வம் என்க.  மாதராள் - உமாதேவியாரை; இடத்து - இடப்பாகத்திற் கொண்ட.
    'ஹேது த்ருஷ்டாந்த வர்ஜிதம் - - பரமம் சிவம்' என்ற பிரம பிந்துபநிஷத்தும், 'ஹேது த்ருஷ்டாந்த வர்ஜிதம்' என்ற திரிபுராதாபநியுபநிஷத்தும், 'உமாஸஹாயம் - - அங்குஷ்டமாத்ர:' என்ற மண்டலப்பிராமணோபநிஷத்தும், 'அங்குஷ்டமாத்ரம் - - ஈச்வரம்' என்ற தியாநபிந்தூபநிஷத்தும், 'அங்குஷ்ட மாத்ர: புருஷோங்குஷ்டம் ச ஸமாச்ரித: | ஈச:' என்ற நாராயணோபநிஷத்தும், 'அங்குஷ்ட மாத்ர: புருஷோந்தராத்மா ஸதாஜநாநாம் ஹ்ருதயே ஸந்நிவிஷ்ட:', 'அங்குஷ்ட மாத்ரோ ரவிதுல்யரூப:' என்ற சுகரஹஸ்யோபநிஷத்தும், 'நீதிபலவுந்தன்னதுருவாம்' என்ற தேவாரமும், 'க்ருஷ்ண பிங்களோ மமேச்வர இஷ்டே| ததிதமஸ்ய ஸகள நிஷ்களம் ரூபம்|' என்ற சாண்டில்யோபநிஷத்தும், 'மூன்று வேதங்களின் நடுவிலுள்ளது யஜுர் வேதம்.  அதன் ஏழுகாண்டங்களினடுவிலுள்ளது நான்காவது காண்டம்.  அக்காண்டத்தினடுவிலுள்ளது ஐந்தாவது பிரச்னமாகிய ஸ்ரீருத்ரம்.  அதனடுவிலுள்ளது 'நமச்சோமாயசா' எனும் அநுவாகம் அதனடுவிலுள்ளது 'நமச்சிவாய சா' எனும் வாக்கியம்.  அதனடுவிலுள்ளது 'சிவ' எனும் பதியினது திருநாமம் என அறிக' என்ற வேதத்தைக் குறித்த வியாசமும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள்.    (எ0)
******
    இதுவுமது
    அரிதினு மரிதாந் தெய்வ மணுவினு மணுவாந் தெய்வம்
    பெரிதினும் பெரிதாந் தெய்வம் பிரியருக் கெளிதாந் தெய்வம்
    கரியுரி போர்க்குந் தெய்வங் கடவுள ரெலாமாந் தெய்வ
    மெரியொரு மூன்றாந் தெய்வம் யாமெலா மகிழுந்தெய்வம்.
    (அ-ரை) பிரியருக்கு - அன்பருக்கு; கரியுரி - யானைத்தோல்; எரி - அக்கினி.
    'அரியானை', 'மதயானையுரிபோர்ந்து' , ' முத்தீயானவன் சிவன்' என்ற தேவாரமும் 'அணோரணீயாந் மஹதோ மஹீயாந் - - ஈசம்' என்ற நாராயணோபநிஷத்தும், 'அணோரணீயாந் மஹதோமஹீயா நாத்மாஸ்ய ஐந்தோர் நிஹிதோகுஹாயாம்| தமக்ரதும் பச்யதி வீதசோகோ தாது: ப்ரஸாதாந் மஹீமாநமீசம்' என்ற நாரதபரிவ்ராஜகோபநிஷத்தும் சரபோநிஷத்தும், ' அணோரணீயாந் மஹதோமஹீயாநாத்மா குஹாயாம் நிஹிதோஸ்ய ஐந்தோ:| தமக்ரதும் பச்யதி வீதசோகோ தாது: ப்ரஸாதாந் மஹிமாநமீசம்' என்ற சுவேதாசுவதரோபநிஷத்தும், 'ஸர்வதேவமயம் சிவம்' என்ற தியானபிந்தூபநிஷத்தும், 'ஸர்வதேவமய: - - சிவ:' என்ற நாரதபரிவ்ராஜகோபநிஷத்தும், 'ஸர்வதேவமயம்' என்ற பஞ்சப்ரஹ்மோபநிஷத்தும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள்.        (எக)
******
    இதுவுமது
    சருவஞன் சருவ சாக்கி சருவவி யாபி சத்த
    னிருமல னசலன் வீர னிராமயன் காலா தீத
    னுருமிகு கனக ரேத னூர்த்துவ விரேதன் சுத்தன்
    பொருவில னிருவி காரி புராதன னாவன் சம்பு.
    (அ-ரை) உருமிகு - அழகுமிகுந்த; பொருவிலன் - சமமில்லாதவன்.
    'ஸர்வஜ்ஞ: - - பசுபதி' என்ற ஜாபால்யுபநிஷத்தும், 'ஸர்வஜ்ஞ - - சசிவம்' என்ற நரஸிம்ஹ பூர்வதாபநியுபநிஷத்தும், 'சிந்மாத்ரஜ்யோதிரஸ்ம்யஹம்' என்ற மைத்ரேயோபநிஷத்தும், 'ஸர்வஜ்ஞ - - உமாரமண' என்ற சுகரஹஸ்யோபநிஷத்தும், 'யத்கேவலம்ஜ்ஞாநகம்யம் - - சிவம்' என்ற சாண்டல்யோபநிஷத்தும், ஸர்வஸாக்ஷமஹேச:' என்ற சரபோநிஷத்தும், 'ஸர்வ ஸாக்ஷணம்' என்ற சாண்டில்யோபநிஷத்தும், 'பசுபதி: ஸாக்ஷஸர்வஸ்ய ஸர்வதா' என்ற பாசுபதப்ரஹ்மோபநிஷத்தும், 'ஸமஸ்தஸாக்ஷம் தமஸ: பரஸ்தாத்' , 'ஸமஸ்தஸாக்ஷம்' , 'ஸாக்ஷ - - ஸதாசிவ:' என்ற கைவல்யோபநிஷத்தும், 'ஸாக்ஷ' என்ற சுவேதாசுவதரோபநிஷத்தும், 'புத்திஸாக்ஷணம்' என்ற பஞ்சப்ரஹ்மோபநிஷத்தும், 'ஸர்வவ்யாபீ ஸ பகவாந் - - சிவ:', 'ஸரவவ்யாபீ ஸர்வபூதாந்தராத்மா' என்ற சுவேதாசுவதரோபநிஷத்தும், 'விபுமீச்வரம்' என்ற ஸ்ரீ ஜாபாலதர்சநோபநிஷத்தும், 'ஸர்வவ்யாபீ' என்ற அதர்வசிரோபநிஷத்தும், 'ஸத் - - லக்ஷண உமாரமண' என்ற சுகரஹஸ்யோபநிஷத்தும், 'நிர்மலம் சிவம்' என்ற நாதபிந்தூபநிஷத்தும், 'அசலம்' என்ற ஸ்ரீஜாபாலதர்சநோபநிஷத்தும், 'வீராஸநாரூடம் - - சிவம்' என்ற பஸ்மஜாபாலோபநிஷத்தும், 'த்வம் காலத்ரயாதீத:' என்ற கணபத்யுபநிஷத்தும், 'த்ரிகாஸாதீதம்' என்ற நரஸிம்ஹ பூர்வதாபிநியுபநிஷத்தும், 'காலத்ரய விமுக்தோஸ்மி' என்ற மைத்ரேயோபநிஷத்தும், 'ஹிரண்யரேதா' என்ற ஏகாக்ஷரோபநிஷத்தும், 'ஊர்த்வரேதம்' என்ற பஸ்மஜாபாலோபநிஷத்தும், நரஸிம்ஹ பூர்வதாபிநியுபநிஷத்தும், ஸ்ரீஜாபாலதர்சநோபநிஷத்தும், 'விசுத்தம்' என்ற கைவல்யோபநிஷத்தும், 'சுத்தம்' என்ற நாதபிந்தூபநிஷத்தும், 'அநூபமம்' என்ற ஸ்ரீஜாபாலதர்சநோபநிஷத்தும் நாதபிந்தூபநிஷத்தும், 'நிர்விகாரஸ்ததாசிவ:' என்ற திரிசிகிப்ராஹ்மணோபநிஷத்தும், ' புராதநோஹம்' என்ற கைவல்யோபநிஷத்தும், 'புராணம் - - ஸர்வேச்வரம்' என்ற நாரதபரிவ்ராஜகோபநிஷத்தும், 'புராணம் - - ஸநாதநம் 'ஸர்வேச்வரம்' என்ற மஹோபநிஷத்தும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள்.      (எஉ)
******
    இதுவுமது
    சத்திய ஞானா னந்த தத்துவா தீத வேக
    வத்துவி தீய மூல வப்பிர மேய வங்கம்
    நித்திய விரூப வக்க நிரஞ்சன வியோம ரூப
    முத்தனு வதீத முத்த முழுவது முனையன் றின்றே.
    (அ-ரை) முழுவதும்-சர்வப்பிரபஞ்சங்களும்; உனையன்றி இன்று - உன்னையல்லாமல் நிலைபெறா.
    'ஸத்யமீசாநம்ஜ்ஞாநமாநந்தம்' , 'ஸச்சிதாநந்தம்' என்ற ஸ்ரீஜாபாலதர்ச நோபநிஷத்தும், 'ஸத்யம் விஜ்ஞாநமநந்தம் ப்ரஹ்ம' என்ற சாண்டில்யோபநிஷத்தும், 'தத்வாதீதம் மஹாதேவ - - ' என்ற யோகசிகோபநிஷத்தும், 'ஸர்வதத்வைர்விசுத்தம்' என்ற சுவேதாசுவதரோபநிஷத்தும், 'ஏகமத்வைதம்' என்ற பஸ்மஜாபாலோபநிஷத்தும், 'யதேகமத்விதீயம்' என்ற சாண்டில்யோபநிஷத்தும், 'ஏகமேவாத்விதீயம்' என்ற தேஜோபிந்தூபநிஷத்தும், 'ஏக ஏவ சிவ:' என்ற சரபோபநிஷத்தும், 'மூலாதாரஸ்திதோஸி' என்ற கணபத்யுபநிஷத்தும், 'அப்ரமேயம்' என்ற பஸ்மஜாபாலோபநிஷத்தும் ஸ்ரீஜாபாலதர்ச்நோபநிஷத்தும், 'அப்ரமேயம் - - சிவம்' என்ற பிரமபிந்தூபநிஷத்தும் ஸ்ரீஜாபாலதர்சநோபநிஷத்தும் ருத்ரஹ்ருதயோபநிஷத்தும், 'சிவோ நித்ய:' என்ற சரபோபநிஷத்தும், 'ஸ்திரேபிரங்கை: புருரூப உக்ர:' என்ற ருக்வேதமும், 'சிவ: புருஷ ஈசாநோ நித்யமாத்மேதிகத்யதே' என்ற மஹோபநிஷத்தும், 'விரூபாக்ஷம்' என்ற பஸ்மஜாபாலோபநிஷத்தும் ஸ்ரீஜாபாலதர்சநோபநிஷத்தும், 'நிரஞ்ஜநம்' என்ற பஸ்மஜாபாலோபநிஷத்தும் சாண்டில்யோபநிஷத்தும் யோகசிகோபநிஷத்தும், 'ஆகாசமய விக்ரஹம்', 'ஆசாசாத்மகம்' என்ற பஞ்சப்ரஹ்மோபநிஷத்தும், 'ஆகாச சரீரம் ப்ரஹ்ம' என்ற தைத்திரீயோபநிஷத்தும், 'தேஹத்ரயம் ஸ்தூல ஸக்ஷ்ம காரணாகி விதுர்புதா' என்ற வராஹோபநிஷத்தும், 'த்வம்தேஹத்ரயாதீத:' என்ற கணபத்யுபநிஷத்தும், 'ஸர்வஸ்யேசாந:' என்ற பிருஹதாரண்யகோபநிஷத்தும், இச்செய்யுட்குப் பிரமாணங்கள்.     (எங)
******
    இதுவுமது
    கலாமய பாவா பாவ கரநிரா லம்ப கஞ்ச
    பொலாவிய லொன்று மில்லாய் பொருணிறை புகழே
    சிலாலிபி யெனவென் னெஞ்சிற் றீட்டிவை யுனக்கே முன்னூ
    லெலாமுரை சிவப்பேர் தன்னை யீசுர சுவய மாதோ.
    (அ-ரை) பொலாஇயல்  - கெட்டதன்மை; சிலாலிபி - கல்லிற் செதுக்கிய எழுத்து; தீட்டிவை - எழுதிவை; முன்னூல் - வேதம்.
    'பஞ்சகலாமயம்', 'சகலகலாவ்யாபிநீம்' என்ற திரிபுராதாபநியுபநிஷத்தும்', 'பாவாபாவகரம் சிவம்' என்ற சுவேதாசுவதரோபநிஷத்தும், 'பாவாபாவவிஹீநோஸ்மி' என்ற மைத்ரேயோபநிஷத்தும், 'பாவாபாவதித்வந்த்வா தீத:', 'சிவம் - - நிராலம்பம்' என்ற மண்டலப்ராஹ்மணோபநிஷத்தும், 'ஹம்ஸ ஏவ பரோருத்ரோ' , 'ஹம்ஸ ஏவ மஹேச்வர:' என்ற பிரம்ஹவித்யோபநிஷத்தும், 'ஹிரண்மய: புருஷ ஏக ஹம்ஸ:' என்ற பிருஹதாரண்யகோபநிஷத்தும், 'ஹிரண்மய: புருஷ ஏக மஹேச்வர:' என்ற பிருஹதாரண்யகோபநிஷத்தும், 'எங்குமெங்கள் பிரானார் புகழல திகழ்பழியிலரே', 'ஈனமிலாப்புகழண்ணல்' என்ற தேவாரமும், 'சிவநாமாந்யநிசமுச்சரந்தம்' என்ற பஸ்மஜாபாலோபநிஷத்தும், 'ஸ்வயமீச்வா:' என்ற நரஸிம்ஹோத்தாதாபநியுபநிஷத்தும், 'செல்லாத செல்வமுடையாய்', 'சென்றடையாத திருவுடையானை' என்ற தேவாரமும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள்.    (எச)
******
    இதுவுமது
    அந்தரி யாமி சிந்தைக் கரியவ னசன்சர் வாங்க
    சுந்தரன் றீபா காரன் சுசூக்கும னிருவி கற்பன்
    சந்ததங் குணமெட் டுள்ளான் சருவவித் தைக்கு மீசன்
    வந்தித னகண்டன் றுக்க வகையுயிர்க் கொழிக்கும் வள்ளல்.
    (அ-ரை) சந்ததம் - எப்போதும்
    'புருஷா: அந்தராத்மா' , 'ஸக்ஷ்மாதி ஸக்ஷ்மம்', 'அஜம்', 'அஜாம்' என்ற சுவேதாசுவதரோபநிஷத்தும், 'அசிந்த்யம்', 'ஸக்ஷ்மாத் ஸக்ஷ்மதாம்' என்ற கைவல்யோபநிஷத்தும், 'அஜம்', 'ஸர்வாங்கஸந்தரம்' என்ற மண்டலப்ராஹ்மணோபநிஷத்தும் 'தீபாகாரம் மஹாதேவம்' என்ற ப்ரஹ்ம வித்யோபநிஷத்தும், 'ஸஸக்ஷ்மம்' என்ற ருத்ரஹ்ருதயோபநிஷத்தும், 'நிர்விகல்பம் - - சிவம்' என்ற ப்ரஹ்ம பிந்தூபநிஷத்தும், 'ஏஷ ஆத்மாபஹாத பாப்மா விஜரோ விம்ருத்யுர் விசோகோ விஜிகத்ஸோ பிபாஸஸ் ஸத்ய காம ஸத்ய ஸங்கல்ப:' என்ற சாந்தோக்யோபநிஷத்தும், 'ஈசாந: ஸர்வவித்யாநாம்' என்ற நாராயணோபநிஷத்தும், 'தாபத்ரய ஸமுத்பூத ஜந்ம ம்ருத்யுஜராதிபி: நாநாவிதாநி துக்காநி ஜஹார பரமேச்வர:' 'நிர்விகல்பம்' என்ற சரபோபநிஷத்தும், 'அசிந்த்யம் - - சிவம்', 'ஈசாந: ஸர்வவித்யாநாம்' என்ற நரஸிம்ஹ பூர்வதாபநியுபநிஷத்தும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள்.    (எரு)
******
    இதுவுமது
    சவுமிய பிரபு சாச்சு விதபர மேட்டி சாந்த
    வவியய விசோக தீர்த்த வநாமய வநந்த ரூப
    கவியவி யத்த யார்க்குங் கருத்தவென் றெவனை வேதம்
    புவிதானி லழைக்கு மெல்லாப் பொருளுமாஞ்சிவனை விட்டே.
