Home     Feedback    Help Saivaneri    Thevaram: page20

 

Thanks To Thiru. Si. Su. Mani of Arul Nandhi Sivam Arut Pani Mandram Tirunelveli


Sign Guest Book              

Gomathi Nayagam <sivadgn@...> wrote us this beautiful QUESTION Tamil Vs. Sanskrit ?

சிவாய நம

Dear Devotees,

As most of you know, there have been issues among shiva devotees themselves regarding தமிழ்மொழி or வடமொழி A DEBATE.

Lets have a look at our Thirumurai songs for the same
and we must stick to what our perumakal have said.

There shouldn't be any deviation from the path which was shown by our nayanmars.

There is a lot in our Thirumurai. I have collected just a few.

திருச்சிற்றம்பலம்

Hear / Download The Audio File 5.34 MB (MP3 File)

முதல் தந்திரம் - 3. ஆகமச் சிறப்பு - பத்தாம் திருமுறை

மாரியும் கோடையும் வார்பனி தூங்கநின்

றேரியு நின்றங் கிளைக்கின்ற காலத்து

ஆரியமும் தமிழும் உட னேசொலிக்

காரிகை யார்க்குக் கருணைசெய் தானே

பொழிப்புரை :

பெருகற்காலத்தும், சிறுகற்காலத்தும் நிறைந்த மெய்யுணர்விருக்கவும் அதனை நோக்காது புலனுணர்வே மிகப் பெற்று மக்கள் மெலிவுறுகின்ற காலத்து அம்மெலிவு நீங்குமாறு சிவ பெருமான் `ஆரியம், தமிழ்` என்னும் இருமொழிகளை உமா தேவியார்க்கு ஒருங்கு சொல்லி உலகம் உய்யத் திருவருள் செய்தான்.

அவிழ்க்கின்ற வாறும் அதுகட்டு மாறுஞ்

சிமிழ்த்தலைப் பட்டுயிர் போகின்ற வாறும்

தமிழ்ச்சொல் வடசொல் எனும்இவ் விரண்டும்

உணர்த்தும் அவனை உணரலு மாமே

பொழிப்புரை :

சிவபெருமான் உயிர்களைப் பாசத்தளை யினின்றும் விடுவிக்கின்ற முறையையும், பின் அவற்றை அன்பு வாயி லாகத் தன்னிடத்தே நிலைபெறுவிக்கின்ற முறையையும், அங்ஙனம் நிலைபெறுவித்தற்கண் உயிர் தனது பண்டைப் பயிற்சி வயத்தால் பாசத்திலே பொருந்தி அலைவுறுகின்ற முறையையும், `தமிழ்மொழி, வடமொழி` என்னும் இருமொழியுமே ஒருபடித்தாக உணர்த்தும்; அதனால், அவற்றுள் யாதொன்றையாயினும் முறைப்படி உணர வல்லார்க்குத் தத்துவ ஞானத்தையே யன்றிச் சிவஞானத்தைப் பெறுதலுங் கூடுவதாம்

 

 

மூன்றாம் திருமுறை - திருஆலவாய்

சந்துசேனனு மிந்துசேனனுந் தருமசேனனுங் கருமைசேர்

கந்துசேனனுங் கனகசேனனு முதலதாகிய பெயர்கொளா

மந்திபோற்றிரிந்து ஆரியத்தொடு செந்தமிழ்ப்பய னறிகிலா

அந்தகர்க்கெளி யேனலேன்றிரு வாலவாயர னிற்கவே

பொழிப்புரை :

சந்துசேனன், இந்து சேனன், தருமசேனன், மாசுடைய கந்தசேனன், கனகசேனன் முதலான பெயர்களைக் கொண்டு மந்திபோல் திரிந்து, வடமொழி, தென்மொழிகளைக் கற்றதன் பயனாகிய சிவனே முழுமுதற்கடவுள், சைவமே சீரிய சமயநெறி என்னும் உணர்வினைப் பெறாது அகக்கண்ணிழந்து திரியும் சமணர்கட்கு யான் எளியேனல்லேன். திருவாலவாயரன் என்னுள்ளிருந்து அருள்புரிவார்

முதல் திருமுறை - திருஅச்சிறுபாக்கம்

மைம்மலர்க்கோதை மார்பினரெனவு மலைமகளவளொடு மருவினரெனவும்

செம்மலர்ப்பிறையுஞ் சிறையணிபுனலுஞ் சென்னிமேலுடையரெஞ்சென்னிமேலுறைவார்

தம்மலரடியொன் றடியவர்பரவத் தமிழ்ச்சொலும்வடசொலுந் தாணிழற்சேர

அம்மலர்க்கொன்றை யணிந்தவெம்மடிக ளச்சிறுபாக்கம தாட்சிகொண்டாரே

பொழிப்புரை :

