Home           Page 14       Page 16        Origin of Pillai

 


POI KAAL KUDHIRAI PILLAI

http://www.bangaloremirror.com/.../articleshow/22086109.cms
Yogalingam’s father TC Sundara Murthy Pillai

Art helps build bridges and transcend borders. That's the noble thought that must have stayed with Bangalore-based S Yogalingam for the 50 years that he has been performing ‘keelu kudure’ (a pantomime with a wooden horse) on stage. Starting at the tender age of 14, he has showcased this folk dance far and wide, and has the distinction of performing for VIPs like Indira Gandhi and Sonia Gandhi.


Born in Bangalore in 1946, Yogalingam followed in his distinguished father’s footsteps at the age of 14. He gave his first ‘keelu kudure’ performance in 1960 and continued on stage for 50 years. Coming from a family that boasts of having had eight ‘keelu kudure’ dances, Yogalingam has an eye-popping 12,000 performances to his credit.“Apart from India, I have performed in Mauritius, the former USSR, South Africa, Singapore, Malaysia and France. I have been awarded in all these places,” he says.

Yogalingam has had his share of trouble too. When he was working with ITI, he was accused of performing in public while being a government employee. At one point, he was even assaulted. But his commitment to his art remained unshaken.

Commenting on the issue, B Basavaraju, secretary of the Kannada and culture department, said, “It is unfortunate that instead of the department recognising and awarding talent, people have to apply for the award. He (Yogalingam) need not to ask the TN government, let him apply again. We get more than 35,000 applications every year and select around 50 people. It is possible his application may have been left out. Just because it is a Tamil Nadu art form, we do not tell people we cannot give the award.”

Distinguished dad
Yogalingam’s father TC Sundara Murthy Pillai, a pioneer of the dance form, was conferred with the Rajyotsava award when Ramakrishna Hegde was chief minister. All of 96, Murthy started performing in 1936. “Though I was born in Bangalore, I went to Thanjavur to learn ‘poikkal kudirai atam’ and when I came to Bangalore I named it ‘keelu kudure’. I am a freedom-fighter and participated in satyagraha movements launched by the Congress. But so far the government has not considered me a freedom-fighter though the then Mysore Pradesh Congress Committee and the Freedom-Fighters Association gave me certificates and many former ministers declared me a freedom-fighter. I don’t want money from the government, but recognition as a freedom-fighter and official invitations to Independence Day and Republic Day functions,” says the nonagenarian.
 

horizontal rule

Sivangyanam kanda  Meykandar....Meykanda Devar.....
Meykanda Vellalar Pillai

https://sites.google.com/site/meykandasastras/meykandar--bio

தென்பெண்ணை யாற்றுக்கும் வட வெள்ளாற்றுக்கும் இடைப்பட்டது நடுநாடு.
இங்கே கி..பி. பதின்மூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியில் சிவநெறியொழுகும் வேளாண் பெருமக்கள் வாழ்ந்து வந்தனர். அவருள், குறுக்கையர், களப்பாளர் முதலிய குடிவகை உண்டு. அவருள் களப்பாளரது குடியொன்று பெண்ணாடத்தில் இருந்து நல்லறங்களைச் செய்து வந்தது. அவருள் அச்சுத களப்பாளர் சிறந்து விளங்கினார்.  இப்பெண்ணாகடத்தவராக இக்களப்பாளர்  நடுநாட்டின் வடக்கிலோடும் தென்பெண்ணையாற்றின் தென்கரையில் உள்ள திருவெண்ணைநல்லூரில் வாழ்ந்த வேளாண் செல்வரொருவர் மகளை மணந்துகொண்டு இல்லிருந்து நல்லறம் புரிந்து வந்தார்.