    "ஸெளம்யாம்' என்ற தேவ்யுபநிஷத்தும், 'ஈச: ஸர்வஸ்ய ஜகத: ப்ரபு:' என்ற நாராயணோபநிஷத்தும், 'சிவ: ப்ரபு:' என்ற வராஹோபநிஷத்தும், 'ஸர்வஸ்ய ப்ரபும்' என்ற சுவேதாசுவதரோபநிஷத்தும், 'ப்ரபும்' என்ற சரபோபநிஷத்தும், 'சாச்வதம் சிவம்' என்ற நாரத பரிவ்ராஜகோபநிஷத்தும், மஹோபநிஷத்தும், 'பரமேஷ்டிந: பரமேஷ்டீ' என்ற ப்ருஹதாரண்யகோபநிஷத்தும், 'ததவ்யயம்' என்ற ருத்ரஹ்ருதயோபநிஷத்தும், 'சிவம் - - அவ்யயம்' என்ற பஸ்மஜாபாலோபநிஷத்தும், 'விசோகம்' என்ற கைவல்யோபநிஷத்தும், 'அநாமயம்' என்ற பஸ்மஜாபாலோபநிஷத்தும், 'அநந்தரூபம்' என்ற கைவல்யோபநிஷத்தும், 'சிவம் சாந்தம்' என்ற நாரதபரிவ்ராஜகோபநிஷத்தும், 'சாந்தம்' என்ற பஞ்சப்ரஹ்மோபநிஷத்தும், 'கவீம்' என்ற நாரத ப்ரிவ்ராஜகோபநிஷத்தும், மஹோபநிஷத்தும், 'அவ்யக்தம்' என்ற கைவல்யோபநிஷத்தும், 'கர்த்தாரமீசம்' என்ற முண்டகோபநிஷத்தும், 'ஸர்வஸ்யாதிபதி:' என்ற ப்ருஹதாரண்யகோபநிஷத்தும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள்.    (எசா)
******
    இதுவுமது
    ஆதியு முடிவு மில்லா னன்னையும் பிதாவு மில்லான்
    பேதமொ டபேத மில்லான் பெண்ணொடா ணலிக ளில்லான்
    சாதலு முதிப்பு மில்லான் சத்தசத் திலன்பே ரில்லான்
    பாதியி லுமைவா ழீசன் பந்தமும் வீடு மில்லான்.
    'அநாத்யநந்தம்' , 'அநாத்யந்தம்' என்ற பஸ்மஜாபாலோபநிஷத்தும், 'அநாத்யந்தம்' என்ற திரிபுராதாபநியுபநிஷத்தும், 'அநாத்யந்தம்' என்ற சுவேதாசுவதரோபநிஷத்தும், 'ஆதிமத்யாந்தவர்ஜிதம்' என்ற ஸ்ரீஜாபாலதர்சநோபநிஷத்தும், 'ஆதிமத்யாந்த லிஹீநம்' என்ற கைவல்யோபநிஷத்தும், 'நசாஸ்யகச்சிஜ்ஜநிதா' என்ற சுவேதாசுவதரோபநிஷத்தும், 'ஏக ஸங்க்யா விஹீநோஸ்மி த்விஸங்க்யா நஹம் நச' என்ற மைத்ரேயோபநிஷத்தும், 'கைவஸ்த்ரீநபுமாநேஷ நசைவாயந்நபும் ஸக:' என்ற சுவேதாசுவதரோபநிஷத்தும் 'ஸதஸத்பேத விஹீநோஸ்மி த்விஸங்க்யா நஹம் நச' என்ற மைத்ரேயோபநிஷத்தும், 'கைவஸ்த்ரீநபுமாநேஷ நசைவாயந்நபும் ஸக:' என்ற சுவேதாசுவதரோபநிஷத்தும் 'ஸதஸத்பேத விஹீநோஸ்மி' என்ற மைத்ரோயோபநிஷத்தும், 'ஸதஸத்விஹீநம்' என்ற கைவல்யோபநிஷத்தும், 'ஸதஸத்வரேண்யம்' என்ற முண்டகோபநிஷத்தும், 'பந்தமோக்ஷதிஹீநோஸ்மி' என்ற மைத்ரேயோபநிஷத்தும், 'நிராக்ய:' என்ற சரபோபநிஷத்தும், 'சிவம் - - அநாமகம்' என்ற மஹோபநிஷத்தும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள். (எஎ)
******
    சிவபிரானே யாருமில்லாத காலத்திலு மிருப்பவரென்பது.
    ஏவரு மிறைஞ்சு ஞாயி றில்லையா யிரவு மின்றா
    யாவது மசத்துஞ் சத்து மில்லையா மாதி நாளிற்
    கேவல மாகி யுள்ளான் கேடிலாச் சிவனே யென்றான்
    மூவரு மறிவார் கொல்லோ முக்கணன் றினிமை யம்மா.
    (அ-ரை) ஏவரும் - எவரும்; இறைஞ்சும் - வணங்குகின்ற; அசத்தும் சத்தும் யாவதும் என்க.  யாவதும் - எதுவும்; ஆதிநாள் - சிருஷ்டிக்குமுன்; கேவலம் - தனி; என்றால் - என்று வேதஞ்ஞ்சொல்லுமாயின்; மூவரும் - பிரமனும் விட்டுணுவும் உருத்திரனும்.
    'பலர்புகழ்ஞாயிறு' என்ற திருமுருகாற்றுப்படையும், 'யதாதமஸ் தந்நதிவா நராத்ரிர் நஸந்நசாஸச்சிவ ஏவ கேவல:' என்ற சுவேதாசுவதரோபநிஷத்தும், 'யத்கேவலம் - - சிவம்' என்ற சாண்டில்யோபநிஷத்தும், 'கேவல: சிவ:' என்ற ஸ்கந்தோபநிஷத்தும், 'சிவம்யாதிது கேவலம்' என்ற ருத்ரஹ்ருதயோபநிஷத்தும், 'கேவல: சிவ' , 'கேவலோஸ்ம்யஹம்' என்ற மைத்ரேயோபநிஷத்தும், ஸர்வம் ப்ரஹ்மைவகேவலம்' என்ற தேஜோபிந்தூபநிஷத்தும்' , 'ப்ரஹ்ம கேவலம்' 'ப்ரஹ்மைவ கேவலம்' என்ற ஆத்மோபநிஷத்தும், திருக்குறள் 352 ஆம் குறளுக்குப் பரிமேலழகர்தந்த 'வீடாவது நிரதிசயவின்பமென்பதூஉம், அதற்கு நிமித்தகாரணம் கேவலப் பொருளென்பதூஉங் கூறப்பட்டன' என்ற உரைப்பகுதியும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள்.    (எஅ)
******
    சிவபிரான் கிருத்தியங்கள் செய்யுஞ் சதுரப்பாடு இதுவென்பது.
    செய்கலன் கரத்தா லொன்றுஞ் செய்குவன் கருத்தா லெல்லாஞ்
    செய்கலன் றானே யொன்றுஞ் செய்குவ னுமையா லெல்லாஞ்
    செய்கலன் றனக்கென் றொன்றுஞ் செய்குவ னுயிர்க்கே யெல்லாஞ்
    செய்கலன் வீணே யொன்றுஞ் சிவபிரான் சதுர்தா னென்னே.
    (அ-ரை) கரம் - கை; கரணங்களுக்கு உபலக்கணம்; கருத்து - சங்கற்பம்; சதுர் - சாமர்த்தியம்.
    'அபாணிபாதோ ஜவநோக்ரஹீதா பச்யத்யசக்ஷஸ் ஸக்ருணோத்ய கர்ண:' என்ற சுவேதாசுவதரோபநிஷத்தும் 'இறைவன் சத்தி - - சங்கற்ப மாத்திரையானே எல்லாத்தொழிலுஞ் செய்யும்' , 'முதல்வன் ஐந்தொழில் செய்தல் தன்பொருட்டோ? பிறர்பொருட்டோ? வீணோ? தன்பொருட்டெனின், - - வரம்பிலின்பமுடைய முதல்வனுக்கு இச்செய்கையான் வரக் கடவதோர் பயனில்லை - - வீணெனின் - - பித்தர்செய்யுந் தொழிலோ டொக்கும். - - உயிர்கள் பொருட்டே முதல்வன் ஐந்தொழில்செய்வன்' என்ற சிவஞான பாஷ்யமும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள்.    (எகூ)
******
    சிவபிரானே அஷ்டமூர்த்தி யென்பது.
    மண்ணொரு பவனீர் சர்வ னுருத்திரன் வன்னி தன்னிற்
    கண்ணிய பீமன் காற்றிற் ககனமீ தொளிர்மா தேவன்
    றண்ணில வதனிற் சோம னுக்கிரன் றகிக்கு மெல்லிற்
    பண்ணம ருமையாள் பாகன் பசுபதி யுயிரி லாவன்.
    (அ-ரை) வன்னிதன்னில் - தீயில்; ககனமீது - வானில்.
    'ப்ருதிவ்யோ பவ ஆபச் சர்வ அக்நேருத்ரோ வாயுர் பீம ஆகாசஸ்ய மஹாதேவ ஸர்யஸ்யோக்ர: சந்த்ரஸ்ய ஸோம: ஆத்மாந: பசுபதி:' என்ற சுருதியும், 'அஷ்டமூர்த்தி:' என்ற பஸ்மஜாபாலோபநிஷத்தும் ப்ருஹ்ஜ்ஜாபாலோபநிஷத்தும், 'அஷ்டமூர்த்யை' என்ற தத்தாத்ரேயோபநிஷத்தும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள்.    (அ0)
******
    சிவபிரானே சர்வதத்வாத்த னென்பது.
    முப்பது மாறு மாய தத்துவ முடிவி னின்ற
    திப்பிய பினாகி தானே தீதறு முத்திக் கீசன்
    முப்பதி னாறு போய தத்துவ முடிவி னின்ற
    குப்பதி யதனுக் கீசன் கொஞ்சமு மாகா னம்மா.
    (அ-ரை) முப்பதும் ஆறும் தத்துவம் - முப்பத்தாறு தத்துவங்கள்; பினாகி - சிவபிரான்; தீது அறு அழிவில்லாத; முத்திக்கு ஈசன் - முத்தியை யருளுங் கடவுள்; முப்பதின் ஆறு போய - இருபத்துநான்கு; கு பதி - பூமியின் கொழுநனாகிய விஷ்ணு; அதனுக்கு - அந்த முத்தியை யருளுதற்கு; கொஞ்சும் கிஞ்சித் என்ற வட சொல்லின் திரிபு.
    'ஷட்த்ரிம் சத் தத்வாதீத:' என்ற நாரத பரிவ்ராஜகோபநிஷத்தும், 'ப்ருதிவ்யாதி சிவாந்தம்' என்ற ப்ரஹ்மவித்யோபநிஷத்தும், 'சதுர்விம் சதி தத்வாரி கேசிதிச்சந்திவாதிந:| கேசித் ஷட்த்ரிம் சத் தத்வாநி கேசித் ஷண்ணவதீ நிச' 'ஆஹத்ய தத்வ ஜாதாநாம் ஷட்த்ரிம் சந் முநயோவிது:' என்ற வராகோபநிஷத்தும், இருபத்துநான்கு தத்துவங்களைக் காட்டிலும் பிரஸித்தமான இருபத்தைந்தாமவரும் - - பரமாத்மாவுமான அந்த வாஸதேவர்' என்ற பாரதம் சாந்தி 347 ஆம் அத்தியாயமும், 'பொங்கைம் புலனும் பொறையைந்தும் கருமேந்திரிய மைம்பூதம் - இங்கிவ்வுயிரேய் பிரகிருதி மானாங்கார மனங்களே' என்ற நாலாயிரமும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள்.        (அக)
******
    உபக்கிரம உபசங்கார மத்யே பராமரிசைகளால் நூற்றெட்டு உபநிடதங்களிலுஞ் சிவபிரானே சொல்லப்படுகிறாரென்பது.
    முன்னதி லீசச் சொல்லை முடிவதிற் சிவச்சொ றன்னைச்
    சொன்னது மன்றி யந்தச் சொற்பொரு டன்னை மத்தி
    தன்னினு மேத்திற் றுண்மை சாருப நிடநூற் றெட்டு
    மென்னினொ ரையந் தானு மீசுரன் முதன்மைக் குண்டோ.
    (அ-ரை) முன்னதில் - உபக்கிரமத்தில்; முடிவதில் - உபசங்காரத்தில்; உபக்கிரமோப ஸம்ஹார மத்யே பராமரிசையென்பது பொருள்கோள் முறைக்கு ஒரு நியாயம்; ஐயம் - சந்தேகம்; முதன்மைக்கு - பரத்துவத்துக்கு.
    'ஓம் ஈசாவாஸ்ய மிதம் ஸர்வம்' என்ற ஈசாவாஸ்யோபநிஷத்தும், 'ஊர்த்வ பூர்ண மத: பூர்ணம் மத்யபூர்ணம் சிவாத்மகம்' என்ற முக்திகோபநிஷத்தும், 'ராமம் த்ரிணேத்ரம் ஸோமார்த தாரிணம் சூலிநம் பரம்' என்ற ராமாஹஸ்யோபநிஷத்தும், 'ப்ரபஞ்சோபசமம் சாந்தம் சிவமத்வைதம் சதுர்த்தம் மந்யந்தே' என்ற ராமோத்தரதாபநியுபநிஷத்தும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள்.    (அஉ)
******
    சிவபிரானைப் பொது நீக்கித் தியானிக்கவேண்டுமென்று வேதத்துச்சி சொல்லுகிறதென்பது.
    அதருவ மிறுதி வேத மதருவ சிகைதா னந்த
    வதருவ முடிவா யோங்கு மழிவிலா வின்பஞ் சீவர்க்
    குதவிடு சிவனே தேய னொதுக்குக பிறரை யென்ற
    திதமுற விளம்ப லாலே யேத்துவ தெவனை வேதம்.
    (அ-ரை) உதவிடு - கொடுக்கிற; என்று அது இதம் கூற விளம்பலால் எனப்பிரிக்க.  அது - அந்த அதருவசிகோபநிஷத்து; இதம் - நன்மை; விளம்பலால் - சொல்லுகிறபடியால்; ஏந்துவது -சிரமேற் கொள்ளுவது.
    'சிவ ஏகோ த்யேய: சிவம் கர: ஸர்வமந்யத்பரித்யஜ்ய' என்ற அத்வசிகோபநிஷத்து இச்செய்யுட்குப் பிரமாணம்.        (அங)
******
    யார் எத்தேவரை வணங்கினாலும் அத்தேவர் அவ்வணக்கத்தைச் சிவபிரானுக்கே அர்ப்பணஞ் செய்துவிடுவரென்பது.
