Home           Page 17       Page 19        Origin of Pillai


 

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
 
 
ந. சி. கந்தையா பிள்ளை
பிறப்பு 1893
கந்தரோடை
இறப்பு 1967
தேசியம் இலங்கைத் தமிழர்
அறியப்படுவது ஆசிரியர்,ஈழத்து எழுத்தாளர்


 


 

ந. சி. கந்தையா (1893 - 1967) தமிழிலக்கியத் துறையில் சிறப்பாக செயலாற்றியவர். எளிய பாமர மக்களும் படித்துப் பலன் பெறுமாறு உரைநடையில் தமிழ் இலக்கியங்களை வழங்கினார்.

 

 

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

ந. சி. கந்தையாபிள்ளை யாழ்ப்பாணத்தில் உள்ள கந்தரோடை என்னும் ஊரில் 1893 ஆம் ஆண்டு நன்னியர் சின்னத்தம்பி அவர்களின் புதல்வராகப் பிறந்தார். அவ்வூரிலேயே கல்வி கற்றுத் தேறி, சில காலம் ஆசிரியப்பணி செய்தார். ஆசிரியப் பணியிலிருக்கும்போதே ஈழத்தில் பெரும் புலவர்களின் அறிமுகத்தில் தமிழ் இலக்கண, இலக்கியங்களை கற்றுத் தேர்ந்தார்.

சில காலம் மலேயாவில், பிருத்தானியா தொடர்வண்டி சேவையில் சில காலம் பணியாற்றினார். பின்னர் இலங்கை திரும்பி தமிழ்மொழி ஆராய்ச்சியில் ஈடுபட்டார். இவர் நவாலியூர் மருதப்பு என்பவரின் மகளான இரத்தினம்மாவைத் திருமணம் செய்தார். திருநாவுக்கரசு, மங்கையற்கரசி என இரு பிள்ளைகள் உள்ளனர்.

தமிழ் ஆராய்ச்சி[தொகு]

தமிழ் ஆர்வம் பெற்ற இவர், தமிழ்மொழி, தமிழ்நாகரிகம், சிவவழிபாடு ஆகியவற்றின் ஆராய்ச்சியில் ஈடுபட்டார். தமிழ்நாடு சென்று தமிழ்நூல்களை ஆராயும் முயற்சியிலும் ஈடுபட்டார். தொல்பொருள் ஆதாரங்களைப் பெற்று ஆராய்ந்தறிந்தார். இவற்றை ஆதாரமாகக் கொண்டு பல ஆராய்ச்சி நூல்களை எழுதி வெளியிட்டார். அவற்றில் சில:

bulletதமிழ்மொழி
bulletதமிழர் வரலாறு
bulletதமிழர் நாகரிகம்
bulletதமிழகம்
bulletதமிழ் இந்தியா
bulletதிராவிட நாகரிகம்
bulletசிவவழிபாடு
bulletமுச்சங்கங்கள்
bulletசிந்துவெளி நாகரிகம்
bulletதமிழர் ஆரியர் கலப்பு
bulletபத்துப்பாட்டு
bulletபதிற்றுப்பத்து
bulletகலித்தொகை
bulletபரிபாடல்
bulletஅகநானூறு
bulletபுறப்பொருள் விளக்கம்
bulletகலிங்கத்துப் பரணி
bulletவிறலிவிடுதூது
bulletபெண்கள் உலகம்
bulletபெண்கள் சமூகம் அன்றும் இன்றும்
bulletபெண்கள் புரட்சி
bulletபொது அறிவு
bulletபொது அறிவு வினா விடை
bulletஉலக அறிவியல் நூல்
bulletஉங்களுக்குத் தெரியுமா
bulletஅறிவுக் கட்டுரைகள்
bulletநூலகங்கள்
bulletஅறிவு மாலை
bulletஅறிவுரைக் கோவை
bulletதமிழர் சமயம் எது?
bulletசைவ சமய வரலாறு
bulletசிவன்
bulletஇந்து சமய வரலாறு
bulletதமிழர் பண்பாடு
bulletநமது தாய்மொழி
bulletநமது மொழி
bulletநமது நாடு
bulletதிராவிட மொழிகளும் இந்தியும்
bulletதமிழ்ப் பழமையும் புதுமையும்
bulletமுச்சங்கம்
bulletதமிழ்க் கடவுளுக்கு ஆரியப் பாடலா?
bulletஆரியத்தால் விளைந்த கேடு
bulletபுரோகிதர் ஆட்சி
bulletஇராமாயணம் நடந்த கதையா?
bulletஆரியர் வேதங்கள்
bulletதிராவிடம் என்றால் என்ன?
bulletதிராவிட இந்தியா
bulletமறைந்த நாகரிகம்
bulletஆதி மனிதன்
bulletஆதி உயிர்கள்
bulletமனிதன் எப்படித் தோன்றினான்?
bulletமரணத்தின் பின்
bulletபாம்பு வணக்கம்
bulletதமிழர் யார்?
bulletஉலக நாகரிகத்தில் தமிழர் பங்கு
bulletசிந்துவெளித் தமிழர்
bulletதென்னிந்நியக் குலங்களும் குடிகளும்
bulletதமிழர் சரித்திரம்
bulletவரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட தமிழர்
bulletதிருவள்ளுவர்
bulletதிருக்குறள்
bulletதமிழகம்
bulletதமிழ் இந்தியா
bulletதிருக்குறள் அகராதி
bulletதமிழ்ப் புலவர் அகராதி
bulletதமிழ் இலக்கிய அகராதி
bulletகாலக்குறிப்பு அகராதி
bulletசெந்தமிழ் அகராதி
bulletகலிவர் யாத்திரை
bulletஇராபின்சன் குரூசோ
bulletஅகத்தியர்
bulletதமிழ் ஆராய்ச்சி
bulletதமிழ் விளக்கம்
bulletநீதிநெறி விளக்கம்

ஆகியன.

தாம் எழுதிய நூல்களை பதிப்பித்து வெளியிடுவதற்காகத் தமிழ் நாட்டிற்கு சென்று, அங்கு வீரபாகுப் பிள்ளை என்பவரால் நடத்தப்பட்டுக் கொண்டிருந்த ஒற்றுமை நிலையம் மூலமாகத் தனது நூல்கள் சிலவற்றை வெளியிட்டார். பின்னர் முத்தமிழ் நிலையம், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் ஆகிய பதிப்பகங்களும் ந.சி.கந்தையா அவர்களுடைய நூல்களை வெளியிட்டன.

தமிழ் அகராதிகள்[தொகு]

தமிழியம் பற்றிய ஆய்வை மேற்கொண்ட பல அறிஞர்களுள் ந.சி.கந்தையா அவர்களின் பணி முதன்மையானது. பொது அறிவுத் துறையிலும், அகராதித் துறையிலும் தனித்துவமான இடத்தை பெற்றார். செந்தமிழ் அகராதி, தமிழ் இலக்கிய அகராதி, தமிழ்ப் புலவர் அகராதி, காலக்குறிப்பு அகராதி, திருக்குறள் அகராதிபோன்ற அகராதிகள் இவரால் தோற்றம் பெற்றன. ஐம்பதிற்கும் மேற்பட்ட நூல்களை இவர் எழுதியுள்ளார்.

மறைவு[தொகு]

இவர் தனது 74 வது வயதில் 1967 இல் இலங்கையில் காலமானார்.

வெளி இணைப்புகள்[தொகு]

தளத்தில்
ந. சி. கந்தையா பிள்ளை எழுதிய
நூல்கள் உள்ளன.
bullet தமிழ்ப்பேரறிஞர் ந. சி. கந்தையாபிள்ளை
bullet ந.சி.கந்தையாபிள்ளையின் நூல்கள் - நூலகம் திட்டத்தில்
bullet கந்தையா, ந.சி அவர்களின் புத்தகங்கள்

t

 

 

Please write about more greats to us, we will add them here

Home           Page 17       Page 19        Origin of Pillai