திருக்கயிலையில் பெருங்காவல் பூண்டொழுகும் நந்தியெபெருமானுடைய திருவருள் மரபில் வந்த சமய குரவர் நாவ்வருள் நான்காமவராகிய பரஞ்சோதி மாமுனிவர் திருவெண்ணெய் நல்லூர் வழியாக எழுந்தருளினார். அங்கே முன்னைத் தவத்தால் முழுதுணர்வுடையராய் இளமைப் திருமேனிகொண்டு வளர்ந்து வந்த சுவேதவனபெருமாள் என்னும் முனிவரைக் கண்டார். கண்டதும், அவரையடைந்து அவர்க்குத் திருவருள் ஞானமென்னும் சிவஞானச் செம்பொருளையுணர்த்தி சத்திய ஞானதரிசினி என்னும் தமது ஞானாசிரியர் பெயரையே மெய்கண்டான் எனத் தமிழில் மொழி பெயர்த்திட்டு, "இப்போது நல்கிய சிவஞானத்தை இனிய தமிழில் அமைத்து எல்லா மக்கட்கும் வழங்குக" என இயம்பிச் சென்றார். திருவருள் ஞனம் பெற்ற மெய்கண்ட தேவர், திருவெண்ணெய் நல்லூரிலிருக்கும் திருவருட்டுறை யென்னும் திருக்கோயிலில் உள்ள பொல்லாப் பிள்ளையாரை  வணங்கி, வேறுபட விரித்திருந்த கலைஞானங்களைக் கேட்டுத் தெளிவு பெற்றார். பின்பு, தாம்கேட்டு இன்புற்ற சிவஞானத்தைச் "சிவஞானபோதம்" என்ற பெயரிய செந்தமிழ் நூலாக எழுதத் தம்பால் அன்போடு வந்தார் பலருக்கும் அறிவுறுத்துவராயினர்.

horizontal rule

ஒளவை துரைசாமிப் பிள்ளையின் வாழ்வு - Avvai Durai Samy Pillai

இன்றைய திண்டிவனத்திற்கு அருகில் ஒளவையார் குப்பம் என்னும் சிற்றூரில் கர்ணிகர் மரபில் சுந்தரம்பிள்ளை-சந்திரமதி இணையரின் ஐந்தாம் மகனாகப் பிறந்த ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை, அவ்வூரிலேயே தொடக்கக் கல்வி பயின்று திண்டிவனத்தில் அமெரிக்க ஆர்க்காடு நற்பணி உயர்நிலைப் பள்ளியில் பள்ளியிறுதி வகுப்பு வரை பயின்று சிறப்பாகத் தேறினார். தொடர்ந்து வேலூர் ஊரிசுக் கல்லூரியில் அந்நாளைய இண்டர் மீடியட் என்னும் இடைநிலை வகுப்பில் பயிலத் தொடங்கினார். எனினும் சூழ்நிலைகள் உந்தித் தள்ள, படிப்பை ஒதுக்கி வைத்துவிட்டுச் சுகாதார ஆய்வாளார் (Sanitary Inspector) பணியில் அமர்ந்தார்.

More to read on Life of Avvai Durai Samy Pillai
 

horizontal rule

மூன்று முதல்வர்களின் ஆட்சியில் ஔவை நடராசன்

இந்திய ஆட்சிப் பணியைச் சாராத (Non- IAS) ஒருவர் அரசுச் செயலாளராக (Secretary to Government) நேரடி நியமனம் செய்யப்பெற்ற ஒரே அலுவலர் ஒளவை நடராசன்தான்.

முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரின் ஆட்சிக்காலத்தில் அரசுச் செயலாளராக 8 ஆண்டுகள் பணியாற்றினார்.

https://m.facebook.com/profile.php?fc=0&showPageSuggestions&id=283386165008644&_rdr

தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.



இது குறித்து ஞானதேசிகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஒளவை நடராஜனை மத்திய செம்மொழி நிறுவனத்தின் துணைத் தலைவராக நியமித்திருப்பது காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு தமிழன்னைக்கு செய்திருக்கின்ற மரியாதையாகும்.

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக பணியாற்றிய ஒளவை நடராஜனுக்கு இந்த பதவியை வழங்குவதன் மூலம் எப்படி தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்தினை வழங்கி காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு கௌரவித்ததோ, அதேபோல செம்மொழி நிறுவனத்திற்கு துணை தலைவராக அவரை நியமித்திருப்பது இந்த பதவிக்கு மரியாதை கூட்டுகின்ற செயலாகும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். (டி.என்.எஸ்)

horizontal rule

 

 

 

 

 

Please write about more greats to us, we will add them here

Page 14                            Page 16