    அச்சுதன் பிரம னாதி யந்நிய தேவர் தம்மை
    யிச்சகம் வாழ்வோர் பூசை யியற்றிடி னதனை யன்பு
    மச்சமுங் கொண்டத் தேவ ரரனடிக் குய்ப்பா ரீது
    பொச்சமில் சுருதி கைகள் பொருந்திடா னவன்றான் காணே.
    (அ-ரை) இச்சகம் - இவ்வுலகத்தில் ; உய்ப்பார் - அருப்பிப்பார்; ஈது - இவ்வுண்மை; பெரச்சம் - குற்றம்; பொருந்திடான் - குவித்துப் பிறரைக் கும்பிடாதவன்; அவன் தான் - அந்த அரனே.
    'ஸ்தோமம் வோ சத்ய ருத்ராய சிக்வஸே| க்ஷயத்வீராய நமஸாதிதிஷ்டந ஏபிச் சிவஸ்வவாம் ஏவயாவபி:| திவஸ்ஸிஷக்தி மருதோ நிகாமாபி:' என்ற ருக்வேதமும், 'ஆகாசாத் பதிதம் தோயம் யதாகச்சதிசாகரம் ஸர்வதேவ நமஸ்காரம் சங்கரம் ப்ரதிகச்சதி' என்ற ஸ்மிருதியும், 'சேர்ந்தறியாக் கையானை' என்ற திருவாசகமும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள்.    (அச)
******
    சிவபிரானை வணங்காதவரில்லை; சிவபிரான் யாரையும் வணங்கிலரென்பது.
    விண்ணவ ரியோகர் சித்தர் விஞ்சையர் முனிவர் யாழோர்
    மண்ணவ ருரகர் மாப்புள் மரமுத லனைவோ ருள்ளுங்
    கண்ணிய னெற்றித் தேவைக் கைதொழார் யாரே யந்தப்
    பண்ணவ னேனோர் தம்மைப் பணிந்தது யாண்டு மின்றே.
    (அ-ரை) விண்ணவர் - தேவர்; விஞ்சையர் - வித்தியாதரர்; யாழோர் - கந்தர்வர்; மண்ணவர் - மனிதர்; உரகர் - நாகலோகவாசிகள்; மா - மிருகங்கள்; புள் - பறவைகள்; கண் இயல் நெற்றித்தேவை - சிவபிரானை; யாரே ஒருவருமில்லை யென்றபடி; அந்தப்பண்ணவன் - அந்தச் சிவபிரான்; ஏனோர் தம்மை - பிறரை; யாண்டும் - எக்காலத்திலும் எவ்விடத்திலும்; இன்று - இல்லை.
    இச்செய்யுட்குப் பிராணம் விரியுமாகலின் எடுத்தெழுதப் படவில்லை. பஸ்மஜாபாலோபநிஷத்து பாரதம் சிவரகசியம் முதலியவற்றுட் காண்க. (அரு).
******
    முக்குண சம்பந்தமான மாயாசரீரம் சிவபிரானுக்கில்லை யென்பது.
    அபனுட லிராச மாகு மரியுட றமச மாகு
    முயரிய சத்து வத்தி லுருத்திரற் குடல முண்டா
    லியலொரு தயவின் மூல மெனுஞ்சிவ பிரானம் மாயா
    மயகுண தேகந் தாங்கான் மன்னுவன் றிரமா ரங்கம்.
    (அ-ரை) ஒரு - ஒப்பந்த: மன்னுவன் - உடையவனா யிருப்பன்; சத்துவம் இராசதம் தாமதம் இம்மூன்று சரீரங்களும் மாயா காரியமாகலின் அழியும், சிவபிரான் கொள்ளும் அங்கம் ஸ்திரமானது.  ஆகலின் அது அம்முக்குண மயமன்று.
    'ஸத்வோத்ரிக்தவ்யக்தாக்யாவரண சக்தி ராஸத்| தத் ப்ரதி பிம்பம் யத்தத்தீச்வர சைதந்ய மாஸத் - - ஈசாதிஷ்டிதாவர சக்திதோ ரஜோத்ரிக்தா மஹதாக்யா விக்ஷப சக்தி ராஸத்| தத் ப்ரதி பிம்பிதம்| யத்தத்திரண்ய கர்ப சைதந்ய மாஸித் - - ஹிரண்ய கர்பாதிஷ்டித விக்ஷபசக்தி தஸ்த மோத்ரிக்தா ஹங்காராபிதாஸ்தூல சக்திராஸத்|  தத் ப்ரதி பிம்பிதம் யத்தத் விராட்சைதந்ய மாஸத் | தைதபிமாநீஸ்பஷ்டவபுஸ்ஸர்வஸ்தூல பாலகோ விஷ்ணு: ப்ரதாந புருஷோபவதி' என்ற பைங்களோபநிஷத்தும், 'ஸாத்வீகீ ருத்ரே பக்தே ப்ரஹ்மணீ ராஜஸ| தாமஸ தைத்ய பக்ஷஷ மாயாத்ரேதாஹ் யுதாஹ்ருதா', 'கோபரூபோஹரி:', 'ஸாக்ஷந் மாயாவிக்ரஹ தாரண' என்ற கிருஷ்ணோபநிஷத்தும், 'ஓம் தமஸே நம: ஓம் ரஜஸே நம: ஓம் ஸத்வாய நம:' என்ற அக்ஷபநிஷத்தும், 'மாயோபாதிகோ நாராயண ஆஸத்' என்ற திரிபாத்விபூதி மஹா நாராயணோபநிஷத்தும், 'அஸத்வ மாஜஸ்க மதமஸ்க மமாய மபயம்' என்ற நரஸிம்ஹோத் தரதாபநியுபநிஷத்தும், 'ஸ்திரை ரங்கை:' என்ற நரஸிம்ஹபூர்வதாபநியுபநிஷத்தும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள்.                (அசா)
******
    சிவபிரான் திருமேனிக்கு நரைதிரை யாதிகளில்லை யென்பது.
    கண்ணனாய் விண்டு மேனிக் கருமயிர் பிறந்த தன்னா
    னண்ணனாய் வெள்ளை ரோம மவதரித் திட்ட தென்னிற்
    றிண்ணமாஞ் சாவு மூப்புத் திரை நரை யம்மாற் கோர்முக்
    கண்ணுளான் றனுவி லன்ன கரிசுகள் கேட்ட துண்டோ.
    (அ-ரை) விண்டு - விட்டுணு: அன்னான் - அக்கண்ணனுடைய; அண்ணன் - தமையன்: அவன் பலராமன்; அம்மாற்குத் திரை நரை மூப்பு சாவு திண்ணம் ஆம் என்க; திண்ணம் - சத்தியமாய்: ஆம் - உண்டு; தனுவில் - சரீரத்தில்; அன்னகரிசுகள் - அந்த நரைமயிர் முதலிய குற்றங்கள்.
    'திருமாலானவர் ஒன்று வெண்மையும் மற்றொன்று கருமையுமாகிய இரண்டு கேசங்களைத் தலையிலிருந்தெடுத்தார்.  அந்த இரண்டு கேசங்களும் தேவகி ரோகிணி யென்னும் இரண்டு யாதவகுலத்து ஸ்திரீகளின் கர்ப்பங்களில் பிரவேசித்தன.  அந்தத்திருமாலினுடைய அவ்விரண்டு கேசங்களில் வெண்மையாயிருந்தவொன்று பலராமனாகப் பிறந்தது.  இரண்டாவது கறுத்த நிறமாகச் சொல்லப்பட்ட கேசம் கேசவனாகப் பிறந்தது' என்ற பாரதம் ஆதி 214ஆவது அத்தியாயமும், 'ஸ்ரீ ஹரியானவர் தம்முடைய அங்கத்திலிருந்து வெளுத்தும் கறுத்ததுமான இரண்டு மயிர்களை எடுத்து எறிந்தார்' என்ற பாரதம் சாந்தி 206 ஆவது அத்தியாயமும், 'ஆரணங்கலைகட் கெட்டா தகன்றபூ ரணனா மாதி - நாரணன் சிரத்தி லார்ந்த நளிருரோமத்தி னொன்று - வாரணந் தன்னிற் போட மால்கலை யாகப் பார்மேற் - காரண வைத ரித்தான் கண்ணனாய்விண்ணோர் போற்ற' என்ற கூரேச விஜயமும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள்.    (அஎ)
******
    சிவபிரான் உமாசகாயத்வாதி திருமேனிகளை மாயையிலன்றி அருளாகிய தமது சத்தியில் எடுப்பாரென்பது.
    திரிகுண சொரூப மாயை சீவருக் குடல்க ளாகி
`    மருவலு மவைகள் பின்னர் மறைதலு முண்டு தூய
    திரிவித மான சத்தி சிவபிராற் கியல்பா மன்னோ
    னுருபல வதனிற் கொள்வ னுமையொரு பாக மாதி.
    (அ-ரை) திரிகுண சொரூப - சத்வ ரஜஸ் தமோகுண மயமாகிய; மருவலும் - பொருந்துதலும்; அவைகள் - அவ்வுடல்கள்; திரிவிதமான; இச்சா கிரியா ஞானமயமான; அன்னோன் - அச்சிவபிரன்; உருபல - பலதிருமேனிகளை; அதனில் - அச் சத்தியில்; கொள்வன் - எடுப்பான்.  அன்னோன் அதனில் உமையொருபாகமாதி பலவுருக்கொள்வன் என்க.  ஆதியென்பதால் நீலகண்டம் சந்திரசேகரம் முதலியனவுங் கொள்ளப்படும்.
    'உமார்த க்ருத சேகரம் - - நிர்குணம்' என்ற பஸ்மஜாபாலோபநிஷத்தும், 'உமாஸஹாயம் - - தமஸ: பரஸ்தாத்' என்ற கைவல்யோபநிஷத்தும், 'ஸ்வாபாவிகிஜ்ஞாந பலக்ரியா ச' என்ற சுவேதாசுவதரோபநிஷத்தும், 'நிர்குணம் ஸத்ய சித்கநம்' என்ற கடருத்ரோபநிஷத்தும், 'சைதன்ய ரூபிணீம்' என்ற திரிபுராதாபிநிஷத்தும், 'அகண்டாநந்தமயவிக்ரஹம்', 'நித்ய சிந்மாத்ர ரூபோஸ்மி' என்ற மைத்ரேயோபநிஷத்தும், 'கிம்சித்க்ஷபிதரூபா ஸாசிச் சக்திச் சிந்மயார்ணவே' என்ற மஹோபநிஷத்தும், 'சிவா| சிச் சக்தி:' என்ற யோகசிகோபநிஷத்தும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள்.    (அஅ)
******
    சிவமூர்த்தங்களைச் சகுணமென்பதற்கும் நிர்க்குணமென்பதற்குத் தாற்பரியம் இது வென்பது.
     எங்களை யாள நாலா மிறைகொளு முருக்க ளெல்லா
     மங்கல சத்தி தன்பால் வரலினாஞ் சகுணந் தானும்
     பங்கம துறுத்து மாயைப் பட்டிடா வாத லாலே
     மங்கலி லறிஞர் சொல்வர் மன்னுநிர்க் குணமே யென்று.
    (அ-ரை) ஆள - ஆட்கொள்ள; நாலாம் இறை - சிவபிரான்; கொள்ளும் - எடுக்கிற; உருக்கள் - திருமேனிகள்; சத்திதன்பால் - அருளாகிய குணத்திலிருந்து; வரலின் - உண்டாகிறபடியால்; சகுணமும் ஆம் என்க; மாயைப்பட்டிடா - மாயையின் குணத்திலிருந்து உண்டாகா; உருக்களெல்லாம் என்பது அதற்கு எழுவாய்; மன்னு - விளங்குகிற.
    'கேவலோ நிர்குணச்ச', ஸத்வஸ்யைஷ ப்ரவர்த்தக: ஸநிர்மலாமிமாம் ப்ராப்திமீசாநோஜ்யோதிரவ்ய:' என்ற சுவேதாசுவதரோபநிஷத்தும், 'ஸகுண நிர்குண ஸ்வரூபம் ப்ரஹம' , 'ஸகுண நிர்குண ஸ்வரூபோபவதி' என்ற திரிபாத் விபூதி மஹா நாராயணோபநிஷத்தும், 'நிர்குண: கேவலோஸ்ம்யஹம்' என்ற மைத்ரேயோபநிஷத்தும், 'புருஷம் நிர்குணம்' என்ற மந்த்ரிகோபநிஷத்தும், 'நிர்குணம்' ஸத்ய சித்கநம்' என்ற வராகோபநிஷத்தும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள்.    (அகூ)
******
    உருத்திரன் சத்துவகுணமூர்த்தி, விஷ்ணு தாமதகுணமூர்த்தியென்பது.
    பின்னறு முடிவு காறும் பிஞ்ஞகன் றன்னை யேத்தித்
    தன்னரு ளுயிர்க்கு வைப்பாற் சத்துவன் மூன்றா மூர்த்தி
    பன்னக சயனத் தாலும் புத்தனாய்ப் பவித்த லாலு
    மின்னனா ராசை யாலும் விட்டுணு தமசி யாவான்.
    (அ-ரை) பின்உறு - கடைசியில் நடக்கும்; முடிவு காறும் - சங்காரம் வரை; வைப்பால் - வைத்தலால்; மூன்றாம் மூர்த்தி - உருத்திரன்; பிரமனும் விஷ்ணுவும் ஸ்ருஷ்டி ஸ்திதிகளைச் சதா செய்துகொண்டிருக்கிற பிரவர்த்தகர்களாகலின் சிவோபாசனையாதி நலன்களைச் செய்யப்போதிய அவகாசமில்லாதவர்கள்; உருத்திரன் சங்காரம் வரை ஒரு பிரவிருத்தியுமில்லாத்வன்; ஆகலின் அவனே அந்நலன்களைச் செய்யமுடியும்; பன்னகம் - பாம்பு; பலித்தல் - பிறத்தல்; மின்னனார் - பெண்கள்மேல் வைத்த; ஆசை - மோகம்.
    'ஆஸ்திகத்வம் - - ஸாத்விகஸ்ய விசேஷத:' , 'நித்ரா - - மோஹ - - மைதுநம் - - தாமஸ்ய - - ப்ரஹ்ம வாதிபி:', 'ஸத்யஜ்ஞாநம் ஸாத்விகம் - - திமிராந்தம் தாமஸமிதி' என்ற சாரீரகோபநிஷத்தும், 'கலியுகத்தின் ஆதியில் - - புத்தனாகி - - ஜனங்களை மோகிக்கச் செய்வேன்' (இஇது விஷ்ணுவாக்கியம்) என்ற பாரதம் சாந்தி 348 ஆவது அத்தியாயமும், 'கள்ளவேடத்தைக் கொண்டுபோய்ப் புரம்புக்கவாறும் கலந் தசுரரை - உள்ளம் பேதஞ் செய்திட்டுயிருண்டவாறும்' என்ற பிரபந்தமும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள்.    (க0)
******
    திதிக்குத் தாற்பரியம் இதுவென்பது.
    இருவினை யின்பத் துன்பத் திடைவிழுந் திளைக்கு மாறு
    பெருகிய வுயிர்க டம்மைப் பிணித்துல கதனில் வைக்குந்
    திருமக னளிப்பிற் கேற்றஞ் செப்புவர் கொல்லோ வீச்
    னருளொரு சங்கா ரத்தி னரும்பொரு ளறிந்த நல்லோர்.
    (அ-ரை) பிணித்து - பந்தப்படுத்தி; திருமகன் - விஷ்ணுவின்; அளிப்பை - திதித்தொழிலை; பயப்பாடு பற்றித் திதி தாமதமென்பது கருத்து.