அச்சிறுபாக்கத்தில் ஆட்சி கொண்டுள்ள இறைவர் குவளை மலர்களால் இயன்ற மாலையைச் சூடிய மார்பினர் எனவும், மலைமகளாகிய பார்வதி தேவியை இடப்பாகமாகக் கொண்டுள்ளவர் எனவும், சிவந்த மலர் போலும் பிறையையும், தேங்கியுள்ள கங்கை நீரையும் தம் சடைமுடி மீது உடையவர் எனவும், எம் சென்னி மேல் உறைபவர் எனவும், தம் மலர் போன்ற திருவடிகளை மனத்தால் ஒன்றி நின்று அடியவர்கள் பரவவும் தமிழ்ச் சொல், வடசொற்களால் இயன்ற தோத்திரங்கள் அவர்தம் திருவடிகளைச் சாரவும் அழகிய கொன்றை மலர் மாலையை அணிந்தவராய் விளங்கும் அடிகள் ஆவார்.

 

ஐந்தாம் திருமுறை - திருக்கடம்பந்துறை

ஆரி யந்தமி ழோடிசை யானவன்

கூரி யகுணத் தார்குறி நின்றவன்

காரி கையுடை யான்கடம் பந்துறைச்

சீரி யல்பத்தர் சென்றடை மின்களே

பொழிப்புரை :

பெருமை மிக்க நல்லியல்புகள் பொருந்திய அன்பர்களே ! ஆரியமும், தமிழும், இசையும் ஆனவனும் மிக்க குணத்தார் குறியாக நின்றவனும் ஒருபாற் பார்வதிதேவியாரை உடையவனுமாகிய பெருமான் வீற்றிருக்கும் கடம்பந்துறை சென்றடைவீர்களா

ஆறாம் திருமுறை - திருமறைக்காடு

மூரி முழங்கொலிநீ ரானான் கண்டாய்

முழுத்தழல்போல் மேனி முதல்வன் கண்டாய்

ஏரி நிறைந்தனைய செல்வன் கண்டாய்

இன்னடியார்க் கின்பம் விளைப்பான் கண்டாய்

ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்

அண்ணா மலையுறையெம் அண்ணல் கண்டாய்

வாரி மதகளிறே போல்வான் கண்டாய்

மறைக்காட் டுறையும் மணாளன் தானே

பொழிப்புரை :

மறைக்காட்டுள் உறையும் மணாளன் மிகவும் முழங்குகின்ற ஒலியை உடைய நீரின் வடிவினனாய், தழல் போன்ற சிவந்த மேனியை உடைய முதல்வனாய், ஏரி நீர் நிறைந்ததனை ஒத்த செல்வனாய்ச் சிறந்த அடியவர்களுக்கு இன்பம் விளைவிப்பவனாய், ஆரியனாய்த் தமிழனாய், அண்ணாமலையில் உகந்தருளியிருக்கும் தலைவனாய், வெள்ளம் போல மதத்தைப் பெருக்குகின்ற மதயானை போல்வானாய் உள்ளான்

 

பன்னிரண்டாம் திருமுறை - பரமனையே பாடுவார் புராணம்

தென் தமிழும் வட கலையும் தேசிகமும் பேசுவன

மன்றின் இடை நடம் புரியும் வள்ளலையே பொருள் ஆக

ஒன்றிய மெய் உணர் வோடும் உள் உருகிப் பாடுவார்

பன்றியுடன் புட்காணாப் பரமனையே பாடுவார்

பொழிப்புரை :

தென் தமிழ், வடமொழி, பிறநாட்டு மொழிகள் ஆகிய மொழிகளுள் யாதொன்றில் தமக்குப் பயிற்சியிருப்பினும் அவற்றுள், அம்பலத்தில் கூத்தியற்றும் அருள் வடிவினனாகிய கூத்தப் பெருமானேயே நன்குணர்ந்து உயர்ந்த குறிக்கோளாகிய அவ்வொரு பொருளிலேயே பொருந்திய மனவுணர்வுடன் உள்ளம் உருகிப் பாடுவார்கள், பன்றியான திருமாலுடன் அன்னப்பறவையான நான் முகனும் தேடி அறிய இயலாதவாறு விளங்கும் பரமனையே பாடுவார் ஆவா

 

திருச்சிற்றம்பலம்!

--

ஆரூரா ஆரூரா

திருஆரூரான் காண் என் சிந்தையானே

சிவாய நம

 


THEVARAM MEMBERSHIP US$17 only!

திருச்சிற்றம்பலம்

 

Previous                                Next

 

  Creative Commons License
This work is licensed under a Creative Commons License.