    'நுகரச்செய்கை காப்பது' என்ற சித்தியார் இச்செய்யுட்குப் பிரமாணம்.    (கூக)
******
    சங்காரத்துக்குத் தாற்பரியம் இதுவென்பது
    காரண மதனில் மீளக் காரிய வுலகை வாங்கித்
    தாரண மீசன் செய்வன் சங்கார மதுவே சீவர்
    மாரண முற்று மீள வருமிளைப் பொழிக்க வந்தப்
    பூரண னியற்று மதைப் புல்லரே கோற லென்பர்.
    (அ-ரை) வாங்கி - ஒடுக்கி; தாரணம் செய்வன் - வைப்பான்; ஒடுக்கி வைப்பான் - ஒடுக்குவான்; ஆகவே வாங்கித்தாரணம் செய்வன் என்பது ஒரு சொல் நீர்மைத்து என்க; மாரணம் உற்று - இறந்து; மீளவரும் - திரும்பப்பிறக்கிற; இளைப்பு - சோர்வு; அதை - அச்சங்காரத்தை; புல்லர் - அற்பர்; கோறல் - கொலை; என்பர் - என்று பழிப்பார்; பயப்பாடுபற்றிச் சங்காரம் சாத்துவிக மென்பது கருத்து.
    அழிப் பிளைப்பாற்றல்' என்ற சித்தியார் இச் செய்யுட்குப் பிரமாணம்.    (கஉ)
******
    திதியும் சங்காரமும் இன்னின்ன பார்வையிற் சத்துவமா மென்பது.
    உலகினை யளித்த லென்னு முலகுணி செயலைப் பாரின்
    சலனவாழ் வுவந்த நொய்யர் சத்துவ குணத்த தென்ப
    ருலகினை யழித்த லென்னு முருத்திரன் செயலைப் பாரின்
    சலனவாழ் வுவர்த்த தீரர் சத்துவ குணத்த தென்பர்.
    (அ-ரை) உலகுணி - விஷ்ணுவின்; பாரின் - உலகத்திலுள்ள; சலனவாழ்வு - துக்க வாழ்க்கையை; உவந்த - விரும்பிய; நொய்யர் - எளியவர்; உவர்த்த - வெறுத்த; தீரர் - வலியவர்; மததிப்பவன் யோக்கியதை பற்றித் திதி தாமசமும் சங்காரம் சாத்துவிகமுமாமென்பது தாற்பரியம்.
    கருத்தா, பயப்பாடு, மதிப்பவன் என்னு மூன்றாலும் சங்காரம் சாத்துவிகமும் திதி தாமதமு மாகிச் சொரூபத்தில் மாத்திரம் மாறிக்கொள்ளும்; அது பற்றி ஆவ தொன்றுமில்லையென விடுக்க.        (கூங)
******
    உருத்திரன் தாமதவினை செய்யக் காரணம் இது வென்பது.
    சத்துவ குணத்தன் செய்யிற் றாமச வினைநன் றாகஞ்
    சத்துவ வினையி லேவத் தமகுண னல்ல னாவன்
    சத்துவ குணத்துச் சம்பு தாமத குணத்து மாலைச்
    சத்துவ வினையி லேவித் தமவினை செய்வான் றானே.
 
    (அ-ரை) நன்று ஆகும் - கர்த்தாவின் சாத்வித ஞான சாமர்த்தியத்தால் நலன் தருவதாகும்; ஏவ - நியமித்தால்; தமகுணன் நல்லன் ஆவன் - தாமஸி தன்னை நியமித்தவனின் அதிகாரத்துக்கு அஞ்சி அத்தொழிலைச் செய்து தன் சொரூபம் மறையப்பெற்று உத்யோக சொரூபத்தால் நல்லவன்போலாதல் கூடும்; ஏவி - நியமித்து; தாமஸி தாமஸத் தொழிலைச் செய்ய நேர்ந்தால் அது பெருங்கொடுமையாய் முடியும்; உருத்திரன் பரமசாத்துவிகி; ஆகலின் அவன் சங்காரத்தைத் தன்பாலே வைத்துக் கொள்வன் என்க.
    'ஸ்ருஷ்டி ஸ்திதி லயஸ்யச காரணத்வமே நசிச் சக்த்யா ரஜ: ஸத்வதமோருணை:' என்ற ராமபூர்வதாபிநியுபநிஷத்தும், 'தமோ மாயாத்மகோ ருத்ர: ஸாத்விக மாயாத்மகோ விஷ்ணூ ராஜஸ மாயாத்மகோ ப்ரஹ்மா' என்ற பாசுபதப்ரஹ்மோப நிஷத்தும், 'ராஜஸோ - - ப்ரஹ்மா - - ஸாத்விக: - - விஷ்ணு - - தாமஸ: - - ருத்ரச்சேதிததோச்யதே' என்ற யோகசூடாமணியுபநிஷத்தும், 'ஸத்வரஜஸ் தமாம்ஸி' என்ற தேவ்யுபநிஷத்தும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள்.    (கூச)
******
    சங்காரமே கடவுளுண்மையைக் காட்டவல்லதென்பது.
    சிட்டியி லுளது பன்மை திதியினு மதுவா மானா
    லட்டபி னதுதான் போக வட்டவ னொரு னிற்பான்
    கட்டற ஞான மீயுங் கபாலியே முதல்வ னென்னப்
    பட்டன னடலாற் றானே படைப்பளிப் பயன்மாற் கென்னாம்.
    (அ-ரை) சிட்டி - சிருட்டி; பன்மை - பலதேவர்களின் தொகுதி; அது ஆம் - அப்பன்மை உளதாகும்; அட்டபின் - சங்கரித்த பிறகு; அனைத்தும் - அப்பன்மை முழுவதும்; போக - ஒடுங்கலான்; அட்டவன் - சங்காரி; நிற்பன் - மீதமிருப்பன்; கட்டு - பந்தம்; அற - நீங்க; அடவால் - சங்காரத் தொழிலால்; என் ஆம் - என்ன பயனைத் தருவதாகும்; சிருஷ்டியிலும் ஸ்தியிலும் பிரமன் அரியென்னுமிவர்களோடு வேறுதேவர்களுமிருப்பார்களாதால் தத்தங் கர்த்தாக்களை முதல்வரெனக் காட்டும் வன்மை அத்தொழில்கட் கில்லை; சங்காரமொன்றே எல்லாத்தேவர்களையும் நாசம்பண்ணித் தன் கர்த்தாவை மீதம் வைப்பதால் அதற்கே அக்கர்த்தாவை முதல்வனெனக் காட்டும் வன்மை யுண்டு.
    'தஸ்ய ப்ரக்ருதி லீநஸ்ய ய: பர: ஸ மஹேச்வர:' என்ற நாராயணோபநிஷத்தும், சுகரஹஸ்யோபநிஷத்தும் 'அந்தமாதி' என்ற சிவஞானபோதமும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள். (கூரு)
******
    சர்வகிருத்தியங்களும் அநுக்கிரகார்த்தமே யென்பது.
    திதியினு ளடங்கு மேனைச் சிருட்டியு மொடுக்கந் தானுந்
    திதிபுரி விண்டு தானே தேவெனிற் செப்பக் கேணீ
    திதியொடு பிறவு மெல்லாந் திகழனுக் கிரகத் தாமத்
    திதிமுத லதனா லாவன் திகழ்சகா சிவனி லம்மா.
    (அ-ரை) ஆம் - அடங்கும்; அத்திதிமுதல் - அவ்விஷ்ணு; அதனால் அப்படியடங்குவதால்; ஆவன் - அடங்குவன்.     (கூசா)
******
    தெய்வகுணமாகாதன இவையென்பதும் அவை விஷ்ணுவிடமே காணப்படுமென்பதும்.
    வஞ்சக முறுதல் சாமம் வணங்குத லழுகை மோகந்
    துஞ்சறு படைகட் காசை சொன்னசொற் புரட்ட றோல்வி
    யஞ்சிட லதர்மப் போரி லன்பரைச் செலுத்த லாதி
    நஞ்சிவ தேவற் கில்லை நாரண வுயிருக் குண்டால்.
    (அ-ரை) வஞ்சகம் உறுதல் - பிறர் செய்யும் மாயையிலகப்பட்டு வருந்துதல்; மோகம் - அறிவிழத்தல்; துஞ்சு அறு  - கெடுதலில்லாத; படை கட்கு - ஆயுதங்களுக்கு; தோல்வி - தோற்றல்; அஞ்சிடல் - நடுங்கல்; ஆதி - முதலியவை; நாராயணனை உயிரென்னவே அவனிற்கீழிட்ட பிரமன் இந்திரன் முதலிய எல்லாத்தேவர்களையுமே உயிர்களென்று சொன்னதாயிற்று.
    'மாயமான்றன்னைப் பொய்ம்மானெனவறியா தரக்கன் மாயையிலகப்பட்டு' என்ற சித்தியாரும், 'மாயனவ் வேடங் கொண்டே வன்சலந்தரன் கிழத்திதூய நலங்கவர்ந்தான்' என்ற சோமேசர்முதுமொழிவென்பாவும், 'ஜநார்த்தனர் - - எல்லா முனிவர்களையும் வணங்கிப் பூஜித்து' என்ற பாரதம் உத்யோகம் 83 ஆவது அத்தியாயமும், 'பலராமரும் ஜனார்த்தனரும் - - பாண்டு புத்ரர்களைப் பார்த்தும் - - திரெளபதியைப் பார்த்தும் மிக்கதுயரமுற்றவர்களாகத் துன்பக் குரல்களை வெளியிட்டுக்கொண்டு அழுதார்கள்' என்ற பாரதம் வனம் 119 ஆவது அத்தியாயமும் 'நானும் மோகத்தை அடைந்தவனாகித் தேர்த்தட்டில் உட்கார்ந்தேன்' (நானும் - கிருஷ்ணனும்) என்ற மேற்படி 21 ஆவது அத்தியாயமும், விஷ்ணு சக்கரம் பெற ஆசைப்பட்டதும், கிருஷ்ணன் பாரதயுத்தத்தில் படைக்கலங்களைத் தொடுவதில்லையென்று பிரதிக்கினை செய்திருந்தும் சில சமயங்களிற் குபிதராகி அவற்றை ஏந்தி யுத்தத்திற்குப் புறப்பட்டதும், அவன் வாணனிடம் பல முறை தோற்றதும், துருவாசருக்குப் பயந்து அவருடைய எச்சிற் பாயஸத்தைத் தன் உடம்பெங்கும் அக்கிருஷ்ணன் தடவிக்கொண்டதும், ராமன் மறைந்திருந்து வாலியைக்கொன்றதும், கிருஷ்ணன் தருமனைப் பொய்சொல்வித்துத் துரோணருயிரைத் வாங்குவித்ததும், 'ஸர்வேதேவா பசுதாமவாபு: ஸ்வயம் தஸ்மாத் பசு பதிர் பபூவ', 'ஹேயாந் விஷ்ணவாதி காந்ஸராந்' என்ற சரபோபநிஷத்தும், விஷ்ணவாதி ஸரை ரஜஸ்ரம்' என்ற தேஜோபிந்தூபநிஷத்தும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள்.    (கூஎ)
******
    சிவபிரானொருவரே பிறவாதவ ரென்பது.
    ஒள்ளலர் மிசையோன் விண்டுவுருத்திரன் மகவா னென் போர்
    கள்ளவிந் திரியத் தோடுங் கலகவைம் பூதத் தோடுந்
    தள்ளரும் பிறப்பைக் கொள்வர் சம்புவே பிறவி தன்னைக்
    கொள்ளலன் விளையாட் டானுங் குணமுளாய் மறையிற் காணே.
    (அ-ரை) ஒள் அலர் மிசையோன் - பிரமன்.
    'ஸர்வமிதம் ப்ரஹ்ம விஷ்ணு ருத்ரேந்த்ராஸ்தே ஸம்ப்ரஸயந்தே ஸர்வாணி சேந்த்ரியாணி ஸஹபூதைர் நகாரணம்' என்ற அதர்வசிகோபநிஷத்தும், 'ப்ரஹ்மா விஷ்ணுச்ச ருத்ரச்சஸர்வேவா பூதஜாதய:' என்ற மஹோபநிஷத்தும், 'ஸர்வேசம் - - அஜம் சிவம்' என்ற மண்டலப்ராஹ்மணோபநிஷத்தும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள்.    (கூஅ)
******
    சிவபிரானே உயிர்களுக்குப் பிறப்பிறப்புத் துன்பத்தை நீக்குவாரென்பது.
    மடநலார் வயிற்றில் வாரா மரித்திடா வியல்பு வாய்ந்த
    கடவுளான் சிவனே யாவன் கருணையா லவனே சீவர்க்
    கடவலான் பிறப்பைச் சாவை யச்சுதன் வல்ல னாயின்
    முடமுளான் றன்னைத் தூக்கி முடவனு நடக்க வல்லான்.
    (அ-ரை) மடநலார் வயிற்றில் வாரா - பிறவாத; மரித்திடா - இறவாத; அடவலான் - ஒழிக்கவல்லான்.
    'அஜாத இத் யேவம் கச்சித் பீரு: ப்ரதி பத்யதே| ருத்ரயத்தே தக்ஷணம் முகம் தேநமாம் பாஹி நித்யம்' என்ற சுவேதாசுவதரோபநிஷத்தும், 'உடைந்த மரக்கலம் பிறிதொருமரக்கலத்தைக் கரையடைவிக்கமாட்டாது; அதுபோலப் பிறந்திறந்துழலுந்தேவர் அவ்வாறுழலு மெம்மனோர்க்குச் சரணாகமாட்டார்' என்ற சதுர்வேத தாற்பரிய சங்கிரகமும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள்.    (கூகூ)
******
    விஷ்ணு வீழ்ந்த தேவகி கோசலை முதலியோரின் கருவினுள்ளேயே சகலவுயிர்களும் விழாமையால் கருப்பத்துள் விழுந்தவுயிர்களைக் கடவுளுங் கருப்பத்துள் விழுந்தே யெடுப்பரென்றல் பொருந்தா தென்பது.
    கூவிலி லாழுஞ் சேயைக் குதித்தெடுத் தாளுந் தாய்போற்
    பாவம துடையார் வீழ்சூற் படுகுழி தனின்மால் வீழ்ந்தப்
    பரவரை யெடுப்ப னென்றாய் பண்டவன் வீழ்ந்து நொந்த
    தேவகி கருவுட் டானோ செறிவன வுயிர்க ளெல்லாம்.
    (அ-ரை) கூவலில் - கிணற்றில்; ஆழும் - விழுந்த; சேயை - குழந்தையை; பண்டு - முன்காலத்தில்; அவன் - அம்மாலோன்; தேவகி - கண்ணந்தாய்; இங்கு உபலக்கணம்; செறிவன - புகுந்து அழுந்துவன. (க00)
******
    பிறப்பனவெல்லாம் உயிர்களே யென்பது.
    எவனுரு நான்கு தோற்றத் தெழுவகைப் பிறப்பின் பாலா
    மவலவெண் பத்து நானூ றாயிர யோனி புக்குப்
    பவமுறு முயிரே யன்னோன் பகர்பரப் பிரம மல்லன்
    சிவனல தாரே யாண்டுச் செறிந்துருச் சமைத லேயார்.
    (அ-ரை) உரு சரீரம்; நான்கு தோற்றம் - கருப்பை முட்டை விதை வேர்வை; எழுவகைப் பிறப்பின் பாலாம் - ஊர்வன மனிதர் நீர்வாழ்வன விலங்கு பறவை தேவர் தாவரம் என்பவற்றைச் சேர்ந்த; அவலம் - துன்பம்; பவமுறும் - பிறக்கும்; எவனுருப் பவமுறும் அன்னோன் உயிரே, பரப்பிரமம் அல்லன் என்க.  அன்னோன் - அந்தச் சரீரத்தையுடையவன்; பகர் - வேதத்திற் சொல்லப்பட்ட; ஆண்டு - அந்தயோனிகளில்; செறிந்து - புகுந்து; உருச் சமைதல் - சரீரம் உண்டாவதை; ஏயார் - பொருந்தார்.
    'அண்டஜம் ஸ்வேதஜ முத்பிஜ்ஜம் ஜராயுஜம் யத் கிம் சைதத் ப்ராணி ஸ்தாவர ஜங்கமம் மனுஷ்ய மஜீஜநத்' என்ற பஹ்வ்ருசோபநிஷத்தும், 'உரை சேரும் எண்பத்து நான்கு நூறாயிரமாம் யோனிபேதம் நிரைசேரப்படைத்து' என்ற தேவாரமும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள்.    (க0க)
******
    கடவுள் கருவுள் உருவங்கொள்ளாமையால் அவருடைய வியாபகத்துவங் கெடாதென்பது.
    கருவினுளுருவங்கொள்ளான்கடவுளென்றுரைக்கினன்னான்
    சருவவி யாபி யாதல் சரதமன் றென்றா யாருங்
    கருவினு ளில்லை யென்னார் கடவுளை கருவுட் கொள்ளுஞ்
    சருவவி யாபி தேகஞ் சமைவதெவ் வண்ண மாங்கே.
    (அ-ரை) சரதம் அன்று - உண்மையாகாது; சமைவது - உண்டாவது; எவ்வண்ணம் - எப்படி; ஆங்கே - அக்கருவுள்.
    கடவுள் பிறந்தாலவரோடு உயிரிடை வேற்றுமை காணமுடியாதென்பது.
    கருவதி லுயிரே சேருங் காரணங் கரும மாகு
    மொருசில ரதனிற் றேவு முறுமது சுயேச்சை யென்ப
    ருருவொடு பிறந்த பின்ன ருயிரிது தேவி தென்றவ்
    விருவரி னியல்பை வெவ்வே றெப்படி யறிதல் கூடும்.
    (அ-ரை) தேவும் - கடவுளும்; உறும் - பொருந்தும்; உருவொடு பிறந்த பின்னர் - கருவிலிருந்து சரீரத்தோடு வெளிப்பட்ட பிறகு; இருவரின் உயிர் கடவுள் என்னும் இருபொருள்கனினுடைய; எப்படி அறிதல் கூடும் - ஒருபடியாலும் அறியமுடியாதது என்றபடி.
    'இருவினை யின்பத் துன்பத் திவ்வுயிர் பிறந்திறந்து வருவது போவதாகும்' என்ற சித்தியாரும், 'நால்வகையோனியுள் ஒருயோனி வாய்ப்பட்டுப் பிறப்பன யாவை அயையெல்லாஞ் சீவவர்க்கம்.  அவ்வாறு பிறத்தலில்லது யாது அது பதிப்பொரு ளென்னு மிது வொன்றே ஏனைச் செயல்களான் வேற்றுமையறிய வாராத அவ்விரண்டற்குந் தம்முள் வேற்றுமையறிய நிற்பதாகலின் - - ' என்ற சித்தியார்ப்பொழிப்பும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள்.    (க0ங)
******
    அற்புதங்கள் செய்வதனாலேயே ஒருவர் கடவுளென்று சொல்லப் படமாட்டாரென்பது.
    உற்பவ மெடுத்த தேவ னோங்குதன் பரத்து வத்தை
    யற்புத வினைக ளாற்றி யனைவர்க்குந் தெரிப்பா னென்பாய்
    பற்பல வினைக ளந்தப் படிபல முனிவர் செய்வார்
    தற்பர னிவனென் றன்னோர் தமையெவண் பிரித்துக் காண்பாய்.
    (அ-ரை) அன்னோர் தமை - அந்தத் தேவனையும் அந்த முனிவர்களையும், எவண் - எப்படி? (க0ச)
    அயோனிசங்களாகிய சிலவுயிர்களின் அடிமைத்திறத்தால் அவற்றைக் கடவுளின் வேறெனப் பிரிக்கலாமென்பது.
    எருக்கணி யீசன் போல விவ்விடைச் சீவர் சில்லோர்
    கருக்குழி புகாமல் வந்தார் காட்டவர் பேத மென்னிற்
    றிருக்கிள ரவன்பா லன்பார் சீவருட் சிலர்க்கே யுண்டவ்
    வுருக்கொள லவன்முனன்னோ ரொடுங்கலாற் பேதங் காணே.
    (அ-ரை) இவ்விடை - இவ்வுலகில்; அவர் பேதம் - அப்படிக் கருக்குழி புகாமல் வந்த சீவர்க்கும் கடவுளுக்கும் உள்ள பேதத்தை; திருக்கிளர் அவன்பால் - அந்தச் சிவபிரானிடத்து; அன்பு ஆர்  - பக்தி பொருந்திய; அவன் முன் - அந்தச் சிவபிரானுடைய சந்நிதானத்தில்; அன்னோர் - கருக்குழி புகாமல் வந்த அச்சீவர்; ஒடுங்கலால் - தம்வலிகுன்றலால்; நரஸிம்மமூர்த்தி அயோனிஜர்; ஆயினும் அவர்வலி சரபமூர்த்திமுன் குன்றியது; சரபமூர்த்தியாய் வந்தவர் சிவபிரான்.    (க0ரு)
******
    திருமேனிட் தாங்கி வந்த கடவுளிடம் நிந்தைபோல் தோன்றும் லீலைகளும் அவரின் பிறவாமை யொன்றானேயே மதிப்படையும் என்பது.
    யோனியி லுதித்த பின்மா லுஞற்றிடு செயல்க ளுள்ளே
    யீனமி திதா மென்று மேற்றமி திதா மென்று
    மானவ னவற்றை யெல்லாம் வகுக்குமா றுளதோ நேரே
    யீனர னுறலி னன்னோ னிலீலைகட் கிகழ்ச்சி யின்றே.
    (அ-ரை) மால் உதித்தபின் உஞற்றிடு என்க; உதித்த பின் - பிறந்ததிலிருந்து; உஞற்றீடு - செய்த; இது இது ஈனம் ஆம் இது இது ஏற்றம் ஆம் என்க, இது இது - இன்னஇன்னசெயல்; ஈனம் - மனிதத்தன்மை; ஏற்றம் - தெய்வத்தன்மை; மானவன் - மனிதன்; அவற்றையெல்லாம் - அம்மால் செத்ததுவரைச் செய்த எல்லாச் செயல்களையும் ஒன்றும்  விடாமல்; வகுக்கும் ஆறு உளதோ - பிரித்துக் காணும் வழி உண்டா? நேரே - கருப்பவாச மின்றி; ஈன் - இவ்வுலகில்; உறவின் - திருமேனிதாங்கி வெளிப்படுவதால்; அன்னோன் - அவ்வரனுனுடைய; இலீலைகட்கு - மனிதர் செயல்போற் றோன்றுஞ் செயல்களுக்கு; இகழ்ச்சி - நிந்தை; இன்று - இல்லை.
******
    காரண காரியக் கிரமங்களை யறியாதவரே கடவுளுக்குப் பிறப்புண்டென்பா ரென்பது.
    காரண வீசன் யாண்டுங் கருப்புகா மேன்மை தன்னைக்
    காரண மின்றி யாருங் கருவினுட் புகுவா ரென்றுங்
    காரண மவாவே யாகக் கடவுளங் குறுவானென்றுங்
    காரண வழுக்கள் கூறுங் கற்றிலா ரறிவார் கொல்லோ.
    (அ-ரை) அவா - இச்சை; வழுக்கள் - பிழைகள்; கற்றிலார் - படியாதவர்; காரணமின்றி யாருங் கருவினுட் புகுவார் (Birth is accidental) என்பர் நாஸ்திகராதியோர்; விஷ்ணு இச்சைவத்தாற் பிறபாரென்பார் வைஷ்ணவராதியோர்.
******
    சிவபிரான் சாகாதவ ரென்பது.
    சூக்கும வுடம்பின் பாலாய்த் தோன்றுமித் தூல தேகஞ்
    சூக்கும வுடம்பை விட்டித் தூலநீங் கிடலே சாவாஞ்
    சூக்கும வுடம்பு மாயை யாதலாற் சோமன் றோயான்
    சூக்கும தூல மாமத் துலயமு மதனாற் சாகான்.
    (அ-ரை) சூக்கும வுடம்பும் மாயை - சூக்கும சரீரமுந்தூல சரீரம்போல மாயாகாரியம்; சோமன் அத்துவயமும் தோயான் என்க.  சோமன் - சிவபிரான்; தோயான் - மேற்கொள்ளமாட்டான்; அத்துவயமும் அவ்விரண்டையும்; அதனால் - அப்படித்தோயாமையாலே.
******
    விஷ்ணு பிறந்தது அவரிச்சையாலென்பதற்குப் பொருளிதுவென்பது.
    தீவினை தனக்குத் தந்த சென்மமெப் பயனு மின்றிப்
    போவது விரும்பா விண்டு புராரிபாற் பணிந்து தன்ம
    தாவன முலகிற் செய்யுஞ் சதுரினை வேட்டா னம்மால்
    மேவிடு பிறப்பின் வித்தா விளம்பவாப் பொருடா னதே.
    (அ-ரை) தன்மதாவனம் - தர்மஸம்ஸ்தாபனம்; சதுரினை - வன்மையை; வேட்டான் - வேண்டி நின்றான்; மேவிடு - கொண்ட; வித்து ஆ - காரணமாக; விளம்பு - சொல்லப்படுகிற; அவா - இச்சைக்கு; பொருள் - அருத்தம்; அதே - அவ்வேண்டி நின்றதே.
    'நாராயணஸ்ய ஸ்வேச்சாநு சாரேணோந்மேஷோஜாயதே' ,' நாராயணஸ்யேச்சாவ சாந்நிமேஷோஜாயதே' என்ற திரிபாத்விபூதி மஹாநாராயணோபநிஷத்து இச்செய்யுட்குப் பிரமாணம். (க0க)
******
    தசாவதாரங்களுட் சில தண்டிக்கப்பட்டபடியால் அப்பத்தவதாரங்களும் பிறவும் கர்மவசமேயாமென்பது.
    மாமியி னுயிரை வாங்கி மாமனாற் சபிக்கப் பட்டுப்
    பூமிமா லுதித்த போது புராரிகைப் பட்டு நைந்தான்
    வாமன மச்சங் கூர்மம் வராகமா மடங்க றன்னிற்
    காமமோ வதனா லந்தக் கார்வணற் கவதா ரங்கள்.
    (அ-ரை) மாமி - பிருகுமகரிஷியின் மனைவி, கியாதி யென்ற பெயருடையவன், ஒரு சமயம் இலக்குமி அவள் வயிற்றிற் பிறந்தாள்; மாமன் - பிருகு மகரிஷி; மடங்கல் - நரசிங்கம்; தன்னில் என்பதைத் தனித்தனிக் கூட்டுக; காமமோ - இச்சையோ; கார்வணற்கு - விஷ்ணுவுக்கு.
    காஞ்சிப்புராணம் அரிசாபபயந்தீர்ந்ததானப் படலம் 5, 6, 7, 8 ஆவது செய்யுட்களும், 'யோ மத்ஸ்ய கூர்மாதிவராக ஸிம்ஹாந் விஷ்ணும் க்ரமந்தம் வாமந மாதி விஷ்ணும்| விவிக்லபம் பீட்யமாநம் - - தஸ்மை ருத்ராய நமோ அஸ்து' என்ற சரபோபநிஷத்தும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள்.    (கக0)
******
    கடவுளுக்குக் கர்ப்பவாசம் வீண்காலப்போக்கென்பது.
    வெப்புறு கருப்பை தன்னுள் விட்டுணு கிடந்த காலை
    யப்பனே யனையே தானே யயலவந் தாமே கண்ட
    தெப்பய னெடுமால் கர்ப்பத் திழிந்திட விச்சை யென்றா
    யிப்படி விருதா வேலை யியற்றிடா னெங்க ளீசன்.
    (அ-ரை) அனை - தாய்; தான் - கருப்பத்துட்கிடந்தமால்; அயலவர் - பிறர்; இழிந்திடல் - பிரவேசித்தல்; விருதா - வீண்.
    'பன்னிரு திங்கள் வயிற்றிற் கொண்ட வப்பாங்கினால்' என்ற பிரபந்தமும், 'பயனில் சொற் பாராட்டு வானை மகனெனல் மக்கட்பதடியெனல்' என்ற குறளும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள்.    (ககக)
******
    விஷ்ணுவின் அவதார சரீரங்கள் பெற்றோரின் சுக்கில சோணித பரிணாமங்களே யாமென்பது.
    கருவுட லனைத்தும் பெற்றோர் கழிமல பரிணா மங்கள்
    மருவலி னுடல்மா லாங்கே மற்றது மலமா மன்னோற்
    குருபிறி தாமங் கென்னி னொழிகுவர் தூணாய்ப் பெற்றோர்
    தருநிழ லுறலாஞ் சேயாய்த் தமர்க்குமா லீசன் போல.
    (அ-ரை) கரு உடல் - கருப்பத்திலுண்டாகிற சரீரம்; கழி - விடுகிற; மலபரிணாமங்கள் - சுக்கிலசோணிதங்களாகிய அசுத்த பதார்த்தங்களின் காரியங்கள்; மால் ஆங்கே உடல் மருவலின் என்க, மருவலின் - அடைவதால்; ஆங்கே - அக்கருப்பத்துள்; அதும் - அம்மாலினுடம்பும்; அன்னோற்கு - அம்மாலுக்கு; உரு - உடம்பு; பிறிது ஆம்  - அம்மலபரிணாமங்களல்லாமல் அப்பிராகிருதமாகும்; அங்கு  - அக் கருப்பத்துள்; பெற்றோர் தூணாய் ஒழிகுவர் என்க. பெற்றோர் - தந்தைதாயர்; தூணாய் ஒழிகுவர் - நரசிம்மம் வந்ததூண் நரசிம்மத்துக்குத் தந்தையுந் தாயுமாகாதவாறு ராமன் முதலியோருக்குத் தசரதன் கோசலை யாதியோருந் தந்தை தாயராகமாட்டார்; ஈசன்போல் மால்தமர்க்கு தருநிழல் சேய் ஆய் உறலாம் என்க; ஈசன் - சிவபிரான்; மால் - விஷ்ணு; தமர்க்கு - தம் அன்பர்பொருட்டு; தரு - மரம்; சேய் - குழந்தை; ஆய் - வடிவெடுத்து; அன்பர் கண்காணக் குழந்தையாய் மரநிழல் குளக்கரை புஷ்பமத்தி முதலிய இடங்களிற் கிடத்தல்.
    'ஜாதம் ம்ருதமிதம் தேஹம் மாதா பித்ரு மலாத்மகம்', ' மாத்ருஸதக ஸம்பந்தம் ஸதகே ஸஹஜாயதே|| ம்ருதஸதக ஜம் தேஹம் ஸ்ப்ருஷ்ட வா ஸ்நாநம் விதீயதே' என்ற மைத்ரேயோபநிஷத்து இச்செய்யுட்குப் பிரமாணம்.    (ககஉ) 
******
    அப்பிராகிருத சரீரம் நிழல்செய்யா தென்பது.
    தருநிழ லாதி தன்னிற் சங்கர னருளாற் சேயி
    னுருவது கொண்ட சீரை யுணர்குவ தெவ்வா றென்னிற்
    கருவரு முடல்போ லன்றிக் காண்டகு மச்சேய் மேனி
    யிருளுரு நிழலைச் செய்யா வியல்பினா லறிய லாமால்.
    (அ-ரை) கருவரு - கருவிலிருந்து வருகிற; காண்டகு - காணத்தக்க.
    'சடைமுடியும் வெண்ணீறுந் தாழ்வடமு மரவரியு - முடையவளாய்த் தவம்புரிந்து முருநிழற்ற விலையென்பார் - கடைபயின்ற மடமுடையீர் கரிசு படு மாயையினாம் - வடிவதுவோ வாநந்த வடிவன்றோ விதுவென்பார்' என்ற காஞ்சிப்புராணம் இச்செய்யுட்குப் பிரமாணம்.    (ககங)
******
    விஷ்ணு தந்தைகருவினுங் கிடந்தாரென்பது.
    தாய்தலை துணித்தான் சாம தக்கினி தந்தை சொல்லா
    லேய்வறு மனையை விட்டா னிராகவன் றானு மதாற்
    காய்வினை யவரைத் தந்தை கருவினும் புகுத்திற் றென்ற
    தாய்பவ ரறிவார் யாரே யரற்குமக் குறையுண் டென்பார்.
    (அ-ரை) துணிந்தான் - வெட்டினான்; சாமதக்கினி - பரசுராமர்; தந்தைசொல்லால் - பிதுர்வாக்கிய பரிபாலனத்தால்; எய்வு அறு - நிகரற்ற; மனையை - வீட்டை; மனைவியை; இராகவன் - கோதண்டராமர்; அதால் - அவ்விதமான பிதுர்வாக்கிய பரிபாலனத்தால்; அவரை - அவ்விரண்டு ராமர்களையும்; அது - அச்சரிதங்களை; அக்குறை - அவ்வாறு தந்தை கருவினுட்டங்குதலாகிய இழிவு.
    காஞ்சிப்புராணம்  இரேணுகேசப்படலம் 9, 11, 13 ஆவது செய்யுட்களும், வீரராகவேசப்படலம் 7, 8, 9 ஆவது செய்யுட்களும், 'மணிவாயிடை முத்தந் தருதலு முன்றன் றாதையைப் போலும் வடிவுகண்டு கொண்டு உள்ளம் உள் குளிர' என்ற பிரபந்தமும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள்.    (ககச)
******
    கடவுள் இச்சையாற் பிறந்தாராயின் தாய்க்குப் பிரசவம் சுகமாயிருத்தல் வேண்டும். உயிர்த்தாய்கட்கெல்லாஞ் சுகப்பிரசவங் கிடையாது.  தேவகி கோசலை முதலியோர் உயிர்களே.  அவர்கட்குப் பிரசவ வேதனையைத் தந்த விஷ்ணுவின் கர்ப்பவாசமும் கர்மவசமேயென்பது.
    சங்கட மின்றிச் சூலைத் தாங்கலு முயிர்த்த றானு
    மிங்கெவ டனக்கு மாகா யிருவினை யுயிரே யன்னாள்
    மங்கல வுமைக்கே லீலை யாமவை யவாவால் மாலோன்
    தங்கிய தகட்டிற் பாரிற் சனித்தது துயர்தாய்க் கன்றோ.
    (அ-ரை) சங்கடம் - வேதனை; சூல் - கருப்பம்; உயிர்த்தல் - பிரசவித்தல்; இங்கு - இவ்வுலகில்; எவள் தனக்கும் -எவளுக்கும்; ஆகா - முடியா; அன்னாள் - அவள்; அவை - தாங்கலும் உயிர்த்தலும்; அவை உமைக்கே லீலை ஆம் என்க. அவளொருத்தியே தெய்வத்தாயாகலான் என்பது.  அகட்டில் - வயிற்றில்; பாரில் - பூமியில்; சனித்தது - பிறந்தது; துயர் - துன்பந்தருவது; மாலோன் அவாவால் அகட்டில் தங்கியது பாரிற் சனித்தது (ஆகியவை) தாய்க்குத் துயர் அன்றோ என்க.    (ககரு)
******
    விஷ்ணு சாவாரென்பது
    கோசலை யுதரம் பாய்ந்தோன் குதித்தொருநதியிற் செத்தான்
    றேசறு கருவாய் வந்து தேவகி யுதரம் பாய்ந்தோ
    னீசன தம்பாற் செத்தா னீதியோ வவர்தே வென்ற
    னாசமு முதிப்பு மில்லா நம்பனை வணங்க னன்றே.
    (அ-ரை) கோசலை உதரம் பாய்ந்தோன் - இராமர்; நதி - சரயூவென்னும் ஆறு; தேக ஆறு - - பாய்ந்தோன் - கிருஷ்ணர்; நீசனது - ஜரனென்னும் பெயருள்ள வேடனுடைய; நம்பனை - சிவபிரானை.
    'எந்தத் தீர்த்தத்தில் ராமர் தேகத்தைவிட்டு - - ஸ்வர்க்கத்தை அடைந்தாரோ (அந்த) ஸரயூநதி' என்ற பாரதம் வனம் 323 ஆவது பக்கமும், 'தசரத புத்திரரான ஸ்ரீராமரும் மாண்டார்', 'அந்த ராகவரே மாண்டார்' என்ற துரோணம் 59 ஆவது அத்தியாயமும், 'பிறகு, பலராமர் கிருஷ்ணர் இருவர்களுடைய சரீரங்களையும் பார்த்து - - எரிக்கும்படி செய்தான் என்ற மெளஸலம் 8வது அத்தியாயமும், 'ஸ்ரீகிருஷ்ணர் பலராமருடன் சரீரத்தை விட்டுவிட்டுப் பரமபதம் சென்று விட்டார்' என்ற 9 ஆவது அத்தியாயமும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள்.    (ககசா)
******
    கருப்பத்திலிருக்குங் குழவியுஞ் சிவபிரானை தியானித்தே பிறவியை நீக்கிக் கொள்ள விரும்பு மென்பது.
    பசுபதி நன்மா தேவ னுருத்திரன் பருக்க னாதி
    சசிதர னாமஞ் செப்பித் தவிர்ப்பனென் பிறப்பை யென்று
    சுசியறு கருவி னுள்ளுந் துணியுமே சீவ னென்னி
    னுசிதப தாமோ வேனோ ருயிர்ப்பிறப் பறுப்ப ரென்றல்.
    (அ-ரை) ஆதி - முதலிய; சசிதரன் - சிவபிரானுடைய; உசிதமது ஆமோ - தகுமோ; ஏனோர் - மற்றைத் தேவர்கள்; உயிர்ப்பிறப்பு - உயிர்களின் பிறவித்துயரை.
    'யதியோந்யாம் ப்ரமுச்யேயம் ப்ரபத்யே பரமேச்வரம் பர்கம் பசுபதிம் ருத்ரம் மஹோதேவம் ஜகத்குரும்' என்ற கர்போபநிஷத்து இச்செய்யுட்குப் பிரமாணம்.    (ககஎ)
******
    மாயையிலகப்பட்டு உழலுபவர் விஷ்ணுவாகலின் ஞானம் சிவோபாசனையாலேயெ வாற்பால தென்பது.
    பொய்யுரு மனைவி தன்னைப் பொய்யுருப் பிதாவைச் சென்னி
    வெய்யவ ரறுத்த போது வெங்களத் திராமன் கண்ண
    னையகோ வென்று தேம்பி யழுதவர் மாயத் துற்றார்
    துய்யதொ ரறிவு வேட்டோர் தொழுதிட சிவனாற் றானே.
    (அ-ரை) பொய்யுரு மனைவிதன்னை - மாயாசீதையை; பொய்யுருப் பிதாவை - மாயாவசுதேவனை; சென்னி - தலையில்; வெய்யவர் - இந்திரஜித்தும் சால்வராஜனும்; வெம்களத்து - போர்க்களத்த்தில்; அவர் - அவ்வெய்யவருடைய; மாயத்து உற்றார் - மாயையில் அகப்பட்டார்; துய்யதொரறிவு - திவ்விய ஞானத்தை; வேட்டோர் - விரும்புபவர் (அதனைப் பெறுதற்கு); தொழுதிட - தொழுவாராக.
    கம்பராமாயணம் மாயாசீதைப்படலமும் பாரதம் வனம் 20, 21, 22 ஆவது அத்தியாயங்களும், 'அதிமோஹ கரீ மாயா மம விஷ்ணோச்ச ஸவ்ரத | தஸ்ய பாதாம்புஜத்யாநாத் துஸ்தரா ஸதராபவேத்' என்ற சரபோபநிஷத்தும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள்.    (ககஅ)
******
    இராமநாம சரித்திரம் இது வென்பது.
    தராதல மதிக்க வாழ்ந்த தசரதன் வசுதே வன்சீர்ப்
    பிராமண சமதங் கிப்பேர்ப் பெரியனாஞ் சைவ மேலோ
    ரராவுமா நாமத் தந்த மாகிய விராவை மாவை
    விராவியே விராமா வென்றார் விளங்குதம் புதல்வர் தம்மை
    (அ-ரை) தராதலம் - பூமி; சமசங்கிப்பேர்ப்பெரியன் - ஜமதக்கினி முனிவர்; அந்தம் - கடைசியெழுத்து; விராவி - சேர்த்து; என்றார் - என்று பெயரிட்டழைத்தனர்; அந்த ராமர்களே ரகுராமன்; பலராமன்; பரசுராமன் என்பவர்கள்.
    'சிவோமா ராம மந்த்ரோயம் வஸ்வர்ணஸ்துவஸப்ரத:' என்ற ராம ரஹஸ்யோபநிஷத்து இச்செய்யுட்குப் பிரமாணம்.    (கககூ)
******
    இதுவுமது
    கோசலை யீன்ற சேயே குவலயத் திராம னென்னி
    னாசக லந்த நாம மவன்பினே பரவ வேண்டுந்
    தேசுறு பரசி ராமன் றிகழ்ந்தன னவற்கு முன்னே
    பேசிடு மிராம நாமம் பிஞ்ஞகற் கென்று வேதம்.
    (அ-ரை) ஆசு அகல் - குற்றமற்ற; அவன் பினே - அவன் பிறந்ததற்குப் பின்னுள்ள காலத்திலேயே; திகழ்ந்தனன் - இருந்தான்; அவற்கு முன்னே - அந்தக் கோசலை ராமன் பிறந்தற்கு முன்னுள்ள காலத்திலேயே; பிஞ்ஞகற்கு - சிவபிரானுக்கு.
    'ராமம் த்ரிநேத்ரம் ஸோமார்த தாரிணம் சூலிநம்பரம்| பஸ்மோத்தூளித ஸர்வங்கம் கபர்திந முபாஸ்மஹே' என்ற ராமாரஹஸ்யோபநிஷத்து இச்செய்யுட்குப் பிரமாணம்.    (கஉ0)
******
    இராமர் சிவோபாசனை செய்தா ரென்பது.
    சீமதோ நீல கண்டன் சிறியனேற் கருண்மா தேவன்
    தோமறு பிரபு வென்று துதித்தலோ டிராமே சத்தி
    லோமொழி வாழ்வைப் பூசை யுஞற்றினன் சீதை நாத
    னாமவி லவற்குச் சம்பு நற்குல தெய்வ மன்றோ.
    (அ-ரை) தோம் அறு - குற்றமற்ற; இராமேசம் - இராமேசுவரம்; ஓம் மொழிவாழ்வை - சிவபிரானை; உஞற்றினன் - செய்தான் ; நாம வில்லவற்கு; அந்த ராமருக்கு.
    'ஸ்ரீ மதோ நீலகண்டஸ்ய க்ருத்யம் ஹிது ரதிக்ரமம்' , 'அத்ரபூர்வம் மஹோதேவ: ப்ரஸாத மகரோத் ப்ரபு:' , 'வரதாநம் மஹேந்த்ரேண ப்ரஹ்மணாவருணே நச | மஹாதேவ ப்ரஸாதாச்ச பித்ரா மம ஸமாகம:' என்ற வான்மீகராமாயணமும், 'பக்த்யாநம்ரதநோ விஷ்ணு ப்ரஸாதமகரோத் விபு:' என்ற சரபோபநிஷத்தும், 'ப்ரஸாதாத்கதயேச்வர' என்ற யோகசிகோபநிஷத்தும், 'சிவபூஜாரதச்சைவ' என்ற ராமஸஹஸ்ரநாமமும், 'தக்ஷ ஹஸ்த ஸதாபூஜ்ய சிவலிங்க நிவிஷ்டதீ:' என்ற அநந்த பற்பநாபஸ்வாமி அஷ்டோத்தரமும், தேவாரத் திருவிராமேச்சுரப்பதிகமும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள்.    (கஉக)
******
    விஷ்ணுவைப் பரம்பொருளென்று வேதவிரோதம் பேசிய வியாசர் தண்டிக்கப்பட்டாரென்பது.
    வாதரா யணனோர் காலை வன்கலிக் கஞ்சிக் காசி
    போதரல் செய்து மாங்கே புத்திதான் கெட்டு மாலே
    நாதனென் றாணை யிட்டா னந்தியாற் றூணு மானா
    னேதம தரனைச் சொற்றா ரெங்கணுங் கலிக்குத் தப்பார்.
    (அ-ரை) வாதராயணன் - வியாசன்; கலிக்கு - கலியுகம் பிறக்கப் போவதைக்கண்டு; போதரல் செய்தும் - போயும்; ஆங்கே - அக்காசியில்; என்று - என்று கூறி; ஆணையிட்டான் - சத்த்தியம் பண்ணினான்; தூணும் ஆனான் - தூணாகச் சபிக்கவும்பட்டான்; அரனை எதமது சொற்றார் என்க; சிவபிரானுக்கே யுரிய பரத்துவத்தை ஏனையோர்பாற் சார்த்துவது சிவபிரானைப் பழிப்பதேயாகும்; அரனை - சிவபிரானுக்கு; எதமது - பரத்துவஹானியாகிய குற்றத்தை; சொற்றார் - சொன்னவர்; கலிக்கு - கலிபீடைக்கு.
    காஞ்சிப்புராணம் சார்ந்தாசயப்படலம் இச் செய்யுட்குப் பிரமாணம்.    (கஉஉ)
******
    சிவபிரானுடைய அடிகளையும் முடியையும் அரியும் பிரமனும் தேடி அலுத்தனரென்பது.
    அடியினை யறியப் பன்றி யச்சுதக் கடவு ளானான்
    முடியினை யறிய வன்ன முளரியோ னானா னானாற்
    கடிவிரி கொன்றை வேணிக் கண்ணுதல் கீழு மேலும்
    வடிவுறு நெருப்பா யண்ணா மலையென வளர்ந்தா னாங்கே.
 
    (அ-ரை) முளரியோன் - பிரமன்; கடி - வாசனை; வடிவு - அழகு; அண்ணா - எட்டாத; ஆங்கே - அப்பிரமவிட்டுணுக்கள் சண்டையிட்ட விடத்தில்.
    'ப்ரஹ்மாவை ஹம்ஸோ பூத்வா, சிரோந்வேஷ்டவ்ய: ஸஹஸ்ரம் ஸமா ஆஸந் ப்ரஹ்மா ஆஹம் சிரோஜாநே, த்வமேவ மாதாஸி, த்வமேவ பிதாஸி, த்வமேவ ப்ரதாஸி, த்வமேவ த்ருஷ்டாஸி, ச்ரோதாஸி, கர்த்தாஸி, காரயிதாஸி, ஜ்யேஷ்டோஸி, ச்ரேஷ்டோஸி, யஏவம்வேதா, சிவஸாயுஜ்ய மாப்நோதி சிவ ஸாயுஜ்யமாப் நோதி', 'விஷ்ணுர்வை வாராஹம் ரூபமாஸ்தாய, பூமிந் விதாரயந் ஸஹஸ்ரம்ஸ மா ஆஸந், பாதாந்வேஷண பரோபூத்வா த்வமேவ மாதாஸி, த்வமேவபிதாஸி, த்வமேவ ப்ராதாஸி, த்வமேவ ஜ்யேஷ்டோஸி, த்வமேவச்ரேஷ்டோஸி, யஏவம் மஹிமாநம் வேதா த்ருஷ்டாபவதி, விஜ்ஞாதாபவதி, கர்த்தாபவதி, காரயிதாபவதி, யஏவம் வேதா சிவாஸாயுஜ்யமாப்நோதி சிவஸாயுஜ்மாப்நோதி' என்ற ருக்வேதமும், 'யத்பாதாம் போருஹத்வந்த்வம் ம்ருக்யதே விஷ்ணுநாஸஹ' என்ற சரபோபநிஷத்தும், 'ப்ரஹ்மா விஷ்ணு ரஜஸா பத்தவைரெளமத்யேதயோந் த்ருச்யதி ஜாதவேதா: ஸ்தாணூருத்ரஸ்திஷ்டத் புவநஸ்யகோப்தா| த்ருஷ்ட்வாஸ்தாணுமுபரம்ய யுத்தம் ப்ரதஸ்ததுர்தூர மஸெள தித்ருக்ஷ:| வராஹெள விஷ்ணுர்ணிம மஜ்ஜ பூமெள ப்ரஹ்மோத்ப பாத பூமேர் திவ மாசுக்ருத்ர:' என்ற பாஸ்கரஸம்ஹிதையும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள்.    (கஉங)
******
    திருப்பதி முருகன் கோயிலென்பது.
    வேங்கட ராம னென்போன் வேங்கட மலையாய் நின்றோன்
    வேங்கட சுப்ப னென்போன் வேங்கட மலைமே னின்றோன்
    வேங்கட மலையாய் நின்று வேலனைச் சிரமேற் றாங்க
    வேங்கட ராமன் செய்த விழுந்தவஞ் செப்பற் பாற்றே
.
ஸ்ரீ சைலம்
    (அ-ரை) சுப்பன் - சுப்பிரமணியர்; விழுத்தவம் - சிறந்ததவம்.
    'சிலாதர முனிவருடைய திருக்குமாரராகிய நந்திபகவான் தன்னைச் சிவபெருமான் வாகனமாக்கிக் கொண்டது போல ஆஸனமாகவும் கொண்டெழுந் தருளியிருத்தற்குச் சிந்தித்துத் தவங்கிடந்து ஸ்ரீசைலம் என்னும் மல்லிகார்ஜுன பர்வதமாகத் திருவுருக்கொண்டு ஸ்ரீசிவபெருமானைத் தமது முடிமீது தாங்கும்பேறெய்தினர்.  அவரைத் திரிபுரதகனகாலத்தி லுபாசித்து அவருருப் பெற்றுச் சிவபெருமானைத் தாங்கினோ மாகையால் அவருக்கும் நமக்கும் ஸம்பந்தமுடைமை காரணமாக அவர் பருப்பதமாய் நின்று சிவபெருமானைத் தாங்குவது போல நாமுமவரைப் பருப்பதவடிவாய் நின்று தாங்கவேண்டுமென்று விஷ்ணுவானவர் சிந்தித்துத் தவஞ் செய்கையில், சிவசூ நுவாகிய குமாரக் கடவுள் தோன்றி அவருக்கு வேங்கடமென்னும் மலையுருவந் தந்து அம்மலையினுச்சியிற் றாமெழுந்தருளித் தம்மைத்தாங்கும்படியான பெரும்பாக்கியத்தை அவருக்குப் பிரஸாதித்தனர் என்று திருவேங்கடமான்மியத்திற் சொல்லப்பட்டிருக்கிறது' என்ற சிவாதிக்கிய ரத்நாவளி இரண்டாம் பாகம் இச்செய்யுட்குப் பிரமாணம்.
******
    சிதம்பர நடராஜருடைய நடன வைபவத்தைக் கண்டு அவசமாகித் தலைகால் தெரியாமல் வீழ்ந்து கிடக்கின்றார் தில்லைக்கோவிந்த ரென்பது.
    சித்தசன் றன்னைச் செற்றோன் சிதம்பரந் தன்னிற் செய்த
    வித்தக நிருத்தங் கண்டு மெய்ம்மறந் தவச மாகிப்
    பத்துறழ் பன்னி ரண்டு பகலவ னடியில் வீழ்ந்த
    சித்திர கூட மாயன் செப்பருங் கிடக்கை பாராய்.
    (அ-ரை) சித்தசன்றன்னைச் செற்றோன் - சிவபிரான்; வித்தக நிருத்தம் - ஞான நடனம்; மெய்ம்மறந்து - தன்னை மறந்து; அவசம் - பரவசம்; பத்துறழ் பன்னிரண்டு - நூற்றிருபது; பகல் - நாட்கள்; கிடக்கை - வீழ்ச்சி.
    'செல்லரிய பரவசமாய்த் திருமுன்னே வீழ்ந்திறைஞ்சித் - தொல்லைதனி லறிவிழந்து துணைவிழிகள் புனல்பெருகப் - பல்லுயிர்க்கு முயிராகும் பரமசிவ பூரணத்தி - னெல்லைதனிற் புக்கழுந்தி யெழுந்தில னீரிரு திங்கள்' என்ற கந்தபுராணம் இச்செய்யுட்குப் பிரமாணம்.  (கஉரு)
******
    இப்போதிருக்குத் தில்லைக்கோவிந்தரின் கோயில் அவருடையதன்றென்பது.
    தில்லைக்கோ விந்தன் முன்னர்த் தில்லையின் முன்றில் வீழ்ந்தான்
    தில்லைக்கோ விந்தன் பின்னர்த் தெருநடுக் கிடந்தா னிப்பாற்
    றில்லைக்கோ விந்தன் சென்றான் றிருப்பதி யென்னே மாயந்
    தில்லைக்கோ விந்த னின்றெந் திருநடன் றளியுட் சேர்வே.
    (அ-ரை) மாயம் - ஏமாற்றம்; நடந்தளியுள்சேர்வு - நடராஜருடைய கோயிலுக்குள் வந்திருத்தல்.
    'வரங்கிடந்தான் றில்லையம்பல முன்றிலம்மாயவனே' என்ற திருக்கோவையாரும். 'ஸ்ரீ சிதம்பரத்திலுள்ள வைதிக சைவர்களால் நடுத்தெருவிற் கிடத்தப்பட்ட நாராயண விக்கிரகத்தை' , 'நடுத்தெரு நாராயணன் எனுஞ் சொல்லும் அது காரணமாக வுண்டாயிற்று' என்ற சைவசமய சரபமும், 'அந்த விழவெல்லாந் தீரும்படி திருப்பதிக்கெழுந்தருளி ஸ்ரீ கோவிந்தராஜனை மூலபேரஸஹிதமாக திருப்ரதிஷ்டையும் பண்ணிவைத்து' என்ற தென்கலைக் குருபரம்பரையும், 'சென்றனன் றில்லைச் சித்திரகூடஞ் செறிந்தனன் செறிவதன் முன்னே - யன்றதிற் றிருக்கண் வளர்ந்தருண் மாயனனந்தனே முதலவரோடு - மொன்றுமாங்கினறி மறைந்தனன் மறைந்தாங் கோங்கு வேங்கடமென மறைக - ளென்று நின்றேதந் திருப்பதி தனிலே யெழுந்தனன் யாவருமிறைஞ்ச' என்ற எம்பெருமானார் வைபவமும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள்.    (கஉசா)
******
    அவனன்றி யோரணுவு மரையா தென்பது.
    சங்கின னாதி வானோர் தாம்விடு படைக டம்மை
    யங்கொரு துரும்பா லாற்ற லழிவுசெ யியக்கன் றன்னைச்
    சங்கர னென்று தேர்ந்து தாழ்ந்தன ரென்னி னன்னோன்
    மங்கலி லாண்மை தன்னை வரைசெய வல்லார் யாரே.
    (அ-ரை) சங்கினன் - விஷ்ணு; படைகள் தம்மை - சக்கர முதலிய ஆயுதங்களை; இயக்கன்றன்னை - யக்ஷவடிவனை; தேர்ந்து - உமாதேவியார் சொன்னதால் தெரிந்து; தாழ்ந்தனர் - செருக்கு நீங்கினர்; அன்னோன் - அச்சங்கரனுடைய; வரை செய - அளவிட; விடு, செய் இறந்த காலவினைத் தொகைகள்.
    'கிமிதம் யக்ஷமிதி' என்று தொடங்கி 'பஹசோபமாநாமுமாம் ஹைமவதீம் தாம்ஹோவாச கிமே தத் யக்ஷ மிதி ஸாப்ரஹ்மேதி ஹோவாச' என்றது வரையிலுள்ள கேநோபநிஷத்து இச்செய்யுட்குப் பிரமாணம்.  இவ்வுபநிஷத்தில் மென்மை கூறப்பட்டவர் கூட்டத்தில் விஷ்ணுப் பிரஸ்தாபமில்லையென்பர் ஒரு சாரார்.  யக்ஷவடிவமாய் வந்தவர் சிவபிரான்.  அது உமாதேவியாராலேயே தெளிவிக்கப்பட்டது.  படலே அக்கூட்டத்துள் விஷ்ணு அடங்கவில்லையெனல் யாங்ஙனம்? அது உய்த்துணரவைக்கப்பட்டது.  ஆகலினன்றோ 'அரியும் - அற்றப்படாத படைவீசி யார்ப்ப அவைகூர்மழுங்கியனவே' என்றது காஞ்சிப்புராணம். (கஉஎ)
******
    விஷ்ணு யாகம், சிவபிரான் யாகதேவன் என்பது.
    சங்கர பரனை நீக்கிச் சக்கர பரனை வைத்துப்
    பொங்கிய தக்கன் வேள்வி புரிந்தன னாங்கம் மாலை
    வெங்கயி றதனால் யாத்தவ் வேள்வியை யழித்தான் வீரன்
    சங்கர னியாக தேவன் சக்கிரி யாகந் தானே.
    (அ-ரை) சங்கரபரன் - சிவபிரான்; சக்கரபரன் - விஷ்ணு; பொங்கிய - செருக்குற்ற; ஆங்கு - அவ்வியாகசாலையில்; வெம் கயிறதனால் நாகபாசத்தால்; யாத்து - கட்டியுருட்டி; வீரன் - வீரபத்திர மூர்த்தி; சக்கிரி - விஷ்ணு.
    'யோ தக்ஷ யஜ்ஞேஸர ஸங்காந் விஜித்ய விஷ்ணும் பபந்தோரக பாசேந வீர: தஸ்மை ருத்ராய நமோ அஸ்து' என்ற சரபோபநிஷத்தும் 'மேதபதிம் ருத்ரம்' , 'ஆவோராஜாந மத்வரஸ்ய ருத்ரம் - - அவஸேக்ருணுத்வம்', 'த்ரிஸ்ஸப்தயத்குஹ்யா நித்வே - - நிஹிதா' , 'ருத்ரம் யஜ்ஞாநாமஸாத திஷ்டமபஸாம்' என்ன்ற ருக்வேதமும், 'ருத்ரோ யாகதேவ:' என்ற பாசுபத ப்ரஹ்மோபநிஷத்தும், 'யஜ்ஞோவை விஷ்ணு:' என்ற சுருதியும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள். (கஉஅ)
******
    சிவபிரானிருக்குஞ் சுடுகாடு இதுவென்பது.
    முன்னவ னழிக்கும் போது முகுந்தனைப் பிறரை நெற்றி
    துன்னெரி விழியா னீற்றித் தூவிட மயான மாகு
    மன்னதி லவனே யேக னாகிவீற் றிருப்பா னப்போ
    தின்னொரு தேவ னாங்கே யிருப்பதற் குளனோ செப்பாய்.
    (அ-ரை) முன்னவன் - சிவபிரான்; அழிக்கும்போது - சங்கரிக்கும் போது; துன் எரி விழ் - இருக்கிற கண்ணின் தீ; நீற்றி - சுட்டுச்சாம்பராக்கி; தூவு இடம் - சிதறுகிற தனியிடமேம; அன்னதில் - அந்தமயானத்தில். 'பெருங்கடன்மூடி' என்ற தேவாரம் இச்செய்யுட்குப் பிரமாணம்.    (கஉகூ)
******
    சிவபிரான் மன்மதனை யெரித்தாரென்பது.
    வனிதைய ரின்பம் வேட்டு மாயவன் பிரம னாதி
    யனைவரு மவர்தம் மாணைக் கடங்கிடச் செய்யும் வேளைத்
    தனதொரு நுதற்கட் டீயாற் றகித்தவன் மலர்த்தா டன்னை
    யனுதின நினைவார் தாமே யாழ்குறார் காம கோயில்.
    (அ-ரை) வேட்டு - விரும்பி; அவர்தம் - அவ்வனிதையரின்; வேளை - மன்மதனை; ஆழ்குறார் - வீழ்ந்தழுந்தமாட்டார்.
    'யோ - - பஸ்மீசகாரம் மந்மதம் - - தஸ்மை ருத்ராய நமோ அஸ்து'' என்ற சரபோபநிஷத்து இச்செய்யுட்குப் பிரமாணம்.    (கங0)
******
    சிவபிரான் ஆலாலத்தை யுண்டாரென்பது.
    கமலனும் புகைய மாலுங் கருகிடக் கடலில் வந்த
    சமனிகர் விடத்தை யீசன் றன்மிடற் றடக்கி நூலை
    விமலமென் பூமேன் மாதர் மிடற்றினிற் காத்தா னென்னி
    னெமதிடர் களைய வல்லா னேவனவ் வீச னன்றி.
    (அ-ரை) கமலன் - பிரமன்; வந்த விடத்தை என்க; விடத்தை - ஆலஹாலமென்னும் விஷத்தை; சமன் - எமன்; நூலை - தாலியை; விமலம் மெல் பூமெல் மாதர் - இலக்குமியும் சரஸ்வதியும்.
    'பபேதோ ஹாலாஹலம் தஹந்தம்| தஸ்மை ருத்ராய நமோ அஸ்து' என்ற சரபோபநிஷத்து இச்செய்யுட்குப் பிரமாணம்.    (கஙக)
******
    சிவபிரான் திரிபுர தகனஞ் செய்தா ரென்பது.
    பசுபதி நாமே யென்று பண்ணவர் செருக்குக் கொண்டார்
    பசுபதி யதனைத் தந்தாற் பாற்றுவ னெயில்க ளென்றான்
    பசுபதி சுயநீ யென்றப் பரமனைப் பணிந்தா ரன்னோர்
    பசுபதி விரைந்து சென்று பாற்றினா னெயில்கண் மூன்றும்.
    (அ-ரை) பண்ணவர் - தேவர்; பாற்றுவன் - அழிப்பேன்; எயில்கள் - முப்புரங்களை; சுயம் - இயல்பாகவே; அன்னோர் - அத்தேவர்கள்.
    'யோ லீலயைவத்ரிபுரம் ததாஹவிஷ்ணும் ஸல்யம் ஸோமாக்நிம்சபாணம் - தஸ்மை ருத்ராய நமோ அஸ்து' , ' ஸ்வயம் தஸ்மாத் பசுபதிர் பபூவ' என்ற சரபோபநிஷத்தும், 'ஸோ ப்ரவீத்வரம்வ்ருணாஅஹமேவபசூநா மதிபதிரஸாநி' என்ற எஜர்வேதமும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள்.    (கஙஉ)
******
    திரிபுர தகனசமயத்தில் சிவபிரான் கையில் விஷ்ணு அம்பானாரென்பது.
    திரிபுர மெரித்த ஞான்று சீதர னம்பாய் வாசம்
    விரிமல ருறைவோன் பாகாய் வேறுளார் வெவ்வே றாகி
    யெரிநிற மேனி யீச னேவலிற் கிடந்த செய்தி
    தெரிவத முடையோர் தேர்வர் சிவபிரான் றனது மேன்மை.
    (அ-ரை) ஞான்று - காலத்தில்; வாசம் விரிமலர் உறைவோன் - பிரமன்; பாகு - சாரதி; வேறு உளார் - மற்றைத்தேவர்கள்; வெவ்வேறு - அத்தேரின் பல்வேறு உறுப்புக்கள்; தெரி - தெரிந்து கொள்ளவல்ல.
    பாரதம் கர்ணம் 26 ஆவது அத்தியாயம் இச்செய்யுட்குப் பிரமாணம். (கஙங)
******
    விஷ்ணு ரிஷபமாகிச் சிவபிரானைச் சுமந்தாரென்பது.
    அம்புரு வடைந்து மென்னே யடியனேன் றருக்கி நின்றேன்
    வெம்பவ மகல வேண்டும் விமலனே யருளென் றன்று
    சம்புவை யிரதத் தோடுந் தனிவிடை யாகி மாலோன்
    கும்பிடு திறத்தா லேற்றான் குரவையிட் டார்த்தார் தேவர்.
    (அ-ரை) தருக்கிநின்றேன் - அகங்கரித்தேன்; பவம் - பாவம்; அன்று - அத்திரிபுரதகனகாலத்தில்; இரதத்தோடும் - தேரோடும்; விடை - ரிஷபம்; குரவையிட்டு - கூத்தாடி; ஆர்த்தார் - ஆர்ப்பரித்தார்.
    'மாயனு முப்புரங் கொன்ற வஞ்ஞான் - றேறாயெமைத் தேரொடு தாங்கினன்' என்ற காஞ்சிப்புராணம் இச்செய்யுட்குப் பிரமாணம்.    (கஙச)
******
    விஷ்ணுவின் நரசிம்மாவதாரத்தைச் சிவபிரான் கொன்றா ரென்பது.
    மானுட மடங்க றன்னை வலிதபக் கொன்று தோலை
    மேனியி லணிந்தான் வீரர் வீரனாஞ் சரப மூர்த்தி
    யானெனு மகங்கா ரத்தை யெனதெனு மமகா ரத்தை
    மானவ னறுக்க வேண்டின் வழுத்துக வவன்மென் றாளே.
 
    (அ-ரை) மானுட மடங்கல்தன்னை - நரசிங்கத்தை; வலிதப - ஆற்றல் கெடும்படி; மானவன் - மனிதன்; அவன் - அச்சரபமூர்த்தியின்.
    'யோகோரம் வேஷமாஸ்தாய சரபாக்யம் மஹேச்வர: | ந்ருஸிம்ஹம் லோக ஹந்தாரம் ஸம்ஜகாந மஹாபல:| ஹரிம் ஹரந்தம் பாதாய்யா மநுயாந்தி ஸரேச்வரா:| மாவதீ: புருஷம் விஷ்ணும் விக்ரமஸ்வ மஹாநிசி|| க்ருபயா பகவார்விஷ்ணும் விததார நகை: கரை: கர்மாம்பரோ மஹோவீரோ வீரபத்ரோ பபூவஹ| ஸஎகோ ருத்ரோ த்யேய:' என்ற சரபோபநிஷத்து இச்செய்யுட்குப் பிரமாணம்.    (கஙரு)
******
    விஷ்ணு தம் கண்ணைப்பிடுங்கிப் பூவாகைவைத்துச் சிவார்ச்சனை செய்து சக்கரம் பெற்றாரென்பது.
    சங்கரன் மலர்த்தா டன்னிற் றமரை யெனத் தன் கண்ணைப்
    பங்கமின் மால்சூன் றிட்டுப் பரசிவ வெனையா ளென்றான்
    சங்கரன் கமலக் கண்ணா சக்கர மிந்தா வென்றான்
    பங்கமின் மால தேற்றான் பணிந்திது சுருதி வாய்மை.
    (அ-ரை) பங்கம் - குற்றம்; சூன்று - பிடுங்கி; இட்டு - தாமரைப் பூவாகக் கருதி அருச்சித்து; இந்தா - இதோ பெற்றுக்கொள்; ஏற்றான் பணிந்து - வணங்கிப் பெற்றுக்கொண்டான்; இது - இவ்வுண்மை.
    'யோவாம பாதார்ச்சித விஷ்ணு நேத்ரஸ்தஸ்மை ததெள சக்ர மதீவ ஹ்ருஷ்ட: தஸ்மை ருத்ராய நமோ அஸ்து' என்ற சரபோபநிஷத்து இச்செய்யுட்குப் பிரமாணம்.    (கஙசா)
    சிவபிரான் கிருஷ்ணனுக்குப் பிள்ளைவரங் கொடுத்தாரென்பது.
    மதனுட றன்னை நீற்றி மலரவன் சிரத்தைக் கொய்த
    சதுரனை யடியில் வீழ்ந்து தமியனேன் மனைவி சாம்ப
    வதிமன மகிழப் பிள்ளை வரமெனக் கெந்தாய் தாவென்
    றிதமுற வேத்தக் கண்ண னிறைவனு மவற்க தீந்தான்.
    (அ-ரை) நீற்றி - சாம்பராக்கி; சதுரன் - சிவபிரான்; சாம்பவதி - கிருஷ்ணனின் மனைவி பெயர்; இறைவன் - சிவபிரான்.
    பாரதம் அநுசாசனம் 45, 46 ஆவது அத்தியாயங்கள் இச்செய்யுட்குப் பிரமாணம்.    (கஙஎ)
    அர்ச்சுனன் கிருஷ்ணனை விக்கிரகமாக வைத்துக் கொண்டு அதிற் சிவபூசை செய்தானென்பது.
    மன்னவ னென்று செய்வர் மதிப்பவ னடியர் தம்மைத்
    தன்னமு மெண்ணார் யாருந் தாசனென்றவன்றன் வேந்தைத்
    தென்னுறு கண்ணன் மேலே சிவபூசை பார்த்தன் செய்து
    தன்னிய னானா னென்னிற் சாற்றுவாய் பரமா ரென்றே.
    (அ-ரை) தன்னமும் - கொஞ்சமும்; தாசன் - அடியவன்; தென் - அழகு; பார்த்தன் - அருச்சனன்; தன்னியன் - பாக்கியவான்.
    பாரதம் துரோணம் 79, 80, 81 ஆவது அத்தியாயங்கள் இச்செய்யுட்குப் பிரமாணம்.  (கஙஅ)
    கிருஷ்ணன் சிவோபாசனையால் வாணனை வென்றா னென்பது.
    வாணனார் தம்மோ டேற்று மாயனார் முன்னந் தோற்றார்
    வாணனார் கரங்க டம்மை மாயனார் பின்னர்க் கொய்தார்
    வாணனார் மனத்த ரான மகேசனார் தந்தே யன்றோ
    வாணனார் பரங்கள் போக்கும் வலியினை மாயர் பெற்றார்.
    (அ-ரை) ஏற்று - எதிர்த்துப் போர் செய்து; கரங்கள் தம்மை - கைகளை; கொய்தார் - வெட்டினார்; பரங்கள் - கைகளாகிய சுமைகளை; வலி - ஆற்றல்.
    "பகவான், ' நாராயணரே! - - என் அனுக்கிரகத்தினாலே ஒருவனாவது உம்மை - - ஹிம்சிக்கமாட்டான்.  மேலும், யுத்தத்தை நீர் அடைவீராயின் என்னைக்காட்டிலும், மேற்பட்டவராவீர்' என்று கூறினார்" என்ற பாரதம் துரோணம் 202 ஆவது அத்தியாயம் இச்செய்யுட்குப் பிரமாணம்.    (கஙகூ)
    சிவபிரான் கொடுத்த வரத்துக்கஞ்சியே பஸ்மாசுரவதத்தில் விஷ்ணு பெண்வடிவங் கொண்டாரென்பது.
    நீற்றன துடம்பை மாலோ னீற்றின னென்றாய் வெள்ளை
    யேற்றவ னந்த நீற்றற் கீந்துள வரத்துக் கம்மா
    லாற்றவு மஞ்சி யன்றோ வாரணங் குருவங் கொண்டான்
    போற்றுக விளையாட் டென்றப் புராரியி னோட்டந் தன்னை.
    (அ-ரை) நீற்றன் - பஸ்மாசுரன்; நீற்றினன் - எரித்தான்; வெள்ளை ஏற்றவன் - சிவபிரான்; வரமாவது யார் தலையில் அவ்வசுரன் கை வைத்தாலும் அவர் சாகவேண்டுமென்பது;  ஆற்றவும் - மிகவும்; அணங்கு - மோகினி; போற்றுக - மதித்து உய்வாயாக; புராரி - சிவபிரான்.
    இச்செய்யுள் பிறர் கொள்கையை உடம்பட்டு மறுத்தது.    (கச0)
    அனுமானச் சிவாவதார மென்றல் அவைதிக மென்பது.
    பிறப்பில னென்றே மேலோர் பிஞ்ஞக னடியை யேத்திச்
    சிறப்பினை யடைந்தா ரென்று செப்பிடுஞ் சுருதி யந்த
    வறப்பெரு நூற்கு மாறா யஞ்சனை கருவுட் பட்டுப்
    புறப்பட லிலனோ வன்னோன் புகலெனப் பிதற்ற லாமோ.
    (அ-ரை) சிறப்பினை - பிறவாமையை; அன்னோன் அஞ்சனை கருவுட் பட்டுப் புறப்படலிலனோ புகல் என அந்த அறப்பெருநூற்கு மாறாய்ப் பிதற்ற லாமோ என்க; அஞ்சனை கருவுட்பட்டுப் புறப்படல் - ஆஞ்சனேயனாய் வருதல்; அன்னோன் - அச்சிவபிரான்.    (கசக)
    இதுவுமது
    உருத்திர னருளினாலே யஞ்சனை யுதரந் தன்னின்
    மருத்துவி னமிச மொன்று வந்ததிங் கனும னாகக்
    கிருத்திம ரவனை யீன்ற கேசரி தனையச் சேயை
    யுருத்திர னெனவத் தாயை யுமையெனப் பிதற்றி நைவார்.
    (அ-ரை) மருத்துவின் - வாயுலினுடைய; இங்கு - இவ்வுலகில்; கிருத்திமர் - பொய்யர்; அவனை - அவ்வனுமனை; கேசரி - அவன் பிதா; கேசரிதனை அச்சேயை - கேசரி யென்னுந் தந்தையையும் அனுமனாகிய அப்பிள்ளையும்; அத்தாயை - அந்த அஞ்சனை யென்பாளை; நைவார் - துன்புறுவார்; பூர்வபக்ஷகள் ஒருசமயம் பரமசிவன் கேசரியாகவும் பார்வதி அஞ்சனையாகவும் உருமாறிவந்து புணர்ந்து அனுமானைப் பெற்றன ரென்பார்; மற்றொரு சமயம் அனுமனையே பரமசிவாவதாரமென்பார்.
    'ருத்ரவீர்ய ஸமுத்பவாய' , 'மாருதாத்மஜாய' ,'கேசரீஸதாய' என்ற ஆஞ்சனேயாஷ்டோத்தரமும், 'பரமனும் பரிவிற்பார்த்துத் - தடமுலையுமைக்குக் காட்டி வாயுவின் றனயனென்றான்' என்ற ககம்பராமாயணமும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள்.    (கசஉ)
    பார்வதி தேவியாரை இராவணன் இச்சித்தான், பஸ்மாசுரன் துரத்தினான் என்பனவாகிய கதைகளெல்லாம் பூர்வபட்சிகள் துவேஷத்தாற் செய்த கற்பனைகளே யென்பது.
    கவினுய ரிராமன் பெண்டைக் கண்ணனின் மனைவி மாரைப்
    புவிதனி லயலார் கொண்டு போயின ரதற்கு நாணி
    நவிலுவ ரொருபொய் கெளரி நாயகி தனக்குந் தீயோர்
    தவிருவ துண்டோ வன்னோர் சம்புவி னுதற்கட் டீக்கே.
    (அ-ரை) கவின் - அழகால்; நவிலுவர் - சொல்லுவர்; பொய் - கற்பனை; தவிருவது - விலகுவது; அன்னோர் - அத்தீயோர். (கசந)
    விட்டுணு யானைகாத்த சரிதத்தைவிடச் சிவபிரான் யானைகாத்த சரிதமே சிறந்தது. விட்டுணுகாத்த யானை விட்டுணுவைக் கருதிக்கொண்டே ஆதிழலமென்றழைத்தது என்பது.
    வேழமொன் றானைக் காவில் விமலனை யேத்தி யன்னான்
    றழ்வகல் பதத்தைப் பெற்ற சரித்திர நுணுக்கங் கண்டோர்
    வேழமின் னொன்று மாலை விளித்தவன் றுணையா லோர்கா
    லாழ்புனல் முதலை வாய்விட் டகன்றதை மதிப்பார் கொல்லோ.
    (அ-ரை) ஆனைக்காவில் - திருவானைக்காவென்னுந் தலத்தில்; விளித்து - அழைத்து; ஆழ் - இறங்குவோர்யாரும் ஆழ்ந்து விடுகிற.
    'பதகமுதலைவாய்ப் பட்ட களிறு - கதறிக் கைகூப்பி யென் கண்ணா கண்ணாவென்ன - வுதவப் புள்ளூர்ந்தங்குறு துயர் தீர்த்த - வதகன்' , 'வேழம் - முதலைபற்ற மற்றது நின் சரணினைப்ப' ,' யானை - - கயம்புக்கஞ்சி - - இடரடுக்க, ஆழியான் பாதம் பணிந்தன்றே - - எய்திற்றுப் பண்டு' என்ற நாலாயிரம் இச்செய்யுட்குப் பிரமாணம்.     (கசச)
    சிவபிரான் கபாலமாலை யணிவது தம் பரத்துவத்தை வெளிப்படுத்தற்கா மென்பது.
    விதியரி விளிந்த வென்பை மேனியிற் றரித்துத் தானே
    கதிபிற ரிலையென் றீசன் காட்டுவான் யார்க்கு மதை
    மதியில ராகிச் சில்லோர் வைதுமால் பாஞ்ச சன்யம்
    பதிதர வாய்வைத் தூதும் பண்பினை மதிப்பா ரந்தோ.
    (அ-ரை) விதி - பிரமன்; விளிந்த - செத்த; என்பை - எலும்புகளை; கதி - புகலிடம்; அதை - அவ்வெலும்பாபரணத்தை; பதிதர - பதிய; பஞ்சசனனுடைய எலும்பாகிய பாஞ்சசன்யமென்னுஞ் சங்கை வாயில் வைக்கலாமோ வென்று கண்டித்தபடி.    (கசரு)
    பிரமனுடைய சிரசைக்கிள்ளிய பாவம் சிவபிரானைப் பற்றா தென்பது.
    சிரமயற் கொழித்த பாவஞ் சிவற்கரி யொழித்தா னென்றாய்
    சிரமயற் கேனம் மாயன் றிரும்பவுந் தந்தா னில்லை
    சிரமயற் கொழித்தான் காரி சிவன்பழிக் கேது வென்னே
    சிரமயற் கொழித்தா னென்றச் சிவனைநூல் முறையாற் போற்றும்.
    (அ-ரை) காரி - பைரவமூர்த்தி; எது - காரணம்; என்னே? இல்லையென்றபடி; முறையால் - மகனாகிய பைரவமூர்த்தி அப்பனாகிய சிவபிரானின் வேறல்ல னென்ற முறைமைபற்றி.
    'வருபடை வேகக் காற்றினன் முரிய விரைந்து செல் வயிரவப் புத்தேள் - திருமலர்க்குரிசில் பழித்திடு மஞ்சாஞ் சிரத்தினை யுகிரினாற் கொய்தான்' என்ற காஞ்சிப் புராணமும், 'யோ ப்ரஹ்மண: பஞ்சம வக்த்ர ஹந்தா தஸ்மை ருத்ராய நமோ அஸ்து' என்ற சரபோபநிஷத்தும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள்.    (கசசா).
 
******
சிவமாம் தெய்வத்தின்மேல் தெய்வம் இல்லை.
ஸ்ரீ மெய்கண்ட தேசிகன் திருவடி வாழ்க.
ஸ்ரீ சிவஞான சுவாமிகள் திருவடி வாழ்க.
 

--------------------------------------------------------------------------------